07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 25, 2010

தேடல் வெள்ளி....இதுதாங்க!

வாரம் முழுதும் ஒரு இயந்திர வாழ்க்கை. வார இறுதியில் ஒரிரு நாள் விடுமுறை அவற்றிலும் மிகைப்பட்ட குடும்பவேலைகள். சொடுக்கி விட்ட பம்பரமாய் அசுரத்தனமாய் சுற்றி சுழன்று வரும் தினசரி புயல்களுக்கு நடுவே எழுத்துக்களை படைப்பதற்கு...மனச்சாந்தம் வேண்டும் நிச்சயமாய்! விக்கித்துப் போய் நிற்கிறேன் ...!ஆமாம் நண்பர்களே...ஏதோ விளையாட்டாய் பதிவர்களை அறிமுகம் செய்யவேண்டி பல வலைப்பூக்களை மேய்ந்து முடித்ததில் ஒரு விசயம் தெளிவாக புரிந்தது.

பல ஜெயகாந்தன்களும், தி. ஜானகிராமன்களும், கல்கிக்களும், சுஜாதாக்களும், பாலகுமாரன்களும், வைரமுத்துக்களும், அப்துல் ரகுமான்களும்....அடையாளம் வேண்டி, ஒரு உந்து சக்தி வேண்டி...தமது எண்ணங்களை அற்புத படைப்புக்களாக்கி காத்திருக்கின்றனர்....! வலைப் பக்கங்களில் மிகுந்து விட்ட கூட்டணி ஓட்டரசியல் இவர்களை மேலே வராவிடாமல் அசுரனாய் அழுத்தி பிடித்து நிறுத்தியிருக்கிறது என்பது வருத்தமான உண்மை.

சரி மேட்டருக்கு வர்ட்டா..............

இப்படி யோசித்து யோசித்து வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய யாருமே இல்லாமல் விக்கித்துப் போய் வெறுமையாய் நின்றிருந்தேன். தோழி ரம்யா தொடர்பில் வந்தார்...இவரும் ஒரு தேடல் நிறைந்த முற்போக்குவாதிதான். எதார்த்தத்தை அற்புதமாக கவிதைகளுக்குள் கொண்டு வரக்கூடிய திறமை உள்ளவர் அதிகம் பேசி ஒன்றும் நடந்துவிடாது செயலில்தான் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். இவர் சொன்னார்...ஏன் இப்படி விக்கித்துப் போயிருக்கிறீர்கள் கவலைப்படாமால் உங்கள் பணியை தொடாருங்கள் என்று......

சரிங்க நல்ல வலைப்பூக்களை தேடபோகிறேன்...ஆமா நீங்க எங்க போறீங்க...இருங்க..டீ சாப்டுகிட்டெ கம்பெனி கொடுங்க பாஸ்...! உங்க கிட பேசிகிட்டே தேடுறேன்....!


சிலபேர பாத்தீங்கன்னா எப்பவுமே எல்லாமே தெரிஞ்ச மாதிரி ஒரு அலட்டலிருக்கும் ஆனால் வேறு சிலர பார்த்தீங்கன்னா வெறும்பய அப்டீன்ற மாதிரி இருப்பாங்க ஆனா கணிணியைப் பற்றி எழுதுவாங்க, நகைச்சுவை பற்றி எழுதுவாங்க, அரசியல் பற்றி எழுதுவாங்க...ஆனா ஒண்ணும் தெரியாத மாதிரி வெறும்பயன்னு சொல்லிக்குவாங்க...வேடிக்கையா இருக்குல்ல பாஸ்?

அதே மாதிரிதான் இன்னும் சில பேர் நீங்க ஏதாச்சும் கேள்விகளோட அலைஞ்சுகிட்டு இருக்கும் போது சார் ஒரு வார்த்தை சொல்லவான்னு கேட்பங்க...! நாமளும் ஒரு வார்த்தைதானே சொல்லுங்கன்னு சொல்லி கேட்க ஆரம்பிச்சா அடச்சே இவ்வளவு நல்ல செய்திகளையும் விழிப்புணர்வூட்டும் விதமா சொல்றாரேன்னு ஆச்சர்யமா பாக்க ஆரம்பிச்சுடுவோம்...இது எல்லொருக்கும் தெரிஞ்ச விசயம்தானே...?

உங்க மனதோடு மட்டும் ஒரு செய்தியை சொல்றேன் கேளுங்க...சில பேரு கவிதை எழுதுற ஸ்டைல பாத்தீங்கன்ன...எப்படிங்க இப்படி எல்லாம் என்று நீங்க கேள்வி கேக்காம இருக்க மாட்டீங்க...ஒண்ணுமே இல்லங்க... நிலா அப்படின்னு நீங்க தீம் கொடுத்த மூணாவது செகண்ட் கவிதை ரெடி..பண்ணக் கூடிய அளவிற்கு இங்கு திறமைசாலிகள் அதிகம்.


கவிதைன்னு சொன்ன உடனே எனக்கு ஞாபகம் வர்றது என்னோட தோழி நிலாமதிங்க . இவுங்க கூட அற்புதமா கவிதை எழுதிகிட்டே பல கட்டுரைகளும் எழுதிகிட்டு இருக்காங்க...! ஒரு ஆச்சர்யமான விசயம் என்னவென்றால்...எப்படி எல்லாமே செய்ய இவுங்களால முடியுதுன்னுதான்...

கொஞ்சம் நேரம் கம்பெனி கொடுங்க.. நீங்க என் கிட்ட பேசிகிட்டே இருந்தா நானும் உற்சாகம புதிய பதிவரையும் தேடிகிட்டே இருப்பேன்ல... இருங்க...ஒரு 10 நிமிசத்துல முடிசுடுறேன்.......

எழுத ஆரம்பிக்கிற நிறைய பேருக்கு தலைக்கனம் என்பதே இல்லை பாஸ். எழுத்து அமைவதலெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லிகிட்டே...பக்காவான கதை கட்டுரை, நகைச்சுவைன்னு அடிச்சு போய்கிட்டே இருக்கங்க...வாசிக்கனும்னு உக்காந்திட்டீங்கன்ன உங்கள அன்பால கட்டிப்போட்டிடும் இவுங்களோட எழுத்து.

கண்டிப்ப பாத்தீங்கன்னா அன்பு செலுத்துறத்துக்கும் ஆதிக்கம் செய்றதுக்கும் நம்முடைய இதய பூக்கள் நல்ல மலர்ச்சியில் இருக்கணும் பாஸ். அப்படி இருக்கிறவங்க....அற்புதமன விசயங்களை படைகிறவங்களாவும், நல்ல அனுபவங்களை எல்லோருக்கும் சொல்றவங்களாவும் இருக்காங்க... ! நான் சொல்வதில் உணமை இருக்கா இல்லையான்னு உங்கமனசாட்சியை கேட்டுப்பாருங்க...!

ரொம்ப நேரம் பேசிகிட்டே இருந்துட்டோம் ரெண்டு டீ வேற குடிச்சிட்டீங்க....வாங்க சாப்பிட்டு வந்து தேடுவோம். அட எங்க வீட்டு சமையல் எப்படி இருக்கும்னுதானே பயப்படுறீங்க..? கவலையேப் படாதீங்க...பாஸ் ! எங்க வீட்டுத் தங்கமணி சமையல் டவுட் எல்லாம் கிளியர் பண்ணிக்கிறது தோழி ஜலீலா கிட்டதான்....சமையல் குறிப்புன்னு மட்டும் இல்லாம, வீட்டுக்குத் தேவையான டிப்ஸ், குழந்தை வளர்ப்புன்னு எல்லாத்துக்கும் அவுங்க குடுக்குற ஆலோசனைகள்ளதான் எங்க வாழ்க்கை ஒடிட்டி இருக்கு......

ஒரு நிமிசம் சார் போன் அடிக்குது.....

ஹலோ... யாரு மாப்ஸ் நாஞ்சிலா? ஆமா வலைச்சரத்துல இன்னும் அப்டேட் பண்ணல...ஆமா என்னது நீங்களும் பதிவர்தானா? மூணுவருசமா எழுதிறீங்களா...சரி பாக்குறேன்..மாப்ஸ்...லிங்க் அனுப்புங்க...சரி...சரி.. வச்சிடவா...!

நம்ம நாஞ்சில் பிரதாப்
என்ன இன்னும் பதிவு போடலாயானு கேட்டு நையாண்டி பண்றாரு. நீங்கதான் பாக்குறீங்கள்ள எம்புட்டு நேரமா தேடுறேன் ஒண்ணும் அகப்படல....சரி நீங்கா வாங்க பாஸ் நாம சாப்பிட்டு வந்துடுவோம்... நான் வேண்ணா சீனா ஐயாகிட்ட உடம்பு சரியில்லேனு சொல்லி ஒரு லீவ் லெட்டர் கொடுத்துக்குறேன்.....!
அப்போ வர்ட்டா..!

20 comments:

 1. நிறய உழைப்பு தெரிகிறது தேவா..
  அறிமுகத்துக்கும் , அறிமுகப் படுதியவர்களுக்கும் பாராட்டுக்கள் ..

  ReplyDelete
 2. அறிமுகம் அனைத்தும் அருமை அண்ணா.
  என்னது நாஞ்சில் பிரதாப் பதிவர்! நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் ஹா ஹா ஹா வாழ்த்துகள் நாஞ்சில் பிரதாப்

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. அண்ணா நீங்க மூணு நாளும் இதே மாதிரி அறிமுக படுத்தறீங்க , ஆனா மூணு நாலு பதிவுலயும் புது புது வரிகள் , நிஜமா நீங்க பெரிய ஆளு தாங்க அண்ணா. ஒருதங்களா அறிமுக படுதுரப்ப அவுங்களுக்கு அவுங்களுக்கு தகுந்த மாதிரி யோசிச்சு , அதை அழகா கொண்டு வந்து போடற திறமை அருமைங்க அண்ணா. இதன் தான் கதை, திரைக்கதை அப்டின்னு திரைப்பட உலகத்துல பண்றாங்க ..நீங்க ஏன் சின்னதா இந்த மாதிரி ஒரு கதை தயார் செய்து குறும்படம் () எடுக்க முயற்சிக்க கூடாதுன்னு தோணுது அண்ணா .....இது நான் நகைச்சுவையா சொல்லலா, அதனால சிரிக்க வேண்டாம், சிந்திங்க , தேவை ரெண்டு தான் ஒன்னு கதை(அது உங்க கிட்ட இல்லாததா ) ,கேமிரா (சின்னதா வாங்கிகங்க )....அதையும் உங்க வலை தளத்துல போடலாமே

  ReplyDelete
 5. தேர்ந்தெடுத்து பல வலைப்பதிவர்களை அறிமுகம் செய்து உள்ளீர்கள் எனக்கு. நன்றி.

  ReplyDelete
 6. சும்மா அப்படியே அதிருதுள்ள ... அறிமுகம்கள் அற்புதம் அண்ணா ...!

  ReplyDelete
 7. சுவாரசியமான முறையில் அறிமுகப்படுத்தியிருக்கீங்க... நிறைய எழுத்தாளர்கள் இந்த வலையுலகில் பிறந்துகொண்டே இருக்கிறார்கள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது...

  ReplyDelete
 8. எங்குட்டு இருந்துதான் இப்பிடி புது புதுசா கண்டுபிடுச்சு எழுதுவாய்ங்களோ தெரியல..
  அறிமுக பக்கம் சூப்பரப்பு... கலக்கு மாப்ஸ்.

  ReplyDelete
 9. நல்ல அறிமுகங்கள்

  நிறைய பதிவர்களை தெரிந்து கொண்டேன் நன்றி

  ReplyDelete
 10. ரொம்ப casual ஆ பேசிக்கிட்டே, பதிவர்களை அறிமுகப்படுத்துற ஸ்டைல் நல்லா இருக்குது, தேவா.... கூல்!

  ReplyDelete
 11. அறிமுகப்படுத்துற விதம் நல்லாருக்கு.

  ReplyDelete
 12. சிலபேர பாத்தீங்கன்னா எப்பவுமே எல்லாமே தெரிஞ்ச மாதிரி ஒரு அலட்டலிருக்கும் ஆனால் வேறு சிலர பார்த்தீங்கன்னா வெறும்பய அப்டீன்ற மாதிரி இருப்பாங்க ஆனா கணிணியைப் பற்றி எழுதுவாங்க, நகைச்சுவை பற்றி எழுதுவாங்க, அரசியல் பற்றி எழுதுவாங்க...ஆனா ஒண்ணும் தெரியாத மாதிரி வெறும்பயன்னு சொல்லிக்குவாங்க...வேடிக்கையா இருக்குல்ல பாஸ்?


  ////


  நெஜமாலுமே நான் வெறும்பய தானுங்க..

  என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

  தாங்கள் அறிமுகப்படுத்திய விதம் அருமை...

  ReplyDelete
 13. மாம்சு..., உங்களுக்கு என்ன கைம்மாறு பண்ணப்போறேன்னே தெரில...அழுவாச்சியா வர்து....

  ஆமா என்னைக்கு போன் பண்ணி என்னை அறிமுகப்படுச்சொன்னேன்... நல்லாத்தானே போய்கிட்டிருந்துச்சு....

  ReplyDelete
 14. அருமைங்கன்னா.

  ReplyDelete
 15. ஆமா. நீங்க சொல்ற மாதிரி நிறைய திறைமைசாலிகள் இங்க இருக்காங்க.

  ReplyDelete
 16. ஆஹா நண்பரே இன்று விடுமுறை என்றாலும் வழமை போல சிறப்பான பதிவுடன் பல அறிமுகங்கள் அசத்தல் . வாழ்த்துக்கள் தோழரே !

  ReplyDelete
 17. அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..
  தேவா உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. ":-))))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது