07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 19, 2011

மகேந்திரன் பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே


நேற்றுடன் முடிந்த வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் ராஜேஷ் - தான் ஏற்ற பொறுப்பினை மனை நிறைவுடன் - மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் மாதா, பிதா, குரு, தெய்வம், நட்பு, மற்றும் கலவை என்னும் தலைப்புகளில் பல்வேறு பதிவர்களையும் இடுகைகளையும் அறிமுகப் படுத்தி - ஏறத்தாழ 570 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப் படுத்தப்பட்ட இடுகைகள் அததனையும் அருமையானவை. அவரின் பணிச்சுமைக்கு நடுவேயும், வலைச்சரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவரது உழைப்பிற்கு நன்றி கூறி - நல்வாழ்த்துகளுடன் விடை அளிப்பதில் பெருமைப்படுகிறேன்.

இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் மகேந்திரன் அவர்கள். இவர் நெல்லை சுந்தரனார் பலகலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். ஸ்பிக் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி புரிந்துவிட்டு, தற்பொழுது அபுதாபியில் கச்சா எண்ணை உற்பத்தியில் பணி புரிகிறார்.

நாட்டுப்புறப் பாடல்கள் அவரது உயிர், நாட்டுப்புறக் கலைகள் அழிந்துவிடக்கூடாதே என்ற மன உளைச்சல் அவருக்கு அதிகம். முடிந்தவரை கவிதையால் கலைகளை வாழ வைக்கவேண்டும் என்பதே அவரது தலையாய எண்ணம்.

நண்பர் மகேந்திரனை வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ராஜேஷ்

நல்வாழ்த்துகள் மகேந்திரன்

நட்புடன் சீனா

23 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. மகேந்திரனின் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. பொறுப்பேற்கும் மகேந்திரன் அவர்களை
  மகிழ்வோடு வரவேற்கிறோம்
  உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வருக மகேந்திரன் வருக...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வருக மகேந்திரன்
  தருக அமுதம்
  பருக நாங்கள்
  வாய்ப்பு பெற்ற உங்களுக்கும்
  வாய்ப்பு தந்த சீனா ஐயாவுக்கும்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. புதிய ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. பொறுப்பு தந்த
  அன்புநிறை சீனா ஐயாவுக்கும்
  என்னை இங்கே வாழ்த்தி வரவேற்ற
  அனைத்து நட்புகளுக்கும்
  என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  கொடுத்த காரியம்
  சிரமேற்கொண்டு
  பணிவுடன்
  தொடங்குகிறேன்..

  அன்பன்
  மகேந்திரன்

  ReplyDelete
 8. வெல்கம் மகேந்திரன்...

  ReplyDelete
 9. புதிய பொறுப்பேற்கும் அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!
  கிடைத்த இந்த அரிய வாய்ப்பின் மூலம்
  உங்கள் கிராமிய மணம் அனைவருக்கும் சென்று அடைய
  வாழ்த்தும் அன்பு நெஞ்சம் !!!!!!!!!
  கலக்குங்க தலைவா....

  ReplyDelete
 10. நல்வரவு மகேந்திரன்.ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. மதிப்பு மிக்க திரு. சீனா ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு... அன்பு நண்பர் மகேந்திரன் அவர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.... கலக்குங்க நண்பரே!

  ReplyDelete
 14. சகோ... மகேந்திரனுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. சகோ... மகேந்திரனுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. ஆசிரியர் பொறுப்பேற்கும் மகேந்திரனுக்கு என் அன்பு வாழ்த்துகள்.....

  அன்பு வரவேற்புகள் மகேந்திரன் வாங்கப்பா...

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் திரு மகேந்திரன்.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் மகேந்திரன்.

  ReplyDelete
 20. நண்பர் மகேந்திரன் அவர்களை வரவேற்கிறோம்.

  ReplyDelete
 21. என்னை இங்கே வாழ்த்தி வரவேற்ற
  அனைத்து நட்புகளுக்கும்
  என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  கொடுத்த காரியம்
  சிரமேற்கொண்டு
  பணிவுடன்
  தொடங்குகிறேன்..

  அன்பன்
  மகேந்திரன்

  ReplyDelete
 22. அன்புத் தோழி மும்தாஜ்
  உங்களை இங்கே காண்கையில் எனக்கு பெருமகிழ்ச்சி.
  தங்களின் அன்பு கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது