07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 9, 2013

ஹைக்கூ தோட்டம் !!

படைப்பிலக்கியத்தில் மிக கடினமானது கவிதை தான். ஆனால், பலர் எழுத முயற்சிக்கும் போது கவிதையில் இருந்தே தொடங்குகின்றனர். அதனாலையே கவிதையில் நவீன், புதுக்கவிதை, மரபு என்று பல பிரிவுகள் உருவானது. பல வாசகரகள் இத்டனை பிரிவுகளை புரிந்து கொண்டு வாசிக்க வேண்டியதாக இருந்ததால் கவிதையை தொடங்கிவிட்டனர்.

கவிதையை ஒதுக்கிய வாசகர்களாலும் ஒதுக்க முடியாத கவிதை - ஹைக்கூ கவிதை என்று சொல்லலாம். மூன்று வரிகளில் மூன்று பக்க அனுபவத்தை கொடுக்க கூடியது ஹைக்கூ கவிதை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஹைக்கூ கவிதைகள் எழுதிய பதிவர்களை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

இந்த ஹக்கூ கவிதைகளை விமர்சனம் செய்வதை விட படித்து உணர்வதே சிறந்தது என்று நினைக்கிறேன்.

முதல் பதிவாக பிஸ்மில் ரசிக்கின் ஹைக்கூ கவிதைகள்.

அணுகுண்டு

அறிவியலின் 
 படைப்பில்
 பூகம்பம்... 

பசிக்கொடுமை

எதுவும் விளையாத 
சமவெளிப் பகுதி 
ஏழையின் வயிறு 

மேலும் இவரது கவிதைகளை வாசிக்க…
 *
அடுத்து, நாம் பார்க்க இருக்கும் பதிவர் ஜோ.சம்யுக்தா கீர்த்தி உடையது. இவரது "தாலி" மற்றும் "கணவன்" பற்றிய ஹைக்கூ கவிதை ஈர்ப்பாக இருக்கிறது.

தாலி

பெண்ணவளுக்கு 
துணைவனின் 
உத்தரவாதம்! 

கடவுள்

நேற்றையதினமே 
எதிர்கால 
வித்திட்டவன்! 

மேலும் இவரது கவிதைகளை வாசிக்க....
 *

அரசியலை பற்றி பதிவிடும் கோவி.கண்ணன் அவர்கள் ஹைக்கூ கவிதையும் எழுதுவார் என்பதில் இந்த பதிவில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

பெற்ற கடன் 

மணக்கோலத்தில் மகள் 
பெற்ற 'கடன்' 
கண்ணீருடன் தந்தை !

*
அஸீஸ் நிஸாருத்தீன் தனது ஒவ்வொரு ஹைக்கூ கவிதைகளையும் பதிவாக பகிர்ந்திருக்கிறார். குரு என்ற பதிவர் தனது ஹைக்கூ கவிதைகளை இமேஜாக பகிர்ந்து இருக்கிறார்.

பிச்சைக்காரன் சாவில் 
இறந்து கிடக்கின்றன 
சில்லறைகள்

கண்ணன் சேகரன் என்ற பதிவர் தனது 'ஹைக்கூ' தொகுப்பை நூலாக கொண்டு வராமல், ஒரு பதிவாக வாசகர்களுக்கு கொடுத்திருக்கிறார். 
*

ஹைக்கூ கவிதைகளை பற்றி எழுதும் போது இவருடைய பதிவைப் பற்றி சொல்லாமல் எழுத முடியாது. ஹைக்கூ கவிதைகளை பல நூல்கள் எழுதியிருக்கும் இரா.ரவி அவர்கள். மற்றவர்களின் ஹைக்கூ கவிதை நூல்களுக்கு எழுதிய விமர்சனத்தையும் நூலாக தொகுத்திருக்கிறார்.

ஹைக்கூ ( சென்றியு ) 

பாலைவன வெயிலில்
நடந்தும் வியர்ப்பதில்லை
ஒட்டகம் !

 *
 “ஹைக்கூ வாங்கலையோ ஹைக்கூ” என்ற நகைச்சுவையாக கே.ஜி.ஜவஹர்லால் தலைப்பு வைத்தாலும், கீழ் காணும் இவரது ஹைக்கூ கவிதை ரசிக்கும் படியாக இருந்தது.

மழைக்கு ஒதுங்கியதில்லை
எங்கள் பள்ளியில்
கூரை இல்லை மேலும்

இவரது கவிதைகளை வாசிக்க....

*

ஒரு சில கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் என்று தலைப்பு வைத்துக் கொண்டு ஐந்து, ஆறு வரிகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பதிவை இதில் குறிப்பிட்ட விரும்பவில்லை. ஹைக்கூ கவிதைகளை பற்றி எழுத விரும்பும் பதிவர்கள் சுஜாதா எழுதிய "ஹைக்கூ ஒரு எளிய அறிமுகம்" (உயிர்மை வெளியீடு) நூலை படித்தால் உதவியாக இருக்கும்.

மேலும், பரிதி.முத்துராசன் ஜப்பானிய முன்னனி கவிஞரான டானிகுச்சி ஹைக்கூ கவிதைகளை பரிதி.முத்துராசன் பகிர்ந்துள்ளார். அவர்களுடைய வலைப்பதிவில் ஹைக்கூ கவிதைகள் பற்றி பல விளக்கங்கள் தந்துள்ளார். பதிவர் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மீண்டும் நாளை பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Monday, July 8, 2013

புத்தகங்களை அறிமுகம் செய்யும் பதிவர்கள் !!

வணக்கம் நண்பர்களே !

 ஒரு வாரம் ஆசிரியர் பொறுப்பும், பெருமையும் வழங்கிய சீனா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, என் ஆசிரியர் பணியை தொடங்குகிறேன். இந்த ஒரு வாரம் என்னை தொடரப் போகும் வாசகர்களுக்கு, இறுதி பதிவில் நன்றி தெரிவிக்க போகிறேன் என்றாலும் முன்பே ஒரு 'நன்றி'யை சொல்லி தொடங்குகிறேன்.

புத்தகங்கள் மீது எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதால், எனது முதல் பதிவாக புத்தகங்களை அறிமுகம் செய்து வைக்கும் பதிவர்கள், பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வெட்டியரட்டைகள், சினிமா, பொழுது போக்கு போன்ற பதிவுகளுக்கு நடுவில் புத்தகங்களை வாசித்து, அந்த படைப்பை பற்றிய விமர்சனத்தை பகிர்ந்த நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே ! அவர்களுக்கு நன்றி தெரித்துக் கொண்டு, அந்த பதிவையும், புத்தகத்தையும் உங்களிடம் பகிர்ந்து விரும்புகிறேன். 

முதலில் பதிவர், பத்திரிக்கையாளரான யுவகிருஷ்ணாவின் “கதிரேச செட்டியாரின் காதல்” நூல் விமர்சனத்தை சொல்ல விரும்புகிறேன். பிரபல பத்திரிக்கைகளில் நூல் விமர்சனம் என்று பத்து வரிகள் ஒதுக்கி, மேலோட்ட பார்வையே இருக்கும். அதே பத்திரிக்கை இரண்டு பக்கத்திற்கு நூல் விமர்சனம் எழுதினால் எப்படி இருக்கும் என்பது போல யுவாவின் எழுத்து நடை(பத்திரிக்கையாளர் என்பதால் அப்படி இருக்கலாம்). இவர் இதுப் போன்ற பதிவுகளை புத்தகக் கண்காட்சி சமயத்தில் மட்டும் பதிவிட்டாமல், மாதம் ஒன்று அல்லது இரண்டு புத்தகம் என்று பகிர்ந்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

அடுத்து, பார்க்க இருக்கும் பதிவு என்பது சொல்வதை விட வலைப்பூ என்று சொல்லலாம். புத்தக விமர்சனத்திற்கு என்று ஒரு தனி வலைப்பூவை “நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்” என்ற பெயரில் கிருஷ்ண பிரபு நடத்தி வருகிறார். இந்த புத்தக விமர்சனம் என்று குறிப்பிட்டு என்று சொல்ல முடியாமல், அனைத்து புத்தகத்தையும் பிரித்து மெய்ந்து விமர்சனம் செய்திருக்கிறார். குறிப்பாக, 2012 சென்னை புத்தகக் கண்காட்சி எழுதிய பதிவு  லைவ் வீடியோ கவரேஜ் கொடுத்ததுப் போல் இருந்தது.

புத்தக விமர்சனத்திற்கு என்று இருக்கும் இன்னொரு வலைப்பூ “புத்தக விமர்சனங்கள்”. சாய் என்பவர் இந்த வலைப்பூவில் தான் வாசித்த பல புத்தகங்களை பகிர்ந்து இருக்கிறார். ஆனால், பெரும்பாலான புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களாக இருப்பது கொஞ்ச,ம் நெருடலாக இருக்கிறது.

அடுத்து நாம் பார்க்க இருக்கும் பதிவர் அதிஷா. எவ்வளவு சீரியஸ்யாய் படம் எடுத்தாலும், அதை காமெடியாக பார்க்கக் கூடிய நபர் ஒரு புத்தகத்தை சீரியஸாய் விமர்சனம் எழுதியிருந்தார். விகடனை புறக்கணிக்கும் என் போன்ற ஆட்களுக்கு இவர் எழுதிய பதிவு தான் அந்த நூலை அறிமுகம் செய்து வைத்தது. 2013ல் உயிர்மையில் சிறந்த கட்டுரை பிரிவுக்கு பரிசுப் பெற்ற ராஜூ முருகனின் “வட்டியும் முதலும்” நூல் தான் அது. விகடன் இது போன்ற நல்ல கட்டுரை வெளியிடுகிறது என்பதை இதுப் போன்ற பதிவுகள் மூலமே தெரிந்துக் கொள்ள முடிகிறது.

அடுத்து பார்க்க இருக்கும் பதிவர் என்று சொல்வதை விட, பதிப்பாளர் என்று சொல்லலாம். அகநாழிகை பதிப்பகத்தின் உரிமையாளர் வாசுதேவன். இவர் பதிப்பாளர் மட்டுமல்ல தீவிர இலக்கிய வாசகர். இவர் எழுதிய “வலி சூழ்ந்த வாழ்க்கை - அ.எக்பர்ட் சச்சிதானந்தத்தின் ‘நுகம்’ சிறுகதைத் தொகுப்பு”  என்ற விமர்சனத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.

நூல் பற்றிய விமர்சனங்கள் மட்டும் இல்லாமல், ஒரு சிலர் தாங்கள் பணியாற்றிய நூல்களை பற்றியும் தங்கள் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அதில், குறிப்பிட்டு சொல்ல வேண்டியது சுகுமார் சுவாமிநாதன் அட்டை வடிவமைத்த “கேபிளின் கதை” நூல் பற்றி தனது அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

புத்தக வாசிப்பு குறைந்து வரும் காலத்தில், தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு பிறரையும் படிக்க தூண்டும் இந்த பதிவர்களையும் பாராட்டியாக வேண்டும்.

மீண்டும் நாளை பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Sunday, July 7, 2013

குகன் கூடல் பாலாவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற கூடல் பாலா தான் ஏற்ற பொறுப்பினை சிறந்த முறையில் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்                                           : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்                             : 042
அறிமுகப் படுத்திய பதிவுகள்                                :037
பெற்ற மறுமொழிகள்                                               : 123

கூடல் பாலாவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரக் குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார் குகன்.

இவரின் இயற்பெயர் கு.கண்ணன் என்பதே ! இதே பெயரில் பலர் இருந்ததனால்தன் பெயரைக் குகன் என்று சுருக்கிக் கொண்டார். சொந்த ஊர் திருச்சி - வாழ்வதோ சென்னை.  கணினித்துறையில் பணி புரிகிறார்.  சில நண்பர்கள் எழுதி வெளியிட்ட புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாகரத்னா பதிப்பகம் மற்றும் We Can Books என்கிற இரு புத்தக விற்பனை நிலையங்களை உருவாக்கி இருக்கிறார். 

 தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் இரண்டு புத்தகங்களையும்   எழுதி வெளியிட்டிருக்கிறார்.  

நண்பர் குகனை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் கூடல் பாலா

நல்வாழ்த்துகள் குகன் 

நட்புடன் சீனா






மேலும் வாசிக்க...

உடம்பு முழுதும் விஷம்....உடனே வெட்டுங்க!

இன்றைய வலைச்சரத்தில் இன்று உலக மக்களுக்கு மிகவும் தேவையான விழிப்புணர்வான  சுற்றுசூழல்  பாதுகாப்பு பற்றிய பதிவுகளைப் பகிர்கின்றேன்.  

முதலாவதாக சுற்றுசூழல் விழிப்புணர்வை சிறப்பாக ஏற்படுத்திவரும் மரம் வலைத்தளத்தில் இடப்பட்டுள்ள அரச மரத்தின் சிறப்பு  என்ற பதிவு . 

அடுத்தபடியாக பிரபல எழுத்தாளர் தேனம்மை லட்சுமணன் அவர்கள் தளத்தில் எழுதியுள்ள மின்சார சிக்கனம் தேவை இக்கணம் பதிவு மிகவும் அருமையாக உள்ளது . மின்சாரத்தை வீணடிப்பவர்களுக்காக சாமானிய மக்கள் துன்பத்தை  அனுபவிக்கவேண்டுமா என்ற சிந்தனையைத் தூண்டுகிறார். 

அடுத்தபடியாக தண்ணீரை வீணடிப்பதன் தீங்கையும் தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தையும் விளக்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே தளத்தின் தண்ணீர் தண்ணீர் கட்டுரை  அருமை. 

அடுத்ததாக பிளாஸ்டிக்கை தவறாக உபயோகிப்பதால் ஏற்படும் தீங்குகளை மிக அருமையாக பிளாஸ்டிக் உலகம் என்ற பதிவின் மூலமாக திரு மதிவாணன் அவர்கள் அருமையாக விளக்குகிறார்கள். 

அடுத்தபடியாக வாகனப் புகையின் தீங்கை அருமையான முறையில் விளக்கியுள்ள வாகன புகை என்ற தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் கட்டுரை சிறந்த விழிப்புணர்வு. 

அடுத்தபடியாக சுற்று சூழல் அக்கறையை எழுத்து மூலமாக மட்டுமல்லாமல் செயலிலும்  வெளிப்படுத்திக்கொண்டிருக்கும்  பசுமை விடியல் அமைப்பின் நிறுவனர் சகோதரி மனதோடு மட்டும் கௌசல்யா ராஜ் அவர்களைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் தளத்தில் வெளியான மரங்களை வெட்டுங்கள் பதிவை நான் அகில இந்திய வானொலியில் பேசி பாராட்டப்பெற்றேன் . 

நிறைவாக எனது தளத்தில் பதிவு செய்துள்ள நம் சந்ததிகளைக் காக்க நாம் உடனடியாக செய்யவேண்டிய 10 என்ற பதிவைப் பகிர்ந்து வலைச்சர ஆசிரியர் பணியைக் கொடுத்து என்னை பெருமைப்படுத்திய வலைச்சரம் நிர்வாகிகள் திரு . சீனா ஐயா மற்றும் நண்பர் பிரகாஷ் குமார் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்து  இவ்வாரம்  முழுவதும் கருத்திட்டு ஊக்கப்படுத்திய பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும்  நன்றியைத் தெரிவித்து  விடை பெறுகிறேன் .
மேலும் வாசிக்க...

Saturday, July 6, 2013

சாறு பிழிந்த சக்கை....ஷாட்கட்டா மொக்கை!

வணக்கம் சொந்தங்களே....

இன்று வலைச்சரத்தில் சில சமூக சிந்தனைகளைத் தூண்டும் பதிவுகளைப் பகிர்கின்றேன். 

தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் படாத படுகிறார்கள் என்பதை அட்டூழியம் செய்யும் தனியார் கல்லூரிகள் என்னும் பதிவின் வாயிலாக மின்சாரம் தளத்தின் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். 

அடுத்தபடியாக சமூகத்தில் நிலவும் ஒரு மிக அசிங்கமான  நிகழ்வை அச்சம் தவிர்! ரௌத்திரம் பழகு !! என்ற பதிவின் மூலமாக பழமைபேசி எடுத்துரைக்கிறார். 

அடுத்ததாக இன்றைய இளைஞர்களின் கேவலமான நிலையை மொக்கை குறித்தொரு மொக்கை என்ற இடுகை மூலமாக அருமையாக எடுத்துரைக்கிறார் பிரபல பதிவர் ரமணி அவர்கள். 

அடுத்தபடியாக குழந்தைகளின் எதிர்காலத்தில் பெற்றோர்களின் விழிப்புணர்வு எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதை BE DIFFERENT தள ஆசிரியர் பொறியியல் படிப்பு படிக்க வச்சா நல்லதுதான்....ஆனால் ...என்ற பதிவின் மூலமாக எடுத்துக் கூறுகிறார். (சேம் பிளட் ) 

அடுத்ததாக பழகிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்ற இடுகையின் வாயிலாக சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கிறார் மதிப்புமிகு புலவர் ராமானுஜம் அவர்கள். 

அடுத்தபடியாக இன்றைய சமூகத்தில் பெண்களின் அவலநிலை குறித்து திரு உதய சங்கர் அவர்கள் ஆண்களின் சமூகத்தில் பெண்கள் என்ற பதிவின் மூலமாக எடுத்துக் கூறுவதைக்  காணுங்கள் . 

இன்றைய சரத்தின் நிறைவாக பெய்யெனப் பெய்யும் மழை தளத்தில் வெளியாகியுள்ள சாதிக் கொடுமைகளை தோலுரிக்கும் சாதிகள் இல்லையடி பாப்பா பகிர்கின்றேன்.... 

மீண்டும் நாளை...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது