07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 14, 2010

திங்கட்கிழமை எலி தப்பியது.

எடிட்டர் கார்னர்:

வணக்கம்.
எனக்கும் வலைச்சரத்தில் பதிவிட வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு நன்றிகள். என் நண்பர்களைப் பற்றி அறிமுகம் செய்யப் போவதால் தனியாக எந்த அறிமுகமும் நான் எழுதவில்லை இதுவே எனக்கு ஒரு அறிமுகம் தான் அதனால இந்த வாரம் முழுக்க சுய அறிமுகம் தான் எழுதப் போகிறேன். புதியவர்களையும் பாராட்டுங்கள். இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர
-நீச்சல்காரன்

இணையத்தில எத்தனையோ எழுத்துலகம் இருந்தாலும் எல்லோராலும் கவரப்படும் உலகம் பதிவுலகம். இது தனித்துவமிக்க ஈர்ப்புடையது காரணம் பதிவு, மறுமொழி, பாலோய்ர்ஸ், திரட்டி, வலைப் பக்கம், குத்தல் மற்றும் குடைச்சல். பதிவர்கள் என்று அறியப்படும் இவர்கள்  இணையப் பக்கங்களில் தனது கற்பனையையோ சிந்தனையையோ, அனுபவத்தையோ செய்தியையோ எழுதுவதை பூர்வீகமாக கொண்டவர்கள். 1997ல் தொடங்கிய இந்த கலாச்சாரம் மெல்ல மெல்ல வளர்ந்து 2004ல் ஓங்கி வளர்ந்தது. இது 2010ம் ஆண்டில் வாழும் தமிழ் பதிவுலகம் பற்றிய புனைவுக் கதை இனி...


ஏன் இவன் அழுகிறான்? என்ன ஆச்சு?
***********************flash back**************************
நீதிபதி: ஆர்டர்! ஆர்டர்! ஆர்டர்!
வழக்குரைஞர்:குற்றம் சாற்றப்பட்டுள்ள சுண்டெலியை உற்றுப் பாருங்கள்.
நீதிபதி:ம்.. உற்றுப் பார்த்துவிட்டோம்!
வழக்குரைஞர்:இணைய பிரதேசம் என்கிற ஊரில் காலம் காலமாக பாதுகாக்கப்பட்ட விலை மதிப்பற்ற பேனாக்கள் உள்ளன. அந்த ஊரில் புதிதாக குடி வந்த இந்த சுண்டெலி தன் அலசியத்தால் அந்த பேனாக்களைக் கோட்டைவிட்டுவிட்டான். 
சுண்டெலி:நான் திருடலை யுவர் ஆனர்
வழக்குரைஞர்:நீ திருடலைன்னு தெரியும் ஆனால் அது காணமப் போன அன்று நீயும் கூட இருந்ததாக சாட்சியங்கள் சொல்லுது. பாவம் யுவர் ஆனர் இவர் பல காலமாக நல்ல தகவல்களை எழுதி வந்தாரு ஆனால் சமீப காலமாக இவர் இந்த ஊரில் எழுதுவதில்லை யுவர் ஆனர். மேலும் ஒரு நகைச்சுவை கலைஞரும் இவரால் பாதிக்கப் பட்டுள்ளார் யுவர் ஆனர். அதைவிட  தற்போது எழுத ஆரம்பித்த நல்ல பதிவரும் எப்போதாவது ஒரு முறை மட்டும் எழுதுகிறார் யுவர் ஆனர்.
சுண்டெலி:அதற்கு நான் காரணமில்லை யுவர் ஆனர்.
வழக்குரைஞர்:பொய், சுத்த பொய் யுவர் ஆனர். அவர்களை எல்லாம் ஊக்கப் படுத்தாமல் சாப்பாட்டுக் கடையில் மூக்குபிடிக்க சாப்பிட்டுள்ளான் யுவர் ஆனர். மேலும் தற்போது விடைப் பெற்றுள்ள ஒரு திறமைசாளியின்  முடிவிற்கும் இவன் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன் யுவர் ஆனர். மேலும் சாட்சியங்களை விசாரிக்க அனுமதியை கோருகிறேன்.
நீதிபதி:பர்மிஷன் கிராண்டட் 
சாட்சி ஓணான்: எனது ஆர்குட் மீது ஆணையாக நான் சொல்வதெல்லாம் உண்மை  
வழக்குரைஞர்: ஆமாம் சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது?
சாட்சி ஓணான்: சார் மக்களுக்கு நல்ல நல்ல சங்கதி சொல்லி வந்த இவரோட வாழ்த்துக்கு கூட நன்றி சொல்ல சார். இப்ப இவரும் எழுதுறதில்லை சார்.  அப்புறம் மக்களுக்கு டெக்னிகல் விஷயத்தை சொல்லும் இவரும் எழுதுறதில்லை சார். அப்புறம் அரசியல் விஷயங்களை விளக்கமாக சொல்லும் ஒருவரையும் காணவில்லை சார். அப்புறம் பாக்தாத்திலிருந்து எழுதும் இவரும் ரொம்ப நாளா எழுதாம இருக்கிறார் சார்.
வழக்குரைஞர்: நீங்க போகலாம். சுண்டெலிக்கு ஓணான் சாட்சி இருக்கிறது. அது மட்டுமில்லை, பெற்றோருக்கு நல்ல அறிவுரை சொல்லும் இவரும் தற்போது எழுதுவதில்லை யுவர் ஆனர். மனதிற்கு ரொம்ப வருத்தமாகயிருக்கிறது.
அந்த பேனா இல்லாததால் தான் யாரும் அதிகமாக எழுதவில்லைஎன்பது நமது ஐதீகம். இவனால் மொத்த ஊரும் பாதிக்கப்பட்டுயிருக்கு. அதனால் இதற்கு மேல் தாமதிக்காமல் குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனையாக இந்த பதிவுகளை மூன்று முறை படிக்க உத்தரவிடுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர்.
சுண்டெலி: ஐயையோ! வேண்டாம் யுவர் ஆனர் அதற்கு என்னை தூக்கிலே போடுங்கள் யுவர் ஆனர். நான் உயிர் வாழ வேற வழியே இல்லையா யுவர் ஆனர்.
நீதிபதி:பேனாவைக் கொண்டு வரியா? விடுதலை செய்கிறேன். ஆகையால் குற்றம் சாற்றப் பட்டுள்ள சுண்டெலிக்கு மரண தண்டனை அளிக்கிறேன்.
*************************************************
{சுண்டெலியை மரணப் பிடியிலிருந்து கடத்தி வருகிறது ஒரு கும்பல்.}
சுண்டெலி: யாரு நீங்க?
"என் பேரு பிலிகிரி கேம்ஸ்,அபூர்வமா எங்க ஊருக்கு கரண்ட வந்ததால இந்த டி.வி. நியூஸ்ல உன்னப் பத்தி செய்தி கிடைச்சது."
"என் பேரு அட்டை, உனக்குத் தேவையான பேனா போல ஒரு பேனா எங்க ஊர்ல இருக்குது. அதை உனக்குத் தாறோம் பதிலுக்கு எங்க ஊருக்கு வந்து நீ எலி போல நடிக்கணும்."
"ஆமாம், 1997ல் நடந்த ஒரு கேஸ்க்கு சாட்சி சொல்ல போனவரு இன்னும் வரலை. அந்த கேஸ்க்கு தீர்ப்பு வந்து அவரு வரதுக்குல்லையும் இன்னும் 40 வருஷமாகலாம் அதான் அவரு மாதிரியே இருக்கிற நீ எங்க ஊருக்கு வந்து எலி போல நடிச்சு எங்க ஊர் மக்களை உசிப்பி விடனும். ஜீரோ கோட்டைன்னு ஒரு ஊர் இருக்கு அங்கவுள்ள அக்கிரமக்காரங்கள அடிச்சு விரட்டியாசுனா இந்த பேனாவை உனக்கு தாறோம். என் பேரு தான் கரச்சான் "

{சமாதானமான சுண்டெலி எலியாக மாறி இவர்களுடன் ப்ளாக்பட்டிக்கு வருகிறது. வரும் வழியில் அந்த ஊரைப் பற்றிக் கேட்டுக் கொண்டு வருகிறார்.}
எலி:ஏங்க உங்க ஊர்ல சரக்கும் சைட்டு டிஷ்ஷும் கிடைக்குமா?
கரச்சான்: அடப்பாவி, எங்க ஊர்ல யாரும் குடிக்க மாட்டங்க மீறி குடிக்கிறவுங்களும் இத படிச்சிட்டு விட்டுட்டாங்க  
எலி:அப்ப பஸ்ஸ்டாபில பேஜார் பண்ணும் குடி மகன், அங்கயே படுத்துறங்கும் குடி மக்களெல்லாம் இல்லையா?
கரச்சான்:ஹி ஹி பஸ் ஸ்டாப் விஷயம்ன அது இதுதான் பஸ்ட்கிளாஸ் விஷயம். ம் படிச்சு பாரு.
எலி: அட, அப்ப எல்லா கட்டடங்களும் இப்படித்தான் கட்டியிருப்பீங்களோ?
பிலிகிரி கேம்ஸ்:இல்ல இல்ல எங்க ஊர் பழமையை அப்படியே படம் பிடுச்சு காட்டும் இவர் கிட்டேயே போய் கேட்டுப் பாருங்க. நாங்க கலை நுணுக்கம்  தெரிஞ்சவுங்க.
எலி:நீங்க பேசுறதப் பார்த்தா எல்லா விஷயத்திலையும் டிரைனிங் ஆனவுங்க போல 
அட்டை: ஆமாம் பாருங்க, ஒரு நெகிழ்ச்சியான டிரைனிங் பற்றி சகோதரி எழுதியிருக்காங்க .  அப்படியே வாத்தியார் கிட்டையே கேள்வியும் கேட்டு ஜில்லுனு வருவோம்ல.
எலி:சரி உங்க ஊர்ல ஏதாச்சும் சுத்திப் பார்க்கிற மாதிரி இடமெல்லாம் இருக்கா?
அட்டை: வோவ் எலி, நீ சரியாத் தான் கேட்கிற சுத்திப் பார்க்கிற அனுபவத்தை இந்த மதுரைக்காரரு நல்ல சொல்லிருக்காரு வேகமா போய் படிச்சுட்டு வா!   
எலி:என்னங்க உங்க குதிரை வேகமாக போக மாட்டிக்குது.
பிலிகிரி கேம்ஸ்:அப்பா, அது குதிரை இல்லை நாங்க எழுதிப் பார்த்துப் போட்ட பழைய பதிவு பேப்பர தின்கிற கழுத

இனி ப்ளாக்பட்டியில் நடந்தது என்ன?
தொடரும்... 

பிடித்திருந்தால் ஆதரிக்க http://www.tamilish.com/story/275759/

30 comments:

 1. அவரை பற்றியும் இவரை பற்றியும் நல்லா அறிமுகப்படுத்தி, இதை பத்தி சொல்லி, அதை பத்தி சொல்லி அசத்த, வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அன்பின் நீச்சல்காரன்

  அருமையன புதுமையான இடுகை - தொடர்க் - முழுவதும் படித்தேன் - ரசித்தேன் - சுட்டிகளைச் சுட்டிப் பார்க்கிறேன் - என்ன அறிமுகம் என்று

  அரை மணி நேரம் கழித்து மறு மறுபொழி இடுகிறேன்

  நல்வாழ்த்துகள் நீச்சல்காரன்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 4. நல்லா இருக்கு இந்த டெக்னிக்! எல்லோரும் கலக்குறீங்க! வாழ்த்துக்கள் நீச்சல்காரன்

  ReplyDelete
 5. பிரமாதம் அண்ணே, யாரென்று சொல்லாமலே அந்த நபரை தேட வைத்தயு விட்டீர்கள் ..

  ReplyDelete
 6. இன்னும் படிக்க நேரம் வேணும் - படிச்சிட்டு வரேன்

  ReplyDelete
 7. நல்லாயிருக்கு,தேடி பார்த்து எல்லோரையும் தெரிந்துகொள்ள செய்தது அருமை.

  ReplyDelete
 8. தலைப்பிலயே ஆரம்பிச்சிட்டீங்க.. உங்க விளையாட்டை..!!
  வருக.. தொடர்ந்து கலக்குங்க.. :)

  ReplyDelete
 9. கலக்குறீங்க நீச்சல் சார்
  இப்படியும் அறிமுகப் படுத்தமுடியுமா
  முதல் நாளே அடியேனை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல
  நிறைய புதிய பதிவர்களை அறிந்து கொண்டேன்

  ReplyDelete
 10. நல்ல உத்தி . புதிய முறையில் அறிமுகப்படுத்தியதற்கு , வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் நீச்சல் சார்,,

  ReplyDelete
 14. ப்ளாக் படியில் என்ன நடந்தது. சொல்லுங்க பாஸ் சொல்லுங்க.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 16. வலையுலகில் இன்றைய டாப் இருபது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

  ReplyDelete
 17. //அவரை பற்றியும் இவரை பற்றியும் நல்லா அறிமுகப்படுத்தி, இதை பத்தி சொல்லி, அதை பத்தி சொல்லி அசத்த, வாழ்த்துக்கள்//
  மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி

  ReplyDelete
 18. சி. கருணாகரசு,
  LK,
  முனைவர்.இரா.குணசீலன்
  ஜெய்லானி,
  அஹமது இர்ஷாத்,
  பிரசன்னா,
  அக்பர்,
  விஜய்

  வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 19. //அருமையன புதுமையான இடுகை - தொடர்க் - முழுவதும் படித்தேன் - ரசித்தேன் - சுட்டிகளைச் சுட்டிப் பார்க்கிறேன் - என்ன அறிமுகம் என்று

  அரை மணி நேரம் கழித்து மறு மறுபொழி இடுகிறேன்//
  ரொம்ப மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றிகள்

  ReplyDelete
 20. //நல்லா இருக்கு இந்த டெக்னிக்! எல்லோரும் கலக்குறீங்க! வாழ்த்துக்கள் நீச்சல்காரன்//
  உற்சாகக் கருத்துக்கு நன்றிகள் கார்த்திக்

  ReplyDelete
 21. //பிரமாதம் அண்ணே, யாரென்று சொல்லாமலே அந்த நபரை தேட வைத்தயு விட்டீர்கள் //
  நன்றி. அப்படியே தேடப்பட்டவர்கள் சாதிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. //நல்லாயிருக்கு,தேடி பார்த்து எல்லோரையும் தெரிந்துகொள்ள செய்தது அருமை//
  புது முயற்சிக்கு கிடைத்த உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 23. //தலைப்பிலயே ஆரம்பிச்சிட்டீங்க.. உங்க விளையாட்டை..!!
  வருக.. தொடர்ந்து கலக்குங்க.. ://
  வாங்க சகோதரி கருத்துக்கு நன்றிகள்.

  ReplyDelete
 24. //கலக்குறீங்க நீச்சல் சார்
  இப்படியும் அறிமுகப் படுத்தமுடியுமா
  முதல் நாளே அடியேனை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல
  நிறைய புதிய பதிவர்களை அறிந்து கொண்டேன்//
  உங்களைப் போல ஒருவர் தானே என்னையும் அறிமுகப்படுத்தினார். உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

  ReplyDelete
 25. //ப்ளாக் படியில் என்ன நடந்தது. சொல்லுங்க பாஸ் சொல்லுங்க//
  உங்கள் வேகம் எனக்கு பிடித்திருக்கு தொடந்து படியுங்கள்

  ReplyDelete
 26. //வலையுலகில் இன்றைய டாப் இருபது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்//
  நன்றி

  ReplyDelete
 27. தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் நீச்சல்காரன்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது