07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 17, 2009

சில அறிமுகங்கள்.....

இந்த பதிவில் பலரை அறிமுகம் செய்யும் போது, இவரின் பதிவு இங்கே இருக்கு போய் பாருங்கள் என்று சொல்லி , பல பதிவர்களின் வலை முகவரி கொடுத்தால் ஒருவேளை உங்களுக்கு போர் அடித்து விடும் என்பதால் சற்றே வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி.......




இந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?

இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா.கணேஷும் வசந்தும் இனி இல்லை என்று நினைக்க முடியவில்லை,நாம் பார்க்கும் பலரின் சாயல் அவர்களை போல் உள்ளதை நாம் காணலாம்,அதுதான் சுஜாதா,எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்.என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?போன்ற கேள்விகள் முன் நிற்கிறது.மற்றும் அந்த(!)மெக்சிகோ சலவைக்காரி ஜோக்,ஹ்ம்ம் யாரை போய் கேட்பது?...



இனி ஒவ்வொரு , குட்டி கதைகளுக்கு இடையே ஒருசில அறிமுகங்கள்....



1.கதையின் தலைப்பு: சுவற்றில் ஆணி(ஆனி?) அடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தை.

கதை:பார்த்து concealed wiring தம்பி.

இனி அறிமுகங்கள்...


இவரின் பட பதிவுகளும் , காமெடி பதிவுகளும், மற்றும் சில தத்துவங்களும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.....
--------------------------------
2.தலைப்பு:கரடி வேடமிட்டவனின் கடைசி வார்த்தை:

கதை:என்னை சுட்டுடாதிங்க

ராஜேஸ்வரி அக்கா...

இவரின் பள்ளிகள் அனுபவப்பாடமும் , இவரின் சிறு கதை மற்றும் ஒரு பட பதிவும் உங்களுக்கு பிடிக்கும்....

சில நாட்களே எழுத வந்து ஆகியிருந்தாலும் வேகமான நடையில் கவருகிறார்........

இது அவர்
"cast away" என்னும் ஆங்கில படம் பற்றி எழுதியது.....

-------------------------------------------------------
3.இந்த கதை நானே எழுதியது...(மெய்யாலுமே)
தலைப்பு:கடைசி மனிதன் டாக்டர்கள் புடைசூழ மரணபடுக்கையில்,

கதை:கைவிரித்தன ரோபோட்டுகள்.
தேவன் மாயம்

மருத்துவர்....நல்ல எழுத்துக்கு சொந்தகாரரும் கூட......
இவரின் பல படைப்புகள் தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பிடிக்கும்....

இவரின் அனுபவம் கலந்த படைப்புகளும்...,
வாங்க தேநீர் அருந்தலாம் என்னும் பாங்கும் அலாதியானது.....

இவரும் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியவர் என்பது போனஸ்.....

---------------------------------------

4.தலைப்பு:காஸ் லீக் ஆகிறதா என்று பார்க்க சுவிட்ச் போட்டான்,

கதை:இருந்தது,வயது 24, கண்ணீர் அஞ்சலி மாலை ஐந்து மணிக்கு.


என்று வலை வைத்திருக்கும் நண்பர் காளிராஜ் அவர்கள்.....இவரின் பள்ளி நாட்களின் அனுபவங்கள் , அங்கே இருக்கும் ஒவ்வொரு வகை மாணவர்களின்

குறும்புகள் ஆகியவற்றை ரசிக தன்மையுடன் சொல்லி இருப்பார்......

----------------------------------
என் நண்பர் சிவா அவர்களின் வோர்ட் பிரஸ் வலை இது.....

இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்,
இவர் பல download options,மற்றும் சில கவிதைகள் , ஹை கூக்கள் என்று கவருகிறார்.....


-------------------------------------------------

நன்றி நண்பர்களே....உங்களின் மறுமொழிக்கு காத்து கொண்டு......

இந்த வகை கதைகள் பிடித்ததா?

அறிமுகங்களை பற்றியும் சொல்லவும்.....


Be cool....

Stay cool....

மேலும் வாசிக்க...

என்னை எழுத தூண்டியவர்கள்.....

என் அப்பாவின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் பத்திரிக்கைகளுக்கு எழுதி பல ஜோக்ஸ் மற்றும் கதைகள் வார இதழ்களில் வந்துள்ளன,அவற்றில் சில.....
மனைவி:ஏங்க நம்ம பக்கத்து வீட்டு கோபாலுக்கு தூக்கத்துலயே உயிர் போயிடுச்சாம்.....
கணவன்:வாடி போய் பார்க்கலாம்.....
மனைவி: பொறுங்க இன்னும் பாடி ஆபீஸ் ல இருந்து இன்னும் வரலையாம்....
இது போன்றவை.....
இது என் அப்பா குமதத்தில் எழுதி பிரசுரிக்க பட்டது.... பலே திருடன்..... நிச்சயம் நான் எழுதுவதற்கு காரணம் என் அப்பாதான்....

-----------------------------

கொஞ்சம் நான் எழுத வந்த சூழ்நிலையும் பார்ப்போம்.....
நான் blog இற்கு வந்ததே என்னை காப்பாற்ற தான்,
எப்படி என்பது சற்றே சுவாரஸ்யமானது....
நான் முதலில் வலை பக்கம் வந்தது ஏதோ ஒரு பரிட்சையின் ரிசல்ட் பார்க்க என்று நினைக்கிறேன்.... எவ்வாறு பார்ப்பது என்று தெரியாததினால் ,
நண்பன்(?) ஒருவனையும் அழைத்து சென்றேன்... ரிசல்ட் உடன் பிறவற்றையும் காட்டினான் நண்பன்..... என் பார்வை பிறவற்றின் மீது திரும்பியது,
நெட் சென்டெர் அதிகமாக போக ஆரம்பித்தேன், பல porn படங்களை பார்க்க ஆரம்பித்தேன்(யாருப்பா அது adress கேட்குறது நானே feelings ல எழுதிகிட்டு இருக்கேன்) எனக்கே நன்றாக புரிந்தது நான் , தவறுகிறேன் என்று.... ஆபத்பாந்தவனாய் வந்தார் என் மாமா.... அவருடைய வலையை காட்டி படித்து பார் என்று சொன்னார்,அவரின் வலையில் அதிகம் ஈர்க்க பட்ட நான், நாமும் எழுதினால் என்ன ,என்று நினைத்து தொடங்கினேன்,இன்று பிறவை குறைந்தது
(கவனிக்கவும் குறைந்தது) என்னை மீட்டவர் ,அவருக்கு நன்றிகள்... அவரின் வலைபூவையும் பார்க்கவும்....
மழைசித்தன்.....
-----------------------------
முதலில் பதிவர்களின் ஊக்க மருந்தாக அறியப்பட்டவர், கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் படிப்பவர், நல்ல வலை ஞானம் உள்ளவர்....
எனக்கு சில தவறான அனானிக்களால் தொல்லை வந்தபோது நான் எழுதுவதையே விட்டு விடலாம் என்று இருக்கும் போது, தன் எழுத்தால் அவர்களுக்கு பிரம்படி கொடுத்தவர்
அண்ணன் ராகவன்....
அவரின் வலையில் பல சமூக சாடல்கள் மற்றும் சிந்தனைகள் இருக்கும்...
அவரின் இந்த பதிவு தவறான அனானிகளுக்கு கொடுத்த சாட்டை அடி....
--------------------------
வாத்தியார் என்று அன்பாக அழைக்க படும் சுப்பையா அவர்கள்.....
அவரின் வலை ஆரம்பத்தில் எப்படி எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம் அமைய காரணமாக இருந்தது....
பெயருக்கு ஏற்றார் போல் பல்சுவையானது.....
அவரின் தமிழ்மணம் விருது பெற்ற இந்த பதிவை பார்க்கவும்......
செட்டிநாட்டு வீடுகள்.....
-----------------------------------------
தமிழ் வெங்கட்...என் மாமா....
இவரின் வலை சற்றே கடவுள் மறுப்பு கொள்கை உடையது,மற்ற படி சுவையான செய்திகளை தரவல்லது....
இவரின் இந்த காமெடி ஆகி போன சீரியஸ் வசனங்கள் பதிவை பாருங்களேன்.....
-------------------
அடுத்துஅடுத்து பதிவுகளில் இருந்து இன்னும் பல புதிய அறிமுகங்களோடு சந்திப்போம்......
நன்றி கார்த்தி....
be cool....
stay cool...
மேலும் வாசிக்க...

Monday, March 16, 2009

IT நிறுவனங்களின் நிலை....

என்னுடைய மெயிலில் மற்றும் SMS களில் பெரும்பாலும் இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் IT நிறுவனங்களின் நிலை போன்றவற்றை மையம் கொண்டு வரும் மெசேஜ் களை அவ்வபோது நான் பதிவுகளாக இடுவது உண்டு அவற்றுள் சில.....

நிச்சயம் நம்மை சிரிக்க வைத்தாலும் அதன் உண்மை வலிக்கவே செய்கிறது....



உண்மையை மறைப்பதும்,மறுப்பதும் ,மறப்பதும் நமக்கு புதிதல்ல என்பதால் பாருங்கள்,

சிரியுங்கள்.....



------------



இரண்டு பேர் பேசி கொள்கிறார்கள்.......





ஒருவர்:சார் உங்க பசங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க?



இரண்டாமவர்:சார் எனக்கு நாலு பசங்க......



முதல் பையன், ஒரு விமான கம்பெனி ல வேல பாக்குறான்.....



இரண்டாம் பையன்,ஷேர் மார்க்கெட் ல உத்தியோகம் ......



மூன்றாம் பையன்,sofware கம்பெனி ல மேனேஜர்.....



நாலாவது பையன், இங்க பக்கத்துல டீ கடை வச்சுருக்கான்....

(இதன் பின் அவர் சொன்னது தான் கவனிக்க வேண்டியது...)



இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்......

-------------------------



இதன் பின் IT கம்பெனிகள் புதிதாக கொண்டு வந்துள்ள rules and regulations படிக்க இங்கே செல்லவும் .....




--------------------------



பின்பு அலிபாபாவும் முப்பது திருடர்களும் பற்றி படிக்க இங்கே செல்லவும்.....




--------------------






-------------






என்ன பிடித்ததா?


நன்றி கார்த்தி.....
மேலும் வாசிக்க...

அறிமுக படலம்...



"காதொளிரும் குண்டலமும்,

கைக்கு வளையாபதியும்,

கருணை மார்பின், மீதொளிர்சிந் தாமணியும்,

மெல்லிடையில் மேகலையும்,

சிலம்பார் இன்ப போதொளிர் பூந்தாளினையும்,

பொன்முடி சூளாமணியும் பொலியசூடி...

நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளை தாங்கு தமிழ்


நீடு வாழ்க..."



என்ற சுத்தானந்த பாரதியாரின் வரிகளில் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.....

இன்னும் வேறு அணிகலன்கள் பல தமிழன்னைக்கு படைக்க பட வேண்டும் , நம் வலை கூறும் நல்லுலகில் இருந்து ஒரு மோதிரமாவது அன்னை எடுத்து கொள்ள வேண்டும் என்பது என் அவா....


என்னை பற்றி முதல் பதிவில் சொல்லலாம் என்று சீனா அண்ணா சொன்னார்கள்,அவருக்கு என் நன்றிகள்,என்னை ஆசிரியர் ஆக்கியமைக்கும் , நல்ல ஒரு வலையை அழகுற தொடுத்து வைத்தமைக்கும்...... கோமா அவர்கள் சிறப்புற முடித்தார்கள்,அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் நேர்த்தி இருந்தது...வலைச்சர ரசிகர்களின் ரசிப்பு தன்மை எனக்கு நன்றாக விளங்கியது.. என் மொக்கையை எப்படி வலைச்சர ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்று ஒரு கவலையை என்னுள் அவர் ஏற்றி விட்டார்....


வலையுலக ஜாம்பவான்கள் பலர் களம் கண்ட வலைச்சரத்தில் , நானே மிக இளையவனோ என்று தோன்றுகிறது, (I'm 16 with 7 yrs of experience)

என்னுடைய எழுத்தில் கொஞ்சம் அதிகம் ஆங்கிலம் கலந்தும்,சில பல பிழைகளும் இருப்பின் அன்போடு பொருத்து ,திருத்தி தருக....

என்னை பற்றி:

பெயர்:சி.ம.கார்த்திகேயன் (C.M.Karthikeyan)

M.C.A...

ச்சே resume எழுதி எழுதி இப்படியே வருகிறது....

நான் பிறந்தது திருவாவினன்குடி என்னும் பழனி...(அப்பாடா பெயர் காரணம் முடிந்தது)(அம்மா ஊர்)

வளர்ந்தது மாங்கனி நகரம் சேலம்....(நம்ம சொந்த ஊர்)

படிப்பு:
இளங்கலை அறிவியல் -இயற்பியல் (மகேந்திரா கல்லூரி காளிபட்டி)

முதுகலை:M.C.A அண்ணா பல்கலை ,சென்னை....(கடைசி செம் இல் ப்ராஜெக்ட் காரணமாக மண்டையை பிய்த்து கொண்டு )

CTS இல் placed.....(ஒரு வருடத்தில் கூப்பிட்டு விடுவார்கள் என்று கேள்வி...)

மற்ற படி என்னை பற்றி சொல்வதென்றால்....
"Yesterday is a History

Tomorrow is a Mystery

but

Today is a Gift

so only it is called present "


என்ற வார்த்தைகளின் படி இன்றைய தினத்தை இப்பொழுதே வாழ்ந்து விட நினைப்பவன்....

நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு மாயை என்னவென்றால்,இன்றைய தினத்தை விட நாளைய தினத்தில் அதிக நேரம் இருக்கும் என்று எண்ணுவது தான்,அதை உடைக்க போராடும் சராசரி மாணவன்......

"I'm just 16 with 7 yrs of experience"
(To be continued)

நன்றி கார்த்தி.....

be cool stay cool.........









மேலும் வாசிக்க...

Sunday, March 15, 2009

ஆசிரியப் பணி மாறுதல் - கோமாவிடமிருந்து கூல்ஸ்கார்த்திக்கு

அன்பு நண்பர்களே !

கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தினைக் கலக்கிக் கொண்டிருந்த சகோதரி கோமா இன்று பணி ஒய்வு பெறுகிறார். ஏறத்தாழ முன்னூறு மறுமொழிகள் பெற்ற 20 பதிவுகள் இட்டு பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்தார். பிகாசாவில் புகுந்து விளையாடி மலர்கள், மழலைகள் எனப் பலப்பல படங்களைப் பார்த்து மகிழ்ந்து நமக்கும் சுட்டி அளித்தார். நாளொரு வண்ணமும் பொழுதொரு பதிவுமாய் வாரம் முழுவதும் ஓய்வின்றி உழைத்தவர். மறக்காமல் கணவருக்கு நன்றி செலுத்திய நல்லவர். வித்தியாசமான முறையில் வலைச்சரம் தொடுத்து பல மலர்களை அறிமுகம் செய்து மணம் பரப்பிய கோமாவிற்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிக்கிறோம்.

16ம் நாள் துவங்கும் இவ்வாரத்தினிற்கு நண்பர் கூல்ஸ்கார்த்தி ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார். நகைச்சுவையை மையமாக வைத்துப் பதிவுகள் இட்டு வரும் இவர் இவ்வாரத்தினையும் நகைச்சுவை வாரமாக்குவாரா அல்லது வேறு திட்டங்கள் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இவரை வருக வருக வலைச்சரம் தொடுக்க வருக என அன்புடன் அழைக்கிறோம். நல்வாழ்த்துகள் கார்த்தி

நட்புடன் ..... சீனா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது