07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 11, 2014

மதுவிலக்கும் சில பழக்கங்களும்




தமிழகத்தில் சாராயம் மூலம் கிடைக்கும் வருமானத்திற்காக, அரசே “டாஸ்மாக்” கடைகளைத் திறந்து நமது மாநிலத்தில் பல குடிகாரர்களை உருவாக்கி வெகுவான புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறது.  அந்த பாபங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று காவிரியில் நீராடலாம் என்றால் – அங்கே தண்ணீரே இல்லை – மணல்கொள்ளை நடத்தும் பல பெரும்புள்ளிகளால் அழகிய காவிரிப்பெண் அம்மைத் தழும்பு கொண்டவள் போல காட்சி அளிக்கிறாள்.

சரி இது போகட்டும் – சென்ற மாதத்தின் ஆரம்பத்தில் தீவிர மதுவிலக்கு கொண்ட மாநிலமான குஜராத் மாநிலத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருந்தேன். பல இடங்களைக் கண்டு வந்தேன்.  அங்கே பூரண மதுவிலக்கு இருந்தும் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலிருந்து கள்ளத்தனமாய் கடத்திவருகிறார்கள். அப்படி கடத்தி வந்ததால், மதுவின் விலை பல மடங்கு ஆகிவிடுகிறது. சாதாரண IMFL சரக்கு ஒரு ஃபுல் 1000 ரூபாய்க்கு கூட விற்கப்படுகிறது என்கிறார் அங்குள்ள ஒருவர். சாதாரண மக்களால் அதனை வாங்கிவிடமுடியாது. அதனால் அவர்கள் வேறொரு பழக்கத்திற்கு அடிமையாகி இருக்க்கிறார்கள். 



மாவா மசாலா – அதாவது புகையிலை, பாக்குச் சீவல், சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் கலந்து வாயில் நிரந்தரமாக அடக்கிக் கொள்கிறார்கள் – குஜராத்தில் பார்த்த பலர் – பெண்கள் உட்பட இதை அடக்கி வழியெங்கும் எச்சில் உமிழ்கிறார்கள்.  ஐந்து ரூபாய்க்கு ஒரு சிறிய பிளாஸ்டிக் காகிதத்தில் கட்டப்பட்ட ”புடியா” கிடைக்கிறது.  நாளொன்றுக்கு பத்து பதினைந்து பொட்டலங்களை சர்வசாதாரணமாக உள்ளே தள்ளுகிறார்கள் சிலர்.

மது அருந்துவதும், இப்படி மாவா மசாலா பயன்படுத்துவதும் தங்களது உடல் நலனைப் பாதித்து, தனது குடும்பத்தினையும் அவதிக்குள்ளாக்கும் என்பது தெரிந்தே இப்பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட இவர்களை என்ன சொல்வது! அவர்களாகத் திருந்தினால் தான் உண்டு.

வலைச்சரத்தில் இந்த வாரம் முழுவதும், குஜராத் நகரில் நான் கவனித்த சில விஷயங்களை வலைப்பதிவுகளின் அறிமுகத்திற்கு முன்பாக சொல்லப் போகிறேன் – கேட்க நீங்கள் தயார் தானே!  சரி இந்த இனிய இரண்டாம் நாளின் அறிமுகங்களைப் பார்க்கலாமா?



ஆரோக்கியக் குறிப்புகள், மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள், சிறுகதைகள் என பல்சுவைப் பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கும் இப்பதிவரின் ஒரு பதிவினை இன்று பார்க்கலாம்...




நம்மை இன்று வரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் நகைச்சுவை மகா நடிகர் அமரர் நாகேஷின் பேட்டியை படித்தேன்...

எத்தனை ஆழமான உண்மை...

யோசித்து பார்த்தால்  நாம் எத்தனை முறைகள் சவுக்கு மரமாகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறோம்...


2    வலைப்பூ:  கிரி ப்ளாக்

2006-ஆம் ஆண்டிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் இவர் தன்னைப் பற்றிச் சொல்லும்போது ”பதிவு எழுதுவதற்கு அடிமை ஆகி விடக்கூடாது என்று அளவாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். எழுதுவது எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம். தமிழை பிழையில்லாமல் எழுதுவதே நான் தமிழுக்கு செய்யும் பெரிய தொண்டு. என்னுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய விருப்பம்” என்று சொல்கிறார். 

அறிமுகப் பதிவு:  வீடு தாத்தா



“தாத்தா பாட்டியின் அருமை என்னைப் போன்ற அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களுக்குத் தான் தெரியும். தாய் தந்தை இல்லாதவர்கள் ஏக்கம் எப்படி பலரால் கூறப்படுகிறதோ, அது போல இதுவும் அந்த உணர்வை ஒட்டியது தான். பெரியவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள், அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுங்கள். குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு பெரியவர்களின் முக்கியத்துவத்தை உணரச் செய்யுங்கள். அனைவரும் இந்த நிலையை கடக்காமல் செல்ல முடியாது எனவே பின்னாளில், செய்த தவறை உணர்ந்து வருந்தாமல் தற்போதே சரியான வழியில் செல்லுங்கள்.”

3    வலைப்பூ:  உள்ளங்கை

பங்கு வர்த்தகம் பற்றி நிறைய எழுதுகிறார் இந்த பதிவர்.  இன்று நாம் பார்க்கும் பதிவில் அவரது அனுபவம் பற்றி எழுதி இருக்கிறார் – கண் மருத்துவமனையில் கண்களை பரிசோதிக்கச் செல்லும்போது உங்கள் கண்களில் சொட்டு மருந்து விட்டு உட்காரச் செய்து விடுவார்கள். அப்படி கிடைத்த அனுபவம் தான் இன்றைய பதிவில் நாம் பார்க்கப் போவது!
 
அறிமுகப் பதிவு:  காணாததைக் கண்டேன்!



கண்விழிகளை விரிவாக்க (dilation aka dilatation) கண்ணினுள் சில சொட்டுக்களை விட்டு கண்களை மூடிக்கொண்டு சமர்த்தாக உட்கார வைத்துவிட்டார்கள். அதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் சிறிது சங்கடம். ஏதாவது பேசாவிட்டால் முகத்திலுள்ள தசைகள் வலிக்கத் தொடங்கிவிடும்!

4    வலைப்பூ: உண்மையைத் தேடி

கவிதைகள், கதைகள், அதிசயங்கள், அமானுஷ்யம், ஜோதிடம், ஆன்மீகம், அருளுரை என பல தலைப்புகளில் பதிவுகள் எழுதுகிறார். இவரது பதிவுகள் சில பிரமிக்க வைக்கின்றன.  படித்துப் பாருங்களேன்!




அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம் செய்யும் மலையாக இது போற்றப்படுகிறது. சமயங்களில் இரவில் சங்கொலி எழுவதாகவும், சந்தன, ஜவ்வாது வாசனை வீசுவதாகவும், ’ஓம்’ பிரணவ ஒலி கேட்பதாகவும் இங்கு இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


ஒரு நாளிதழில் பத்திரிகையாளராகப் பணிபுரிகிறாராம். கோவையைச் சேர்ந்தவர்.  அவரது கீழ்க்கண்ட பதிவிலேயே அது தெரிகிறது.  பதிவுகள் மட்டுமல்லாது கீச்சுகளிலும் கலக்குகிறார்.



‘‘நீங்க மட்டுமில்லிங் சார், நெறயப்பேரு எவ்வளோ சொல்லியும் கேட்காம வெளிநாடு போய், பணம் லட்சக்கணக்குல போனதுதான் மிச்சங் சார். உசுரோட வந்தாப்போதும்னு ஆயிடுச்சுங். உங்கள மாதிரி படிச்சவங்க எப்படியோ தப்பிச்சுக்குறாங் சார். என்னை மாதிரி படிக்காதவன்னா எல்லாரும் நல்லா ஏமாத்தறாங் சார். இனிமே ஆயுசுக்கும் ஒத்தப் பைசா கூட ஏமாற மாட்டேங் சார்,’’ என்றார்.

‘ஜெயிலுக்குப் போகாமல் தப்பி வந்தது பெரும்பாடு’

என்ன நண்பர்களே, இந்நாளின் அறிமுகப் பதிவர்களின் பதிவுகளைப் படித்து அவர்களுக்கும் ஊக்கமளிப்பீர்கள் என நம்புகிறேன்.  குஜராத் பற்றிய தகவல் குறித்த உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன்... 

நாளை மீண்டும் வேறு சில பதிவர்களின் பக்கங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: எனது பக்கத்தில் இன்றைய பதிவு: முற்றுப்பெறாதமனு – நெய்வேலி பாரதிக்குமார் - அதையும் படிக்கலாமே!

மேலும் வாசிக்க...

Monday, November 10, 2014

நான் யாரு எனக்கேதும் புரியலையே......





சென்ற மாதத்தில் ஒரு நாள் சீனா ஐயாவிடம் இருந்து மின்னஞ்சல் - “வரும் வாரத்தில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்க முடியுமா?” ”கரும்பு திங்க கூலியா?” என்று கேட்க ஆசையிருந்தாலும், பணிச்சுமை காரணமாக உடனேயே ஏற்றுக்கொள்ள முடியாத சூழல். சில வாரங்கள் கழித்து என்றால் சரி என்று பதில் அனுப்பி விட்டேன்.  அவரும் உடனடியாக இந்த வாரத்தில் வலைச்சர ஆசிரியராக இருங்கள் என்று சொல்லி விட்டார். ஒத்துக்கொண்டு விட்டேனே தவிர மனதிற்குள் சஞ்சலம் - “என்னால் முடியுமா?” என்ற கேள்வி மனதை அரித்துக் கொண்டே இருந்தது!

தினமும் ஒரு பதிவு என்று எழுதிக் கொண்டிருந்தது சில மாதங்களாக வாரத்திற்கு மூன்று என்று குறைந்து சில வாரங்களில் “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன” கதையாக வாரத்திற்கு ஒன்று என ஆகிவிட்டது! இதில் வாரம் முழுவதும் வலைச்சரத்தில் ஆசிரியர் பணியாற்றுவது சிரமம் என்றாலும் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் பதிவுகளைத் தேடி, தொகுத்து வாரம் முழுவதும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

வலைச்சரத்தில் ஆசிரியராக பணியேற்றுக் கொள்வது இது இரண்டாம் முறை – முதலில் ஏப்ரல் 2 2012 முதல் ஏப்ரல் 8 2012 வரை.  அப்போது வலைச்சரத்தில் எழுதிய பதிவுகள் கீழே.


இப்போது இரண்டாம் முறை! வாய்ப்பளித்த சீனா ஐயாவிற்கு முதலில் நன்றி சொல்லிக் கொண்டு இன்றைய பதிவில் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன்! 




வெங்கட் நாகராஜ் – ஒரு பயோடேட்டா! இது ஒரு பயடேட்டாவா என்பதை நீங்க தான் சொல்லணும்!

பெயர்:  வி.நா. வெங்கடராமன் – வலைப்பதிவிற்காக வெங்கட் நாகராஜ்.

வலைப்பூ: சந்தித்ததும் சிந்தித்ததும்

பிறந்ததும் வளர்ந்ததும்: நிலக்கரி நகரம் நெய்வேலி!

வாழ்வது:  இந்தியத் தலைநகர் தில்லி!

குடும்பம்:  மனைவி, மகள் – அவர்களும் பதிவர்கள் தான்... மனைவியின் வலைப்பூ – கோவை2தில்லி.  மகளுக்காக நாங்கள் வைத்திருக்கும் வலைப்பூ: வெளிச்சக்கீற்றுகள்.
 
பிடித்த பொழுதுபோக்கு: சுற்றுலா செல்வது, புத்தகங்கள் படிப்பது, புகைப்படங்கள் எடுப்பது, பாடல்கள் கேட்பது.

வலையுலக அறிமுகம்: 30 செப்டம்பர் 2009 [ஐந்து வருடமா இங்க தான் குப்பை கொட்டிட்டு இருக்கேன்!]

இதுவரை எழுதிய பதிவுகள்: நேற்று வரை 783 பதிவுகள்! அதில் எத்தனை நல்ல பதிவுகள் என்பதை படித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்! 4 லட்சம் பக்கப் பார்வைகளை இந்த வருடத்திற்குள் தொட இருக்கிறேன்!

எனக்குப் பிடித்த எனது பதிவுகள் – நான் எழுதிய அனைத்தும் எனக்குப்பிடிக்கும் என்றால் அது அப்பட்டமான பொய்! எழுதிய பிறகு இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் எழுதியிருக்கலாம் என்று நினைத்த பதிவுகள் தான் அதிகம்! சில பதிவுகளின் சுட்டிகள் மட்டும் இங்கே – ஒரு அறிமுகத்திற்காக!

ஸ்பெஷல் மீல்ஸ் – இரயில் பயணங்களில்


நாவூற வைக்கும் அரிநெல்லிக்காய் – மனச்சுரங்கத்திலிருந்து....

காதிற்கு ஒரு பூட்டு – தலைநகரிலிருந்து....


கண்கவர் காதலி – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது பயணத்தொடர்


இதுக்கும் மேலே என்னுடைய பதிவுகளின் சுட்டிகள் கொடுத்தால் “அடி கிட்டும்!” என்று யாராவது சொல்வதற்குள் நிறுத்தி விடுகிறேன்!

என்ன நண்பர்களே..... இன்றைய சுய அறிமுகம் இத்துடன் போதுமென நினைக்கிறேன். வலைச்சரத்தில் என்னுடைய பதிவுகளை பலர் அறிமுகம் செய்திருந்தாலும், வலைச்சரத்திற்கு வரும் பல பதிவர்களுக்கு நான் புதியவன் தான்! அதனால் இத்தனை நீளமான ஒரு அறிமுகம்.  நாளை முதல் மற்ற வலைப்பதிவர்களின் அறிமுகங்கள் தொடரும் – ஒரு வாரத்திற்கு!

நாளை சந்திப்போம் நண்பர்களே.....  அதுவரை வணக்கத்துடன் விடைபெறுவது.... உங்கள்.....

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: எனது பக்கத்தில் இன்றைய பதிவு - பகைவனுக்கும் அருளும் அன்னை அதையும் படிக்கலாமே!

மேலும் வாசிக்க...

Sunday, November 9, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு (09.11.2014 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சதங்கா  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 053
அறிமுக படுத்திய பதிவுகள் : 054
பெற்ற மறுமொழிகள் : 069
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 9 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  வெங்கட் நாகராஜ்   இணக்கம் தெரிவித்துள்ளார்.  

இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தார்.  ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் வருடமாக பதிவு எழுதுவது தொடர்கிறது.  பிறந்தது நெய்வேலியில். தற்போது வசிப்பது இந்தியத் தலைநகரில்.  பயணம் செய்வது, புத்தகங்கள் வாசிப்பது, புகைப்படங்கள் எடுப்பது ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவர்.  இருபத்தி மூன்று வருடங்களுக்கு மேலாக தலைநகர் வாசம்.

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  வெங்கட் நாகராஜினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த  பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துகள் சதங்கா 

நல்வாழ்த்துகள் வெங்கட் நாகராஜ்

நட்புடன் சீனா 









































மேலும் வாசிக்க...

Monday, November 3, 2014

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

Photo Credit: Google
நேற்று இரண்டு நிகழ்வுகள்.  ஒன்று எங்ளூர் அருகில் உள்ள மற்றொரு ஊரில் கந்தர் சஷ்டி விழா.  மற்றொன்று எங்களூரில் நடைபெற்ற 2014 தீபாவளி விழா.  இரண்டு நிகழ்வுகளிலும் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டத்திற்குக் குறைவில்லை.

நாமெல்லோரும் ஏதோ ஒன்றை நோக்கி (யார் இலக்கை நிர்ணயிக்கிறார்கள் ?) அதிவேக பயணத்தில் போய்க் கொண்டிருக்கிறோம்.  பணம், புகழ், பதவி, என்று வேண்டி அடிப்படை உணர்வுகள் அழிந்து வரும் இக்காலத்தில் இம்மாதிரி நிகழ்வுகள் நமக்குப் புத்துணர்வு அளிக்கின்றன.

உழைத்துக் களைத்து திரியும் இந்தியர்கள் தங்கள் தங்கள் ஊர்களில் இது போல நிகழ்வுகள் அவ்வப்போது நடத்திவருவது நாடறிந்த ஒன்று.  விழா நடத்துபவராக இருக்கட்டும், பங்குபெறுபவராக இருக்கட்டும், இந்த மாதிரி நேரங்களில் நாம தவறாது திருப்பித் தருவது அவர்களுக்கான நமது 'நன்றி'யை.

இதே போலத் தானே பதிவுலகும்.  வேலையிடங்களில் உழைத்துக் களைத்த அநேகர்கள் தானே பதிவர்களும்.

நானறிந்த அல்லது எனக்குப் பிடித்த சில பிரிவுகளில் பதிவிட்டு அதன்பால் உள்ள பதிவர்கள் பலரின் பதிவுகளைப் படித்து அறிமுகம் செய்து, உங்களோடு இந்த ஒரு வாரமும் எனது வாழ்வில் அருமையான தருணங்கள்.  பதிவுகளின் அறிமுகங்கள் அனைத்தும் உங்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்த ஒரு வாரம் பல பதிவுகள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  சில வருடஙகளாக எழுதாமல் இருந்ததற்கு இந்த ஆசிரியர் பொறுப்பு ஒரேழ் பதிவுகள் எழுத வைத்தது.  பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது.  சிலப‌லர் வந்து மறுமொழியிட்டு ஆதரவளித்தது.  இவற்றிற்கெல்லாம், என்னை அழைத்த சீனா ஐயாவிற்கும், நல் உள்ளங்கள் உங்களுக்கும், நான் தருவது எனது உளமார்ந்த நன்றியை.

நன்றி !!!



மேலும் வாசிக்க...

Sunday, November 2, 2014

பொருளாதாரம் எனும் வித்தகன்



Image Credit: Google
பொருள் தேடிச் சென்ற காலத்தில்
அருள் தேடிச் செல்ல‌ வழி செய்தார் நக்கீரர்.
இதுவே ஆற்றுப்படைவீடு, பின்னாளின் ஆறுபடைவீடானது என்று படித்து வியக்கிறோம்.

இன்றைய வாழ்வில் அருள் மட்டும் போதுமா ?

பொருளில்லாத சிவனுக்கே என்ன கதி என்று பாருங்கள் :)


தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ
பூண்ட செருப்பாலொருவன் போடானோ –
மீண்டொருவன் வையானோ வில்முறிய மாட்டானோ
தென் பாலியூர் ஐயா நீ ஏழையானால்.


தில்லை நாதனே, "நீ எழையானதால், உன் தலையில் கங்கை ஏறினாள். உன்னை செருப்பால் மிதித்தார் க‌ண்ணப்பர். 'பித்தா பேயா' என்று திட்டினார் சுந்தரர். வில்லால் அடித்தார் அர்ச்சுனன்" என்கிறார் கவி காள‌மேக‌ம்.

அன்றைய புலவரில் இருந்து இன்றைய ஆணிபுடுங்குவோர் வரை அநேக துறைகளும் சிந்திப்பது பொருளாதாரம் என்றால் மிகையாகாது.  ஆனால், இந்தப் பொருளாதாரம் குறித்து நம் பதிவர்களின் பதிவுகளில் வியக்கத்தகுந்த, சுவாரசியமான செய்திகள் கொண்ட என்றெல்லாம் பார்த்தால் மன்னிக்கவும் பயம் தான் மிகுதியாகக் கிடைக்கிறது.

பொருளாதாரம் சார்ந்து நான் படித்த இங்கிலாந்து நாட்டின் சமீபத்திய அறிக்கை - Gurunatha Sundaram அவர்கள் தளத்தில் இருந்து.  ஐரோப்பிய ஒன்றியம் இங்கிலாந்திற்கு வைக்கு ஒரு சுமையும், அதன் தாக்கத்தில் இங்கிலாந்துப் பிரதமர் தவிக்கும் தவிப்பும் தெரிக்கும் பதிவு.

கிரேக்க பொருளாதாரம் திவாலானது எப்படி? - Kalaiyarasan அவர்கள் தளத்தில் இருந்து.  அந்நிய நாட்டு கடன் சுமையால், பொருளாதார நெருக்கடிக்கும் சிக்கித் தவிக்கும் கிரீசின் பிரச்சனைகளை ஆராயும் ஆவணப்படம்.

உலக பொருளாதாரம், அரசியல், சட்டம் இவற்றில் நிலவும் குழப்பங்கள்....
Lingeswaran அவர்கள் தளத்தில் இருந்து. "கொளுத்தும் வெயிலில் இடையில் சிறிது மழை பொழிந்து ஆசுவாசப்படுத்துவது போல, வாழ்கையில் ஆங்காங்கே சிலபல இன்பங்கள் உண்டென்றாலும், பொதுவாக பார்க்குமிடத்து வாழ்க்கையே துயரமாகத்தான் இருக்கிறது" என்பது போன்ற வாழ்வியல் பேசும் பதிவு.

அரசியல் பொருளாதார நெருக்கடியைப் பற்றிய மார்க்சின் கோட்பாடு - அ.கா.ஈஸ்வரன் அவர்கள் தளத்தில் இருந்து.  மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பேசும் தளம்.

இந்தியப் பொருளாதாரம் குறித்து அலசிப் பிழித்திருக்கிறார்.  நான்கு பகுதிகளாகப் பதிந்திருக்கிறார்.

என்ன இந்த மோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்? - Vel Tharma அவர்கள் தளத்தில் இருந்து.  சில ஒப்பீடுகள், சில குறியீடுகள், ஆவணப்படம் என்று பன்முகம் கொண்ட பதிவு.

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - புத்தக விமர்சனம் - Dr. P Kanagasabapathi அவர்கள் தளத்தில் இருந்து.  இவரது புத்தக விமரிசன‌த்திற்கான சுட்டி.  

பொருளாதரத்தை மேம்படுத்தி வாழ்வில் சிறக்க வாழ்த்தி, நாளை பிரிதொரு பதிவினில் சந்திப்போம்!

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது