07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 7, 2010

ஒரு அறிமுக பேட்டியும் பெட்டியும்

 வணக்கம்:    நிகழ்ச்சியை தொகுத்து தருவது:  தம்பட்டம் தாயம்மா  

  டண்டனக்க டங்கு டங்கு  டொயிங்.....  ..........


வலைச்சரமும்  "கொஞ்சம் வெட்டி பேச்சு"  சித்ராவும், இந்த வாரம் கூட்டணி அமைத்துள்ள செய்தி  தெரிந்ததே..... வலைச்சரம் பற்றிய அறிமுகம் தேவை இல்லை.  அறிமுகம் தேவைப்படும் சித்ராவோ,  புகழ்ச்சி பிடிக்காத தன்னடக்க கண்மணி.  சித்ரா, ஒரு  டீச்சர் அல்ல.  இவர்,  மன்னார் அண்ட் கம்பெனி - அமெரிக்க டிவிஷன் ரீஜனல் மேனேஜர்.    மேலும், நாட்டுக்கு தேவை இல்லாத  வெட்டி ஆராய்ச்சிகள் செய்து  கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர் என்று பதிவுலகம் சொல்கிறது.  வலைச்சர நேயர்களுக்காக,  நான் சித்ராவிடம்  எடுத்துள்ள பேட்டியின் முக்கிய பகுதிகளை தொகுத்து தருகிறேன். 


"வணக்கம், சித்ரா."
"வணக்கம். தாயம்மா."


"வலைச்சர அன்பர்கள் சார்பாக, உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்."
"நன்றி. நன்றி. நன்றி."


" இந்த வாரம்,  பதிவர்களை அறிமுகப்படுத்தும் பொன்னான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"ரொம்ப சந்தோஷம். பொக்கிஷ வாய்ப்பு. நல்லபடியாக செய்ய வேண்டும் என்ற ஆசை. அந்த பொறுப்பு உணர்வில், நல்ல படியாக செய்ய வேண்டுமே என்ற கவலையும் உண்டு. ...... காரணம், எல்லாவற்றையும் சொதப்புவதில் நல்ல பெயர் எடுத்தவள், நான்."
"ஹா, ஹா, ஹா, ஹா, ஹா......  அதுக்குதானே,  உங்களை கூட்டி கொண்டு வந்திருக்கிறோம்."
"சரியா போச்சு.  இது வேறயா?"


" ஆமாம்.  ஏன் இந்த தயக்கம்?"
"ஏற்கனவே:  
 போன்ற "பதிவுலக கலக்கல் திலகங்கள்"  எல்லாம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று அசத்தி உள்ளார்கள். பதிவுலகில் உள்ள அத்தனை பதிவர்களையும் என்ன என்ன பிரிவில் எப்படி எப்படி அறிமுகப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் அறிமுகப்படுத்தி கலாய்த்து ..... சாரி...... கலக்கி விட்டார்கள்.    இனி, புதுசா நாளைக்கு யாராவது எழுத வந்தால் தான் புதிய அறிமுகம் உண்டு. இருந்தாலும் நான் வெட்டி பேச்சு ஆளாச்சே...... சும்மா விட்டுருவோமா?  சமீபத்தில் நான் வாசித்த சில சுவாரசியமான பதிவுகளை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்."  


"அதுவும் நல்ல ஐடியா.... இப்போ என்ன செய்ய போறீங்க?"
"சில மணி நேரங்கள் முன்னால்  தான், ஒரு ட்ரிப் போய்விட்டு வந்து இருக்கேன். இன்னும் பெட்டி திறந்து அடுக்கி வைக்கவில்லை.  என் ப்லாக் கடையை கூட திறக்கவில்லை. இங்கே வந்து ஆஜர் போட்டுக்க வந்துட்டேன். நான் கொஞ்சம் என் வீட்டு பக்கம் - என் பெ(வெ)ட்டி  கடை பக்கம் - எல்லாம் செட்டில் பண்ணிட்டு நாளை வரும் வரை ....... என்னுடைய சில "வெட்டி" பதிவுகளை படிச்சிட்டு இருங்க.  சரியா?


 
"உங்களின் வெட்டி பதிவுகளுக்கு நன்றி, சித்ரா.. இப்போவே நன்றி சொல்லிக்கிறேன். வாசித்த பின் சொல்ல தோணுமா என்று தெரியவில்லை. உங்கள் வெட்டி சேவை தொடர வாழ்த்துக்கள். நாளையும் இந்த  வெட்டி  பேட்டி தொடரும்....."
"நன்றி, தம்பட்டம் தாயம்மா."

67 comments:

 1. ஹ்ம்ம். ஆரம்பமே அமர்களமா இருக்கே..:)

  சூப்பர்.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நன்றி, ஆனந்தி. வடை, கேசரி மற்றும் மசாலா டீ உங்களுக்குத்தான். :-)

  ReplyDelete
 3. வாங்க டாக்டர் சித்ரா. கலக்குங்க நல்லா.

  ReplyDelete
 4. மிக்க நன்றி, கண்ணன் சார்.

  ReplyDelete
 5. வருக வருக காத்திருக்கிறோம்

  வாழ்த்துகள்

  ReplyDelete
 6. உங்களுக்கே உரித்தான அட்டகாசத்துடன் ஆரம்பித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. நன்றி, ஸாதிகா மேடம்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் சித்ரா

  ReplyDelete
 9. சூப்பர்.. வாழ்த்துக்கள்

  ஆனாலும் தம்பட்டம் தாயம்மா ரொன்ப பாவம் உங்ககிட்ட மாட்டிகிட்டாங்களே

  ReplyDelete
 10. அன்பின் சித்ரா - கலக்கல் சுய அறிமுகம் - ஒங்க ஊட்டுக்கு வந்திருக்கேனா - நினைவில்லை - இப்பொ இப்பொ எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்துட்றேன் - சரியா

  நல்வாழ்த்துகள் சித்ரா
  நட்புடன் சீனா

  ReplyDelete
 11. சூப்பர் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. கரும்புக்காட்டுல யானை புகுந்த மாதிரி ஆகப்போகுது சித்ரா!!

  ReplyDelete
 13. புகுந்து விளையாடுங்க!!

  ReplyDelete
 14. கலக்குங்க... வாழ்த்துகள்...

  ReplyDelete
 15. வாழ்த்துகள் சித்ரா

  வாழ்த்துகள் தாயம்மா :)

  ReplyDelete
 16. வாங்க சித்ரா. தம்பட்டம் தாயம்மாவுடனான கூட்டணி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அப்ப இந்தப் பரிட்சைக்குப் படிக்கத்தான் லீவு எடுத்ததா? படிக்காமலே நல்லா எழுதுற நீங்க, படிச்சுட்டு நூத்துக்கு இருநூறு எடுத்தாலும் எடுப்பீங்க!!

  வாழ்த்துகள்!!

  ReplyDelete
 18. ஆர‌ம்ப‌மே க‌ல‌க்க‌ல்... அறிமுக‌த்தில் புகுந்து விளையாடுங்க‌..

  ReplyDelete
 19. சித்ரா சூப்பராக இருக்கு அறிமுகம்.தம்பட்டம் தாயம்மாவின் சேவை ப்ளாக்கர்களுக்கு தேவை.

  ReplyDelete
 20. அசத்தலான ஆரம்பம்....

  கலக்குங்க அக்கா.....

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 22. இத இதத்தான் எதிர்பார்த்தோம்.

  ReplyDelete
 23. வாங்க சித்ரா ஆரம்பமே அசத்தல்..கலக்குங்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 24. சொந்த வீட்டில பண்ற அழிம்பே தாங்காது. வந்தவீடும் சேர்ந்தா கேக்கணுமா:)).கலக்குங்க

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் சித்ரா, இந்த வாரம் முழுதும் லக லக லக....

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள்... இந்தவாரமும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காதுன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 27. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே. அப்போ இந்த வாரம் டரியல்தானா?

  கலக்குங்க.

  //நன்றி, ஆனந்தி. வடை, கேசரி மற்றும் மசாலா டீ உங்களுக்குத்தான். :‍) //

  எங்களுக்கு டீயாவது கொடுங்க :)

  ReplyDelete
 28. அசத்தலான அறிமுகங்கோ.. ரொம்ப நன்னாருக்கு.. அது என்னமோ தெரியல.. இந்த பதிவை சிரிச்சிக்கிட்டே படிச்சேன்னா பாத்துக்கோங்க.

  ReplyDelete
 29. ///டண்டனக்க டங்கு டங்கு டொயிங்..... ..........//

  முதல்வரியிலே சிரிப்பை வரவச்சிட்டீங்க. :))

  ReplyDelete
 30. வாழ்த்துகள் சித்ரா. We expect a lot from you..

  ReplyDelete
 31. உம்.... நாட்டியம் (லொள்ளுதனம்) ஆரம்பமாகட்டும் ..
  ஸ்டார்ட் மூசிக்

  ReplyDelete
 32. சூப்பர் சித்ரா.. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 33. ஆரம்பமே அசத்தல்.போக போக பொறி பறக்குமோ.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. நீண்ட இடைவேளைக்கு பிறகு வலைச்சரம் பக்கம் வருகிறேன். உங்கள் அறிமுகமே அசத்தலாக இருக்கிறது. அதோடு உங்களுக்கான கருத்துரைகளை படித்ததும் உங்க வலைத்தளம் வந்து படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டது. ம்... படித்துவிட்டு வருகிறேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. சூப்பர்.. வாழ்த்துக்கள்!!!

  கலக்குங்க.. :))

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. வெட்டி மீது வெட்டி வந்து உன்னைச்சேரும் .
  .

  ReplyDelete
 38. கலக்குறிங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 39. அமர்க்களப் படுத்துங்கள். ஆவலாய் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் சித்ரா:)!

  ReplyDelete
 40. வாங்க !!டீச்சர்...

  ReplyDelete
 41. வாழ்த்துக்கள் !

  கலக்குங்க.....:)

  ReplyDelete
 42. ஆஹா ஆரம்பமே கலக்கலா இருக்கு..

  ReplyDelete
 43. வாழ்த்துக்கள் அக்கா..

  ReplyDelete
 44. நல்வாழ்த்துகளும் எதிர்பார்ப்புகளுமாய்

  ReplyDelete
 45. வாங்க தாயம்மா.வணக்கம்.

  ReplyDelete
 46. அசத்துங்க... மேடம்! வாழ்த்துகள்...!

  ReplyDelete
 47. இந்த வாரம் கலக்கல் வாரம்தான்.

  ReplyDelete
 48. தம்பட்டத்தில் ஆரம்பிச்சாச்சா..

  ReplyDelete
 49. நான் தொடர்ந்து நன்றாக கலக்க, கரண்டிகளுடன் வந்து கலக்கல் பின்னூட்டங்களையும் வாழ்த்துக்களையும் வாரி வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 50. ஆரம்பமே அதிர்ந்து விட்டது...... இன்னைக்கு பூரா ப்லாக் access கட், எனக்கு..... கூகுள் பிளாக்கர் - நல்ல இருங்க, மக்கா!

  ReplyDelete
 51. ஏம்மா..உனது பதிவிலே பின்னூட்ட பதிவர்களுக்கு பரிசுப் போட்டி ஏதாவது வைக்கும் ஐடியா உள்ளதா? குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்கலாமே.

  ReplyDelete
 52. ஆஹா, சூப்பர் ஐடியா..... இது நல்லா இருக்கே!

  ReplyDelete
 53. இந்த வாரம் உங்க வாரமா??
  ம்...கலக்குங்க!!

  ReplyDelete
 54. சுப்பர். வாழ்த்துக்கள் சித்ரா! கலக்குங்க :)

  ReplyDelete
 55. வாங்க தாயி நல்லா கலக்குங்க..

  ஒரு சோடா கொடுங்க

  ReplyDelete
 56. நிகழ்காலத்தில்... said...

  வருக வருக காத்திருக்கிறோம்

  வாழ்த்துகள்


  ..... Thank you very much.

  ReplyDelete
 57. This comment has been removed by the author.

  ReplyDelete
 58. Thank you, Annamalai, Ashitha and Then akka.

  ReplyDelete
 59. ஆணி அதிகமாயிட்டதாலேயும், வெளியூர் பயணத்தாலேயும் லேட்டா வந்திருக்கேன் டீச்சரம்மா! மே ஐ கம் இன்? :-)

  ReplyDelete
 60. தூள் கிளப்புங்க! என்னையும் குறிப்பிட்டு பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! ஸ்டார்ட் மீஜிக்! :-)

  ReplyDelete
 61. மிகவும் அருமை.

  ReplyDelete
 62. சேட்டைக்காரன் said...

  ஆணி அதிகமாயிட்டதாலேயும், வெளியூர் பயணத்தாலேயும் லேட்டா வந்திருக்கேன் டீச்சரம்மா! மே ஐ கம் இன்? :-)  ......வலைச்சர ஆபீஸ்ல என் சீனியர் ஆபீசர் நீங்க....... வாங்க..... வாங்க..... வாங்க.....

  ReplyDelete
 63. V.Radhakrishnan said...

  மிகவும் அருமை.


  ....... Thank you, Sir.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது