07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 20, 2010

அறிமுகத் திங்கள்...!

என்னாச்சுப்பா...உலகம் பூரா இன்டர்னெட்ட தட்டுனா...ஆட்டோமேட்டிக்கா வலைச்சரம் பிளாக் பக்கம் போகுதாமே என்னா மேட்டரு?

" சிங்கத்த...சர்கஸ்ல பாத்திருப்ப, கூண்டுக்குள்ள பாத்துருப்ப, சினிமால பாத்திருப்ப, டி.வில பாத்திருப்ப....ஆனா தனியா காட்டுல வேட்டையாடி பாத்திருக்கியா....கோபமா...இரைய அடிக்கிறத பாத்திருக்கியா....பாத்தது இல்லேல்ல.... நேரா வலைச்சரத்துக்குள்ள போ......போய் பாரு....தேவான்னு ஒரு சிங்கம் ஆக்ரோசமா ஆசிரியர் பொறுப்பேற்றுகிட்டு....ஒரு வாரத்துக்கு ஆட்டம் போட நிக்கிற ஸ்டைல பாரு....ஆனா ஓரமா நின்னு பாரு தாங்க மாட்ட....இந்தியா, அமெரிக்கா...யூரோப், சிங்கப்பூரு, மலேசியா, யூ.ஏ.இ, இலங்கை, இன்னும் லிஸ்ட்ல இல்லாத எல்லா நாட்லேந்தும் யார் நெட்ட தொறந்தாலும்....வலைச்சரத்துக்குள்ள தானா வருவாங்க ஹா.......ஹா.....ஹா..........!"

அட..பில்டப் ஒவரா கொடுத்துட்டனா தப்பா நினைக்காதீங்க...அறிமுக சீனுல்ல அதான் இப்படி...(எத்தன தமிழ்படம் பாத்துருக்கோம்...!)

அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்கும் இச்சமயத்தில் திரு. சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு... ஸ்ட்ரெய்ட்டா....மேட்டருக்கு வர்ட்டா.....!

வலைச்சரத்தின் நோக்கம் உன்னதமனது. மிகைப்பட்ட நல்ல இடுகைகளை எல்லோருக்கும் எடுத்துச் சென்று சேர்ப்பதோடு....அறிமுகப்படலம் என்ற திருவிழாவின் மூலம் நன்றாக எழுதக்கூடிய பதிவர்களை வெளிச்சத்துக்கும் கொண்டுவருவது ஒரு அற்புதமான விசயம்.

பல பிரபல பதிவர்கள் கம்பெடுத்து சுற்றிச் சென்றுள்ள கலம் அதனுள் மெல்ல நுழைந்திருக்கும் சிறுவனாய் நான்...! என்னால் முடிந்த அளவிற்கு நல்ல படைப்பாளிகளை...வெளிச்சத்திற்கு கொண்டு வரவும்... நல்ல படைப்புகளை இனம் காணவும் முயலுகிறேன் உங்கள் ஆதரவோடு...(அட தொடர் இல்லங்க...இன்ரொக்டக்ஷன் தான் பயப்படாதீங்க.....)

என்னுடைய இடுகைகளில் எனக்கு எல்லாம் பிடிக்கும் என்றாலும்....ஒரு தகப்பனின் வலியை, பொறூப்புகளை மெலிதாய் உணர்த்தும் " இரண்டு இட்லி கொடுப்பா...." எழுதிக்கொண்டு இருக்கும் போதே எனக்கு கண்ணீரை வரவழைத்த ஒரு கட்டுரை.

ஹெல்மெட் மிக அவசியம் அது ஒரு குடும்பத்தில் எவ்வளவு மாற்றங்களை உண்டாக்கும் என்றெண்ணிய போது ஜனித்த" விபத்து..." என்ற சிறுகதை.

பயணங்களின் போது ஏற்படும் நடைமுறை சிக்கலை எண்ணி எழுந்த கோபத்தில் விளைந்த" பணம் தேவையில்லை மனமே போதும் ..." என்ற கட்டுரை.

மது அரக்கனைப் பற்றிய விழுப்புணர்வு சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்....மேல் வர்க்கத்தினர் எல்லாம் விழிப்புணர்வோடு அளவோடு மது அருந்தும் போது எமது மக்கள் விழிப்புணர்வின்றி அதிகம் குடித்து அழிகின்றனரே.....என்ற ஆதங்கத்தில் எரிய விட்ட..."பொன்னத்தாவின் புலம்பல்..." என்று சொல்லிக் கொண்டே சுயபுராணம் வளர்க்க விருப்பமில்லை தோழர்களே....

எம் சக தோழர்களும், தோழிகளும், அதி அற்புதமான படைப்புகளை படைத்துள்ளார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இந்த வலைச்சரம் எனும் பெரு நெருப்பின் துணையோடும், உங்களின் ஆதரவோடும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முயல்கிறேன்......!

தேவா...கவுண்ட் டவுன் ஸ்டார்ட்......!அடுத்த பதிவில்.... நீங்கள் சொடுக்குமிடமெல்லாம்...இருப்பார்கள் அற்புத பதிவர்கள்......!


இப்போதைக்கு....வர்ட்டா.....!

35 comments:

 1. Bang Bang entry Deva:) கலக்குங்க

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் தேவா .. கலக்குங்கள் ..

  ReplyDelete
 3. பாஸ் !! இருங்க படிச்சிட்டு வரேன்.

  ReplyDelete
 4. வாழ்த்துகள் தேவா

  ReplyDelete
 5. Dheva....... Super entry!
  Best wishes!

  ReplyDelete
 6. அன்பின் தேவா

  நல்வாழ்த்துகள் - கலக்குங்க

  நட்புடன் சீனா

  ReplyDelete
 7. தல கலக்குங்க.. அறிமுகமே அசத்தல் தலைவர் பட ஓபனிங் மாதிரி

  ReplyDelete
 8. கலக்குங்க தேவா அண்ணே :)

  ReplyDelete
 9. வாழ்த்துகள் தேவா...

  தங்களின் தனித்தன்மை மிக்க எழுத்துக்களுக்காக, இரசனைக்காக காத்திருக்கிறேன்

  ReplyDelete
 10. புதிய அறிமுகங்களோடு கலக்குங்க! :))

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் தேவா .. கலக்குங்கள் ..

  ReplyDelete
 12. வாழ்த்துகள் தேவா...

  ReplyDelete
 13. புதிய களத்துல இருங்கி இருக்குற எங்க தேவா அண்ணா கலக்குவாரு என்பதில் துளியும் சந்தேகம் இல்ல ...எப்படி கலக்குவாரு என்பதை சுத்தி நின்னு பார்க்கிறது மட்டும் இல்ல, பின்னூட்டம் போட்டு உற்சாக படுத்த போறோம் தம்பிக நாங்க ....

  ReplyDelete
 14. ஆகா... பாஸ் நீங்களா..!!! வாங்க வாங்க.. இந்த வாரம் வலைச்சரம் தங்களின் மூலமும் மணக்கும் என்றே நம்புகிறேன். என்னுடைய நல்வாழ்த்துக்களும்..

  ReplyDelete
 15. ஆரம்பமே அசத்தல். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. ஆரம்பமே அசத்தல். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. வாழ்க்கையெனும் சோலையிலே வசந்த மலர்கள் வாசம் வீச விலையில்லா அன்புடனும் நிலைகொண்ட புகழுடன் இன்று போல் என்றும் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துகிறேன் தேவா உங்களை வணங்கி....

  ReplyDelete
 19. Singam kalam irankiruchuuuuuuu......
  Valthukkal Anna...........

  ReplyDelete
 20. ஆடடம் ஆரம்பம்...

  வாழ்த்துக்கள் தேவா சார்....

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் அண்ணா ... அருமையான முயற்சி ...

  ReplyDelete
 22. ஸ்டார்ட் மியூசிக்.

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் தேவா

  நிறைய புதுமுகங்களை எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 24. கலக்கு மாப்ள கலக்கு.... இது உன்னோட களம்...

  ReplyDelete
 25. வாழ்த்துகள் தேவா அண்ணே ...

  ReplyDelete
 26. சூப்பர் எண்ட்ரி கலக்குங்க ...!;)

  ReplyDelete
 27. வாங்கன்னா வாங்க. ஆட்டம் ஆரம்பத்துலேயே கலைகட்டுது. சூப்பர்.

  ReplyDelete
 28. தமிழ்படம் தளபதிகள் ரேன்சுக்கு ஆயிட்டிங்களே மாம்ஸ்... விரலை சுத்தாததுதான் மிச்சம்...யம்மாடி

  நீங்க அறிமுகப்படுத்துன உங்களோட எல்லாப்பதிவுகளிலிருந்தும் ஒரு விசயம் மட்டும் நல்லாப்புரியுது.... உண்மையச்சொல்லுங்க
  நீங்க ராஜ்கிரண் ரசிகர் தானே.... :))

  ReplyDelete
 29. நம்ம மாம்ஸ்குள்ள என்னவோ இருந்திருக்கு பாருங்களேன்...

  ReplyDelete
 30. ஹாய் மாப்ள, நீ சாதாரண களத்துலயே சிக்சர் அடிப்ப . . . உனது திறமைக்கு நல்ல தீனி கிடைச்சுருச்சு . . . இனி என்ன? பட்டய கெளப்ப வேண்டியது தானே !!!! வாழ்த்துக்களுடன் வில்சன்

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் தேவா

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 33. அறிமுகத் திங்களில் எனக்கு தோள் கொடுத்த...தோழர்கள் அனைவருக்கும் நன்றி!

  ReplyDelete
 34. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஆரம்பமே அசத்திருக்கிங்க..
  இருங்க மத்த பதிவும் பாக்க வரேன்..
  சூப்பர்.. :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது