07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 1, 2010

இந்த வித்துகள் விருட்சங்களாகட்டும் ... - ரோஸ்விக்

நண்பர்களே வணக்கம்.


இன்று நான் சில புதிய பதிவர்களை அறிமுகம் செய்து வைக்க இருக்கின்றேன். இவர்களில் பலர் பதிவுலகிற்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் இவர்களது சிறப்பான பதிவுகள் பலரை போய் சேரவில்லை போல் தெரிவதால் அவர்களையும் புதிய பதிவர்களாக பட்டியலிடுகின்றேன். பொறுத்தருள்க. :-) நீங்களும் இவர்களின் தளங்களைப் படித்து, உங்களின் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யவும்.

எரித‌ழ‌ல். - வாசன் எனும் 55 வயது இளைஞர் எழுதுகிறார். அப்பப்பா சரியான சிந்தனையாளர். இவரது பதிவுகளும், பின்னூட்டங்களும் கருத்து செறிந்தவை. பெரும்பாலும் சாடியடியாக இருக்கும். நிச்சயம் இவர் போன்ற பதிவர்கள் நம் பதிவுலகத்திற்கு தேவையானவர்கள்.


மணியின் பக்கங்கள் - எனும் பெயரில் மணிவண்ணன் எனும் நண்பர் எழுத துவங்கியிருக்கிறார். இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள நகரங்களின் சிறப்பையும், வேறு சில சிறப்பு அம்சங்களையும் நமக்கு தொகுத்து தருகிறார். நல்ல முயற்சி.


வரசித்தன் பக்கங்கள் .. - எனும் வலைத்தளத்தில் மருத்துவர் அ. கிருஷ்ணேந்திரன் என்பவர் எழுதிவருகிறார். நமது உடல் மற்றும் மருத்துவம் சார்ந்த எண்ணற்ற கருத்துக்கள் செறிந்து கிடக்கின்றன. வாசித்துப்பாருங்கள் நிறைய தெரிந்துகொள்ளலாம். அவசியமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய பல விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன.

புது(க்க)விதை.. - அண்ணாமலை எனும் நண்பர் எழுதத் துவங்கி இருக்கிறார். இவரது மூன்று அல்லது நான்கு வரிக்கவிதைகள் மிக அருமை. புரியும்படி உள்ளது. :-) இவரது மற்ற சிந்தனை தூண்டும் பதிவுகளும் அருமை. வாசித்து நண்பரை ஊக்கப்படுத்துங்கள்.

சிரிப்பு போலீஸ் - ரமேஷ் எனும் நண்பர் எழுத துவங்கி இருக்கிறார். மனுஷன் காமெடியில் கலக்குறார். போய் படிங்க. சிரிப்பு வருவது உறுதி. இவரு எழுதி இருக்கிற எல்லாப் பதிவுகள்லையும் நகைச்சுவை அருமையா இருக்கும். (எனக்கு மட்டும் ஒரு சந்தேகம்... பேரு ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) -னு குறிப்பிட்டிருக்கார். இதுவும் தமாசா என்னன்னு... ;-)) )

பாற்கடல் - மயில்சாமி சக்திவேல் எனும் நண்பரின் புதிய வலைத்தளம். அழகு தமிழில் சிறப்பாக எழுதுகிறார். இவர் இடுகை மிகுந்த கவனத்துடன் பெரும்பாலும் பிழைகளின்றி உள்ளன. ரசிக்க, சிந்திக்க நல்ல பதிவுகள் இங்கு உள்ளன.


Riyas's - ரியாஸ் எனும் இந்த நண்பர் சில நல்ல கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி அசத்துறார். ஊக்கப்படுத்துங்க. இன்னும் நல்லா எழுதுவார்.


தமிழ் கணினி - எனும் வலைத்தளத்தில் எழுதும் தம்பி மா.மணிகண்டன் சமீபத்தில் தான் முதல் இடுகை இட்டிருக்கிறார். நிறைய உபயோகமான தளங்களின் முகவரியை இதில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இன்னும் சிறப்பாக எழுத நான் வாழ்த்துகிறேன். நீங்களும் என்னோடு சேர்ந்து வாழ்த்துங்க.


மோவிதன் சோமசுந்தரம் எனும் நண்பர் முகமூடி எனும் வலைத்தளத்தில் கதை, சினிமா, கவிதை என பலவற்றை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்களும் வாசித்துப்பாருங்களேன்.

பிற மொழிப்படங்கள்... தமிழில்... தெரியப்படுத்துறதுக்காகவே இந்த வலைத்தளத்தை நண்பர் ஜெய் ஆரம்பித்திருக்கிறார். இதன் மூலம் நமக்கு பல பிறமொழிப் படங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். உலக சினிமா விரும்பிகள் பார்வையிடலாம்.


புதிதாக வலையுலகுக்கு வரும் நண்பர்களே! உங்களை வலையுலகம் அன்போடு வரவேற்கிறது. உங்களுக்கு இங்கு பல நட்புகள் கிடைக்கும். சிறந்ததை சிறப்பாக எழுத முயற்சியுங்கள். வாக்கு, பின்தொடர்பவர், பின்னூட்ட எண்ணிக்கை இவற்றை மனதில் வைத்து இயங்காதீர்கள். இவையனைத்தும் ஒன்றுக்கும் உதவாது. :-) வலையுலகே வாழ்க்கை என அனைத்து நேரத்தையும் இதிலே செலவிடாதீர்கள். உங்களிடம் செலவிட நேரம் அதிகம் இருந்தால் இங்கே வந்து பல தளங்களை வாசியுங்கள் நட்பும், கருத்தும் நிறைய கிடைக்கும்.

எனது நேரமின்மை காரணமாக இன்னும் பலரை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்த இயலவில்லை. மன்னிக்கவும்.

வாசகப் பெருமக்களே! இந்த புது வரவுகளையும் வாசித்து ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்துங்கள்.


மீண்டும் நாளை சந்திப்போமே!

34 comments:

 1. சிறந்ததை சிறப்பாக எழுத முயற்சியுங்கள். வாக்கு, பின்தொடர்பவர், பின்னூட்ட எண்ணிக்கை இவற்றை மனதில் வைத்து இயங்காதீர்கள். இவையனைத்தும் ஒன்றுக்கும் உதவாது. :-) வலையுலகே வாழ்க்கை என அனைத்து நேரத்தையும் இதிலே செலவிடாதீர்கள். உங்களிடம் செலவிட நேரம் அதிகம் இருந்தால் இங்கே வந்து பல தளங்களை வாசியுங்கள் நட்பும், கருத்தும் நிறைய கிடைக்கும்//


  உண்மை...உண்மை..தொடருங்கள் ரோஸ்விக்.

  ReplyDelete
 2. அருமையான அறிமுகங்கள் ரோஸ்விக. தொடருங்கள்.

  ReplyDelete
 3. ஆசிரியருக்கு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 4. இருங்க படிச்சிட்டு வரேன்...

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
 6. உங்களுக்கு இங்கு பல நட்புகள் கிடைக்கும். சிறந்ததை சிறப்பாக எழுத முயற்சியுங்கள். வாக்கு, பின்தொடர்பவர், பின்னூட்ட எண்ணிக்கை இவற்றை மனதில் வைத்து இயங்காதீர்கள். இவையனைத்தும் ஒன்றுக்கும் உதவாது.வலையுலகே வாழ்க்கை என அனைத்து நேரத்தையும் இதிலே செலவிடாதீர்கள். உங்களிடம் செலவிட நேரம் அதிகம் இருந்தால் இங்கே வந்து பல தளங்களை வாசியுங்கள் நட்பும், கருத்தும் நிறைய கிடைக்கும்.

  நேர்மையான வார்த்தை. சரியான பார்வை.

  ReplyDelete
 7. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ரோஸ்விக்.. :)

  ReplyDelete
 8. புது அறிமுகங்களுக்கு நன்றி.

  அந்த சிரிப்புப்போலீஸ்.....ஆஹா:-))))

  அடடா..... எப்படி கவனிக்காம வீட்டுட்டேன்:(

  ReplyDelete
 9. வாழ்த்துகள் ரோஸ்விக்.

  ReplyDelete
 10. வாழ்த்துக்க‌ள் ரேஸ்விக்... ந‌ல்ல அறிமுக‌ங்க‌ள்..

  ReplyDelete
 11. புது அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 12. வாழ்த்துகள் ரோஸ்விக்!!

  ReplyDelete
 13. நன்றி ஸ்ரீராம்.

  நன்றி இராமசாமி கண்ணன்.

  நன்றி கோவியார்.

  நன்றி ஜெய்லானி.

  நன்றி ஜில்தண்ணி. (அட எப்படியோ உங்களை தவறவிட்டுவிட்டேன் நண்பா).

  ReplyDelete
 14. நன்றி தமிழ் உதயம்.

  நன்றி ஜெய்.

  நன்றி துளசி கோபால்.

  நன்றி சத்ரியன்.

  நன்றி நாடோடி.

  நன்றி அமைதிச்சாரல்.

  நன்றி Mrs.Menagasathia

  ReplyDelete
 15. நன்றி ரோஸ்விக் அண்ணா.

  நான் பிரபாகர் கிட்ட பேசினேன். அவர் தான் ரெண்டுவராத்துக்கு முன்னால ஒரு ஞாயிறு, நீங்க நான் பட்டா(முடிஞ்சா), கேஆர்பிசெந்தில் அண்ணா கூட வெளியில போகலாம்னு சொன்னார். பட் பிரபாகர் பிளான் மாறினதினால உங்களை பாக்க முடியல. நெக்ஸ்ட் டைம் கட்டாயம் மீட் பண்றேன் பிரதர். உங்க வீட்டுக்கு வர்ற பிளான் கூட மாறிடுச்சு. பிரபாகர் கொஞ்சம் பிஸி

  ReplyDelete
 16. //அந்த சிரிப்புப்போலீஸ்.....ஆஹா:-))))//

  நன்றி துளசி கோபால்

  ReplyDelete
 17. //எனக்கு மட்டும் ஒரு சந்தேகம்... பேரு ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) -னு குறிப்பிட்டிருக்கார். இதுவும் தமாசா என்னன்னு... ;-)) )//

  இதுவும் காமெடிதான். இதிலென்ன சந்தேகம்

  ReplyDelete
 18. ரோஸ்விக்!! வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 19. அறிமுகங்கள் அருமை, பாராட்டுக்கள்!

  ReplyDelete
 20. வாழ்த்துகள் ரோஸ்விக்!!

  ReplyDelete
 21. அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
  :-)))

  பயனுள்ள அறிவுரை கூறியுள்ளீர்கள்.

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. நிறைவான வாழ்த்துகள் ரோஸ்விக்.

  ReplyDelete
 25. ரொம்ப மகிழ்ச்சியும், கூடவே வாழ்த்துகளும்
  ரோஸ்விக்!
  நன்றிகள்!

  ReplyDelete
 26. புதிதாய், தானாய் ஊற்றெடுத்து தன்னார்வாள‌ர்க‌ள் ப‌ல‌ரின் தாக‌ம் தீர்த்து
  பாலையில் சோலையாய் (ஒயாசிஸ்) இருக்கும் 'ப‌திவுல‌கை'
  கட‌ந்த‌ சில‌ நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌ ப‌திவாள‌ர்க‌ளின் பதிவுக‌ளும்,
  பின்னேட்ட‌ங்க‌ளும், கடும் ந‌ச்சுத‌ட‌விய‌ சுடும் செற்க‌ள‌லால்,
  குழ‌ப்பி, வெறும் மீன்பிடி குட்டையா(க்)கி விட்டார்க‌ளே என‌
  குழ‌ம்பிய‌ ம‌ன‌துக்கு, கீதையாய் வ‌ந்த‌து, உங்க‌ள் உபய‌ம்.
  எங்கேயோ, எப்போதோ லேசாய் மினுக்கிய‌ 'எரித‌ழ‌லை'
  எரிம‌லைய‌ள‌வுக்கு புக‌ழ்ந்த‌தில், உங்க‌ள் ம‌ன‌த்தின் விசால‌ம்
  அறிந்து கொண்டேன். ந‌ன்றிக‌ள் ப‌ல‌ ரோஸ்விக்.

  ReplyDelete
 27. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 28. நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) (நானும் அப்போ ரொம்ப பிசி. சென்னை வரும்போது சந்திக்கிறேன்.)

  ReplyDelete
 29. நன்றி தேவா சார்.

  நன்றி NIZAMUDEEN

  நன்றி ஜெஸ்வந்தி.

  நன்றி malgudi (நான் அதைத்தான் பின்பற்றுகிறேன்.)

  ReplyDelete
 30. நன்றி கிரி

  நன்றி ஹேமா. தொடர்ந்து என்னை பல இடங்களில் ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள். மிக மிக நன்றி.

  மன்னிக்கவும். உங்கள் தளம் எப்போதாவது வருவேன். ஆனால், பின்னூட்டம் இடாமல் பலமுறை திரும்பியிருக்கிறேன்... காரணங்களின்றி... :-(

  ReplyDelete
 31. நன்றி அண்ணாமலை.

  நன்றி vasan சார். இந்த எரிதழல் தொடர்ந்து உக்கிரமாக எரியவேண்டும்... அக்கிரமங்களை எதிர்த்து எரிவதில் எனக்கு மகிழ்ச்சியே!

  நன்றி A doctor.

  ReplyDelete
 32. நன்றி சகா. உங்களின் அறிமுகம் என்னை சிக்கலில் விட்டு விட்டது. சும்மாவாச்சுக்கும் எழுதலாம் என்றுதான் வந்தேன். இனி கவனத்துடனும், அடிக்கடியும் பதிவுகள் இட முயற்சிக்கிறேன் முன்னவரே. மீண்டும் நன்றிகளை தெரிவிக்கிறேன்

  ReplyDelete
 33. நிறைய... உருப்படியா எழுதுங்க சக்தி. :-) எல்லோருக்கும் நல்லது தானே.

  ReplyDelete
 34. நல்ல பணி தொடருங்கள் ....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது