07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 4, 2010

பதிவுலக நகைச்சுவை நாயகங்கள்! - ரோஸ்விக்

வாங்க வலைச்சர வாசகப் பெருமக்களே!


இன்னைக்கு நம்ம பதிவுலகில இருக்கிற நகைச்சுவை நட்சத்திரங்களைப் பற்றி பார்ப்போம். நகைச்சுவைக்கு சிரிக்காதவங்க நரகத்துக்குப் போனாலும் குத்தமில்ல. அறுசுவையில ஏதேனும் ஒரு சுவை நமக்கு பிடிக்காமப் போகலாம். ஆனால், இந்த நகைச்சுவை எல்லோராலும் விரும்பப்படுகிற ஒன்று. உங்க கழுத்துல புதைஞ்சிருக்கிற நகையை எல்லோருக்கும் வெளிக்காட்டுறதை விட, உங்க உள்ளத்துல புதைஞ்சு கிடக்குற நகைச்சுவையை அனைவரும் ரசிக்கும்படியா வெளிப்படுத்துங்க... உங்க புகழ் தானா உயரும்.


என்னைய மாதிரி பேச்சுல நகைச்சுவையைக் கொண்டுவருவதற்கு எல்லோருக்கும் தெரியும். ஆனா, அதை எழுத்துல கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியம் இல்ல. அது மிக சிலருக்கே வரும். அந்த வரம் பெற்ற நம்ம பதிவர்களை இன்னைக்கு அறிமுகப்படுத்தலாம்.


நண்பர் வெளியூர்காரன் எழுதும் எழுத்துல நகைச்சுவை மிளிரும். அவருடைய பழைய பதிவுகள் எல்லாத்தையும் வாசித்துப்பாருங்க. உங்களுக்கு சிரிப்பு வருவதற்கு நான் பொறுப்பு. இவருக்கு எனது அலுவலகத்துல நிறைய ரசிகர்கள் இருக்காங்க. இவருடைய பதிவு மட்டுமில்லைங்க. பின்னூட்டங்களும் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும். நீங்க போய் தாராளமா படிக்கலாம். ஆனா, பின்னூட்டம் போடும்போது கொஞ்சம் உஷாரா இருக்கணும். இவருக்கு "அருமை, வாழ்த்துக்கள்..." அப்படின்னு வழக்கமான பின்னூட்டம் போட்டா ரொம்ப கோபப்படுவாரு. ஏதுக்கும் தலைக்கவசத்தோட அந்த தளத்துக்கு போங்க. :-)


பட்டாபட்டி - பேரே வில்லங்கமா இருக்குல்ல. இவரு நகைச்சுவை ரொம்ப பிரபலம். நகைச்சுவையோட, நம்ம அரசியல்வாதிகளின் அரை டவுசரை கழட்டுரதுல கில்லாடி. இவரு டீலிங்கே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். பயப்புடாமப் போங்க நம்ம எல்லோருக்கும் பாதுகாப்பு உண்டு.


மங்குனி அமைச்சர் - ஆமா, ஆமா... அவரே தான்... 23- ம் புலிகேசி வடிவேலு படம் இருக்கிற அந்த வலைத்தளம் தான். இவரு நகைச்சுவைக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு. முஸ்கி, டுஸ்கி, கிஸ்கி இது மாதிரி புதிய வார்த்தைகளை இந்த பதிவுலகத்துக்கு அறிமுகப் படுத்திய நண்பர். படிச்சுப் பாருங்க. சும்மா கிர்ருன்னு இருக்கும்.

நண்பர் சேட்டைக்காரன் நகைச்சுவையை நாக்குலே வளர்த்து வைச்சிருக்கார்னு நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு வலைச்சரம் ஆசிரியராகவும் வந்து கலக்கினார். இவருடைய பதிவின் வேகமான வெளியீடுகளைப் பார்த்து நான் மிரண்டு போனதுண்டு. அன்றாட நிகழ்வுகளை நகைச்சுவை கலந்து கலக்குவார்.


ம்ம்ம்... கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா. பதிவுலகில இவரு பேரு மட்டுமில்லைங்க. இவருடைய பதிவுகளும் ரொம்ப பிரபலம். இவங்க பதிவுகள் வெட்டிபேச்சு இல்லைங்க... வெரைட்டியான நகைச்சுவை கொண்டது. இவரு பறந்து பறந்து போயி பின்னூட்டம் போடுவாரு போல. எங்க பார்த்தாலும் இவருடைய பின்னூட்டங்கள் இருக்கும்.

நண்பர் குசும்பன் இவருடைய பதிவுகளும் சரி... பின்னூட்டங்களும் சரி... மிக ரசிக்கும்படியாக நகைச்சுவையோட இருக்கும். இவருடைய பதிவின் நோக்கமே கலாய் கலாய் கலக்கலாய் கலாய்... இவர் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவர். இவருடைய போட்டோஸ் கமெண்டுகளும் பிரபலம்.

நண்பர் சுகுமார் சுவாமிநாதன் அவரின் வலைமனை -யில் பல பதிவுகளை நகைச்சுவை பட எழுதி இருக்கிறார். இவருடைய போட்டோஸ் கமெண்டுகளும் மிகவும் ரசிக்கும்படியா இருக்கும். படிச்சிப்பாருங்க... நகைச்சுவை நடனமாடும்.

நமக்கு நகைச்சுவை எஸ்.எம்.எஸ்-கள் நிறைய வரும். அதையெல்லாம் சேகரித்து ஒரே இடத்துல தொகுத்து கொடுத்தா எவ்வளவு ஆனந்தப்படுவோம் நம்ம. அந்த வேலைய நம்ம நண்பர் மோகன் தனது மோகனச்சாரல் வலைத்தளத்துல செய்துகிட்டு இருக்காருங்க. வேணுங்கிறப்ப எடுத்து படிச்சுக்கலாம். நீங்களும் போயி படிச்சு ஆனந்தமா இருங்க.

கும்மாச்சி அண்ணே, அரசியல் சார்ந்த பதிவாகட்டும், அவருடைய வாழ்கை அனுபவப் பதிவாகட்டும் அனைத்திலும் நகைச்சுவை கலந்து எழுதி இருப்பாரு. இவருடைய பதிவுகள் அனைத்தும் ரசிச்சு ரசிச்சு படிக்கும்படியா இருக்கும். நக்கல், நையாண்டி எல்லாம் அங்கு கிடைக்கும். போய் படிங்க மனசுக்கு இதமா இருக்கும்.

ஓரளவுக்கு நல்ல நகைச்சுவைப் பதிவர்களை இங்கு அறிமுகப்படுத்தி இருக்கேன். இவர்கள் எழுதும் பதிவுகளில் நகைச்சுவை மட்டுமல்ல... சிந்திப்பதற்கு சில விஷயங்களும் இருக்கும். உங்களுக்குத் தெரிஞ்ச நகைச்சுவைப் பதிவர்களை எனக்கு பின்னூட்டத்தில் அறிமுகப்படுத்தலாமே!

மீண்டும் நாளை சந்திப்போமா!!

47 comments:

 1. என்ன ரோஸ்விக், எல்லாத்தளத்துக்கும் லிங்க் கொடுத்திருந்தா எம்மாதிரி கெளடுகளுக்கெல்லாம் எத்தன சௌகரியமா இருந்திருக்கும்? இப்போ எங்கெங்க போய்த்தேடறது?

  ReplyDelete
 2. அடடே, லிங்க் இருக்குது, மன்னிச்சுக்கோ ரோஸ்விக், நாந்தான் சரியாப் பாக்கல.

  ReplyDelete
 3. அன்பின் ரோஸ்விக்

  அருமை அருமை - நகைச்சுவை நாயகர்களை அறிமுகப் படுத்தியது நன்று - சென்று பார்க்கிறேன் - அங்கு மறு மொழி இடுகிறேன்

  நல்வாழ்த்துகள் ரோஸ்விக
  நட்புடன் சீனா

  ReplyDelete
 4. ஹலோ எக்சூஸ்மி நானும் கூடத்தான் நகைச்சுவை பதிவு போடுறேன், நேற்று கூட பதிவர் ஜோக்ஸ் அண்ட் பஞ்ச்ஸ் போட்டேன் அப்போ நான் நகைச்சுவை பதிவன் இல்லையா? என்னை சேர்க்காமல் விட்டதற்க்கு கண்டனங்கள்

  ReplyDelete
 5. //இவரு பறந்து பறந்து போயி பின்னூட்டம் போடுவாரு போல. எங்க பார்த்தாலும் இவருடைய பின்னூட்டங்கள் இருக்கும். //

  சித்ரா டீச்சர் ங்க. அதனால எல்லா பசங்களும் ஒழுங்க இருக்காங்களான்னு எல்லோரோட பதிவுலையும் கமென்ட் போடுறாங்க.

  ReplyDelete
 6. //இவரு பறந்து பறந்து போயி பின்னூட்டம் போடுவாரு போல. எங்க பார்த்தாலும் இவருடைய பின்னூட்டங்கள் இருக்கும். //

  சித்ரா டீச்சர் ங்க. அதனால எல்லா பசங்களும் ஒழுங்க இருக்காங்களான்னு எல்லோரோட பதிவுலையும் கமென்ட் போடுறாங்க.

  ReplyDelete
 7. வித்தியாசமாக இருக்கு ரோஸ்விக்!!

  ReplyDelete
 8. "பதிவுலக நகைச்சுவை நாயகங்கள்! -ஏதோ வில்லங்கம்போல் என்று பயந்து விட்டேன்!!

  ReplyDelete
 9. வித்தியாசமன பதிவு...

  ReplyDelete
 10. பகிர்விற்கு நன்றி. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. யோவ் ரோசு,வலைத் தளத்தில் கும்மி அடிப்பவர்கள் னு ஒரு போஸ்ட் போடுயா... நாம எல்லாம் கவர் ஆயிடுவோம்ல....
  ஆஹா,நாம கும்மியில அடுத்தவன போட்டு அடிக்கிறவங்க இல்ல? :)

  //உங்க கழுத்துல புதைஞ்சிருக்கிற நகையை எல்லோருக்கும் வெளிக்காட்டுறதை விட, உங்க உள்ளத்துல புதைஞ்சு கிடக்குற நகைச்சுவையை அனைவரும் ரசிக்கும்படியா வெளிப்படுத்துங்க... உங்க புகழ் தானா உயரும்.//

  யோவ்,எங்கயோ போய்ட்டயா ரோசு....

  ReplyDelete
 12. சித்ரா ,குசும்பன் , கும்மாச்சிக்கு வாழ்த்துக்கள்..மற்றவர்களையும் படிக்கிறேன் ரோஸ்விக் ..நன்றி

  ReplyDelete
 13. எங்கெல்லாம் சிரிப்பிருக்கிறதோ.. அங்கெல்லாம் சிறப்பிருக்கும்..

  யார் சொன்னதுன்னு யோசிக்கிறிங்களா நான் சொன்னதுதாங்கோ...

  ReplyDelete
 14. வலைச்சர ஆசிரியப்பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள் ரோஸ்விக்கு!

  அறிமுகங்கள் நன்று!

  அடிச்சு ஆடுங்க...!

  ReplyDelete
 15. அருமையான தொகுப்பு ரோஸ்விக். நீங்கள் குறிப்பிட்டுள்ள நண்பர்கள் அனைவருமே அசத்தல் ரகம்.

  ReplyDelete
 16. உண்மையில் எல்லாருமே சிரிக்க வைக்கும் நாகேஷ் க்கள்தான்.
  நன்றி ரோஸ்விக்.

  ReplyDelete
 17. பிரதர், இது நான் எழுதலாம்னு நெனச்ச பதிவு, வெளியூரு, பட்டாபட்டி, மங்குனி இவர்கள் தான் நம்ம பதிவுலக ஆசான்கள், அதிலும் சைந்தவி பதிவுகளில் இருந்து இன்னும் நான் மீளவே இல்லை. நகைச்சுவையாக கமென்ட் போட ஆரம்பிச்சு இப்போ தனியா பதிவே போடர வரைக்கும் போயிடிச்சு! இவர்களைப் பற்றிப் பதிவு எழுதியதற்கு நன்றி ரோஸ்விக்.

  ReplyDelete
 18. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  பிரதர், இது நான் எழுதலாம்னு நெனச்ச பதிவு, வெளியூரு, பட்டாபட்டி, மங்குனி இவர்கள் தான் நம்ம பதிவுலக ஆசான்கள், அதிலும் சைந்தவி பதிவுகளில் இருந்து இன்னும் நான் மீளவே இல்லை. நகைச்சுவையாக கமென்ட் போட ஆரம்பிச்சு இப்போ தனியா பதிவே போடர வரைக்கும் போயிடிச்சு! இவர்களைப் பற்றிப் பதிவு எழுதியதற்கு நன்றி ரோஸ்விக்.
  //

  லைட்டா.. எனக்கு நெஞ்சு வலிக்குது பிரதர்..
  ஆசான்னு சொல்லி..அருவாள் எடுக்ககூடாது ..சொல்லீட்டேன்

  ReplyDelete
 19. //பட்டாபட்டி.. said...
  லைட்டா.. எனக்கு நெஞ்சு வலிக்குது பிரதர்..
  ஆசான்னு சொல்லி..அருவாள் எடுக்ககூடாது ..சொல்லீட்டேன்//

  என்ன தலைவரெ அரசியல்ல எப்போ குதிச்சீங்க?

  ReplyDelete
 20. அவ்வ்வ்வ்வ்........................ பட்டா, கொடுத்த காசுக்கு மேல கூவுராண்ட நம்ம ரோஸு

  ReplyDelete
 21. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  பிரதர், இது நான் எழுதலாம்னு நெனச்ச பதிவு, வெளியூரு, பட்டாபட்டி, மங்குனி இவர்கள் தான் நம்ம பதிவுலக ஆசான்கள், அதிலும் சைந்தவி பதிவுகளில் இருந்து இன்னும் நான் மீளவே இல்லை. நகைச்சுவையாக கமென்ட் போட ஆரம்பிச்சு இப்போ தனியா பதிவே போடர வரைக்கும் போயிடிச்சு! இவர்களைப் பற்றிப் பதிவு எழுதியதற்கு நன்றி ரோஸ்விக்.////


  ஏம்பா பன்னிகுட்டி இவ்வளவு நாளு நல்லாதானே இருந்தே ???? ஏன் இந்த கொலைவெறி

  ReplyDelete
 22. அப்ப இவங்கெள்ளாம் காமடி பீஸ்னு சொல்ராறு எல்லா என்ன அவர பாராட்டிட்டு இருங்கீங்க. இவர்களை காமெடி பீஸ்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் (யப்பா எதோ என்னால முடிஞ்சது)

  ReplyDelete
 23. //மங்குனி அமைச்சர் said...
  ஏம்பா பன்னிகுட்டி இவ்வளவு நாளு நல்லாதானே இருந்தே ???? ஏன் இந்த கொலைவெறி //

  என்ன மங்குனி, பதிவுலகமே ஒரு ரேஞ்சுல (?) போய்க்கிட்டு இருக்கு, ஏதோ நம்மால முடிஞ்சது இவ்வளவுதான்.

  ReplyDelete
 24. நன்றி Dr.P.Kandaswamy ஐயா

  நன்றி முனைவர்.இரா.குணசீலன்

  நன்றி cheena (சீனா)ஐயா

  நன்றி Veliyoorkaran (வாயா வருஷ நாட்டு புருஷோத்தமா :-))

  நன்றி குழலி / Kuzhali அண்ணே! பரம்பரை ஆண்டியா இருக்கணும். :-)

  நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) - நீங்களும் சரியான தமாசான ஆளுதான். ஏற்கனவே புதிய பதிவர்கள்-ல அறிமுகம் பண்ணியதால் இங்கு உங்கள் பெயர் இல்லை.

  ReplyDelete
 25. நன்றி தேவா சார். (இன்று பல பின்னூட்டங்கள் வந்ததற்கு தலைப்புதான் காரணம் போல... :-))) (இது முன்பே இட்ட தலைப்பு...ஏதும் உள்நோக்கம் இல்லை. :-) )

  ReplyDelete
 26. நன்றி soundar

  நன்றி butterfly Surya

  நன்றி ILLUMINATI (இவனுக ரொம்ப நல்லவங்கையா....)

  ReplyDelete
 27. நன்றி thenammailakshmanan

  நன்றி Riyas (ரொம்ப சிறப்பா இருக்கு மக்கா)

  நன்றி பட்டாபட்டி... (என்னய்யா திருந்தீட்டியோ??)

  நன்றி ஜெய்லானி (தலைவரு சிரிப்பே நக்கலா இருக்கே :-))) )

  ReplyDelete
 28. நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி அண்ணா.

  நன்றி செ.சரவணக்குமார்

  நன்றி ஹேமா

  நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி (வா ராசா... நீயும் தொடர்ந்து காமெடி-ல அடிச்சு ஆடு..)

  ReplyDelete
 29. நன்றி மங்குனி அமைச்சர் (நீ தான்யா நல்ல அமைச்சரு...)

  நன்றி சிவா (கல்பாவி) (நாங்க எல்லாம் யாராவது துப்புனா... திரும்பி தும்மிக்கிட்டு போய்க்கிட்டே இருக்குற பாசக்காரய்ங்க... )

  ReplyDelete
 30. ரோஸ்விக்,
  இந்த‌ இன்ட்ரோவின் பத்துக்கு
  ஆறு அல்ரெடி வெரி ஃபெமிளிய‌ர்.
  ம‌ற்ற‌வ‌ர்களுட‌னும் இணைந்து கொள்கிறென்.
  க‌ட‌ந்த‌ வார‌ க‌ண்றாவி ப‌திவுக‌ளுக்கிடையே
  இவர்க‌ளின் இடுகைக‌ள் தான் கொஞ்ச‌ம் இளைப்பாறுத‌ல்

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. நகைச் சுவை நாயகர்களை அறிமுக படித்தியமைக்கு நன்றிகள் பல.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. இடுகை சிறப்பாகவும்
  பின்னூட்டங்கள் சிரிப்பாகவும்
  உள்ளன. சுவையோ சுவை!

  ReplyDelete
 34. நிறைய சொல்லிருக்கீங்க .. வாசிக்கணும்.....

  ReplyDelete
 35. நன்றி vasan சார்.

  நன்றி abul bazar/அபுல் பசர்.

  நன்றி NIZAMUDEEN

  நன்றி பிரசன்னா

  நன்றி தருமி ஐயா. (அந்த மீசை தான் கொஞ்சம் பயமுறுத்துது... :-))) )

  ReplyDelete
 36. //அந்த மீசை தான் கொஞ்சம் பயமுறுத்துது... :-)))//

  எல்லாம் சின்னப் பிள்ளைகளை பயமுறுத்த வச்சதுதான் .......

  ReplyDelete
 37. //அந்த மீசை தான் கொஞ்சம் பயமுறுத்துது... :-)))//

  போனா போகுதும் ... மீசை எடுத்துட்டு தாடியைப் போட்டுருவோம் :(

  இம்சைப்பா ... இல்ல?

  ReplyDelete
 38. தருமி ஐயா... நீங்க வித்தியாசமான கெட்டப்புகள்-ல கலக்குங்க...
  அப்படித்தான் இருக்கனும். அப்பத்தான் யாருக்கும் போர் அடிக்காது... :-)

  ReplyDelete
 39. மிகவும் நன்றி நண்பரே! எனது வலைதளத்தை இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
  தங்களைபோன்றோரின் ஊக்கமே என்னை தொடர செய்கிறது.... நன்றி...
  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 40. Thank you very very very much for including me too... :-)

  ReplyDelete
 41. அன்புள்ள ரோஸ்விக்.. எப்படியோ இந்த பதிவை தவற விட்டுவிட்டேன்.. என்னையும் இந்த பதிவில் சேர்த்ததற்கு நன்றிகள் பல.. தங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி நண்பரே...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது