07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 25, 2011

மிடில் கிளாஸ் மாதவி மகேந்திரனிடமிருந்து பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் மகேந்திரன், தான் ஏற்ற பொறுப்பினை, தாயகம் வந்த மறு நாளே துவங்கி, ஏழு நாட்களிலும், கடுமையாக உழைத்து, ஏழு இடுகைகள் இட்டு, 38 பதிவர்களையும் அவர்களுடைய 50 இடுகைகளையும் அறிமுகப் படுத்தி, இது வரை 330 மறுமொழிகளும் பெற்று, மன நிறைவுடன், பெரு மகிழ்ச்சியுடன், எடுத்த செயலை வெற்றி கரமாக முடித்த பெருமையுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இடுகைகளை சுய அறிமுகம், உறவுகள், ஊரின் பெருமை, சமுதாயக் கொடுமைகளைச் சாடல், நகைச்சுவை, கதை, தமிழின் பெருமை என்ற தலைப்புகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஒரு முன்னுரை, ஒவ்வொரு பதிவரைப் பற்றியும் ஒரு சிறு அறிமுகக் கவிதை, பின்னர் இடுகை அறிமுகம் என்ற நிலைகளில் புதுமையாக எழுதி இருக்கிறார்.

நண்பர் மகேந்திரனை சென்று வருக என நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் சகோதரி மிடில் கிளாஸ் மாதவி. இவர் மிடில் கிளாஸ் மாதவி என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். ஒரு ஆண்டு காலமாக எழுதி வரும் இவர் இது வரை நாற்பதற்கும் மேற்பட்ட இடுகைகள் இட்டு, எண்பதற்கும் மேற்பட்ட பதிவர்களை பின் தொடர வைத்திருக்கிறார்.

சகோதரி மிடில் கிளாஸ் மாதவி, பெற்றோர் கொடுத்த சொத்தாக தான் கல்வியினால் பெற்ற அறிவினைக் கருதுகிறார். இரு மகன்களுக்குத் தாயாகவும், அலுவலகப் பணிகளுக்கு இடையேயும், சிறந்த இல்லத்தரசியாகவும் விளங்குகிறார். சிறு வயதில் கல்கியின் படைப்புகளைப் படித்ததனால் ஏற்பட்ட ஆசையின் விளைவு - இவரது வலைப்பு.

சகோதரி மிடில் கிளாஸ் மாதவியை வருக வருக ! நல்ல அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மகேந்திரன்
நல்வாழ்த்துகள் மிடில் கிளாஸ் மாதவி

நட்புடன் சீனா

19 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. நிறைவாய் செயலாற்றிய மகேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும், ஆசிரியர் பணியை ஏற்க இருக்கும் எங்கள் அன்புச்சகோதரி மிடில்கிளாஸ் மாதவி அவர்களுக்கு அன்பான வரவேற்பும் வாழ்த்துகளும்..

  ReplyDelete
 3. சிறந்த பணியாற்றினார் அன்பர் மகேந்திரன்!

  பொறுப்பேற்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. அடுத்த அறிமுகங்களுக்கு காத்திருக்கிறேன்

  ReplyDelete
 5. வலைச்சர ஆசிரியராக புதிய பொறுப்பேற்க வரும் திருமதி மி.கி. மாதவி அவர்களை வருக வருக வருக என அன்புடன் வரவேற்று மகிழ்கிறோம். vgk

  ReplyDelete
 6. அன்புநிறை சீனா ஐயா
  இப்பேறு பெற்றதெல்லாம் உங்களால் தான்.
  தங்களுக்கும் என்னை ஆதரித்த அனைத்து உள்ளங்களுக்கும்
  மனமார்ந்த நன்றிகள்.

  அன்புநிறை சகோதரி மிடில்கிளாஸ் மாதவி,
  தங்களின் பணியை இனிதே துவங்குங்கள்,
  பணிசிறக்க அன்புடன் இறைவனை இறைஞ்சுகிறேன்,
  நல்வாழ்த்துக்கள்.

  அன்பன்
  மகேந்திரன்

  ReplyDelete
 7. தோழி மாதவிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. மாதவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. சகோ மாதவிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. மகேந்திரன் அவர்களின் வாரம் மிகவும் ரசிக்கத்தக்கது.வாருங்கள் மாதவி,அசத்துங்கள்..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. வலைச்சர ஆசிரியர் பணியேற்றதற்கு இனிய வாழ்த்துக்கள் மாதவி!!

  ReplyDelete
 12. சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பதவியை பணியாற்றைமக்கு நண்பர் மகேந்திரனுக்கு நல் வாழ்த்துக்கள்... நன்றி

  சிறப்பாக வலைச்சர ஆசிரியராக பணியாற்ற வரும் சகோ மிடில் கிளாஸ் மாதவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. ம்ம் தூள் கிளப்புங்க..

  ReplyDelete
 13. சிறப்பான முறையில் பணியாற்றிய மகேந்திரனுக்கு அன்பு வாழ்த்துகள்..

  அடுத்து பொறுப்பேற்க வந்திருக்கும் மிடில் கிளாஸ் மாதவி அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்.....

  மிடில் கிளாஸ் மாதவி மேடம் பற்றி மிக அழகிய குறிப்பு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சீனா ஐயா...

  ReplyDelete
 14. அட நம்ம மிடில்கிளாஸ் மாதவி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. சிறப்பான முறையில் பணியாற்றிய மகேந்திரனுக்கு அன்பு வாழ்த்துகள்..

  அடுத்து பொறுப்பேற்க வந்திருக்கும் மிடில் கிளாஸ் மாதவி அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்.....

  ReplyDelete
 16. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
  என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 17. சகோதரிக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது