07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 22, 2010

அதிரடி செவ்வாயில்....என்ன நடந்தது....?

விடுங்க சார் ....கண்டு பிடிச்சுடலாம் என்று இடிந்து போய் அழுது கொண்டிருந்த தொழிலதிபர் சகாயத்தை தேற்றிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் விக்ரம். ரொம்ப முக்கியமா பாதுகாத்து வச்சிருந்தேன் சார் இந்த தடவை நான் யூரோப் 3 நாள் பிஸினஸ் டூர் போறப்ப என் கூட கொண்டு செல்லவேண்டி பாதுகாத்து வைத்திருந்த பென் டிரைவ் அது. அது மட்டும் இல்லேன்னா என்னால இந்த டூரா நினைச்சு கூட பாக்கமுடியாது. புலம்பிக்கொண்டிருந்தார் அந்த 45 வயது மல்டி பிஸினஸ் மேன்.


கடைசியா நேத்து நைட் 10 மணிக்கு பாத்தேன்...11 மணிக்கு லைட்ட அணைச்சுட்டு தூங்க போகும் போது என் பிளாட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேட்டுச்சு ஓடிவந்து பார்த்தேன். அதே நேரத்தில் என்னோட செக்யூரிட்டி நமசிவாயம் என் கூட வந்து பார்த்தான்...ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில பிரிஞ்சு தேடினோம் யாரையும் காணோம்.அப்புறம் நான் போய் படுத்துட்டேன் சார்.

காலையில் காம்பவுண்டுக்குள் வரும்போதே செக்யூரிட்டி நமசிவாயத்தை பார்த்திருந்தார் விக்ரம். நல்ல திடகாத்ரமான ஆள் 55 வயது என்று சொல்ல முடியாத மனிதர்.. நல்ல விபூதி பட்டையும்...ஊதா நிற சட்டையும் முறுக்கி விடப்பட்ட...வெந்நிற முரட்டு மீசையும் என்று ஒரு அட்டகாசமான உறுதியோடு இருந்தார். இன்ஸ்பெக்டர் என்று கூட பாராமல் நின்று நிறுத்தி கேட்டு உறுதி செய்து அனுப்பினார்.

ஆமாம் அவசரம் என்றவுடம் மப்டியில் வந்தது என் தப்புதானே....முன்ன எல்லாம் செக்யூரிட்டிங்க...போலிஸ் மாதிரியே..சோல்டர் பக்கதுல ஒரு கையிறு கட்டி அதில் விசில் வச்சு இருப்பாங்க..இப்போ எல்லாம் மேக்ஸிமம் ஸ்டைலுக்காக ஒரு கயிறு பட்டையா.... ஒரு போலிஸ் லுக்குக்காக... நமசிவாயமும் ஒரு சிவப்பு பட்டைக்கயிறு அணிந்து இருந்தார். போலிஸ் என்றவுடன் அவர் அடித்த சல்யூட்டில் ரிட்டயர்ட் ஆர்மி வாசனை அடித்தது.

காலையில் நடந்ததை யோசித்துக் கொண்டே.....தொழிலதிபர் சகாயத்தை நோக்கி ...வேறு யாராவது வந்தாங்களா சார் வீட்டுக்கு என்று கேட்டார். இல்ல சார்.... என்றவர்.. ஆமாம் சார்.. கேபிள் டி.வி செக் பண்ற பையன் வந்துட்டு போனான்..இரவு ஒரு 8:30 போல் என்றார் வேகமாக.....! ஓ...அப்படியா....என்று கேட்டபடி...ஆமா அந்த பென்டிரைவ்ல என்னதான் சார் இருந்துச்சு....?தொழிலதிபர் சகாயம் சொல்ல மறுத்து விட்டார்...அது தொழில் சம்பந்தமான ரகசியம் சார். ஓ ..அப்படியா...சரி விடுங்க..என்று சொல்லிய இருபதாவது நிமிடம் கேபிள் பையன் அங்கு வரவழைக்கப்பட்டான்.....

உண்மைய சொல்லு...எங்க வச்சு இருக்க அந்த பென் டிரைவ...என்று விக்ரம் கேட்ட கேள்விக்கு திரு....திரு...வென்று முழித்தான் கேபிள் டி.வி. செல்வம். சார் பென் டிரைவ்னா இன்னா சார்..?அப்பாவியாய் கேட்டதில் அவனில்லை என்று புரிந்து விட்டாலும்...சரி நீ...போ என்று சொல்லிவிட்டு அவனை கண்காணிக்க ஆள் போட்டார் விக்ரம்.

விக்ரம் தொழிலதிபர் சகாயத்தை நோக்கி கேட்டார்.....சார்......... நீங்க தப்பா நினைக்கலேன்னா உங்க மனைவியை நான் விசாரிக்கலாமா....? உங்க இரண்டு பசங்களும்....டெல்லில படிக்கிறதா சொன்னீங்கள்ள...என்று பேச்சை இழுத்தபடியே அவரது மனைவியை விசார்க்கவேண்டும் என்பதை வலியுறுதினார். சார்.. .என் மனைவி எப்படி சார் எடுப்பா...என்று கேட்டதற்கு கொஞ்சம் கடுமையாகவே விக்ரம் சொன்னார்....மிஸ்டர். சகாயம் நான் காவல் அதிகாரி பல கோணத்தில் பார்க்க வேண்டும்...கேன் ஐ சீ யுவர் வைஃப் ப்ளீஸ்.........

38 வயது எஸ்தர் ரூபி என்ற முழுப்பெயர் கொண்ட எஸ்தர் சகாயத்தின் மனைவி இல்லத்தரசிதான். விக்ரம் கேட்ட பலவிதமான கேள்விகளையும் நிதானமாக எதிகொண்டு தெளிவாய் பதில் சொன்னதில் இவருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று தீர்மானித்த விக்ரம். மொத்தத்தில் குழம்பிப் போய் நின்றிருந்தார்........செக்யூரிட்டி நமசிவாயத்தை அழைத்து விசாரித்தார். வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை.....! ஏதோ சப்தம் கேட்டதாக சகாயம் சொன்னாரே....அது என்ன சப்தம் என்று கேட்டதற்கு நிறைய பூனைகள் அங்கு திரிவதாக சொன்னார் நமசிவாயம். " சார் நான் இந்த கேட் கிட்டதான் சார் நைட் முழுதும் இருக்கேன் என்ன தாண்டி யாரும் உள்ள வரமுடியாது சார்" என்று சொன்னதை கேட்டவுடன் ஒரு வேளை தொழிலதிபர் சகாயம் நம்மை குழப்புகிறாரோ என்று கூட சந்தேகம் வந்தது விக்ரமிற்கு...

" சார் உங்க.. ரூமா பாக்கலாமா என்று சந்தேகத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர் விக்ரம்....உள்ளே போய் அவருடைய பெர்சனல் கம்ப்யூட்டர் டெஸ்க் என்று எல்லா இடத்தையும் துலாவிய விக்ரம் பார்வை பளிச்சென்று எதிலோ போய் பதிய....முகம் பிரகாசமானது......சரி சார் நான் ஸ்டேசனுக்கு கிளம்புறேன்....சீக்கிரமே குட் நியூஸ் சொல்றேன்.......பறந்து விட்டார் விக்ரம்.


அன்று இரவே போலிஸ் கஸ்டடிக்கு கொண்டு வரப்பட்டார் செக்யூரிட்டி நமசிவாயம். மிஸ்டர் நமசிவாயம்...உண்மைய ஒத்துக்கொள்ளுங்க.....எங்க அந்த பென்டிரைவ்..? மரியாதையா சொல்லிட்டா பரவாயில்ல இல்லேன்னா நான் வயசானவர்னும் பார்க்க மாட்டென்...கோபம் காட்டினார் இன்ஸ்பெக்டர் விக்ரம். காலையில் சகாயம் சார் வீட்டுக்குள்ள வரும் போதே கவனிச்சேன்...என்னடா செக்யூரிட்டி தோள்ல கயிறு மட்டும் கட்டியிருக்காரே ஒரு வேல ஒரு ஸ்டைலா இருக்குமோன்னுதான் நினைச்சன்...சகாயம் சார் வீட்டுக்குள்ள கம்ப்யூட்டர் டேபிள் கிட்ட கிடந்த.. விசில பாத்தவுடனேதான் தோணுச்சு வாசல்ல நிக்கிற செக்யூரிட்டி விசிலுக்கு சகாயம் சார் ரூமுக்குள்ள என்ன வேலைன்னு.....சொல்லுங்க.....எங்க இருக்கு பென்டிரைவ்......

நமசிவாயம் பேசத்தொடங்கினார்... சார் என்னய மன்னிச்சுடுங்க.. நாந்தான் அந்த பென்டிரைவ் எடுத்தேன்.....அது எங்க வச்சிருக்கேன்னா.....சொல்லி முடித்த அரை மணியில் பென்டிரைன் விக்ரம் கையில்...! எதுக்கு எடுத்தார்னு விசாரிக்கும் முன்னாடி இதில் என்ன இருக்குன்னு பாத்துடுவோம்.....யாரும் பார்க்காத வகையில் பென்டிரைவ் எடுத்து தனது பிசியில் சொருகி.....கணிணியைத் தட்டிய....விக்ரம்...பென் டிரைவ் கிட்ட போய் டபுள் கிளிக் பண்ணி....விக்ரமின் கண்கள் விரியத்தொடங்கின.........ஓ மை காட்...ப்யூட்டி புல்....வாவ்...வாவ்.....ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான் விக்ரம்...!மெல்ல அதில் இருந்த விபரங்களை காப்பி பண்ணி விட்டு....விண்டோவை மூடிவிட்டு...... நமசிவாயத்தை நோக்கி நடந்தார் இன்ஸ்பெக்டர் விக்ரம்.....

" ஏன் சார்...(மரியாதையோடு) இது உங்களுக்கு இந்த வயசுல எதுக்கு......கேட்டு முடிக்கும் முன் அழுது கொண்டே சொன்னார் நமசிவாயம். சார் நான் நல்ல குடும்பத்த சேர்ந்தவன். என் பையன் தான் சொல்லி இத எல்லாம் செய்யச்சொன்னான்...வயசான காலத்துல அந்த அயர்ச்சி தெரியாம இருக்கணுமேன்னுதான்..இல்லேன்னா தேடி தேடி பார்க்கணும் சார்......அது என்னால முடியாது ...விபரம் எல்லாம் தெரிஞ்சுகிட்டா நானும் ஒண்ணு ஆரம்பிச்சுடலாம்னுதான் சார்.........

அடப்பாவமே...பரிதாபத்தோடு அவரைப்பார்த்தபடி.... சரி உங்களுக்கு ஒரு காப்பி தர்றேன் உங்கள கூட்டிகிட்டு வந்தது உங்க முதலாளிக்குத் தெரியாது.....! நீங்க போய் நாளைல இருந்து வேலைய கண்டினியூ பண்ணுங்க....என்றான் சிரித்தபடி!சட்டையை மாட்டிக் கொண்ட நமசிவாயம் கும்பிட்டபடி....அவருக்கான ஒரு காப்பியை வாங்கிக்கொண்டு ஸ்டேசனை விட்டு நடக்க ஆரம்பித்தார்.

விக்ரம்....சிரித்தபடி வந்து மீண்டும் ஆசையோடு கம்ப்பூட்டரைத்தட்டினான்..

குழந்தைத் தொழிலாளர் பற்றி தோலுரித்துக் காட்டும்சாத்தூர் மாக்கான்

நான் யார் என்று சிந்திக்கத் தூண்டும்
GeeVee

மனிதத்தை மிளிர்ச்செய்யும்...பெரோஸ்


வயிறு குலுங்கச் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கும்கோமாளி


புதிய கோணத்தில் குழந்தை தொழிலளர் பற்றி அலசும் மதுரை சரவணன்


பிரிதலை புரிதலோடு செய்யச் சொல்லும்
மனதோடு மட்டும்


ஆண்களின் கண்ணோட்டத்தை மாற்றச் சொல்லும்சிரிப்பு போலிஸ்


கவிதைகளால் ஆளுமை செய்யும்அ....ஆ!


மானுடத்தை மறந்து விட்டது ஏனோ? என கேள்வி கேதும்வெங்கட் நாகராஜ்

LKG அட்மிசன்....பெற்றோரின் மனோ நிலைபிச்சைப்பாத்திரம்


சினிமா..சினிமா..சினிமாதாராபுரத்தான்


தந்தையர் தின வாழ்த்துச் சொல்லணுமா...?கானகம்


கடவுளைக் காப்பாற்றியவனை....பருங்கள்!அடர் கருப்பு


மனிதம் சிலிர்த்தது...சின்னப்பயல்


யூஸ் அண்ட் துரோ...லைஃப் மாற வேண்டும்,,,,!அன்பேசிவம்


கவிதை அரசி..!Mubeen Sadhika


வலைப்பூக்களின் பட்டியல் நீண்டு கொண்டிருந்தது. பாவம் நமசிவாயம் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு, நிறைய நண்பர்களின் தொடர்புகள்...செய்தி மற்றும் கருத்துப் பரிமாற்றம் என்று தொடர்ந்து இயங்கினால் மனைவியை இழந்து மகன் வீட்டில் தனித்து இருக்கும் தமக்கு நேரம் செல்லும் மனசும் சந்தோசமாக இருக்கும் என்று நினைத்தார்..ஒரு நாள் தனது முதலாளி வலைப்பூக்களை துலாவிக் கொண்டு இருந்ததை பார்த்தவர்...அதன் லிங்க்களை பென் டிரைவில் காப்பி பண்ணியதை பார்த்திருக்கிறார். பூனையை விரட்டப் போனவருக்கு ஏற்பட்ட ஆசையில் அந்த பென் டிரவை எடுத்தவர்....காப்பி பண்ணி விட்டு காலையில் வைத்துவிடலாம் என்று நினைத்தார். காலையில் தன் முதலாளி போலீஸை கூப்பிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. வேறு ஏதோ முக்கிய தகவல் இருக்கும் போல என்று பயந்தவர் எப்படியாவது மாலையில் திருப்பி வைத்து விட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்குள்....விக்ரமின் இன்டலிஜென்ட் வலைக்குள் மாட்டிக் கொண்டார்.

எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் விக்ரம் மட்டும் என்ன..... அவரும் ஒரு பதிவர்தான்....புதிய வலைப்பூக்களின் தொடர்புகளைப் பார்த்தவுடன் அவர் ஒரு காப்பி எடுத்துவிட்டார்.

டிரிங்க்...டிரிங்க்...ட்ரிங்க்...போனை எடுத்த்த தொழிலதிபர் சகாயம் துள்ளினார்..கிடைச்சுடுச்சா ரொம்ப நன்றி மிஸ்டர் விக்ரம்....ஓ நீங்க ஒப்பன் பண்ணலியா...குட்...குட்....வெரிகுட்...!சரி நான் வந்து வாங்கிக்கிறேன் பென் ட்ரைவ....சரி சார்...வச்சிடுறேன் பை...பை....

துள்ளலுடன்....எஸ்தர் ஐ காட் மை பென் டிரவ் டார்லிங்க்.... ஐ வில் கோ அன்ட் கேட்ச் அப் ஃப்ரம் த போலீஸ்...ன்னு சொல்லிட்டு காரில் தாவியேறினார். அப்பாடா 3 நாள் யூரோப் போன கடுமையான வேலைகளுக்கும் மீட்டிங்க்கும் நடுவுல இந்த வலைப்பூக்கள்தான் நிம்மதி.

அதுவும் நல்ல வலைப்பூக்களை தேடுறதுலேயே நேரம் போயிடுது.... லேப்டப்புல பேவரைட்ல போட்டு வச்சா நாம என்ன படிக்கிறோம் எந்த தளத்துல உலாவுறோம்னு.வீட்டுல வைஃப் எடுத்து பார்க்குறாங்க...அதோட இல்லாம பிஸினெஸ் சம்பந்தமான பேவரிட்டே 100 க்கு மேல...அதனாலதானே பென் டிரைவ்ல தனியா வச்சுக்கிறோம்.

நிம்மதியா டக்குன்னு படிக்கிற மாதிரி நல்ல வலைப்பூக்களை மூணு நாளா தூங்காம காப்பி பண்ணி வச்சு காணமப்போனா....சும்மா எப்டி விடமுடியும்? ஒரு வி.ஐ.பி தொழிலதிபர் நான்......விட்ருவேனா..?

கடைசிவரை இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு ஏன் சகாயம் இந்த வலைப்பூக்களை காப்பி பண்ணி வச்சார்னு புரியல.....அட உங்களுக்கு புரிஞ்சுதுல்ல...அது போதும்....

சகாயத்தின் கார் சாலையில் பறந்து கொண்டிருந்தது....

பின் குறிப்பு: அடிக்கிறதுக்கு ஆள் அனுப்பிறாதீங்க...எல்லோரும் அருமையான பதிவர்கள்.....ஜாலியா படிச்சு என் ஜாய் பண்ணுங்க பாஸ்....!


அப்போ நான் வர்ட்டா...........!

30 comments:

 1. நன்றின்னா அறிமுகத்துக்கு. கலக்கல் கதை. தொடர்ந்து அசத்துங்க.

  ReplyDelete
 2. வித்தியாசமான அறிமுகம். தொடருங்கள்:)

  ReplyDelete
 3. அடிச்சு ஆடுங்க தேவா!

  ம்ம் இது ஹோம் பிட்ச் :)

  ReplyDelete
 4. அன்பின் தேவா
  அருமை அருமை - அறிமுகப் படுத்தும் முறை அருமை - நல்லாவே இருக்கு - ஒவ்வொண்ணாப் போயி பாக்கணும் - பாக்கறேன் - நல்வாழ்த்துகள் தேவா - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. Good one, Dheva! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. அசத்தல் தேவா

  ReplyDelete
 7. //லேப்டப்புல பேவரைட்ல போட்டு வச்சா நாம என்ன படிக்கிறோம் எந்த தளத்துல உலாவுறோம்னு.வீட்டுல வைஃப் எடுத்து பார்க்குறாங்க../

  sontha anubavam mathiri teriuthu

  ReplyDelete
 8. அருமையான அறிமுகம் அண்ணா. என்னையும் ஆட்டத்துல சேர்த்ததுக்கு தேங்க்ஸ்

  ReplyDelete
 9. வித்தியாசமான பார்வை .. பதிவர்கள் அனைவரும் நான் தொடர்ந்து படிப்பவர்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 10. அண்ணா ஆங்கிலத்துல "லேட்ரல் திங்கிங் " அப்டின்னு சொல்வாங்க , அது உங்க கிட்ட நிறையா இருக்கு,ஒரு பதிவ பதிவு பண்றதுக்கு முன்னாடி பதிவுனா எப்படி இருக்கணும் என்பதை பரிசோதிசுக்க உங்க ப்ளாக் வந்து போகணும் ....நீங்க கலக்குங்க அண்ணா ..... :)

  ReplyDelete
 11. கதையோடு கூடிய அறிமுகம் அருமை..!!

  ReplyDelete
 12. அறிமுக விதமும், அறிமுகங்களும் சிறப்புடன் இருக்கிறது தலைவரே... தொடர்ந்து தங்களின் அறிமுகங்களை எதிர்பார்க்கிறேன்....

  ReplyDelete
 13. தொடருங்கள்! :)

  ReplyDelete
 14. வித்தியாசமான அறிமுகத்துக்கு கலக்கல் கதை...
  என்னையும் ஆட்டத்துல சேர்த்ததுக்கு தைங்ஸ் அண்ணா,
  நன்றி என்ற மூன்று வார்த்தையால் கூற முடியாத நன்றிகள்

  ReplyDelete
 15. கலக்கலான வித்தியாசமான அணுகுமுறையில் அறிமுகங்கள். என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 16. பயங்கரமாத் துப்பறிஞ்சுக்கிட்டே இருக்கீங்க போல!


  'கலக்கல்'


  இன்னும் கலக்குங்க!!!!!

  இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 17. அறிமுகப்படலம் சூப்பர்.

  ReplyDelete
 18. கோமாளியை அறிமுகப்படுதியதற்கு நன்றி அண்ணா .. அருமையான கதை .. எப்பிடி இப்படியெல்லாம் பன்முக கதை எழுதுறீங்கன்னு தான் ஆச்சர்யமா இருக்கு ...

  ReplyDelete
 19. நல்ல அறிமுகங்கள் மற்றும் வித்தியாசமான அணுகுமுறை.

  ஆட்டையில் என்னையும் சேர்த்ததுக்கு நன்றி

  ReplyDelete
 20. அருமையான அறிமுகம்..

  சொல்லிய முறை அழகு..

  தொடருங்கள் நண்பா..

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் தேவா! இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 22. கலக்கலான வித்தியாசமான அறிமுகங்கள். தொடருங்கள்:)

  ReplyDelete
 23. உண்மையிலேயே...அதிரடிதான்...அசத்துங்க தேவா..!

  ReplyDelete
 24. முதல் பந்திலேயே சிக்சர் அடிச்சுப்புட்டியே என் நண்பா !!!! மிகவும் அருமையான நடை. குறிப்பாக ".....போலிஸ் என்றவுடன் அவர் அடித்த சல்யூட்டில் ரிட்டயர்ட் ஆர்மி வாசனை அடித்தது" என்ற இடம் கை தேர்ந்த புதின எழுத்தாளனாக உன்னை அடையாளம் காட்டுகிறது. மென்மேலும் உயர வாழ்த்துக்கள். உனது எழுத்தினை உலகம் அறிய உதவிய திரு சீனா அவர்களுக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
 25. நன்றி தேவா, கலக்குங்க. என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.

  மன்னிக்கனும் வேலைப்பளூ, சுமைகுறைந்த பின் வழக்கம்போல சந்திப்போம். :)

  ReplyDelete
 26. கலக்குங்க அண்ணா .....

  ReplyDelete
 27. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. பின்னூட்ட மிட்ட அனைவருக்கும் எனது நன்றி கலந்த நமஸ்காரங்கள்!

  ReplyDelete
 29. அட அட.. கதையுடன் அறிமுகமா... டூ இன் ஒன்..
  சூப்பர் தேவா..!!

  ReplyDelete
 30. அட அட.. கதையுடன் அறிமுகமா... டூ இன் ஒன்..
  சூப்பர் தேவா..!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது