07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 15, 2010

செவ்வாய்க்கிழமை எலி செட்டிலானது.


echo<< எலி வந்தாச்சு எலி வந்தாச்சு!
எலி:அண்ணே என்னக்கண்டா உங்க ஊர்காரவுங்களுக்கு இவ்வளவு பிரியமா? 
கரச்சான்: அட, அது நீயில்லப்பா அவுங்க வேற எலிய சொல்றாங்க. ஏப்பா அந்த பக்கம் போகாத அடுச்சுப் போட்டுருவாங்க. நம்ம ஊர் இதுக்கடுத்த ஊருப்பா   
எலி:ஆ. அப்படியா, சரி என்னைப் பார்த்தா எலின்னு ஒத்துக்குவாங்கள 
அட்டை: இத பாரு நாம உன்னோட போட்டவ நம்ம அண்ணன் சொல்ற மாதிரி இலவசமா பாஸ்போர்ட்சைஸ் போட்டவா மாற்றி உனக்கு அடையாள அட்டை பண்ணிருலாம்.
எலி:சரி அடுத்து..
அட்டை: உடனே உனக்கு ஒரு வலைப் பதிவு ஆரம்பிக்கணும் அதுக்கு உனக்கு பிடிச்ச அருமையான டேம்ப்லைட்களை இவரு தாறாரு அப்படியே அவர்கிட்டையே சில டிப்ஸ்களையும் வாங்கிக்கோ.
எலி:சரி அடுக்கு பெட்டி கிடைக்குமா?
கரச்சான்:Multi tab தானே அத இவரு தெளிவா சொல்லிட்டாரு எடுத்து வச்சுக்கோ. அப்புறம், இந்த எலி இந்த சி.டி.யில நம்ம ப்ளாக்பட்டியை பத்தி எல்லாம் இருக்கும் கொஞ்சம் பாத்துக்கோ 
எலி:அண்ணே சி.டி. ரொம்ப அடிவாங்கிருக்கு போல தகவல் கிடைக்க மாட்டிக்குது.
கரச்சான்:கவலைப்படாத இத பாரு முக்கியமான இந்தப்பதிவைப் படி அப்படியே டேமேஜ் ஆனா சி.டி.யையும் படி.
எலி:அண்ணே உங்க ப்ளாக்பட்டியில எல்லாம் தலை கீழ்ல தான் நடப்பாங்கள? இல்ல சி.டியில  இருக்கிற உங்க ஊர்க்காரவுங்க எல்லாம் தலைகீழ தெரியுறாங்க அதான் கேட்டேன்
அட்டை: அட என்னப்பா நீ விவரம் தெரியாத ஆளா இருக்க உடனே இங்க போயி அந்த வீடியோ பையில்களை திருப்பி பாரு.

{என்று ஊரைப்பத்தின தகவலை கேட்டுக் கொண்டே ப்ளாக்பட்டிக்குள் நுழைகிறார்கள். ஊர்க்காரவுங்க எல்லாரும் வந்து வரவேற்கிறார்கள்.}

பிலிகிரி கேம்ஸ்:எலி நான் சொல்லல இவர்தான் முன்னாள் மார்ஷல் கண்ட்ரோல் பாண்டியன். இவுங்க தான் நம்ம கரச்சானோட அம்மா பாய்ண்டரம்மா, அவுங்க தான் நம்ம ......
எலி:சரி நிறுத்துங்க மொதல மாலைக் கொடுங்க நம்ம குல தெய்வம் கூகிள் சிலைக்கு மாலைய போடணும்.
கண்ட்ரோல் பாண்டியன்: சபாஸ் நம்ம எலி கடமையில பின்னுறாரு. ஆனா பாருங்க கூகிள் தினமும் டுடுல் மாலை மாத்திரத்தால அந்த மாலை நம்ம மார்கெட்ல கிடைக்க மாட்டிக்குது.
அட்டை:யோவ் எலி உன்ன இவரோட கூகிள் செய்திகளை படிக்கச் சொன்னேன்ல, கூகிள் ஆண்டவர் அடிக்கடி மாலை மாத்துவாருய்யா!
எலி:ம்.. எனக்குத் தெரியும். நம்ம தலைவர் என்ன சொல்லிருக்காரு? பதிவெழுதுறவுங்களுக்கு கவனம் வாசகர் மேலையும் இருக்கணும்னு சொல்லியிருக்காரு. அதான் டெஸ்ட் வச்சேன் உங்களுக்கு.
கண்ட்ரோல் பாண்டியன்: சபாஸ் நம்ம எலி சைக்காலஜியில பின்னுறாரு.

பிலிகிரி கேம்ஸ்:இப்பகூட பாருங்க நம்ம யாஹூ மெயின் ரோட்டுல நகர்வோர் ஆக்குதல் போட்டி நடக்குது.
எலி:நுகர்வோர் பத்தி கேள்விப் பட்டிருக்கேன் ஆனால் அது என்ன நகர்வோர்?
பிலிகிரி கேம்ஸ்:அதுவா! இந்த ஜீரோ கோட்டைக் காரவுங்களுக்கு பொழுது போகலைனா நம்ம ஆட்கள் யாராச்சும் கஷ்டப்பட்டு பதிவு போட்டா அதற்கு ஓட்டுப் போடாமல் வாசகர்களை நகர வைப்பாங்க உதாரணத்துக்கு பாருங்களே ப்ரைவேட் பிரவுசிங் பற்றி ஒருவர் கஷ்டப்பட்டு தகவலைத் திரட்டிப் போட்டால் அது பிரபலமாகவில்லை. மேலும் இலவச டொமைன் வழங்கும் சேவைப் பற்றிப் போட்டாலும் இப்படித் தான் நடக்கிறது. மற்றும் ஒரு சகோதரர் வாசகர் கேள்விக்கு பயனுள்ள பதில்கள் தருகிறார் ஆனால் அவரின் பதிவுகளுக்கும் ஓட்டுகள் விழுவதில்லை.
கண்ட்ரோல் பாண்டியன்:நம்ம எலி சாதாரண ஆள்யில்லாமா, தான் நிழல விட வேகமா பதிவுகள் போட்டு இவர்களை பிரபலப்படுத்துவாரு.
எலி:ஆமா ஆனா இப்ப எனக்கு லேசா ஒரு பக்கதலை வலி அதுனால நீங்க நல்ல பதிவர்களோட பதிவெல்லாம் ஒரு வேர்ட் டாக்குமென்ட்ல போட்டு இவர் சொல்ற மாதிரி பூட்டி அனுப்பி வையுங்க பாத்துகிறேன்.
கண்ட்ரோல் பாண்டியன்: சபாஸ் நம்ம எலி செக்யுரிட்டியில பின்னுறாரு.

{இந்த ப்ளாக்பட்டியின் மேற்கு ஒன்றியத்தில் சிலர்..}
1:ஆமா  இங்க பாரு, இந்த மதுரையில இருந்து எழுதுற பாபாராஜ்  சும்மா ஆழாம கவிதை எழுதுறாரு.
2:அருமை. அப்படியே இந்த ராஜகுரு கவிதையைப் படிச்சுப் பாருங்க. நம்ம ஆள்க நல்ல எழுத ஆரம்பிச்சுட்டாங்க
3:பாஸ், இங்க பாருங்க இந்த அண்ணே புகுந்து விளையாடுறாங்க  ரொம்ப நல்லாயிருக்கு 
5:போன வாரம் சொன்னேன்ல அந்த பதிவ பாருங்க தமிழையும் இங்கிலிஷ்ளையும்  எழுதி பட்டைய கிளப்புறாங்க.
4:இனி நாம்ம பதிவர்கள் அந்த ஜீரோ கோட்டைக்கு பயப்படத் தேவையில்லை. நாம்ம ஒற்றுமை நிறையப் பதிவுகள் எழுதி சாவிக் கட்டை குரவளைய நேரிக்கனும்.
திரைக்கை: நானும் உங்க இயக்கத்தில சேர்ந்துக்கிறேங்க.. ப்....ளீஸ் என்னையும் பதிவுகளில சேர்த்துக்கோங்..க.    ம் சுயமா எழுதி பதிவா போட்டு ஜீரோ கோட்டை குரல்வளையை நெரிக்கவா? எங்களுக்கு குரல்வளையும் விக்கிபீடியாடா நெரிக்க நெரிக்க வளருவோம்.
இனிமே யாரும் பதிவு போடக் கூடாது. உங்க சாப்பீஸ் குச்சிய எல்லாம் நான் எடுத்துட்டுப் போறேன். இனி நீங்க எப்படி பதிவு போடுரேங்கனு பார்க்குறேன். அதுதான் எங்க சாவிக்கட்டை தலைமைக்கு கொடுக்கிற மரியாதை.

{இங்க நம்ம எலி மற்றும் அதன் சகாக்கள் ஊர் பெரியவர் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கே அந்த பெரியவர் இவ்வூரின் வரலாற்றைக் கூறுகிறார்.}
பெரியவர்:மொத மொத தமிழ் பதிவை எழுத வசதி தந்தது ப்ளாகர்.காம் தான் அதுக்கப்புறம் சில பேர் பதிவு எழுத ஆரம்பிச்சாங்க அப்ப தேன்கூடுன்னு ஒருத்தர் தலைவரா வந்தாரு அவர்காலம் தான் பொற்காலம். அப்பத்தான் ப்ளாக்ஸ்பாட் அப்படிங்கிறவர் நமக்கெல்லாம் வழிகாட்டினாரு அவுங்க நினைவாத்தான் இந்த ஊருக்கு ப்ளாக்பட்டினு பேரு வந்துச்சு. அப்ப அறியாமை அப்படிங்கிற ஒரு கொடிய வில்லன்கிட்ட சிக்கி இந்த ஊரே கஷ்டப்பட்டுச்சு அவனை அடுச்சு விரட்ட அப்ப வந்தவர்தான் தமிழ் மணம், நம்ம பதிவர்களுக்காக அல்லும் பகலும் உழைக்கிறவுங்க. அதுக்கப்புறமா தமிழிஷ் ஐயா ஊர் நாட்டாமை ஆனார். அவர் பார்த்து சொல்ற பதிவுதான் டாப்.  ஓடிப்போனானே அவனோட பிள்ளைதான் இந்த சாவிக் கட்டை, சிலேடு பிடுச்சு படிச்ச காலத்திலே இவன் ஸ்கூல விட்டு வந்துட்டான் அதனால படிப்பே வரல அதனால் யாரும் பதிவெழுதக் கூடாதுன்னு இந்த ஊரையே கைக்குள்ள போடுறதுதான் அவனோட பாழப்போன ஆசை. அப்பப்ப வந்து சாப்பீஸ், குச்சி எல்லாம் திருடிட்டுப் போவான் பக்கி பேனா கண்டு பிடிச்சது கூட இவனுக்கு தெரியாது.
பாய்ண்டரம்மா:மூனு தலைமுறையா சாவிக் கட்டையும் அவனோட தளபதி திரைக்கையும்  ஏதோ ஒரு புதையலைத் தேடிக்கிட்டேயிருக்காங்க  அதுமட்டுமில்லை புதையலுக்கான பாஸ்வேர்டையும் தொலைச்சுட்டு எல்லாரோட பதிவிலையும் அனானியாய் தொல்லை பண்ணுறாங்க.

பெரியவர்:நம்ம நண்பர் ஒருவர் சைவச் சாப்பாட்டப் பத்தி நல்ல விஷயத்தைச் சொல்லிருக்காரு அப்புறம் இந்த சகோதரியும் முட்டைக்குழம்பு வச்சுத் தந்தாங்க ஆனால்  இந்த சாவிக் கட்டையால நாங்க நிம்மதியக் கூட சாப்பிட முடியவில்லை
கொஞ்ச நாளைக்கு முன்னாடி 123 ஒப்பந்தம் ஒன்னு போட்டிருக்கு 


அதுஎன்ன ஒன்,டு,திரி, ஒப்பந்தம்?
தொடரும்.... 

பிடித்திருந்தால் ஆதரிக்க http://www.tamilish.com/story/276696/


எடிட்டர் கார்னர்:

திங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும் இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர
-நீச்சல்காரன்

9 comments:

 1. நிறைய புதிய பதிவர்களை கண்டேன்

  ReplyDelete
 2. அன்பின் நீச்சல்காரன்

  நல்ல முறையில்சென்று கொண்டிருக்கிறது. சுட்டிகள் அருமை. அனைத்தும் படிக்க வேண்டும். படிக்கிறேன்.

  நல்வாழ்த்துகள் நீச்சல்காரன்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 3. கணினி, கவிதை, சமையல் அசத்துங்க ..அசத்துங்க

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் நண்பா!!

  ReplyDelete
 5. அருமைங்க.... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. நீச்சல் கலக்குறீங்க.

  ReplyDelete
 7. அறிமுகப்படுத்திய அனைத்துத் தளங்களுமே அற்புதமான
  தகவல்களைக் கொண்டிருக்கின்றன நண்பரே!
  நன்றிகள்!

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 9. //அப்பப்ப வந்து சாப்பீஸ், குச்சி எல்லாம் திருடிட்டுப் போவான் பக்கி பேனா கண்டு பிடிச்சது கூட இவனுக்கு தெரியாது.//

  நகைச்சுவையாய் எழுதியிருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது