07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 25, 2014

தம்பட்டம்எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய உயர்திரு சீனா அய்யாவுக்கும் , அன்பு நண்பர் மதுரை மண்ணின் சூப்பர் ஸ்டார் கருப்பு தங்கம் எங்கள் தமிழ்வாசிக்கும் "ஆழ்ந்த " நன்றிகள் .


இந்த பதிவு முழுவதும் சுயதம்பட்டம் மட்டுமே . ஆனால் கிழே வரும் கருத்துகள் நான் சொன்னது அல்ல மற்றவர்கள் சொன்னதின் தொகுப்பே .

=======================================================================
"நான் முகநூலை உருவாக்கும் போது கூட இப்படி யோசித்ததில்லை , ஆனால் நண்பர் ராஜா அருமையாக யோசித்து இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார் . அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது"

                                                                               Mark Zuckerberg(FACEBOOK OWNER)

அவர் பாராட்டிய பதிவு :
 
=======================================================================


"நான் மென்பொருள் தயாரிப்பில் முதன்மையான நிறுவனம் வைத்திருக்கலாம் ஆனால் என்னை பற்றி என் மென்பொருளை பற்றி மக்களுக்கு எடுத்துசொல்வதில் ராஜபாட்டை முக்கியபங்கு ஆற்றுகிறது "

                                                                      பில்கேட்ஸ் ( MICROSOFT)

அவர் பாராட்டிய பதிவு :
==============================================


"நாங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பற்றி சொன்னதைவிட ராஜபாட்டை ராஜா சொன்னதுதான் அதிகம். எங்களுக்கே தெரியாத (!!) சில அப்ளிகேஷன் பற்றி இவர் அருமையாக எழுதியுள்ளார் ."

                                         GOOGLE CEO 

அவர் பாராட்டிய பதிவு :

=========================================


"இன்று எனக்கு ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க முக்கியகாரணம் ராஜபாட்டை தான் . என்னை பற்றி பல பதிவுகள் போட்டு கோடிகணக்கான (!!) மக்கள் மனதில் என்னை வேருன்ற செய்தவர் இவர் "

                        அல்டிமேட் ஸ்டார் அஜித் 


அவர் பாராட்டிய பதிவு : 

 

 

 

  நாளை முதல் பதிவர்கள் அணிவகுப்பு தொடங்கும்

33 comments:

 1. வாழ்த்துக்கள் ராஜா

  ReplyDelete
  Replies
  1. நன்றி சரவணன் சார்

   Delete
 2. நாளை முதல் பதிவர்கள் அணிவகுப்பு தொடங்குமா...? அப்ப இன்னிக்கு போட்ட பதிவுகளை எழுதியவர் பதிவர் இல்லையா...? ஹா... ஹா... ஹா... மகிழ்வான நல்வாழ்த்துகள் ராஜா. சுவாரஸ்யமான உங்களின் அறிமுகங்களுக்காகக் காத்திருப்பு.

  ReplyDelete
  Replies
  1. உங்களுடன் ஒப்பிடும் போது நானெல்லாம் பதிவரே இல்லை அய்யா ... வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 3. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என்றாலும், பழகின தோஷத்துக்காக ஏத்துக்கறோம்..! ஹஹஹா.

  ReplyDelete
  Replies
  1. இதுதான் ஆரம்பம் இன்னும் எவ்வளவோ இருக்கு பாஸ்

   Delete
 4. யோவ், முதல் நாளே குசும்பை ஆரம்பிச்சிட்டீரா? ம்ம்ம்ம், நடத்துங்க...

  ReplyDelete
  Replies
  1. நாளை முதல் நல்ல புள்ளையா இருப்பேன் ...

   Delete
 5. நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. டெலிட் செய்ய கமெண்டுக்கும் நன்றி

   Delete
 7. தம்பட்டம்//

  ஒ...வாத்தி....வாத்தியாரா

  மூணு ஆச்சிரியகுறி
  ஒரு முற்றுபுள்ளி

  வாழ்த்துக்கள் வாத்தி

  ReplyDelete
 8. நான் இன்றைக்கு தமிழில் பதிவு எழுதுவதற்கே ராஜா தான் காரணம்.. ஏன் எனக்கு தமிழ் என்ற அறிமுகம் ஆனதற்கே ராஜா என்ற நபர் தான் காரணம்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் இப்படிதான் தமிழில் எழுதணும் , உன்னைப்போல எழுத கூடாதுன்னு எனக்கு சொல்லத்தான் சீனு எழுதுகிறார் ....

   Delete
 9. அட்டகாசம். உங்கள் அடக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ;-)
  யாருக்காகவும் எதற்காகவும் அதை தளரவிடாதீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை சார் இது வஞ்சபுகழ்ச்சி தானே ??

   Delete
 10. மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு ராஜபாட்டை ராஜா

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
 11. நல்வாழ்த்துகள் சார்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா

   Delete
 12. சுய தம்பட்டம் அருமை டும் டும் டும்....

  வாழ்த்துக்கள் சகோதரரே...

  ReplyDelete
 13. வாழ்த்துகள் தல, தொடரட்டும் உங்களது அறிமுகப் படலம்.

  ReplyDelete
 14. அன்பின் ராஜபாட்டை ராஜா - சுய அறிமுகம் அத்தனையும் அருமை - ஒவ்வொன்றாகப் படித்து ஆங்காங்கே மறுமொழி இடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்! தம்பட்டம் அசத்தல்! நன்றி!

  ReplyDelete
 16. தங்களின் எண்ட்ரியே வித்தியாசமாக இருக்கிறதே... வாழ்த்துக்கள் நண்பரே...
  அன்புடன்
  கில்லர்ஜி,

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ராஜா சார்.

  ReplyDelete
 18. அன்புவின் அன்பான வாழ்த்துக்கள் ராஜா

  ReplyDelete
 19. சுய அறிமுகங்கள் அனைத்தும் அருமை திரு. ராஜா!
  ஒரு வாரம் முழுதும் சிறப்பாய் பணியாற்றிட நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ராஜா சார்.

  அன்புடன்-
  S. முகம்மது நவ்சின் கான்.

  ReplyDelete
 21. வாத்துக்கள் ராஜா! ராஜாதி ராஜன் இங்கு ராஜாவாக அசத்துங்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது