07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 4, 2010

நல்வாழ்த்துகள் அக்பர் - வாங்க பாலாசி வாங்க

அன்பின் நண்பர்க்ளே !

கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் அக்பர், பல பணிகளுக்கிடையேயும், ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 331 மறுமொழிகள் பெற்று கிட்டத்தட்ட 75 புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி, மிகுந்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

நண்பர் அக்பரை வாழ்த்தி வழை அனுப்புவதில் பெரு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

நாளை 05.04.2010 துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் ஈரோட்டினைச் சார்ந்த நண்பர் பாலாசி. இவர் சொம்பொன்னார் கோவிலைச் சார்ந்தவர். தற்பொழுது ஈரோட்டில் வசித்து வருகிறார். சி@பாலாசி என்ற பதிவினில் 2009 பிரவரி முதல் எழுதி வருகிறார். இவரது இடுகைகளில் எனக்கு மிகவும் பிடித்த இடுகை சமீபத்தில் இவர் எழுதிய இடுகைதான்.

நண்பர் பாலாசியினை வருக வருக - ஏற்ற பணியினை நன்கு நிறைவேற்றுக- என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

விடைபெறுகிறேன் , நன்றி நண்பர்களே !


உலகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் மாறிக்கொண்டிருப்பது காலம்தான். இப்போதுதான் அறிமுக இடுகை எழுதிய மாதிரி இருக்கிறது அதுக்குள் நன்றி இடுகை.

இந்த ஒரு வார காலத்தையும் சுகமான சுமையாக மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். உங்களுக்காக தேடியதில் நானும் பல நல்லபதிவுகளை காணமுடிந்தது.

முதல் இடுகையில் புது நண்பர் ஒருவர் "தர‌மற்ற இடுகைகளுக்கு போடப்படும் பின்னூட்டங்கள்தான் தரமான பதிவுகளை வளரவிடாமல் தடுக்கிறது" என்று சொல்லியிருந்தார். அப்படியில்லை நண்பரே ஒவ்வொரு பின்னூட்டத்தையும் நட்பிற்கான முகவரி அட்டையாகவே உணர்கிறேன் நான். அதில் பல புதிய நண்பர்களும் கிடைத்துள்ளார்கள். போக , நல்ல எழுத்துக்கள் எப்படியாவது அனைவரையும் சென்றடைந்தே தீரும்.

ஏனெனில் பிளாக்கரின் அடிப்படை நோக்கமே தங்கள் அனுபவங்கள், போட்டோக்கள், குறிப்புகள், படைப்புகள் போன்ற கருத்து பரிமாற்றங்கள்தான் எழுத்தாளர்களை உருவாக்குவது அல்ல. ஆனால் இதிலுருந்து சக பதிவர் சிறந்த எழுத்தாளராக ஆவதில் எங்களைவிட மகிழ்ச்சியடைபவர்கள் யார் இருக்கிறார்கள். மகிழ்ந்தும் இருக்கிறோம்.

புதியவர் பழையவர் என்ற பேதம் இல்லாமல் சில நேரங்களில் நாம் இடும் சில இடுகைகள் சிறப்பானவையாக அமைந்துவிடும். அந்த மாதிரி இடுகைகள் உங்கள் கண்ணில் படும்போது உங்கள் பதிவில் தெரிவித்தால் படிப்பவர்களுகு மிக உபயோகமாக இருக்கும். அதன் தொடக்கமாகவே நான் வாரம் ஒருமுறை படித்ததில் பிடித்த இடுகைகளை ( பதிவுகளை அல்ல )எழுதுகிறேன். நீங்களும் எழுதுங்கள் நாம் பயன்பெற.

எனக்கு எழுத வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு மிக்க நன்றிகள். புதிய பதிவர்களின் அறிமுகம் என்பதைவிட எனக்கான அறிமுகமாகவே இதை உணர்கிறேன். இது போல் மேலும் பல பதிவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் சீனா ஐயாவை பாராட்ட வார்த்தைகளில்லை.

போலவே என்னுடனிருந்து அறிமுகம் செய்த மொக்கை வர்மனுக்கும், மங்குனிக்கும் நன்றிகள்.

இனிதே விடைபெறுகிறேன் நண்பர்களே. வாசித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Saturday, April 3, 2010

இன்டர்நெட் யுக காதல் !

மொ.வ : ஹாய் அக்பர்! இன்னிக்கு யாரையெல்லாம் இன்ட்ரடியூஸ் பண்ண போறீங்க.

அக்பர் : ஐ! மன்னா இங்கிலீஷ் கலந்து பேசுறீங்க.

மொ.வ : எல்லாம் உங்கள மாதிரி ஆளுகிட்ட ஒரு வாரமா பேசிப்பேசி தான்.

அக்பர் : மன்னா டாக்டர்கள் பற்றிய அறிமுகப்பதிவில் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களை குறிப்பிட மறந்து விட்டேன். அருமையான பல மருத்துவ கட்டுரைகள் அளித்துள்ளார் போய் பாருங்கள். ( நினைவூட்டலுக்கு நன்றி ஹுசைனம்மா)

அது போலவே முனைவர் இரா.குணசீலன் அவர்களும் பல அருமையான இடுகைகளை வழங்கியுள்ளார். தங்கம் கொடுத்து மிளகு வாங்கியவர்களை இவர் பதிவில் காணலாம்.

இனி கணினி வைத்திருக்கும் அனைவருக்கும், அது சம்பந்தமாக படிப்பவர்களுக்கும் பல உபயோகமான தகவல்களை அளிக்கும் வலைப்பூக்களை காணலாம்.

முதலில் நம் மாம்ஸ் ஜெகநாதன் - சங்கர் இணைந்து வழங்கும் கற்போம் எக்ஸெல். இதில் செல்லுக்கு பூட்டு போடுவது குறித்து அருமையாக விளக்கியுள்ளார்.

மொ.வ : அமைச்சரவையில் சிலருக்கு வாய்ப்பூட்டு போட வேண்டியுள்ளது.

அக்பர் : தங்களை மனதில் வைத்துதானோ என்னவோ எண்ணுதல் யார்க்கும் எளியவாம் என்னும் தலைப்பில் இன்னொரு இடுகை எழுதியிருக்கிறார்.

நண்பர் வடிவேலன் அவர்கள் கணினியில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிந்துள்ள ஒரே புகைப்படைத்தை நீக்கவும், தேவையற்ற தளங்களை பார்ப்பதிலிருந்து குழந்தைகளை பாதுக்காக்கவும் வழிகள் சொல்லியுள்ளார்.

மொ.வ : அவசியமான ஒன்று. அடுத்து.

அக்பர் : நண்பர் சைபர்சிம்மன் பிற மொழிகளை எளிதாக கற்க வழி சொல்வதோடு, இன்டர்நெட் யுக காதலைப்பற்றியும் அழகாக எழுதியுள்ளார்.

நண்பர் டிவிஎஸ் 50 பிளாக்கர்களுக்கு பயன்படும் விதமாக "மேலும் வாசிக்க" வைப்பது எப்படி என்று கூறியுள்ளார். இடுகைகளை பிடிஎஃப் கோப்பாக சேமிப்பது பற்றியும் விளக்கியுள்ளார்.

மொ.வ : டிவிஎஸ் 50 பலதர மக்களுக்கும் பயனளித்தது போல இவரும் என்று சொல்லுங்கள்.

அக்பர் : நண்பர் சூரிய கண்ணன் நெருப்பு நரியில் வேகமாக உலவுவதற்கு வழிகள் சொல்லியுள்ளார்.

மொ.வ : குள்ள நரியை வேட்டையாடி இருக்கிறேன். நெருப்பு நரியா?

மங்குனி : ( வேட்டையாடிய லட்சணம்தான் தெரியுமே) மன்னா அது இணையத்தை திறக்க உதவும் மென்பொருள்.

அக்பர் : நண்பர் பிகேபி வெப் கேமரா பயன்படுத்தும் நேரம் தவிர மீதி நேரம் மூடிவைக்க அறிவுறுத்துகிறார் . ஐ போனில் அழகு தமிழின் பயன்பாட்டையும் விளக்கியுள்ளார்.

சுதந்திர இலவச மென்பொருள் தளத்தில் வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படியென்று சொல்லிக்கொடுக்கிறார்கள். படிப்பதற்கு வசதியாக தமிழின் தொழில்நுட்ப பதிவுகளின் பட்டியலை அளித்துள்ளார்கள்.

மொ.வ : ரொம்ப நல்ல தகவல்.

அக்பர் : இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் இருப்பது போலவே தனிநபர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே இருப்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அனைத்து தளங்கள் வழங்கும் மென்பொருள்களையும் சரி பார்த்த பின்பே பயன்படுத்துங்கள்.
மேலும் வாசிக்க...

Friday, April 2, 2010

மங்குனி முதல் அமைச்சரா !

மொ.வ : என்ன அக்பர் லேட்டு?

அக்பர் : லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் மன்னா.

மொ.வ : என்ன பஞ்ச் டயலாக்கா?

அக்பர் : இல்லை பதிவர் டயலாக். சரி இனி அறிமுகத்தை ஆரம்பிப்போம். இன்று இந்த பதிவைப்பார்த்ததும் மனதுக்கு வருத்தமாகிவிட்டது.

உமா அவர்கள் எழுதிய இந்த பதிவை பார்த்தது அசந்து போய் விட்டேன். தமிழ் செய்யுளின் அனைத்து வகைகளையும் எளிமையான பாடல்களாக எழுதியிருக்கிறார். உதாரணத்துக்கு ஒன்று

காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
கருத்தை இருத்தல் நலம்.

நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல.

உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.

அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.

ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்தம்
நாட்டம் அதிலே நிறுத்து.

என்ற இந்த பாடல் குறள் தாழிசை, வெண்பா பகுதியில் வருகிறது.

மொ.வ : சரி சந்தோசமான விசயம் தானே பிறகெதற்கு வருத்தம்.

அக்பர் : 2006லிருந்து எழுதி வரும் இவருக்கு இதுவரை 19 பின்தொடர்பவர்கள், ஒவ்வொரு பதிவுக்கும் 0 லிருந்து 6 பின்னூட்டம் வரை வந்துள்ளது. அவர் விரும்பாவிட்டாலும். படித்து ஊக்கப்படுத்துவது நமது கடமை தானே.

மொ.வ : சரியாக சொன்னீர்கள் இப்போதே போகிறேன்.

அக்பர் : அவசரம் வேண்டாம் இவர்களையும் படியுங்கள்.

அடுத்து ஆனந்தி அவர்களின் இந்த புதுக்கவிதையும் வாசியுங்கள். உதாரணத்துக்கு சில வரிகள்.

" உன்னிடம் ஒன்று கேட்பேன்
மறைக்காமல் சொல்வாயா??
உனக்குள் தொலைந்த என்னை
உயிராய் நீ காப்பாயா?? "

அது போக நீங்கள் எந்தவகை நண்பர் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்.

நண்பர் சே. குமாரின் மனசுக்குள் சில எண்ணங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். கவிதையும் , சிறுகதையும் அருமையாக எழுதுகிறார்.

நண்பர் விஜயின் அச்சச்சுவை கவிதையை சுவைத்துப்பாருங்கள். கடவுச்சொல் மற‌ந்து விடுவீர்கள். அவரின் முதல் கவிதையையும் இங்கு காணலாம்.

அடுத்து மங்குனி அமைச்சர்.

மொ.வ : நிறுத்துங்கள். யோவ் மங்குனி என் அனுமதியில்லாமல் எப்போதைய்யா பதிவர் ஆகினீர்கள்.

மங்குனி : நீங்கள் வேறு அரசே கைரேகை பதியும் என்னைப்போய்... ஹிஹிஹி.. அது வேறு மங்குனி.

மொ.வ : பார்த்தால் மன்னர் மாதிரி அல்லவா இருக்கிறார்.

அக்பர் : எங்கள் நாட்டில் அமைச்சருக்கு மேல் உயர்ந்த பதவிகள் கிடையாது மன்னா. அது போக பதிவுலகில் முறையான அமைச்சராக வந்த முதல் அமைச்சரும் இவர்தான். நோகியா பரிசு போட்டி அறிவித்திருக்கிறார் கலந்து கொள்ளுங்கள் மன்னா.

அடுத்து நண்பர் சுரேந்திரனின் அகம் புறம் அருமையாக இருக்கிற‌து. ஒரு கிரிக்கெட்டரின் கதையை அருமையாக் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

அது போலவே நண்பர் ஜெய்லானி முட்டாள்கள் தினத்தை பார்த்த பார்வையை இங்கே படியுங்கள்.

புல்லட் மணியை தெரியுமா.

மொ.வ : ஆராய்ச்சி மணி தெரியும். அதுவும் அடிக்கப்படாமலே கிடக்கிறது. அது யாரு புல்லட் மணி.

அக்பர் : மணி அடிக்கப்படவில்லை என்றால்? நாட்டில் குற்றங்களே இல்லையா மன்னா.

மங்குனி : நீங்க வேற அதை திருட்டு போயிட்டாங்க. வேறு மணி செய்யச் சொல்லியிருக்கு. நீங்க புல்லட் மணியைப் பற்றி சொல்லுங்கள்.

நண்பர் புல்லட் மணி அவர்கள். சச்சினிற்கு முன்னாலேயே சர்வதேச அரங்கில் 200 ரன்கள் அடித்தவரைப்பற்றி எழுதியுள்ளார். பஸ்ஸை பற்றி இவரின் பார்வை நன்று.

நண்பர் வெங்கட் சிங்கத்திடமிருந்து தப்பிக்கச்சொல்லும் யோசனை அருமை. சேலையோட கதை சிரிக்க வைக்கிறது.

அடுத்து அண்ணன் பொன். பழனிச்சாமி அவர்கள் பெண் பார்த்த கதையையும், திருமண விருந்தையும் நகைச்சுவை ததும்ப சொல்லியுள்ளார் படியுங்கள்.



மொ.வ : ரொம்ப மகிழ்ச்சி அக்பர். மணி விசயத்தை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

அக்பர் : அதற்கு மணி வேண்டும் மன்னா.
மேலும் வாசிக்க...

Thursday, April 1, 2010

சங்கம் வைக்காமல் தமிழ் வளர்க்கும் பதிவர்கள்

இதுவரை படித்து பின்னூட்டமிட்டு ஆதரவளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இனி வரும் இடுகைகளுக்கும் தங்களது ஆதரவை தொடர்க.

‍‍‍‍‍‍‍‍‍‍‍====================

மொ.வ : அமைச்சரே இன்று இடுகை முழுக்க ஊதா மையினால் எழுதப்பட்டுள்ளதே ஏன்.

மங்குனி : அதுவா மன்னா. அக்பர் சிறுவயதில் ஏப்ரல் 1ம் தேதி போறவார பையன்கள் மேல மை தெளிப்பாராம் அந்த நினைவில் தான்.

மொ.வ : பார்த்தா தெளித்தவர் மாதிரி தெரியலை. பாருங்க இவர் சட்டைதான் மையா இருக்கு. ம்.. அக்பர் இன்று என்ன ஸ்பெஷல்.

அக்பர் : தமிழ் வலைதளத்தில் சிறப்பாக இயங்கிவரும் சில டாக்டர்களை முதலில் பார்க்கலாம் மன்னா.

மொ.வ : ஆகா அருமை அப்படியே ஆகட்டும். ஆனால் அவர்கள் ஏற்கனவே பிரபலம் ஆயிற்றே.

அக்பர் : புதியவர்களுக்கு இவர்கள் புதியவர்கள்தானே மன்னா.

முதலில் டாக்டர் தேவா சார். மருத்துவம் தொடர்பாக அருமையான பல இடுகைகளை எழுதியுள்ளார். அனைத்து பதிவர்களையும் தோழமையுடன் அணுகும் தன்மை சிறப்பு. அனைவருக்கும் பிடித்தமானவர்.

அடுத்து டாக்டர் புருனோ சார். அருமையான மருத்துவக்குறிப்புகள் வழங்குவதோடு மட்டுமில்லாமல், மருத்துவத்துறை சம்பந்தமான செய்திகளையும் அலசுகிறார். ஒரு மருத்துவராக மட்டுமில்லாமல் தேவா சாரை போல தோழமை உணர்வு உள்ள‌வர்.

நம் தல டாக்டர் சுரேஷ் அவர்களும் மருத்துவம் சம்பந்தமாக தனி வலைப்பூ வைத்துள்ளார். கிராமப்புற மருத்துவர்களின் பிரச்சனைகளை விரிவாக அலசியுள்ளார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவரின் இடுகைகள் அருமை.

டாக்டர் துமிழ் சார் அவர்கள் குழந்தைப்பேறு , பாலியல் சம்பந்தமான இடுகைகளை அருமையாக எழுதியுள்ளார். இன்னும் பலரை தன‌து பதிவு சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறை எடுத்துக்கொள்வது பிடித்திருக்கிறது.

டாக்டர் சுர்ஜித் (Dr. Srjith.) அவர்கள் ஒரு அக்குபஞ்சர் ஸ்பெஷலிஸ்ட். அக்கு பஞ்சர் பற்றிய இவரின் சுவாரஸ்யமான இடுகைகளை படிக்க தவறாதீர்கள். வலையுலகுக்கு புதியவரான இவருக்கு நாம் தொடர் ஆதரவு கொடுத்து நல்ல பல இடுகைகளை பெறுவோம். (அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நாடோடி ஸ்டீபன்)

மன நல மருத்துவர்கள், டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி வலைத்தளத்தில் இயங்குவது நமக்கு பெருமையே.

மொ.வ : மற்ற மருத்துவர்களிடம் போனால் ஊசி போட்டு விடுவார்கள். நான் அக்கு பஞ்சர் மருத்துவரிடம் போகிறேன்.

மங்குனி : மன்னா அவர்களிடம் ஒரு ஊசி, இவரிடம் போனால் உடம்பு முழுக்க ஊசிதான் ஜாக்கிரதை.

அக்பர் : வலிக்காது மன்னா. பயம் வேண்டாம்.

மொ.வ : அடுத்து யார் அக்பர்.

அக்பர் : பதிவுலகிற்கு வந்த குறுகிய காலத்தில் தன் எழுத்தின் மூலம் அதிக நண்பர்களையும், வாசகர்க‌ளையும் பெற்ற நண்பர் செ. சரவணகுமாரின் பக்கத்தை பார்ப்போம் மன்னா. புத்தகவிமர்சனம், சினிமா விமர்சனம், சொந்த அனுபவங்கள் என்று எதை எழுதினாலும் இனிமையாக, எளிமையாக மனதில் பதியச்செய்து விடுவது இவரின் சிறப்பு. ஒரு முறை சென்றால் விடமாட்டீர்கள்.

அது போலவே மாம்ஸ் ஜெகநாதனும் தனது வித்தியாசமான நடையில் படிப்பவர்களை கட்டிப்போட்டு விடுகிறார்.இவரின் இடுகைகளுக்கு இருப்பது போலவே இவரது பின்னூட்டங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு அதில் நான்தான் முதலில்.

அடுத்து நம்ம ஷங்கி அண்ணன். வேலைப்பளு காரணமாக குறைவாக எழுதினாலும் ரசிக்க வைத்து விடுவது அவரது சிறப்பு. நெகிழ வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.

நண்பர் கார்த்திகேயனின் ஹாலிவுட் சினிமா விமர்சனங்கள் எனக்கு மிகப்பிடித்தமானவை. இவரின் விமர்சனத்தை படித்தால் படம் பார்க்கவே தேவையில்லை அந்த அளவு காட்சிக்கு காட்சி மிக நுட்பமாக விவரித்து நம் கண் முன் கொண்டு வந்து விடுவார். இவரின் விமர்சன தூண்டுதலில் புரியாத படங்களை கூட ரசித்துப்பார்த்துள்ளேன். அண்ணன் ஹாலிவுட் பாலா போலவே மற்றுமொரு சிறந்த விமர்சகர்.

அது போலவே தமிழ் பட விமர்சனங்களுக்கு ஜெட்லி. இவரின் விமர்சனத்தை பார்த்தே படம் ஓடுமா, ஓடாத என்பதை தெரிந்து கொள்ளலாம். அதுவும் அந்த ஜெட்லி பஞ்ச் சூப்பர்.

மொ.வ : ஆமாம் முட்டாள்கள் தினம் தேவையா?

அக்பர் : மகளிர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர்கள் தினம்னு இருக்கிறமாதிரி நமக்கும் ஒரு தினம் இருந்துட்டு போகட்டுமே மன்னா.

மொ.வ : நீங்க சொன்னவங்களை எல்லாம் அவசியம் இன்று சந்திக்கணும். அதனால இன்று இது போதும். மக்களே நீங்களும் வாருங்கள். அதுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டுட்டு வர மறந்துறாதிங்க.


,
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது