07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 10, 2007

லிவிங்ஸ்மைலுக்கு வாழ்த்துக்கள்

கணிணியில் அன்றைய தினத்தந்தி செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்த ஆசான் கோயிந்ஞ்சாமியின் வருகையில் நிமிர்ந்தார்.

"வா கோயிந்தசாமி... விஷயம் தெரியுமா? நம்ம பதிவர்ல ஒருத்தவங்க சினிமாவுல நடிக்கப்போறாங்க"

"யார் நம்ம தலயா?.... இன்னா வேஷம்பா... சும்மா ஆளு ஹீரோ கணக்கா கீறாருன்னு மெய்யாலுமே சினிமாவுல பூட்டாரா.. இனிமே பதிவெல்லாம் எழுதுவாராமா... நான் அர்ஜீண்டா போயி ஒரு சலாம் போட்டுட்டு வந்துடறேன்"

"டேய்... அது நம்ம தலயும் இல்ல, வாலுமில்ல.. லிவிங் ஸ்மைல் வித்யா தான் அது.. "கருவறை பூக்கள்' ன்னு ஒரு படத்துல நடிக்குறாங்க.. இரு...
தினத்தந்தியில என்ன போட்டுருக்கோ அதை அப்படியே படிக்குறேன் கேளு..

"வாழ்த்து சொல்லிடுவோம் வாத்தியாரே"

'சொல்லிட்டா போச்சு... வாழ்த்துக்கள் வித்யா.. அப்புறம் கோயிந்து இவங்க எப்பவுமே வித்தியாசமா கோபமா எழுதுறவங்க.. அவங்க எழுத்துல உனக்கு ரொம்ப பிடிச்சதா ஒரு பதிவு சொல்ல சொன்னா எதை சொல்வே"

"இன்னா வாத்யாரே இப்படி சொல்லிட்டே.... அந்த மரணம் கவித எவ்ளோ நல்லா இருந்தது.. தெரியுமா... "

"அப்பால இன்னிக்கு எதுனா ஸ்பெசல் இருக்குதா வாத்யாரே"

"ஏன் இல்லாம... காட்டாறுன்னு ஒருத்தர் வந்திருக்காங்க.... பதிவும் தலைப்பு மாதிரியே காட்டமா இருக்கும்ன்னு உள்ள போனா அதிர்ச்சிதான் இருக்கும். ஒரு பதிவு எழுதி அது சம்மந்தமா ஒரு அழகான கவிதையையும் தர்றாங்க..
அதுல எனக்கு பிடிச்சது டி.வி.யைப் பத்தி எழுதுனது இந்த கவிதை...

"ஆனாலும் நம்மள ஓவரா சிந்திக்க வைக்கிறது இந்த அண்ணாச்சிதான்... ஒரு கவுஜ எழுதுனா.. அவரு என்ன எழுதியிருக்குறாருன்னு நாம சிந்திக்குறதுக்குள்ள அது புரிஞ்சவங்க பதில கவுஜயா போட்டுடுவாங்க... அதுல தமிழ்மணத்த பதிவுகளால வாழ வைக்குறதுல முக்கியமான ஆளு இவரு"

"உண்மைதான் கோயிந்து... உன்ன மாதிரி எங்க வம்பு கிடைக்கும்ன்னு அலையறவங்களுக்கு எல்லாம் அவர்தான் குரு"

"அப்பால யாழினி அத்தன், சில்வண்டு, கார்மேக ராஜா இவங்க கவுஜய கூடத்தான் நான் படிக்குறேன்.. நல்லா எழுதுறாங்கப்பா கவுஜய."

"ஆனா வாத்தியாரே... நான் காதல் கவுஜ எழுதுறவங்களை பத்தி சொல்லலன்னா நல்லா இருக்காது.."

"அத எழுதாதவங்க யாராச்சும் இருந்தா சொல்லு.. அவங்க பேர சொல்வோம்"
மேலும் வாசிக்க...

Monday, April 9, 2007

உப்புமா கேசரி ஆகும் கதை....

பொதுவா எல்லோர் வீட்லயும் உப்புமா செய்வாங்க. ரவாவுல, அரிசியில, கோதுமையில் இன்னும் விதவிதமா உப்புமா செய்வாங்க.

ஆனா நமக்கு உப்புமா பிடிக்காதுன்னு வைங்க.. அதுல ரெண்டு முந்திரி பருப்பு, திராட்சை அப்புறம் சக்கர எல்லாம் போட்டு கொஞ்சம் கலர் பவுடர தூவி அதுக்கு கேசரின்னு பேர் வச்சு தருவாங்க.

நாமளும் அதுக்கு கேசரிங்கற பேர் வச்சதால இனிப்புன்னு நினைச்சுக்கிட்டு சாப்புடுவோம். :)

அப்படித்தான் நானும் என் பதிவு எல்லாமே உப்புமா. இருந்தாலும், பாராட்டி பின்னூட்டம் போடுறதுல கேசரி இல்லன்னா சில பார்ட்டிங்களுக்கு அல்வாவே கொடுத்துருக்கேன்.. அவங்களும் இவன் ரொம்ப நல்லவனா இருக்காண்டா... என்னத்த எழுதுனாலும் படிக்குறான்னு நெனச்சுக்கிட்டு அநியாயத்துக்கு மொக்க போட்டாலும் (இம்சை ரவி மாதிரி) சில நேரம் முடியாம நல்ல பதிவு கிடைச்சிடும். இந்த மாதிரி நல்ல பதிவு படிக்கணும்ங்கறதுக்காகவே எல்லோரோட பதிவயும் படிக்க வேண்டியிருந்தது..

முதல்ல பதிவுலகுக்கு வந்து முதல் பதிவு எழுதி வச்சப்புறம் பின்னூட்டத்துல யாரயுமே காணோம். அப்புறமா போனாப்போகுதுன்னு நாட்டம ஷ்யாம் வந்து முதல் பின்னூட்டம் போட்டாரு. அதுக்கப்புறம் காணாம போன ஆளுதான் (அவரு பதிவு பேரு - தினமும் என்னை கவனி) நம்ம பக்கம் இன்னிவரைக்கும் எட்டிப்பாத்துக்கறேன். முதல் பின்னூட்டம் போட்ட வகையில நாட்டாமைக்கு என் நன்றிகள்... :)

நான் தனியா எல்லா பதிவையும் படிச்சு எழுதப்போறேன் போலருக்குன்னு நினைக்காதீங்க. சிட்டிசன்ல அஜீத் சொல்றாமாதிரி நான் தனியாளு இல்லன்னு கத்த ஆசைதான் :)

உண்மைதான்... இனிமே அடுத்த பதிவுலேந்து ஒரு வாரம் உங்களை இம்சைபடுத்த நான் தனியா வரப்போறதில்ல.

என்கூட கூட்டு, பொறியல், அவியல் எல்லாம் செய்யப்போறது....

அடுத்த பதிவுல பாத்துக்குங்களேன்....

[பி.கு. : என்னடா... உப்புமா ஆரம்பிச்சு அவியல்ல முடிக்கறானேன்னு யோசிக்காதீங்க... நான் எல்லாத்திலயும் ஒரு தொடர்ச்சி இருக்கணும்னு எதிர்பார்க்குறேன் :)]

காதலுடன்

சென்ஷி

மேலும் வாசிக்க...

வருகிறார் வலைப்பதிவுக் காதலன்

வலைச்சர தொகுப்பில் இலக்கிய நயம்தோன்ற ஆறு பதிவுகள் இட்டுள்ளார் நண்பர் மலைநாடான். அதிகமான பதிவு இடுகைகள் அறிமுகப் படுத்தப் படவில்லை என்றொரு குறையினை தவிர்த்து சிந்தனைக்கு விருந்தாகும் அவரது பதிவுகளில் ஈழத்து எண்ணங்கள், ஒடுக்கப் பட்ட மக்களின் குரல், ஒலிப்பதிவுகள் போன்ற மாறுபட்ட தளங்களை அறிமுகம் செய்வித்தார். அவருக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றிகள்.

விடுமுறைக்காலம் என்பதால் திங்கள் முதல் ஆரம்பிக்கலாமா எனக்கேட்டு இன்று முதல் வலைச்சரம் தொடுக்கப் போகிறவர் யார் தெரியுமா?

இதோ வருகிறார் பின்னூட்டத் திலகமாகத் திகழும் வலைப்பதிவுக் காதலன் சென்ஷி. வலைப்பதிவுகளைப் படித்து உடனுக்குடன் பின்னூட்டமிட்டு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும் சென்ஷி தன்னைக் கவர்ந்த பதிவுகளை வலைச்சரம் தொடுத்து நமக்குத் தரவிருக்கிறார்.
மேலும் வாசிக்க...

Wednesday, April 4, 2007

உன்னால் முடியும் தம்பி தம்பி!



சிந்தாநதி இந்தப்பொறுப்பைத் தரும் போதே ஒரு வேண்டுகோளையும் வைத்தார். அது ஒலிப்பதிவுகள் குறித்தும் ஒரு இடுகை கண்டிப்பாக இடவேண்டுமென்று. ஏனெனில் அது நீங்கள் சார்ந்ததுறை என ஒரு சொட்டும் வைத்தார். எனக்கு என்னமோ அது குட்டு மாதிரியே தெரிஞ்தது. இது குறித்து என் எண்ணங்களை எழுத முன் பலதடவைகள் யோசித்தேன். எழுதலாமா கூடாதென்றுதான். பின் சரி எல்லோரும் நம் நண்பர்கள்தானே..எதுவும் தவறாக எண்ணமாட்டார்கள் என்பதால் எழுதுகின்றேன். ஆனால் இதை ஒரு பொதுப்பார்வையாகவே வைக்கின்றேன்.

இணையத்தின் இன்றைய சிறப்பே, எல்லாவகை ஊடகப் பகுப்புக்களையும், இதற்குள் உள்ளடக்க முடிவதுதான். இந்தச்சிறப்பை நாம் இன்னமும் சரியாக உள்வாங்கவில்லை என்றே கருதுகின்றேன். ஏதோ ஒரு பதிவு எழுதிவிடுவோம் என்பதோடு முடிந்து போகிறது எங்களில் பலரது எண்ணச்செயற்பாடு. இதையும் தாண்டி இப்போது சில ஒலிப்பதிவு முயற்சிகள் நடந்தேறியுள்ளன. ஆனால் அவற்றின் போக்கு என்னவோ எனக்கு அது திருப்தி தருவதாக இல்லை.
என் சிறுவயதுமுதல் வானொலி மீதான ஈடுபாடும், அதிலே பலகாலம் பங்காற்றிய அனுபவங்களும், இணையப்பரப்பில், அத்தகைய ஒரு வாய்ப்பினைக் கண்டபோது அதைப்பின்பற்றத் தூண்டியது. அந்த ஆர்வத்தில் தொடங்கியதுதான் “இணையத்தில் இன்பத் தமிழ் “. இதன் தயாரிப்புக்காக நான் எடுத்துக்கொள்ளும் நேரமும் தேடலும் சற்று அதிகம்தான். ஆனாலும், அதை அவ்விதமே செய்ய வேண்டுமென்பதில் குறியாகவே இருக்கின்றேன். அப்படியிருந்தும், எனது எல்லா நிகழ்ச்சிப்பதிவுகளும், எனக்குத் திருப்தியாக அமைந்துவிடுவதில்லை.

நான் சென்று வாசிக்கும், பார்க்கும், கேட்கும், எந்தவொரு ஊடகத்திலிருந்தும் ஏதாவது ஒன்று என்னை ஒழுங்கமைக்க உதவுவதாக இருக்க வேண்டும் என்பதும், அதேபோல் என்பதிவுக்கு வரும் ஒருவருக்கு நானும் அப்படியே ஏதாவது வழங்குவதாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகின்றேன். அதனாலேதான் அனுபவங்களால் கற்றுக்கொண்ட, மற்றவர்கள் பலர் அதிகம் அறிந்திராத, என்தேசத்து வாழ்வியலையே அதிகம் பிரசவிக்கின்றன என் படைப்புக்கள். பலரும் உலாவரும் ஒரு ஊடகத்தில், நம்மால் படைக்கப்படும் ஒரு படைப்பு, அந்தப்படைப்பிற்குரிய பயன்பாட்டினைச் சரியாகத் தராதவிடத்து அதன் பெறுமதி கேள்விக்குரியதாகிவிடுகிறது. சிலவேளைகளில் கேலிக்குரியதாகவும் ஆகிவிடுகிறது.

நகைச்சுவை ஒரு இதமான ரசனை. அதனூடு பல செய்திகளை யாரும் வலிக்காத வண்ணம் சொல்லிவிட முடியும். நிதர்சனத்தின் தயாரிப்பில் வந்த ஒரு குறும்படத்தில் (பெயர் ஞாபகத்தில் இல்லை) ஒரு காட்சி. ஒரு வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியை திறந்து, தான் மாற்ற வேண்டிய ஆடைகளை அதனுள்ளிருந்து ஒருவர் எடுப்பார். பார்வையாளர்கள் ஒரு கணம் சிரிப்பார்கள் ஆனால் மறுகணத்தில் அந்தச்சிரிப்பு மாறி, அதனுள்ளிருக்கும் துயரின் வலியை உணர்வார்கள். இப்படிப் பல சொல்லலாம்.

நாம் சார்ந்த சமுகத்திற்கு மேம்பாடான கருத்துக்களைத் தரக் கூடிய ஒரு ஊடகத்தில், நகைச்சுவை என்பதாக நமக்குள் பேசிக்கொள்வதையெல்லாம் அரங்கேற்றிக் கொள்வது ஆரோக்கியமானதாக எண்ணமுடியவில்லை. அதிலும் அவ்வாறான படைப்புக்களை ஆற்றுபவர்கள் மிகநல்ல திறமைசாலிகளாக இருந்தும், இப்படி இயங்குவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. “ எந்நேரமும் சிரீயஸாக இல்லாமல் இடைக்கிடை இப்படியும் இருக்கத்தானே வேண்டும்.. “ என்பவர்களுக்கு, இருங்கள் தப்பில்லை. அதற்குள்ளும் ஒரு தார்மீகத்தை தருவதற்கு முயற்சியுங்கள் என்பதே என் வாதம். சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களின் கொள்கை வாசகம் “ சிரிப்பே சீவியம் “ .அவரது வாழ்வும் அத்தகையதே. அதற்காக அவரது படைப்புக்கள் அத்தனையும், ஏதோ ஒரு செய்தி சொல்லி நிற்கவில்லையா. அதனூடாகவே அவர் ஒரு சமூகப் போராளியாக அறியப்படவில்லையா?. இப்படியெல்லாம் எழுதுவதால் ஏதோ நான் சிரிக்கத் தெரியாத ஆளென்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்.


இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால், வலைப்பதிவுலகில் ஒலிப்பதிவுகள் என்பது ஆரம்ப நிலையில் இருக்கும் இவ்வேளையில், அச்சுப்புத்தகங்கள் ஒலிப்புத்தங்களாகவும் உருவாக்கம் பெற்று வரும் இவ்வேளையில், உங்கள் குறுகிய முயற்சிகள் பிழையான முன்னுதாரணங்களாகப் போய்விடக் கூடாதெனும் ஆதங்கத்திலும் தான் இதைச்சொல்லவிழைந்தேன்.

காலங்கடத்தும் வாழுங்கலைஞராக, கலைஞனின் படைப்பாக, நீங்களும், உங்கள் படைப்புக்களும் வாழவேண்டுமெனும் ஆசையால் எழுதுகின்றேன். பின்னூட்டங்களின் வருகைக்குச் சிரிப்புத் தோரணங்கட்டுபவர்களாக இருக்காதீர்கள். உங்கள் சிறப்புக்கும் சிரிப்புக்கும் மற்றவர்கள் தோரணங்கட்டும்படியா ஆகிடுங்கள் என்றே சொல்கின்றேன். அது சுகமானதாகத் தோற்றம் தரலாம், ஆனால் ஒரு கட்டத்தின் பின் அவை உங்களுக்கே அலுத்துப்போகலாம். அல்லது அதற்குமேல் போகமுடியாதவாறும் போய்விடலாம். கூட்டத்தினர் கைதட்டலுக்கு ஆடும் வேடம்கட்டிய கோமாளியா? அல்லது ஒரு கூட்டத்தின் மேம்பாட்டிற்கான போராளியா? எதுவாக இருக்கப்போகின்றீர்கள் என்பது இறுதியில் உங்களுக்கானதே.


அன்மையில் நான் ரசித்த ஒரு ஒலிப்பதிவை இங்கே கேளுங்கள். இதுபோலல்ல, இதற்கு மேலாகவும் உங்களால் படைக்க முடியும். அந்தத்திறன் உங்களிடமெல்லாம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொண்டதால் சொல்கின்றேன் உன்னால் முடியும் தம்பி!தம்பி!.
மேலும் வாசிக்க...

Tuesday, April 3, 2007

எங்கிருந்து எங்கு....?

சென்ற வாரத்தில், இணைய நண்பர் ஒருவருடன் சிறுபராய நினைவுகள் குறித்து உரையாடும்போது சொன்னார், சின்னவயதில் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் ஓட்டப்பந்தயங்களில் தன்னையும் சேர்த்துவிடுவார்களாம், தானும் போட்டியன்று அதற்கான உடையெல்லாம் அணிந்து, ஊட்டசக்திபெறவெனத் தரப்படும், குளுக்கோஸ் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, சத்தம் போடாமல் வேலிக்கால் புகுந்து, அருகேயுள்ள தன்வீட்டிற்குச் சென்று விடுவாராம். போட்டிநேரத்துக்கு போட்டியாளர்களை அழைத்தால், தன்னைக் காணக்கிடையாதென்று. கிட்டதட்ட அதுபோல்தான் வலைச்சரம் தொகுப்பாசிரியராக என் பதவிப்பொறுப்பும் இவ்வாரத்தில் ஆகிவிட்டது. பெரிய தடாலடியாக எழுத்தைப்பற்றியெல்லாம் எடுத்துவிட்டு, அதற்கு நாலுபேர் வந்து(உண்மையிலேயே நாலு பேர்தானுங்க:)) ஊட்டமெல்லாம் தந்து, உசுப்பேத்திவிட, இரண்டு பதிவு போட்டுவிட்டு, இருந்த இடமே தெரியாமல் ஒடிவிட்டேன்.
மன்னிக்க வேண்டும் நண்பர்களே! சிந்தாநதி நீங்களும்தான். இது ஒரு எதிர்பாராத நிகழ்வு. ஞாயிறு பகல் தமிழ்மணத்தின் வழங்குநிலைக் குழப்பமும், திங்கள் என் உடல்நிலைக்குழப்பமும், ஒன்றாகத் தாக்கியதால், ஆட்டத்திலிருந்து பின்வாங்க வேண்டி வந்திற்று. ஆனாலும் திரும்பவும் வந்தாயிற்று. நாளை பதவியிலிருந்து கலைப்பதற்குள் முடிந்தவரை, இடைவெளியை நிரவி, ஆட்டக்கணக்கிற்கு வந்துவிடுவேன் என்று நம்புகின்றேன். பார்க்கலாம்...:)) சரி மீள ஆரம்பிப்பதை ஒரு பம்பலா(அதுதாங்க கலக்கலா) ஆரம்பிப்போமே...

நேற்று ஒரு பதிவில், ஒரு அசைபடப்பாடல் கேட்டேன், அதைக் கேட்டபோது அதே போன்ற ஒரு தமிழ் பாட்டு ஞாபகத்துக்கு வந்தது. என் ஞாபகத்துக்கு வந்த இந்தப்பாடல் காதலிக்கநேரமில்லை படத்தில், மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அவர்களின் இசையில் வெளிவந்தது. வெளிவந்த வருடம் 1964. இங்கிருந்த அங்கு சென்றதா அல்லது அங்கிருந்து இங்கு வந்ததா?. எங்கிருந்து எங்கு சென்றதென எனக்குப்புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா எனப்பார்ப்போம். அதற்கு நீங்கள் இங்கிருந்து
அங்கு செல்ல
வேண்டும். சென்று பாரத்தபின் எங்கிருந்து எங்கு சென்றதெனவோ, அல்லது அங்கிருந்து, இங்கிருந்து, எங்கிருந்தும் எதுவும் செல்லவில்லை. அதது அங்கங்கேயிருக்கிறது என்கிறீர்களா?... எதுவாயினும் சொல்லுங்கள்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது