07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 23, 2011

ஐந்தாம்நிலை மாடம்!!


நம்மைச் சுத்தி நடந்து வரும்
நல்ல பொல்ல சேதிகள
நாசூக்கா சாடிப்புட்டோம்!!
தொண்டக்குழி வத்திப்போச்சு
உடம்புச்சூடு ஏறிடுச்சு!!

கோபத்துல பேசிப்பேசி
நாக்கெல்லாம் வறண்டுபோச்சு!
கொழுந்துவெத்தல கொண்டுவந்து
வேறபேச்சு பேசிடுவோம்
தங்கமக்கா ஓடியாங்க!!
நாக்கு நீண்ட காளி போல அவதாரம் எடுத்த பதிவர்களின் காத்திரமான பதிவுகளை படிச்சு கொஞ்சம் இரத்தம் சூடேறி இருக்கும் நமக்கெல்லாம். அப்புறம் இப்படியா... சொல்லச் சொன்னா நாக்கைப் பிடுங்குற மாதிரில்ல கேட்குறாங்க. அவங்களின் அவதாரம் பார்த்து கொஞ்ச பேர் பயந்துபோயி அவங்களுக்கு வேப்பிலை அடித்து மந்திரிச்சாங்கலாம்.... சொன்னாங்க..

அதனால கொஞ்சம் ரூட்ட மாத்தி போவோம்.. மனிதனை மற்ற விலங்கினங்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டும் குணம் நகைச்சுவை. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. சிரிப்பில் அத்தனை மருத்துவங்கள் உள்ளது என அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்.
ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது கொஞ்சம் சீரியஸா நடத்தினா மாணவர்கள் தளர்ந்துபோவது உண்மைதானே, நாமெல்லாம் அந்த பருவத்தை கடந்துதானே வந்தோம். ஆனால் அறிவியல் பாடத்தைக்கூட சிறு நகைச்சுவை உணர்வுடன் நடத்தும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அப்படி நடத்தினால் மனமும் குணமும் தெளிவாக பாடம் தலையில் ஏறும்.
திரைப் படங்களில் நகைச்சுவைக்கென பலர் இருந்தாலும் அங்கே அரியாசனம் ஏறியவர்கள் சிலர் மட்டுமே. அந்த சிலரில் எனக்கு பிடித்த முக்கியமான நகைச்சுவை நடிகர் தனால்.தங்கவேலு. இவரின் சிரிப்புச் சரங்கள் சத்தம் குறைவாகத்தான் வெடிக்கும் ஆனால் நீண்ட காலம் மனதில் நிற்கும். அறிவாளி என்ற திரைப்படத்தில் அவரும் நடிகை முத்துலெட்சுமியும் சேர்ந்து சப்பாத்தி போட்ட சரவெடி இன்னும் வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது.
அடுத்து நடிகர் நாகேஷ், சிலரை பார்த்ததும் சிரிப்பு வரும் அப்படி பார்த்த அரிய சிலரில் ஒருவர் நடிகர் நாகேஷ். தருமி எனும் குணச்சித்திர திருவிளையாடற் புராண கதாபாத்திரத்தை நகைச்சுவைப் பாத்திரமாக்கி இன்றும் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.
சூரியனும் உதிச்சிருச்சி
சுண்டக் கஞ்சி வந்துருச்சி
சுளுவா எந்திருச்சி
சுத்தமாக குளிச்சிபுட்டு
சோளிபாக்க போ மாமா!!

எனக்குன்னு போரந்தவளே
என்னக்கரை சேர்த்தவளே!
இன்னைக்கு வலைச்சரத்தில்
நகைச்சுவையின் அறிமுகமாம்
பார்த்துபுட்டு போறேண்டி!!

நானும் பார்க்க வாரேன்
யாரெல்லாம் வாராகன்னு!
செத்தநேரம் சிரிச்சிபுட்டு
சோளிபாக்க போயிடுவோம்!!

...............................................................................................................................

தங்கள் பதிவுகளில் பலசுவைகளை கொடுக்கும் பதிவர்கள் பலர் நகைச்சுவை பதிவுகளில் சற்று அதிக உற்ச்சாகத்துடன் தான் போட்டிருக்கிறார்கள். அவைகளை படிக்கையில் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. வாங்க நாமும் போயி கல கலன்னு சிரிச்சிட்டு வருவோம்.
............................................................................................................................
வலைகளை சுற்றி வருகையில் மதுரைத் தமிழ்க்காரன் ஒருவர் கண்ணில் பட்டார். அவர்கள் உண்மைகள் என்ற வலைப்பூவில் பல்சுவை பதிவுகளை அழகுறக் கோர்த்திருக்கிறார். அங்கே தெரிந்த நகைச்சுவைகளில் என்னைக்கவர்ந்தது இப்ப டியும் ஒரு மாமியார்&மருமகள் என்னடா உலகமிது? என அவர் அங்களைக்கும் இந்த பதிவு. வாங்க நாமும் போய் யார் அவங்க னு பார்த்து வருவோம்.

இதோ அவர்க்காக...

சுவையில ஆறுசுவை
இன்னதின்னு தெரியுமய்யா!
உனக்கு தெரியாதுன்னு
ஒருசுவைய சொல்லிபுட்ட!
அந்தசுவை என்னான்னு கேட்டதற்கு
அதுதான்யா நகைச்சுவைன்னு
அழுத்தமாக சொல்லிப்புட்ட!!
...............................................................................................................................
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பாட்டு பாடிக்கொண்டே அழகு வண்ணங்களால் ஒரு இனிய வானவில்லை நெய்திருக்கிறார் நண்பர் ராஷி. இவரின் வலைப்பூவில் நிறைய நகைச்சுவை வண்ணங்கள் இருந்தாலும் எனக்குப் பிடித்த வண்ணம் ஜோரான ஜோக்ஸ்!! என்பதுவே.. வாங்க நாமும் சென்று சற்று படித்து சிரித்துவிட்டு வருவோம்.

இதோ அவருக்காக..

ஆனைமலை அழகர்மலை
தேனெடுக்கும் தென்மலை!
அத்தனை மலையெல்லாம்
அவதியா சுத்திவந்தேன் - ஐயா
எதுக்குன்னு நினைச்சிபுட்ட!!
உன் வலைத்தேன குடிச்சிடத்தான்!!
...............................................................................................................................


 இங்கே வலைச்சரத்திலும் சரி நம் நண்பர்கள் மத்தியிலும் சரி இவருக்கு முகவரி தேவையில்லை. இவரின் பின்னூட்டங்கள் மிகவும் அருமையானவை. சந்தித்ததும் சிந்தித்ததும் எனக்கூறி வரும் இவர்வலையில் சந்தித்த வேளையில் தந்துவிட்டேன் என்னை என்பதுபோல, அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ் பதிவுகளை படிக்கையில் நம்மை நாமே சற்று மறந்துவிடுவோம். ஒரு ஆக்ரா பயணத்தைக் கூட எவ்வளவு நகைச்சுவையாய் கொடுக்கிறார் பாருங்க "மும்தாஜ் வந்துவிட்டால்...." என்ற பதிவில் தான் இப்படி நகையாடி இருக்கிறார். வாருங்கள் படிப்போம்.

இதோ அவருக்காக...

குட்டவண்டி குள்ளவண்டி
குமரன் ஓட்டும் கூட்ஸ் வண்டி!
சிங்கார சென்னைவிட்டு
டெல்லிக்கு போகையில
கூட்டிகிட்டு போய்விடு!
அழகாக பதிவிட்ட
கூட்டாளி வெங்கட்டு
நாகராசு அண்ணனுக்கு
மணமிக்க மலர்க்கொத்து
கொடுக்கத்தான் போய்வருவோம்!!
......................................................................................................................
காற்றை விட வேகமானது எண்ணம், எண்ணங்களின் போக்கில் நடக்கும் விளைவுகள் யாவையும் எதுவானாலும் நல்லதுக்குத்தான் என ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்ட அன்புநிறை சகோதரி ராம்வி படிப்பவர் மனதை கட்டிப்போடும் வகையில் எழுதுவதில் வல்லவர். மதுரகவி பாடிவரும் அவர் வலைப்பூவில் அன்றாடம் நிகழும் சில சம்பவங்களை கூட நகையுணர்வுடன் ரங்கமணியும் ..தங்கமணியும்.. போல னு சொல்லியிருகாங்க பாருங்க.. வாங்க அவரின் நகைப்பதிவை பார்த்துவருவோம்.

இதோ அவருக்காக....

கடகடன்னு ஓடிவரும்
மச்சக்காளை வண்டிங்கோ!!
பாய்ந்துபாய்ந்து ஓடிவரும்
செவளக்காளை வண்டிங்கோ!!
பொழுது விடிஞ்ச பின்னால
பெங்களூரு போய்டுவேன்!
அழகாக பதிவிட்ட
அருமையான அக்காவுக்கு
பொங்கப்படி கொண்டுபோறேன்!!
...............................................................................................................................
தளிர் போன்ற மெல்லியவாம் போன்று பார்வையிலே தெரிந்தாலும். சமுதாயச் சாடல்களை ஆங்காரத்துடன் பதிவிடுபவர் இவர். ஆனாலும் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் படிப்பவர்களை அமைதியாக்கி சிரிக்க வைக்கவும் தெரிந்தவர். இடையிடையே நகைச்சுவைப் பதிவுகளை தருவதில் வல்லவர். ஃபால்ஸ் வாக்குறுதி! ஜோக்ஸ் என இவரிட்ட பதிவை போய் படித்து பார்ப்போமா!!

இதோ இவருக்காக!!!

சிந்திச்சு சிந்திச்சு
முடியெல்லாம் கொட்டிப் போச்சு
சிரிச்சி பழகிவந்தா
சிறப்பொடு வாழலாம்னு
பெரியவங்க சொன்னாங்க!!
சிரிப்பு துணுக்குகள
சீராக மாலைபோல
ஜோராக தொடுத்தவ்ரே!
மனசில் நிறைச்சவரே!!
...........................................................................................................................
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பதுபோல, தனது பதிவுகளின் மனத்தால் அன்பு உலகம் மூலம் அனைத்து வண்டுகளையும் கவர்பவர் எனதருமை நண்பர் எம்.ரமேஷ் (M .R ). பலசுவைகளில் பதிவுகளை கலந்துகட்டி அடிப்பதில் வல்லவர். இவரின் பல பதிகள் எனக்கு பிடித்திருந்தாலும். நகைச்சுவையாக எழுதிய நல்லா சிரிங்க ... கவலைய மறங்க.. னு எழுதிய இந்த பதிவு மனதை லேசாக்கியது. இந்தப் பதிவின் கடைசியில் அவர் ஏற்றியிருக்கும் காணொளியைக்  கண்டால் சிரிச்சுகிட்டே இருப்பீங்க...உடனே போய் பாருனக்..

இதோ அவருக்காக..

பூவென்ன மலரென்ன
காயென்ன பழமென்ன
கீரையில ஒழிந்ததென்ன
அத்தனையின் மருத்துவத்தை
அழகாக சொன்னவரே!
எம்மை சிரிக்க வகையிலே
நீரோ..சிந்தனைச் சிற்பியைய்யா!!
.............................................................................................................................

குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும் அத்தனை நகைச்சுவைப் பதிவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.


அன்பன்
மகேந்திரன் 

45 comments:

 1. அறிவாளித் தங்கவேலுவில் ஆரம்பித்து தருமி நாகேஷையும் தொட்டுச்சென்று, அருமையான நகைச்சுவையாளர்களை அறிமுகம் செய்துள்ள விதம் அருமை. பாராட்டுக்கள்.

  சிரித்து வாழ வேண்டும்!
  வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும். அன்புடன் vgk

  ReplyDelete
 2. அன்பின் மகேந்திரன் - துவக்கம் அருமை - அதான் எனக்குத் தெரியுமே - அப்புறம் தெரியாதே - எத்தனை தடவை பார்த்து ரசிச்சிருப்போம். திருவிளையாடல் தருமி மறக்க முடியாத கதாபாத்ரம். போங்கப்பா அரசருக்கே புரிந்து விட்டது ......

  அறிமுகங்கள் அத்தனையும் அருமை - ஒவ்வொண்னூக்கும் ஒரு கவிதை வேற - தூள் கெளப்புறீங்க போங்க. நகைச்சுவைப்பதிவ்ரகள் அனைவருக்கும் - அவர்களை அறிமுகப் படுத்திய மகேந்திரனுக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. மாடவிளக்கு பிரகாசம்
  வாழ்த்துக்கள் மகேந்திரன்

  அறிமுகம் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. செட்டைகாரனை விட்டு விட்டீர்களோ

  ReplyDelete
 5. அறிமுகங்கள் அத்தனையும் அருமை.

  ReplyDelete
 6. செலவில்லாம நோய் போக்க உதவிய நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு நன்றி.

  அருமையான தேர்வு பதிவுகள்.

  ReplyDelete
 7. முன்னுரையும் அறிமுகமும் அருமை
  அறிமுகமான அனைவருக்கும் இனிய
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அருமையான அறிமுகங்கள் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. நல்ல அறிமுகங்கள். அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. ஒவ்வொரு அறிமுகங்களுக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அசத்துறீங்க மகேந்திரன் சார்.

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. நல்ல அறிமுகங்கள் நண்பரே ... தாங்கள் அறிமுகப்படுத்தும் விதம் மிக அழகு ....

  ReplyDelete
 12. மகேந்திரன்,என்னை சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தி இருக்கீங்க,மிக்க நன்றி.
  அறிமுகமாகியிருக்கும் மற்ற பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த பரிசில் ஒன்று சிரிப்பு....
  அத்தகைய பதிவுகளை தொகுத்து தந்த சகோ...க்கு பாராட்டுக்கள்...
  பதிவாளர்களுக்கு பரிசாக புன்னகை.....
  பாராட்டுக்கள்..நன்றி

  ReplyDelete
 14. அருமை...

  அருமையான அறிமுகங்கள்.....

  ReplyDelete
 15. நகைச்சுவை பிடிக்காதவர்களும் உண்டோ?? அருமையான அறிமுகங்கள். உங்கள் உழைப்பு தெரிகிறது அறிமுகங்களிலும் கவிதைகளிலும்

  ReplyDelete
 16. கவிதை பாணியில் தங்கள் அறிமுகங்கள் நன்று அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. தருமி நாகேஷ் - மறக்கமுடியாததோர் கதாபாத்திரம்.... என்ன ஒரு அருமையான நடிகர்....

  அடியேனுடைய பகிர்வினையும் அழகாய் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.. கவிதைக்கு ஒரு தனி நன்றி....

  ReplyDelete
 18. அருமையான அறிமுகங்கள் மாப்பிள..!! அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. இவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்>!

  ReplyDelete
 20. ஹா ஹா.. இன்றைய அறிமுகங்கள் அசத்தல் நண்பரே!... இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு நன்றி

  உங்கள் இதயத்தின் வெளிப்பாடாய் என்னை இவ் வலைச்சரத்தின்
  மூலம் அனைவரும் அறிய செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

  அறிமுகப்படுத்தப் பட்டுள்ள மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. அன்புநிறை ஐயா வை.கோபாலகிருஷ்ணன்
  தங்களின் பொன்னான கருத்துக்கு
  என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 23. அன்புநிறை சீனா ஐயா
  தங்களின் பொன்னான கருத்துக்கு
  என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 24. அன்பு சகோதரர் Agape Tamil Writer
  நிச்சயம் செய்கிறேன்.

  ReplyDelete
 25. அன்புநிறை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 26. அன்புநிறை நண்பர் சூர்யஜீவா
  அண்ணன் சேட்டைக்காரன் அவர்களின்
  பதிவுகள் பதிவுலகம் நன்கறிந்தது.
  ஆகையால் புதியவர்களை அறிமுகப்படுத்த எத்தனித்தேன்.
  வேறு ஏதும் காரணமில்லை நண்பரே.
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 27. அன்புநிறை நண்பர் சே.குமார்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 28. அன்புநிறை நண்பர் சத்ரியன்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 29. அன்புநிறை நண்பர் ரமணி
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 30. அன்புநிறை நண்பர் மனோ
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 31. அன்புநிறை நண்பர் கோவை2தில்லி
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 32. அன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 33. அன்புநிறை நண்பர் தினேஷ்குமார்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 34. அன்புநிறை சகோதரி ராம்வி
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 35. அன்புநிறை சகோதரி சின்னதூரல்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 36. அன்புநிறை நண்பர் வெளங்காதவன்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 37. அன்புநிறை நண்பர் கடம்பவன குயில்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 38. அன்புநிறை நண்பர் சண்முகவேல்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 39. அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 40. அன்புநிறை காட்டான் மாமா
  தங்களின் பொன்னான கருத்துக்கு
  என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 41. அன்புநிறை நண்பர் கோகுல்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 42. அன்புநிறை நண்பர் ராஜேஷ்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 43. அன்புநிறை நண்பர் ரமேஷ்
  தங்களின் மேன்மையான கருத்துக்கு
  என் உளம்கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 44. அட தொடக்கமும் சரி தொடர்வதும் சரி அட அறிமுகப்படுத்துவதும் சரி அதரகளம் பண்ரதுன்னே ஒவ்வொருத்தரும் முடிவு பண்ணி களம் இறங்குறீங்களாப்பா???

  நல்ல ஒரு நாட்டுப்புறபாடல் படிப்பதை போல அதன் சந்தம் குறையாம வரிகள் அமைத்து அட வாங்க மக்கா வாங்க சிரிச்சிப்புட்டு போங்க இவங்க வலைப்பூவில் போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வயிறு குலுங்க மனம் நிறைய சிரிச்சிட்டு போங்கன்னு அழகா சொல்லி இருக்கீங்க மகேந்திரன்....

  அமைதியா இருந்துகிட்டு அசத்தலா பகிர்வு போடுவது என்பது நீங்க தான் அது....

  டணால் தங்கவேலு நகைச்சுவை நம்ம வீட்டில் நம்ம அப்பா பண்ற அட்டகாசம் போல அத்தனை இயல்பா எதார்த்தமா ஆனா சிரிக்கவெச்சிரும் நம்மை... அவர் முழி கூட ரசிப்பேன். மாட்டிக்கிட்டு முழிக்கும்போது பார்க்கணுமே அவரை....

  அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை பேருக்கும் என் அன்பு வாழ்த்துகள்பா...

  ராம்வியோட தங்கமணி ரங்கமணி படிச்சு ரசிச்சிருக்கேன்....

  இன்னும் நீங்க அறிமுகப்படுத்திய அனைவரின் பதிவுகளும் கண்டிப்பா படிச்சு சிரிச்சு அப்டியே கருத்து பகிர்ந்துட்டு வரேன்பா...

  அருமையா அசத்தலா பகிர்ந்தமைக்கு என் அன்பு வாழ்த்துகள் மகேந்திரன்...

  ReplyDelete
 45. அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
  தங்களின் கருத்துக்கு
  மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது