07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 18, 2010

விளம்பர இடைவேளை

ஏம்பா மணி நமக்கு ஒட்டுக்கு பணம் வந்திருச்சா?
என்னலே சொல்லுவ அதுக்குள்ளையும் எப்படிவே எலெக்ஷன் வரும்.
அட உனக்கு விஷயம் தெரியாத ஏதோ ஒரு ஊருல எம்.எல்.ஏ செத்துப் போயிட்டாராம் அதான் எலெக்ஷன்லே. சீக்கிரம் போனேன்னா பிரியாணியும் கடிச்சுக்க வெங்காயமும் தருவாகல
அட என்னல நடக்கிங்க?
நீ இங்க போயி பாருல எல்லாம் விளங்கும்ல  
அட ஆக்கங்கெட்ட கூவே அது தமிழ் சினிமா காரவுங்களை தேர்ந்தெடுக்கிற    எலெக்ஷன்ல அங்க போயி உனக்கு புடுச்ச சினிமாரவுகளுக்கு ஓட்டுப் போடனும்ல. இங்கயாவது சுயமா சிந்திச்சு போடுவே 
அப்ப பிரியாணிக் கிடைக்காத?
அடிங்.. உன்னை அடிச்சு பிரியாணி போடனும்ல 
**************************************************
அடியே, அந்த சொம்ப எடுத்துட்டுவா கேப்பையில நெய் எடுக்கணும் 
என்னையா பித்து பிடிச்சமாதிரி ஒளருற?
ஆமாம்டி வெளிநாடுலஇருந்து சில சித்தர்கள் வந்திருக்காங்களாம். அவுங்க கிட்ட சொல்லி கேப்பையிலயிருந்து நெய்ய எடுத்துத்தரச் சொல்லி கேட்கலாம்.
அய்யே! யோவ் வாயா கழுவுயா, அவுக நாம தமிழ் சித்தர்கள்யா பல நல்ல மருத்துவ விஷயத்தை சொல்லிருக்காக அவுக சொன்னா படி சாப்பிட்டாலே கேப்பைலவுள்ள சத்தும் நெய்ல உள்ள சத்து கிடைக்கும்!
*****************************************************
எலே வீடுல தெண்டச் சோற்று தின்கிறனு எவனாவது கிண்டல் பண்ணேங்க குனியவச்சே கும்மிருவேன்ல சொல்லிபுட்டேன். 
அட உடுனே அவன்கிடைகிறான் கோட்டிப் பையன். நீ பம்பரத்தை யாக்கர் போடுண்ணே
டேய், உன்னையும் சேர்த்துதான் சொல்லுயேன்.  பம்பரம் விளையாடுற சின்ன பையல்களோட சேரக்கூடாதுனு அங்க அப்பாத்த சொல்லிருச்சிலே 
அண்ணே அதுஎன்ன வேலைண்ணே! சொன்னா நானும் எங்கப்பன வேலை அனுப்பனு செத்த நேரங்கூட விளையாட விடமாட்டிக்கிறாரு.
டேய் இங்க போயி பாருடா நெறம்ப வேலையிருக்குலே பொழைக்கிற வழிய பாருங்கலே
டேய் சின்ராசு, அந்த செத்த அந்த சொம்ப எடுத்து தாவே
ஏ பாட்டி, உனக்கு எத்தன தொடவ சொல்லிறது, டயரு ஓட்டையில எனக்கு வேலை சொல்லாதனு 
போடா மோச்ச கெட்ட பயலே உங்க அம்மா சொன்னாளாக்கும் இந்த அப்பாத்தளுக்கு குடிக்க தண்ணி தராதனு?
இங்க பாருங்க உங்க பேரன நீங்க திட்டுங்க அதுக்காக வாக்கப்பட்டு வந்த என்னையும் சேர்த்து திட்டாதீங்க,  உங்க மகன்கிட்ட சொல்லி ஒரு கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்த எ மகராசே இத பாத்துகிட்ட வீட்டுக்குள்ளே இருப்பாக. எனக்கெதுக்கு பொல்லாப்பு. ஒரு சொம்பு தண்ணியில நான் மளிகை கட்டபோரேன் பாரு,   
*********************************************************
எ சித்தப்பு இன்னைக்கு சூடா என்னயிருக்கு 
வாயா தொர, ஆளவே காணல, இத பாரு வடையிருக்கு போண்டாயிருக்கு பஜ்ஜி அடுப்பிலயிருக்கு,  தூள் பஜ்ஜி போட கொஞ்சம் நேரம் காணும்.
எ சித்தப்பு ஒங்கடைய யாருயா கேட்டது இந்த செய்தியில என்ன சூடாயிருக்குன்னு கேடேன் 
அது என்னமோப்பா கண்ணாடி போடாம ஒன்னு தெரிய மாட்டிக்குது.
பாத்துயிருந்துக்கோ சித்தப்பு வடையில ஓட்ட போட்டு கொள்ளையடிக்கிரனு நாளைக்கே ஓங்கடையில கூட பூட்டி சீல் வச்சு இதுல செய்தி வந்தாலும் வரலாம். 
*********************************************************************
ஏலே மொக்க, இங்க என்னடா பண்ணுறே
நாயக் கடிக்கு மருந்து தேடுறேண்ணே
அட ஊருக்குள்ள நாய்கிட்டை கடிவாங்கினது யாருடா 
கடிச்சது அசுலூரு நாய்ண்ணே!
அது கிடக்குது கடிவாங்கினது யாருடா 
நான்தியா 
அடங்கொன்னியா மொத அந்த நாயா நல்ல வைத்தியர்கிட்டை காட்டுடா புதுசா ஒரு கால்நடை மருத்துவர் ஊருக்குள்ள வந்திருக்காரு அவர்கிட்ட கூட காட்டு.
அப்ப எனக்கு மருந்து?
அதோ ஒரு கிணறு தெரியுது பாரு....[அட ஆளக் காணோம் ]   
எ புள்ள சரசு, நேத்து ஒரு மருந்து கொடுத்தேயில அத சாப்பிட்டதும் எங்க மாமியார் பொழச்சுகிச்சுலே!
என்ன சொல்லுரே அந்த மருந்து உனக்குன்னு தான் பக்குவமா செஞ்சேன். அது அந்த கிழவிக்குனா பன்னிருக்கவே மாட்டேன்ல   
சரி அதவிடு அது போல எங்க ஆத்தாளுக்கும் முடியல கொஞ்சம் அரைச்சுக் கொடுவே 
உங்க ஆத்தாளுக்கா முடியாடி சாமி! நான் மருந்து அரைச்சு கொடுக்க, நீ அந்த கிழவியையும் காப்பாத்த.. வேற வெனையே வேண்டாம். இங்க பாரு அந்த கிழவி உனக்கு வேணாம் ஆத்தாவயிருக்கலாம் எனக்கு அது மாமியாராக்கும்.
நீ சொல்லலைனா போ நான் இங்க படிச்சு தெரிஞ்சுகிறேன் 
****************************************************
என்ன டாக்டர் ஊருக்குள்ள ஒரே கலவரமாயிருக்கு, இன்னைக்கு எப்படியும் ஒரு பத்து பதினஞ்சு பேரு உங்களுக்கு சிக்குவாங்கள்ள!
அட போப்பா எல்லாரும் இத படிச்சு புட்டு என்ன யாரு அடிக்கிறதுன்னு ஒரு கலவரம் வந்திருச்சு.
என்ன சொல்லீங்க டாக்டர், உங்க அடிக்கவா! நீங்க என்ன அவுங்களுக்கு அடிமாடா?
அதுயில்ல நான் மாட்டு டாக்டர்னு கண்டுபிடுச்சுட்டாங்க 
**************************************
எலே பாண்டி, யாருலே இது?
இவுக பட்டணத்தில இருந்து வந்திருக்காக ஏதோ ரிச்சச்சாம்
சரி என்ன கருமமோ யார் வீட்டுக்கு வந்திருக்காக?
நம்ம மாயியண்ணே வீட்டுக்கு 
ஏய் பட்டணத்து காரரே நான் அந்த மாயிக்கு பெரியப்பே முறைதான் என்ன சோலியா வந்திருக்கேக?
வணக்கம் தாத்தா இயற்கை விவசாயத்தைப் பத்தி ப்ராஜெட் பண்ணும் அதான்  வந்திருக்கேன்.
ம்ம்.. விவசாயம் பாக்க போறியா!
அதுயில்ல பெருசு, இவுக ஏதோ போட்ட எடுக்க வந்திருக்காக 
என்னமோப்பா நாங்களே இதையும் இதையும் இதையும் படிச்சுட்டு ஏதோ பொழப்பு நடத்திகிட்டுயிருக்கோம் நீபாட்டுக்கு எதையாவது எடுத்துட்டு போயிராத ஆமாம்.
ஏம்பா கண்டேக்டரே, ஒன்ன பத்தி நெறைய பையலுக சொல்லிருக்காங்க ஒழுங்கா நடந்துக்கோ ஆமாம்.
என்ன பெரிசு! வீடுல சொல்லிட்டு வந்திட்டியா, இப்ப என்னாத்துக்கு கரையிற?
நீ கொடுக்கிற டிக்கட்ட கிழிச்சு கிழிச்சு கொடுக்கிரையாமே நான் இங்க ஏசிபுடுவேன்.
அட பாருடா! யோவ் அது வலைபதிவ யாராச்சும் திருடுனா போடுரஇடம்யா. நீ கொடுததேன்னா மனத்துவாங்க வாங்கிக்கோ 


மேலும் வாசிக்க...

Thursday, June 17, 2010

வியாழக்கிழமை எலிக்கு விருந்து

எலி: ஏம்பா! இந்த சாவிக் கட்டை சண்டைக்கு வருவான்ல நான் ரொம்ப நேரமா? மாறுவேசத்தில இந்த டின்னுக்குள்ள ஒளிஞ்சு தூங்கிகிட்டுயிருக்கேன் .
அட்டை: டேய் எலி உன்னை யாருடா மாறுவேஷம் போடச்சொன்னது?
எலி: பின்ன அவன் பாட்டுக்கு சண்டைக்கு வந்து சைடு கேப்ல என்ன மர்டர் பண்ணிட்டன்னா! 
அட்டை: சரி போட்டதுதான் போட்ட நல்ல போட்டிருக்கலாம்ல இப்பதான் நீ பாக்கிறதுக்கு நெஜ எலி மாதிரியிருக்க சரி  இந்த டின்னை தூக்கையிலக் கூட தெரியலையா?
எலி: என்ன சொல்றீங்க?
அட்டை: இப்ப இந்த டின்னு வரிஅச்சு நகர்ல இருக்கு. நமக்குத் தெரியாம இந்த சாவிக் கட்டை ஆட்கள் வரிஅச்சு நகரில நீ செய்தது போல போலி கமெண்டுகள் போட்டு திட்டிவிட்டாங்க. அந்த கோவத்தில நம்ம ரெண்டு பேரையும் கடத்திட்டு வந்துட்டாங்க.
எலி: அப்ப இவுங்க ஊர்ல ஒரு ஹீரோயின் இருக்கும்ல?
அட்டை: டேய் ஆரம்பிச்சுடையா? நானே இவிங்க என்ன பண்ணபோறாங்களோனு பயந்துகிட்டுயிருக்கேன் நீவேற!
.
.

அட்டை: டேய் எலி துங்கதடா அதோ வரான் பாரு. அவன்தான் இந்த ஊரோட தலைவர் அட்மின் 
அட்மின்: எங்கவூர் வழக்கப்படி உங்களை சைபர் கிரைமிக்கு படையல் போடபோறோம் அதுக்கு முன்னாடி உங்கவூர் தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு கேட்கிறது எங்க வழக்கம். ம். சொல்லுங்க 
எலி: சமிபத்தில  தி கராத்தே கிட் (தி குங்க்பூ கிட்) னு ஒரு நல்ல படம் வந்திருக்குன்னு எங்கவூர் காரவுங்க சொல்றாங்க. இதுல பில்டப்பு வசனம் இல்லாததால உங்களுக்கும்  புரியும்  
அட்மின்:ம்..நல்லயிருக்கு ஆனா எங்களுக்கு பில்டப்பும் தெரியும் வேற படம் பத்தியும் சொல்லுங்க
எலி: இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் அப்படின்னு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சூப்பர் படம் வந்திருக்குன்னு அண்ணன் சொன்னாரு.பார்க்க வேண்டிய படம். வாசிக்க வேண்டிய பதிவு.





அட்மின்:சரி, உங்க ஊர்ல சிங்கம் சிங்கிளா வராதா?
எலி:  சிங்கம்- இங்க  பாருங்க இதுதான் சின்கிலாகவும் வரும் பஸ்டாகவும் வரும் 
அட்மின்: அட உங்க படங்களெல்லாம் கமேர்ஷியலாவே....
எலி: அப்படியே  இங்க பாருங்க சென்ஷிபிலாகவும் விமர்சனம் எழுதுவோம்ல 
அட்மின்: உங்க ஊர்ல நடிகர்கள் தமாஷ்எல்லாம் வராதா?
எலி: என்ன இப்படி சொல்லிபுட்டேங்க விஜய், சூர்யா, டீ.ஆர்னு நாங்க புல் ஸ்பீட்ல கலாய்ப்போம்ல 
அட்மின்:ஹி ஹி. நீங்க பாட்டெல்லாம் கேட்பேங்களா?
எலி: அப்புறம், பாட்டில்லாம வண்டியோடாது சார்.  நான் ரசித்த பாடல்கள் : டாப் 5 நீங்களும் கேட்டுப் பாருங்க  நல்லாயிருக்கும் கட்டாயம் கேளுங்க  
அட்மின்:எலி உங்களைப் பத்தி தப்பா நினைச்சுட்டேன் இவ்வளவு கலை ஞானம் உள்ள நீங்க இதை பண்ணியிருக்க மாட்டேங்க. எல்லாத்துக்கும் காரணம் அந்த சாவிக் கட்டையாத்தான் இருக்கும். அப்புறம் உங்க குரு யாரு?
எலி: ம்...  சீனா ஐயா தான் 
அட்மின்:அவர் பேர காப்பாத்திட்டப்பா!

{அடுத்து வரிஅச்சு ஊர்ல நடக்கிற விருந்தில் எலி மற்றும் அவரது நண்பரும் கலந்து கொள்கிறார்கள்.}
அட்மின்: எங்களைப் பத்தியாரு நினைக்கிறா? கவர்மெண்டோட வெப் டெவலப்பரெல்லாம் என்ன பதிவுல எந்த டூலும் சேர்க்க முடியாத படி செஞ்சுட்டாங்களே. யாரும் ஒட்டு போடா முடியாதே
எலி: அப்ப உங்க ஊர்ல யாரும் பதிவு எழுத மாட்டாங்களா?
அட்மின்: அது எப்படி சொல்லமுடியும் தொலைந்த இரவுகள்னு ஒருத்தர் அழகா படக்கவிதைஎல்லாம் எழுதுறாரே
எலி: அட உங்க ஊர்லக்கூட அற்புதமாயிருக்கு அடுத்து,
அட்மின்: அடுத்து இவரைப் பாருங்கஎல்லாக் கவிதையும் எளிமைய அழகாயிருக்கும். இவரைப்பற்றி உங்களுக்கேத் தெரியும் போயி படிச்சுப் பாருங்க சொக்கிப் போயிருவீங்க
எலி: உங்க ஊருக்கு மக்கள் ஆதரவு எப்படியிருக்கும்? 
அட்மின்: இங்க பாருங்க ஒரு சகோதரி கமெண்ட வச்சே ஆராயச்சிஎல்லாம் பண்றாங்க 
எலி: அட இவுங்க நிறைய டிப்ஸும் சொல்றாங்க. 
அட்மின்: இன்னொருத்தர் எல்லா விஷயமும் எழுதுவாரும் கட்டாயம் போய் படிங்க  
ஆனா பாருங்க இன்னும் நிறைப் பேரு இருக்காங்க ஆனா வெளியேத் தெரியமாட்டிக்கிறாங்க 
எலி: அந்த சாவிக் கட்டைய ஒழிச்சாத்தான் நாம சுதந்திரமா பதிவெழுத முடியும் நீங்க என்ன சொல்றீங்க?
அட்மின்: சரி நாங்களும் உங்களுக்கு உதவியா இருக்கோம் ஆனால் முடியுமா?
எலி: என்ன இப்படி கேட்டுப்புடேங்க அப்ப நீங்க உடனே இங்க போய் படிச்சுட்டுவாங்க.
அட்மின்: நீங்க சொல்றது உண்மையிலே உட்வேகமாயிருக்கு. சரி பேசிக்கிட்டே இருந்த எப்படி? நல்ல சாப்பிடுங்க அதோ முருங்கைக்காய் கூட்டு.
எலி: நாங்கெல்லாம் முருங்கைகாயை இப்படியும் பயன்படுத்துவோமே.
அட்மின்:  ஹி ஹி ..தோசை சாப்பிடுறீங்களா?
எலி: எனக்கு இந்த சகோதரி சொன்னமாதிரிதான் தோசை வேண்டும் 
அட்மின்: செஞ்சுட்டாப் போச்சு.அதான் தெளிவாயிருக்கே.
எலி: அப்படியே ஒரு மூளை முட்டைப் பொரியல் பார்சல் வீட்டுல போய் சாப்பிட்டுகிறேன். 
அட்மின்: சரி அதையும் சூப்பரா சமச்சுருவோம். அப்புறம் ஊருக்குப் போகையில கண்ட கண்ட இடத்தில வாங்கி எதையும் சாப்பிடாதீங்க எதற்கும் இதை ரெண்டு தொடவ படிச்சுக்கோங்க 
எலி: உங்க உதவிய மறக்க மாட்டேங்க. உங்க வடிவில மனிதம் மிளிர்கிறதுங்க 
சரி, அட்மின் ஐயா, உங்க மகளையாவது கண்ணுல காட்டுவீங்களா?
அட்மின்: அய்யா சாமி மொத நீங்க உங்க ஊருக்கு போங்க மத்ததை கடுதாசி போடுறேன். இந்தாங்க ஒரு அன்பளிப்பு ஒரு புத்தகம்.
எலி: இதுல என்ன இருக்கு?
அட்மின்: அதை தெளிவா இந்த அம்மணி சொல்லிட்டாங்க அப்படியே மறக்காம படிங்க.

ஊருக்கு போனது அவர் எழுதிய கடுதாசி என்ன?
தொடரும்..
மேலும் வாசிக்க...

Wednesday, June 16, 2010

புதன்கிழமை எலி பதிலடி

பெரியவர்:கொஞ்ச நாளைக்கு முன்னாடி 123 ஒப்பந்தம் ஒன்னு போட்டிருக்கு 
எலி:123 ஒப்பந்தமா?
ஆமாம் கேளு,..

******************flash back************************* 
{ப்ளாக்பட்டியும் திரைக்கையும் சந்திக்கிறார்கள்.}
ஐயா ஆத்திர அவசரத்துக்கு கூட பதிவு எழுதக் முடியலையா? அதுனால கொஞ்சம் தொடர் பதிவு எழுத உரிமைக் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.
சரி. 
ஒப்பந்தம் நம்பர் ஒன்னு, தொடர் பதிவுக்கு யாரை அழைச்சாலும் அதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னாடி எங்களிடம் ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும்.
ஒப்பந்தம் நம்பர் ரெண்டு, தொடர் பதிவுல யாருக்காவது விருது கொடுத்தா அதற்கு எனக்கு ஒரு பாராட்டு விழா கட்டாயம் எடுக்கணும்.
ஒப்பந்தம் நம்பர் மூனு, தொடர் பதிவுக்கு கமெண்ட் போடுபவர்கள் கட்டாயம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். 
ஒப்பந்தம் நம்பர் சைவர், எந்த தொடர் பதிவு போட்டாலும் முத்திரைத் தாள் வாங்கித்தான் பதிவு செய்யணும். இதுதான் 123 ஒப்பந்தம். வேற ஏதாவது டௌட்யிருக்கா?
....
என்ன டவுட்?
கும்மி அடிச்சுக்கலாமா?
மூனு நாளைக்கு ஒருமுறை அடிச்சுக்கலாம் முடிஞ்ச அளவு அடுத்தவுங்க நல்ல திட்டனும்.
****************************
எலி:கொடுமையா இருக்கே! அப்ப யாரும் தொடர் பதிவு எழுத மாட்டீங்களா?
பிலிகிரி கேம்ஸ்: அதுதான் இல்ல, சாவிக் கட்டையபோல திரைக்கைக்கும் படிக்கத் தெரியாது, அதனால அவன் கையெழுத்து வாங்கினது கொசு மருந்து ஒப்பந்தம்.
இங்க பாருங்க நம்ம ஐயா தீபாவளியை இனிக்க இனிக்க எழுதியிருக்கார் 
எலி: தீபாவளியா! எனக்கு இதுதான் முதல் தீபாவளி.
பிலிகிரி கேம்ஸ்:அதே போல நண்பர் ஒருவர் தனது முதல் தொடர் பதிவை இனிமையாக எழுதியிருக்காரு.
எலி: எந்த விஷயமும் முதல் முதலில் செய்வதில் இருக்கும் கட்டுக்கடங்காத பிரியமே தனிதான்.
பிலிகிரி கேம்ஸ்:ஆனால் இந்த சகோதரி தனது வாசிப்பு அனுபவித்தை படித்தால் உன்னையும் கட்டிப் போடும் 
எலி: கேட்கவே ரம்யமாயிருக்குதே !
பிலிகிரி கேம்ஸ்:சரி அப்ப போய் பார்த்துத்து வா! இதோ நம்ம நண்பர் நல்ல படங்களை லிஸ்ட் போட்டுருக்கார்.
எலி:இப்படி வரிசைப் படுத்துவதே தனி அழகு.
பிலிகிரி கேம்ஸ்:இங்க பாரு நம்ம சகோதரி துறை வாரியா வரிசைப்படுத்தப்பட்ட பிரபலங்கள் லிஸ்ட் கொடுத்துருக்காங்க. எங்க ஊர் பெண்களைப் பத்தி நல்லத் தெரிஞ்சுக்கோ.
எலி: நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டிடேங்க. கண்ட்ரோல் சார்,  எங்க சார் உங்க மகள் கதையோட ஹிரோயின், இன்னும் கண்ணுலையே காட்டலையே!
கண்ட்ரோல் பாண்டியன்:  ஏய் எலி ரொம்ப பேசுறான் இவன வில்லன்கிட்ட விட்டாத்தான் சரிப் படுவான். அந்த திரைக்கைக்கு எலி வந்துட்டான்னு ஒரு மெயில் அனுப்புங்க கேம்ஸ்.

{"எனது எலி வந்தாச்சா!" என்ற பின்னணி இசை ஒலிக்க, திரைக்கை எலியை சந்திக்க வருகிறான்.}  
எலி: ஹி ஹி 
திரைக்கை: ஏன் சிரிக்கிறன்னு தெரிஞ்சுக்கலாம?
எலி: ஆப்பு. கிட்னாப்பு 
திரைக்கை: கிட்னாப்பா! 
****flash back****
திரைக்கை: ஏய் நான் உன்னவிட வேகமா குதிர ஓட்டுவேன் பார்ப்போமா? ஏய் பா.ர்.போ.மா. நான் உன்ன கிட்னாப் பண்ணா எங்க ஜீரோ கோட்டைக்கு இட்லியாகிருவா?
எலி: ஹிம். நான் உன்னை கிட்னாப் பண்ணா எங்க ஆயாக் கடை இட்லிக்கு சட்னியாகிருவ  
**********************************
திரைக்கை: நம்ம தேர்தல் வாக்குறுதி மாதிரி நீ பிளாஸ்பேக்ல  பார்த்தா திரைக்கை வேற இப்ப பாக்கிற  திரைக்கை வேற எல்லாத்திலையும் 13 மடங்கு பயிற்சி எடுத்திருக்கேன். மோதிப் பார்ப்போமா!
திரைக்கை: ஏய் நாங்க எல்லாம் ஐடியாவை கடன் வாங்கியாவது ஆப்பு வைப்போம் டா!
எலி: ஏய் இந்த எலி தப்பா ஐடியா கொடுக்கிறவனுக்கும் சேர்த்து ஆப்பு வைப்பாண்டா. இவரோட இந்தப்பதிவைப் போல 
 திரைக்கை: ஏய் நாங்க கடிச்ச சக்க கூட மிஞ்சாது
எலி: நாங்க கடிச்ச புட்பாலும் தாங்காது  கடியா, பார்கிறய இங்க 
திரைக்கை: ஏய் நாங்க பொறந்த அன்னைக்கே தூள் கிளப்பிட்டோம்
எலி: ஏய் நாங்க பொறந்த அன்னைக்குன்னு பதிவ எழுதியே தூள் கிளப்பிட்டோம். 
திரைக்கை: ஏய் நான் தில்லாலங்கடிக்கே தில்லாலங்கடி
எலி: ஏய் தில்லாலங்கடிக்கு நாங்க கொடுத்த கட்டையடியை கொஞ்சம் பாரு 
திரைக்கை: ஏய் வழக்கமா வரவனில்ல நான் விளக்காம உனக்குச் சொல்ல!
எலி: ஏய் வழக்கமா வரதெல்லாம் நாங்க விளக்கமா சொல்லிட்டோம் அதனால் டிபரெண்ட யோசி! 
திரைக்கை: ஏய் நான் ...
எலி: நிறுத்துடா மொத மனிதரா வாழ இந்த புத்தக விமர்சனத்தைப் படி. அகத்தீயை புரிஞ்சுகோ 
திரைக்கை: ஏய் எனக்கு கோவம்  வந்திருச்சு. கோவம் வந்த கம்ப்யூட்டர் வைரஸ்ஸ கக்கும்னு தெரியாது!
எலி: ஏய் இந்த எலி ஆண்டி வைரஸ் கையால செருப்படி வாங்கினா எல்லாம் சரியாகிரும். 
எலி: போ போயி சாவிக் கட்டைக்கிட்ட சொல்லு ஜீரோ கோட்டைக்கு சீல் வச்சுட்டு பொழைக்கச் சொல்லு இல்ல அய்யாவோட நல்ல மருத்துவக்குறிப்ப பார்த்து ரெடியா இருக்கச் சொல்லு.
கண்ட்ரோல் பாண்டியன்: சபாஸ் நம்ம எலி பதிலடியில பின்னுறாரு.


திரைக்கையின் பதிலடி என்ன?
தொடரும்...

பிடித்திருந்தால் ஆதரிக்க http://www.tamilish.com/story/277780/
எடிட்டர் கார்னர்:

திங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும்.
செவ்வாய்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும்.
இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர
-நீச்சல்காரன்
மேலும் வாசிக்க...

Tuesday, June 15, 2010

செவ்வாய்க்கிழமை எலி செட்டிலானது.


echo<< எலி வந்தாச்சு எலி வந்தாச்சு!
எலி:அண்ணே என்னக்கண்டா உங்க ஊர்காரவுங்களுக்கு இவ்வளவு பிரியமா? 
கரச்சான்: அட, அது நீயில்லப்பா அவுங்க வேற எலிய சொல்றாங்க. ஏப்பா அந்த பக்கம் போகாத அடுச்சுப் போட்டுருவாங்க. நம்ம ஊர் இதுக்கடுத்த ஊருப்பா   
எலி:ஆ. அப்படியா, சரி என்னைப் பார்த்தா எலின்னு ஒத்துக்குவாங்கள 
அட்டை: இத பாரு நாம உன்னோட போட்டவ நம்ம அண்ணன் சொல்ற மாதிரி இலவசமா பாஸ்போர்ட்சைஸ் போட்டவா மாற்றி உனக்கு அடையாள அட்டை பண்ணிருலாம்.
எலி:சரி அடுத்து..
அட்டை: உடனே உனக்கு ஒரு வலைப் பதிவு ஆரம்பிக்கணும் அதுக்கு உனக்கு பிடிச்ச அருமையான டேம்ப்லைட்களை இவரு தாறாரு அப்படியே அவர்கிட்டையே சில டிப்ஸ்களையும் வாங்கிக்கோ.
எலி:சரி அடுக்கு பெட்டி கிடைக்குமா?
கரச்சான்:Multi tab தானே அத இவரு தெளிவா சொல்லிட்டாரு எடுத்து வச்சுக்கோ. அப்புறம், இந்த எலி இந்த சி.டி.யில நம்ம ப்ளாக்பட்டியை பத்தி எல்லாம் இருக்கும் கொஞ்சம் பாத்துக்கோ 
எலி:அண்ணே சி.டி. ரொம்ப அடிவாங்கிருக்கு போல தகவல் கிடைக்க மாட்டிக்குது.
கரச்சான்:கவலைப்படாத இத பாரு முக்கியமான இந்தப்பதிவைப் படி அப்படியே டேமேஜ் ஆனா சி.டி.யையும் படி.
எலி:அண்ணே உங்க ப்ளாக்பட்டியில எல்லாம் தலை கீழ்ல தான் நடப்பாங்கள? இல்ல சி.டியில  இருக்கிற உங்க ஊர்க்காரவுங்க எல்லாம் தலைகீழ தெரியுறாங்க அதான் கேட்டேன்
அட்டை: அட என்னப்பா நீ விவரம் தெரியாத ஆளா இருக்க உடனே இங்க போயி அந்த வீடியோ பையில்களை திருப்பி பாரு.

{என்று ஊரைப்பத்தின தகவலை கேட்டுக் கொண்டே ப்ளாக்பட்டிக்குள் நுழைகிறார்கள். ஊர்க்காரவுங்க எல்லாரும் வந்து வரவேற்கிறார்கள்.}

பிலிகிரி கேம்ஸ்:எலி நான் சொல்லல இவர்தான் முன்னாள் மார்ஷல் கண்ட்ரோல் பாண்டியன். இவுங்க தான் நம்ம கரச்சானோட அம்மா பாய்ண்டரம்மா, அவுங்க தான் நம்ம ......
எலி:சரி நிறுத்துங்க மொதல மாலைக் கொடுங்க நம்ம குல தெய்வம் கூகிள் சிலைக்கு மாலைய போடணும்.
கண்ட்ரோல் பாண்டியன்: சபாஸ் நம்ம எலி கடமையில பின்னுறாரு. ஆனா பாருங்க கூகிள் தினமும் டுடுல் மாலை மாத்திரத்தால அந்த மாலை நம்ம மார்கெட்ல கிடைக்க மாட்டிக்குது.
அட்டை:யோவ் எலி உன்ன இவரோட கூகிள் செய்திகளை படிக்கச் சொன்னேன்ல, கூகிள் ஆண்டவர் அடிக்கடி மாலை மாத்துவாருய்யா!
எலி:ம்.. எனக்குத் தெரியும். நம்ம தலைவர் என்ன சொல்லிருக்காரு? பதிவெழுதுறவுங்களுக்கு கவனம் வாசகர் மேலையும் இருக்கணும்னு சொல்லியிருக்காரு. அதான் டெஸ்ட் வச்சேன் உங்களுக்கு.
கண்ட்ரோல் பாண்டியன்: சபாஸ் நம்ம எலி சைக்காலஜியில பின்னுறாரு.

பிலிகிரி கேம்ஸ்:இப்பகூட பாருங்க நம்ம யாஹூ மெயின் ரோட்டுல நகர்வோர் ஆக்குதல் போட்டி நடக்குது.
எலி:நுகர்வோர் பத்தி கேள்விப் பட்டிருக்கேன் ஆனால் அது என்ன நகர்வோர்?
பிலிகிரி கேம்ஸ்:அதுவா! இந்த ஜீரோ கோட்டைக் காரவுங்களுக்கு பொழுது போகலைனா நம்ம ஆட்கள் யாராச்சும் கஷ்டப்பட்டு பதிவு போட்டா அதற்கு ஓட்டுப் போடாமல் வாசகர்களை நகர வைப்பாங்க உதாரணத்துக்கு பாருங்களே ப்ரைவேட் பிரவுசிங் பற்றி ஒருவர் கஷ்டப்பட்டு தகவலைத் திரட்டிப் போட்டால் அது பிரபலமாகவில்லை. மேலும் இலவச டொமைன் வழங்கும் சேவைப் பற்றிப் போட்டாலும் இப்படித் தான் நடக்கிறது. மற்றும் ஒரு சகோதரர் வாசகர் கேள்விக்கு பயனுள்ள பதில்கள் தருகிறார் ஆனால் அவரின் பதிவுகளுக்கும் ஓட்டுகள் விழுவதில்லை.
கண்ட்ரோல் பாண்டியன்:நம்ம எலி சாதாரண ஆள்யில்லாமா, தான் நிழல விட வேகமா பதிவுகள் போட்டு இவர்களை பிரபலப்படுத்துவாரு.
எலி:ஆமா ஆனா இப்ப எனக்கு லேசா ஒரு பக்கதலை வலி அதுனால நீங்க நல்ல பதிவர்களோட பதிவெல்லாம் ஒரு வேர்ட் டாக்குமென்ட்ல போட்டு இவர் சொல்ற மாதிரி பூட்டி அனுப்பி வையுங்க பாத்துகிறேன்.
கண்ட்ரோல் பாண்டியன்: சபாஸ் நம்ம எலி செக்யுரிட்டியில பின்னுறாரு.

{இந்த ப்ளாக்பட்டியின் மேற்கு ஒன்றியத்தில் சிலர்..}
1:ஆமா  இங்க பாரு, இந்த மதுரையில இருந்து எழுதுற பாபாராஜ்  சும்மா ஆழாம கவிதை எழுதுறாரு.
2:அருமை. அப்படியே இந்த ராஜகுரு கவிதையைப் படிச்சுப் பாருங்க. நம்ம ஆள்க நல்ல எழுத ஆரம்பிச்சுட்டாங்க
3:பாஸ், இங்க பாருங்க இந்த அண்ணே புகுந்து விளையாடுறாங்க  ரொம்ப நல்லாயிருக்கு 
5:போன வாரம் சொன்னேன்ல அந்த பதிவ பாருங்க தமிழையும் இங்கிலிஷ்ளையும்  எழுதி பட்டைய கிளப்புறாங்க.
4:இனி நாம்ம பதிவர்கள் அந்த ஜீரோ கோட்டைக்கு பயப்படத் தேவையில்லை. நாம்ம ஒற்றுமை நிறையப் பதிவுகள் எழுதி சாவிக் கட்டை குரவளைய நேரிக்கனும்.
திரைக்கை: நானும் உங்க இயக்கத்தில சேர்ந்துக்கிறேங்க.. ப்....ளீஸ் என்னையும் பதிவுகளில சேர்த்துக்கோங்..க.    ம் சுயமா எழுதி பதிவா போட்டு ஜீரோ கோட்டை குரல்வளையை நெரிக்கவா? எங்களுக்கு குரல்வளையும் விக்கிபீடியாடா நெரிக்க நெரிக்க வளருவோம்.
இனிமே யாரும் பதிவு போடக் கூடாது. உங்க சாப்பீஸ் குச்சிய எல்லாம் நான் எடுத்துட்டுப் போறேன். இனி நீங்க எப்படி பதிவு போடுரேங்கனு பார்க்குறேன். அதுதான் எங்க சாவிக்கட்டை தலைமைக்கு கொடுக்கிற மரியாதை.

{இங்க நம்ம எலி மற்றும் அதன் சகாக்கள் ஊர் பெரியவர் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கே அந்த பெரியவர் இவ்வூரின் வரலாற்றைக் கூறுகிறார்.}
பெரியவர்:மொத மொத தமிழ் பதிவை எழுத வசதி தந்தது ப்ளாகர்.காம் தான் அதுக்கப்புறம் சில பேர் பதிவு எழுத ஆரம்பிச்சாங்க அப்ப தேன்கூடுன்னு ஒருத்தர் தலைவரா வந்தாரு அவர்காலம் தான் பொற்காலம். அப்பத்தான் ப்ளாக்ஸ்பாட் அப்படிங்கிறவர் நமக்கெல்லாம் வழிகாட்டினாரு அவுங்க நினைவாத்தான் இந்த ஊருக்கு ப்ளாக்பட்டினு பேரு வந்துச்சு. அப்ப அறியாமை அப்படிங்கிற ஒரு கொடிய வில்லன்கிட்ட சிக்கி இந்த ஊரே கஷ்டப்பட்டுச்சு அவனை அடுச்சு விரட்ட அப்ப வந்தவர்தான் தமிழ் மணம், நம்ம பதிவர்களுக்காக அல்லும் பகலும் உழைக்கிறவுங்க. அதுக்கப்புறமா தமிழிஷ் ஐயா ஊர் நாட்டாமை ஆனார். அவர் பார்த்து சொல்ற பதிவுதான் டாப்.  ஓடிப்போனானே அவனோட பிள்ளைதான் இந்த சாவிக் கட்டை, சிலேடு பிடுச்சு படிச்ச காலத்திலே இவன் ஸ்கூல விட்டு வந்துட்டான் அதனால படிப்பே வரல அதனால் யாரும் பதிவெழுதக் கூடாதுன்னு இந்த ஊரையே கைக்குள்ள போடுறதுதான் அவனோட பாழப்போன ஆசை. அப்பப்ப வந்து சாப்பீஸ், குச்சி எல்லாம் திருடிட்டுப் போவான் பக்கி பேனா கண்டு பிடிச்சது கூட இவனுக்கு தெரியாது.
பாய்ண்டரம்மா:மூனு தலைமுறையா சாவிக் கட்டையும் அவனோட தளபதி திரைக்கையும்  ஏதோ ஒரு புதையலைத் தேடிக்கிட்டேயிருக்காங்க  அதுமட்டுமில்லை புதையலுக்கான பாஸ்வேர்டையும் தொலைச்சுட்டு எல்லாரோட பதிவிலையும் அனானியாய் தொல்லை பண்ணுறாங்க.

பெரியவர்:நம்ம நண்பர் ஒருவர் சைவச் சாப்பாட்டப் பத்தி நல்ல விஷயத்தைச் சொல்லிருக்காரு அப்புறம் இந்த சகோதரியும் முட்டைக்குழம்பு வச்சுத் தந்தாங்க ஆனால்  இந்த சாவிக் கட்டையால நாங்க நிம்மதியக் கூட சாப்பிட முடியவில்லை
கொஞ்ச நாளைக்கு முன்னாடி 123 ஒப்பந்தம் ஒன்னு போட்டிருக்கு 


அதுஎன்ன ஒன்,டு,திரி, ஒப்பந்தம்?
தொடரும்.... 

பிடித்திருந்தால் ஆதரிக்க http://www.tamilish.com/story/276696/


எடிட்டர் கார்னர்:

திங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும் இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர
-நீச்சல்காரன்
மேலும் வாசிக்க...

Monday, June 14, 2010

திங்கட்கிழமை எலி தப்பியது.

எடிட்டர் கார்னர்:

வணக்கம்.
எனக்கும் வலைச்சரத்தில் பதிவிட வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு நன்றிகள். என் நண்பர்களைப் பற்றி அறிமுகம் செய்யப் போவதால் தனியாக எந்த அறிமுகமும் நான் எழுதவில்லை இதுவே எனக்கு ஒரு அறிமுகம் தான் அதனால இந்த வாரம் முழுக்க சுய அறிமுகம் தான் எழுதப் போகிறேன். புதியவர்களையும் பாராட்டுங்கள். இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர
-நீச்சல்காரன்

இணையத்தில எத்தனையோ எழுத்துலகம் இருந்தாலும் எல்லோராலும் கவரப்படும் உலகம் பதிவுலகம். இது தனித்துவமிக்க ஈர்ப்புடையது காரணம் பதிவு, மறுமொழி, பாலோய்ர்ஸ், திரட்டி, வலைப் பக்கம், குத்தல் மற்றும் குடைச்சல். பதிவர்கள் என்று அறியப்படும் இவர்கள்  இணையப் பக்கங்களில் தனது கற்பனையையோ சிந்தனையையோ, அனுபவத்தையோ செய்தியையோ எழுதுவதை பூர்வீகமாக கொண்டவர்கள். 1997ல் தொடங்கிய இந்த கலாச்சாரம் மெல்ல மெல்ல வளர்ந்து 2004ல் ஓங்கி வளர்ந்தது. இது 2010ம் ஆண்டில் வாழும் தமிழ் பதிவுலகம் பற்றிய புனைவுக் கதை இனி...


ஏன் இவன் அழுகிறான்? என்ன ஆச்சு?
***********************flash back**************************
நீதிபதி: ஆர்டர்! ஆர்டர்! ஆர்டர்!
வழக்குரைஞர்:குற்றம் சாற்றப்பட்டுள்ள சுண்டெலியை உற்றுப் பாருங்கள்.
நீதிபதி:ம்.. உற்றுப் பார்த்துவிட்டோம்!
வழக்குரைஞர்:இணைய பிரதேசம் என்கிற ஊரில் காலம் காலமாக பாதுகாக்கப்பட்ட விலை மதிப்பற்ற பேனாக்கள் உள்ளன. அந்த ஊரில் புதிதாக குடி வந்த இந்த சுண்டெலி தன் அலசியத்தால் அந்த பேனாக்களைக் கோட்டைவிட்டுவிட்டான். 
சுண்டெலி:நான் திருடலை யுவர் ஆனர்
வழக்குரைஞர்:நீ திருடலைன்னு தெரியும் ஆனால் அது காணமப் போன அன்று நீயும் கூட இருந்ததாக சாட்சியங்கள் சொல்லுது. பாவம் யுவர் ஆனர் இவர் பல காலமாக நல்ல தகவல்களை எழுதி வந்தாரு ஆனால் சமீப காலமாக இவர் இந்த ஊரில் எழுதுவதில்லை யுவர் ஆனர். மேலும் ஒரு நகைச்சுவை கலைஞரும் இவரால் பாதிக்கப் பட்டுள்ளார் யுவர் ஆனர். அதைவிட  தற்போது எழுத ஆரம்பித்த நல்ல பதிவரும் எப்போதாவது ஒரு முறை மட்டும் எழுதுகிறார் யுவர் ஆனர்.
சுண்டெலி:அதற்கு நான் காரணமில்லை யுவர் ஆனர்.
வழக்குரைஞர்:பொய், சுத்த பொய் யுவர் ஆனர். அவர்களை எல்லாம் ஊக்கப் படுத்தாமல் சாப்பாட்டுக் கடையில் மூக்குபிடிக்க சாப்பிட்டுள்ளான் யுவர் ஆனர். மேலும் தற்போது விடைப் பெற்றுள்ள ஒரு திறமைசாளியின்  முடிவிற்கும் இவன் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன் யுவர் ஆனர். மேலும் சாட்சியங்களை விசாரிக்க அனுமதியை கோருகிறேன்.
நீதிபதி:பர்மிஷன் கிராண்டட் 
சாட்சி ஓணான்: எனது ஆர்குட் மீது ஆணையாக நான் சொல்வதெல்லாம் உண்மை  
வழக்குரைஞர்: ஆமாம் சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது?
சாட்சி ஓணான்: சார் மக்களுக்கு நல்ல நல்ல சங்கதி சொல்லி வந்த இவரோட வாழ்த்துக்கு கூட நன்றி சொல்ல சார். இப்ப இவரும் எழுதுறதில்லை சார்.  அப்புறம் மக்களுக்கு டெக்னிகல் விஷயத்தை சொல்லும் இவரும் எழுதுறதில்லை சார். அப்புறம் அரசியல் விஷயங்களை விளக்கமாக சொல்லும் ஒருவரையும் காணவில்லை சார். அப்புறம் பாக்தாத்திலிருந்து எழுதும் இவரும் ரொம்ப நாளா எழுதாம இருக்கிறார் சார்.
வழக்குரைஞர்: நீங்க போகலாம். சுண்டெலிக்கு ஓணான் சாட்சி இருக்கிறது. அது மட்டுமில்லை, பெற்றோருக்கு நல்ல அறிவுரை சொல்லும் இவரும் தற்போது எழுதுவதில்லை யுவர் ஆனர். மனதிற்கு ரொம்ப வருத்தமாகயிருக்கிறது.
அந்த பேனா இல்லாததால் தான் யாரும் அதிகமாக எழுதவில்லைஎன்பது நமது ஐதீகம். இவனால் மொத்த ஊரும் பாதிக்கப்பட்டுயிருக்கு. அதனால் இதற்கு மேல் தாமதிக்காமல் குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனையாக இந்த பதிவுகளை மூன்று முறை படிக்க உத்தரவிடுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர்.
சுண்டெலி: ஐயையோ! வேண்டாம் யுவர் ஆனர் அதற்கு என்னை தூக்கிலே போடுங்கள் யுவர் ஆனர். நான் உயிர் வாழ வேற வழியே இல்லையா யுவர் ஆனர்.
நீதிபதி:பேனாவைக் கொண்டு வரியா? விடுதலை செய்கிறேன். ஆகையால் குற்றம் சாற்றப் பட்டுள்ள சுண்டெலிக்கு மரண தண்டனை அளிக்கிறேன்.
*************************************************
{சுண்டெலியை மரணப் பிடியிலிருந்து கடத்தி வருகிறது ஒரு கும்பல்.}
சுண்டெலி: யாரு நீங்க?
"என் பேரு பிலிகிரி கேம்ஸ்,அபூர்வமா எங்க ஊருக்கு கரண்ட வந்ததால இந்த டி.வி. நியூஸ்ல உன்னப் பத்தி செய்தி கிடைச்சது."
"என் பேரு அட்டை, உனக்குத் தேவையான பேனா போல ஒரு பேனா எங்க ஊர்ல இருக்குது. அதை உனக்குத் தாறோம் பதிலுக்கு எங்க ஊருக்கு வந்து நீ எலி போல நடிக்கணும்."
"ஆமாம், 1997ல் நடந்த ஒரு கேஸ்க்கு சாட்சி சொல்ல போனவரு இன்னும் வரலை. அந்த கேஸ்க்கு தீர்ப்பு வந்து அவரு வரதுக்குல்லையும் இன்னும் 40 வருஷமாகலாம் அதான் அவரு மாதிரியே இருக்கிற நீ எங்க ஊருக்கு வந்து எலி போல நடிச்சு எங்க ஊர் மக்களை உசிப்பி விடனும். ஜீரோ கோட்டைன்னு ஒரு ஊர் இருக்கு அங்கவுள்ள அக்கிரமக்காரங்கள அடிச்சு விரட்டியாசுனா இந்த பேனாவை உனக்கு தாறோம். என் பேரு தான் கரச்சான் "

{சமாதானமான சுண்டெலி எலியாக மாறி இவர்களுடன் ப்ளாக்பட்டிக்கு வருகிறது. வரும் வழியில் அந்த ஊரைப் பற்றிக் கேட்டுக் கொண்டு வருகிறார்.}
எலி:ஏங்க உங்க ஊர்ல சரக்கும் சைட்டு டிஷ்ஷும் கிடைக்குமா?
கரச்சான்: அடப்பாவி, எங்க ஊர்ல யாரும் குடிக்க மாட்டங்க மீறி குடிக்கிறவுங்களும் இத படிச்சிட்டு விட்டுட்டாங்க  
எலி:அப்ப பஸ்ஸ்டாபில பேஜார் பண்ணும் குடி மகன், அங்கயே படுத்துறங்கும் குடி மக்களெல்லாம் இல்லையா?
கரச்சான்:ஹி ஹி பஸ் ஸ்டாப் விஷயம்ன அது இதுதான் பஸ்ட்கிளாஸ் விஷயம். ம் படிச்சு பாரு.
எலி: அட, அப்ப எல்லா கட்டடங்களும் இப்படித்தான் கட்டியிருப்பீங்களோ?
பிலிகிரி கேம்ஸ்:இல்ல இல்ல எங்க ஊர் பழமையை அப்படியே படம் பிடுச்சு காட்டும் இவர் கிட்டேயே போய் கேட்டுப் பாருங்க. நாங்க கலை நுணுக்கம்  தெரிஞ்சவுங்க.
எலி:நீங்க பேசுறதப் பார்த்தா எல்லா விஷயத்திலையும் டிரைனிங் ஆனவுங்க போல 
அட்டை: ஆமாம் பாருங்க, ஒரு நெகிழ்ச்சியான டிரைனிங் பற்றி சகோதரி எழுதியிருக்காங்க .  அப்படியே வாத்தியார் கிட்டையே கேள்வியும் கேட்டு ஜில்லுனு வருவோம்ல.
எலி:சரி உங்க ஊர்ல ஏதாச்சும் சுத்திப் பார்க்கிற மாதிரி இடமெல்லாம் இருக்கா?
அட்டை: வோவ் எலி, நீ சரியாத் தான் கேட்கிற சுத்திப் பார்க்கிற அனுபவத்தை இந்த மதுரைக்காரரு நல்ல சொல்லிருக்காரு வேகமா போய் படிச்சுட்டு வா!   
எலி:என்னங்க உங்க குதிரை வேகமாக போக மாட்டிக்குது.
பிலிகிரி கேம்ஸ்:அப்பா, அது குதிரை இல்லை நாங்க எழுதிப் பார்த்துப் போட்ட பழைய பதிவு பேப்பர தின்கிற கழுத

இனி ப்ளாக்பட்டியில் நடந்தது என்ன?
தொடரும்... 

பிடித்திருந்தால் ஆதரிக்க http://www.tamilish.com/story/275759/
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது