07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 21, 2012

நமது தேடல்களும் தேவைகளும்! -- (கிறுக்கல்கள்-3)

               நேசம் எவ்வளவு அழகான வார்த்தை! இவ்வுலகில் பசி என்று ஒன்று இல்லாவிடில் நேசிப்பதும், நேசிக்கப்படும் த்ருணங்கள் மட்டுமே நம்மை சூழ்ந்திருக்கும் என பல சமயம் நினைக்கத்தோன்றும்! பசிக்கு உணவைத்தேடி ஆரம்பித்ததே நமது தேடல்கள் இன்று எதை எதையோ அடைந்து கடைசியில் அனைத்தும் பணம் தான் என்றாகிவிட்டது இன்று. பணமின்றி ஒரு துரும்பும் அசையாது என்கிற அவல நிலைக்கு தள்ளப்பட்டு இன்னும் அதையே அடைய தவித்துக்கொண்டிருக்கிறோம் நமது வாழ்க்கையில் தேடல்கள் நீள்கையில் நேசத்தின் அர்த்தமும் மாறிப்போகிறது பல சமயம். 
                மனிதத்தை விற்றுத் தீர்க்கும் விந்தையை கண்டு வியந்து நிற்கும் மனிதனின் மனதை விழித்தெழுப்பியே காலம் கரைந்து போகிறது அழிவை நோக்கி! நாம் எதை நோக்கிப்போகிறோம்? அதையே தான் பணம்!!! வயிற்றின் பசிக்கு சாப்பிட மறந்து நாவின் ருசிக்கு சாப்பிட ஆரம்பித்தால் இங்கு ஏதுமே போதாது! பணம் வாழ்வாதாரத்திற்கு என்பதை மறந்து பணம் தான் வாழ்க்கை என்றால், நமது வாழ்க்கையிலும் பணம் மட்டும் தான் இருக்கும் நாம் இருக்க மாட்டோம் 
                பணம், பணம், பணம் என்று உச்சரிக்கும் வார்த்தைகளுக்கான இடைவெளியில் துளையிட்டாவது சில நேரத்தை தேடிப்பிடிப்போம் நம்மை நேசிக்க நமது வாழ்க்கையை நேசிக்க! இன்று நமது தேடல்களை நிர்ணயிப்பது கூட நமது தேவைகள் அல்ல! ஊடகங்களும் மற்றவர்களும் தான்! உயர் அதிகாரியின் குழந்தை படிக்கும் பள்ளியில் தான் தனது குழந்தையும் படிக்க வேண்டும் என்று நினைப்பவர், பழைய மொபைல் வெச்சிருகேன்னு ஃப்ரன்ட் கிண்டல் பண்றான்னு புது போன் கேட்கும் பள்ளி மாணவர்கள், புது பைக் வாங்கியதற்கு ஃப்ரன்ட்ஸ் ட்ரீட் கேட்கறாங்க பணம் வேண்டும் என கேட்பவர்கள், ஹேர் ஸ்டைல் மாத்தினா நல்லாருக்கும்னு ஃப்ரண்ட் சொன்னானு தன்னை மற்றிக்கொள்பவர்கள், அவங்க இது வெச்சிருக்காங்க நான் அது வாங்கனும், அவங்க அது சொன்னாங்க அது மாத்தனும், இது நல்லா இல்லேன்னு சொன்னாங்க , அவங்க இவங்க இதில் நாம் எங்கே இருக்கிறோம்!!! 
            நமது தேவைகளுக்கும் தேடல்களுக்கும் மத்தியில் நம்மையே தொலைத்துவிட்டு மற்றவர்களிடம் தேடிக்கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை எதை நோக்கிய பயணம், அதில் முதலில் நாம் நிறைந்திருக்கிறோமா? என்று அவாப்போது திரும்பிப்பார்த்துக்கொள்வோம். இல்லையெனில் காலம் கடந்து திரும்பிப்பார்க்கையில் நமது கடந்த பாதை முழுக்க மற்றவர்கள் தான் இருப்பார்கள்!

~~~~****~~~~

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--2

நமக்குள் நம்மை தேடிப்பிடித்து விலக்கிவைப்போமே! அதெப்படி??? ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்கையில் மனது எப்பவும் நமக்கு சாதகமாக, நமது நலத்தை மட்டும் கருதி ஒரு முடிவினை தரும். நமது அறிவு எப்பவும் நிதர்சனத்தை யோசித்து சாத்தியக்கூறுகளை கண்டறிந்து முடிவெடுக்கும். முடிவுகள் அவரவர்களைப்பொருத்தது!

~~~~****~~~~

 இன்றைய அறிமுகங்கள்!


6.            கல்வி முறையிலும் சமுதாயத்திலும் நல்ல மாற்றம் காண பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும், பள்ளியில் என்ன செய்கிறார்கள் என்று "மாற்றம் தேவை- கல்வி முறையிலும், சமுதாயத்திலும்" எனும் பதிவில் விரிவாக விளக்கி அலசி சொல்லி இருக்கிறார் இக்கரையும், அக்கரையும் திரு. குணசேகரன் அவர்கள்.

7.             எல்லா சூழல்களிலும் இருக்கும் நனமையை மட்டும் கண்டறிந்து எப்படி மனப்பக்குவத்தை அடைய வேண்டும் என்று குறுங்கதை கொண்டு விளக்குகிறார் உள்ளக் கமலம் மணிமேகலா அவர்கள்.

8.                 "வாழ்க்கை கொடுத்தவன்" என்ற பதிவினில் தாருமாறாக வண்டியை ஓட்டி விபத்தினை ஏற்படுத்துபவர்களும், பாதிக்கப்படுபவர்கள் நிலையை பற்றியும் தெளிவாக சிறுகதை மூலம் சொல்லி இருக்கிறார் திடங்கொண்டு போராடு சீனு அவர்கள்

9.      "அவன் தெரிவான்" என்று நம்மை நாம் கண்டு கொள்வது பற்றி கவிதையாக கூறி இருக்கிறார் தமிழ் மறை தமிழர் நெறி sury siva அவர்கள்

10.     விளம்பரம் என்னும் மாயாஜாலம் என்று விளம்பரப்படங்களில் பின்னனியில் நடக்கும் மாயாஜாலத்தை தெளிவாய் கூறி இருக்கிறார் Vijayan.K.R அவர்கள்


~~~~****~~~~

தவறுகள் பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே! மீண்டும் நாளை சந்திப்போம்!

மேலும் வாசிக்க...

Monday, November 19, 2012

தீண்டப்படாத தீக்குச்சிகளாய்!--(கிறுக்கல்கள்-2)

 விதையிட்ட விரல்களால்
 விலக்கி வைக்கப்பட்டு
 விதியினில் வாழ்க்கையை தேடியும்,
 விதியினில் வாழ்க்கையை
 தொலைத்துவிட்டு
 மூளைக்குச் செல்வதற்குள்
 பறிக்கப்பட்ட
 விரல்களுக்கெட்டிய கல்வியோடும்,
 இளந்தளிர்கள் இங்கு
 விதியோடும் வாழ்க்கையோடும்
 முண்டியடித்து
 போராடிக்கொண்டிருக்கிறார்கள்
 வாழ்க்கை அறியாது!
 வாய்ப்புகள் அறியாது!

 "வாழ்க்கை" என்ற வார்த்தைக்கு
 அர்த்தம் தேடிக் கொடுக்காவிடினும்,
 அகராதியை அடையவாவது
 வழிகாட்டுவோமே
 அவர்களது தேடல்களுக்கு!

 மனக்கூட்டுக்குள் புதைந்துகிடக்கின்ற
 திறமைகளைஅறிந்து
 உயர உதவாவிடினும்,
 திரட்டி தூண்டிட
 பக்கம் இருப்போமே!

 வாழ்க்கை புதரிலிருந்து
 அவர்களை மீட்காவிடினும்
 அச்சம் தவிர்த்து மீளத்தவிக்கையில்
 துணை நிற்போமே!

 வாய்ப்புகளை கொடுத்து
 வாழ்க்கையை காட்டாவிடினும்
 வாய்ப்புகளை அறிய
 விரல் கொண்டு
 திசையையாவது காட்டுவோமே!

 தீண்டப்படாத தீக்குச்சிகளாய்
 சிறு கூட்டுக்குள்
 மடிந்து போகும் முன்
 தீண்டிட நம் விரல்கள் நீளட்டுமே!

~~~~****~~~~

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--1

நம்மோடு பழகுபவர்கள் தெரிந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும், உறவுகளாகட்டும் அனைவரும் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை பகிர்கையில் யாரிடம் பகிர்கிறோம், எதை பகிர்கிறோம், எப்போழுது பகிர்கிறோம் என்று எப்பொழுதும் கவனிப்போமே!

~~~~****~~~~

 இன்றைய அறிமுகங்கள்!

1.                     திண்டுக்கல் தனபாலன் அவர்கள் "சரியாச் சொன்னீங்க" என்று "அவை அறிதல்" என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களையும் உரையாடல்களாக சொல்லி இருப்பது அருமை, சிறப்பான செயலுக்கு என்ன தேவை? என்பது பற்றி அவரது வாழ்க்கை அனுபவங்களில் கற்றவையை கொண்டு அலசி சொல்லி இருப்பது அவசியம் படிக்க வேண்டியவை என்றே தோன்ற வைத்தது!

2.                  seshadri e.s அவர்களுடைய கவித் துளிகள் அழகு "தனிமை"-யின் இனிமை பற்றியும் ,"நம்பிக்கை கீற்று"-ல் உழவின் பெருமையை சொல்வதும் நீங்களே படித்துப் பாருங்களேன்!

3.                அருணா செல்வம் அவர்களுடைய கவிதை ஒன்றில் குழந்தையின் சிரிப்பை அழகாய் சதங்கை சத்தத்தோடு ஒப்பிட்டு சொல்லி இருப்பதும், "விளைத்தது விளையும்" என்ற நிமிட கதையின் கருவும், எதிர்ப்பார்க்காத திருப்பத்தோடான முடிவும் அருமை.

4.                சசிகலா அவர்கள் "எங்கெங்கு காணினும்" என்று வியாபாரமயமாக்கப்பட்ட கல்வியையும் அதன் தரத்தை பற்றியும், தமிழ் மொழியின் இன்றைய நிலையை பற்றியும் அழகிய நடையில் கவிதையாக சொல்லி இருக்கிறார்கள். "இருவரியில் ஒரு தேடல்" என்று வாழ்வின் அர்த்தங்களை இரு வரியில் அடக்கி சொல்லி இருப்பது அழகு!

5.                சந்திரகெளரி அவர்களது ஒரு குடும்பத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு யார் காரணமாக இருக்கிறார்கள், அதை தீர்ப்பதிலும் வராமல் தடுப்பதிலும் ஒவ்வொருவரின் பங்கும் என்ன? யார் குற்றவாளி? என்று ஒரு சூழ்நிலையை சொல்லி அலசி இருகிறார், ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியரின் பங்கு என்ன என்பதையும் மிக எளிய நடையில் சொல்லி இருக்கிறார்.

~~~~****~~~~

தவறுகள், பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே. மீண்டும் நாளை சந்திப்போம்!


மேலும் வாசிக்க...

கிறுக்கல்களும் நானும்! - யுவராணி தமிழரசன்

வருகை தரும் அனைவருக்கும் எனது வணக்கம்!


என் மீது நம்பிக்கை வைத்து பரிந்துரைத்து வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் , வாய்ப்பளித்த திரு.சீனா ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
               கிறுக்கல்களை ரசித்து வண்ணத்தீட்டல்களால் அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்திப்போகும் அழகிய ஓவியங்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும்!
           இங்கு என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள நான் யுவராணி தமிழரசன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தை சேர்ந்தவள்! (அதே சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்ந்த ஊரே தான்).பயில்வது இறுதி ஆண்டு முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல். 15 வயதில் கவிதைகளென கிறுக்க ஆரம்பித்து பின் கல்லூரி சேர்ந்த பிறகே கிறுக்கியதை செதுக்கி உயிர்பிக்க ஆரம்பித்தேன். உயிர்பித்து அறிமுகப்படுத்த தவித்திருக்கையில் தோழியின் சொல் கேட்டு வலையுலகத்தில் கால் பதித்தேன். இன்று ஓராண்டை கடந்து போகும் என் பதிவுலக பயணம் கற்றுக்கொடுத்தவை ஏராளம். தேர்ந்தெடுத்தது தகவல் தொழில் நுட்பத்துறை என்றாலும் எனது கனவுகளும் ஆசைகளும் அணைத்துக்கொண்டு அடையத்துடிப்பது வங்கித் துறையின் வேலைவாய்ப்பினை தான். 
             சரியான வழிநடத்துதலும் ஆலோசனைகளும் இன்றி வேறு துறையில் கல்வி பயின்றும் இன்றும் கூகிளின் துணையோடும் சில நட்பு வட்டங்களின் துணையோடும் முயற்சித்தும் என்னால் நான் விரும்பும் வங்கித்துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையா? இல்லை கிடைக்கும் வாய்ப்பினை எனதாக்கிக்கொள்ள தெரியவில்லையா? என அறியத்தவித்தும் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளாகத்தேர்வில் வேலை பெற்று இன்னும் சில மாதங்களில் வேலைக்குச் சேரப்போகிறேன். 
       நினைத்தது அனைத்தும் கிடைத்துவிட்டால் வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்பதில் எனக்கு என்றும் நம்பிக்கையுண்டு அதனால் சூழலுக்கு ஏற்ப வாழப்பழக எளிதாகும். மேலும் உகந்த உழைப்பின்றி கிடைக்கும் அனைத்து வெற்றிகளும் சந்தோஷத்தை அளித்தாலும் அது மேலும் அடுத்த கட்ட பயணத்தை தளர்த்தச்செய்து வெற்றிப்படிகளை விலக்கி வைக்கும்.
         அதனால் இப்போதைக்கு எதை பற்றியும் கவலைப்படாமல் நேற்று முடிந்த பரிட்சையோடு எனது இரண்டரை ஆண்டு முதுகலை பட்டத்தை முடித்துவிட்டு அடுத்த ஆறுமாதங்கள் செய்யவேண்டிய பிராஜக்ட் -க்கு நான் வேலைக்கு தேர்வாகி உள்ள நிறுவனத்தின் பதிலுக்காக காத்திருக்கிறேன் எனது கல்லூரி வாழ்க்கையின் கடைசி துளியை அனுபவித்தபடி.
   
அதிகம் படிக்கப்பட்ட எனது பதிவுகள் இதோ!




தவறுகள், பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே. எனது கிறுக்கல்களோடும், அறிமுகங்களோடும் நாளை சந்திப்போம்!
புகைப்படங்கள் இரண்டும் கூகிளில் இருந்து சுட்டவை! கூகிளுக்கு நன்றி!

மேலும் வாசிக்க...

Sunday, November 18, 2012

சென்று வருக மாலதி - ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! வருக ! யுவராணி தமிழரசன்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற மாலதி - கடும் பணிச்சுமைகட்கு நடுவேயும் தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி - நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் தொல்காப்பியரின் எட்டுவகையான  மனித  உணர்வுகளை  உள்ளடக்கும் நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் ,பெருமிதம் , வெகுளி உவகை   என்றதனை அடிப்படையாக வைத்து எட்டு இடுகைகள் இட்டு - ஏறத்தாழ நூற்றுப்பத்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார். 

இவர் அறிமுகப் படுத்திய பதிவர்கள் எண்பத்தைந்து. பதிவுகள் எழுபத்தேழு. 

இவரை நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் வலைச்சரம் சார்பாக மகிழ்ச்சி  அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் யுவராணி தமிழரசன். இவர்   சொந்த  ஊர் ஈரோடு.  வசிப்பதோ சத்தியமங்கலம். இறுதி ஆண்டு முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் பயில்கிறர்ர்.. ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் இளங்கலை கணிப்பொறி பயன்பாட்டியல் படித்து முடித்தவர். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் வளாகத் தேர்வின் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் சில மாதங்களில் பணியில் சேர உள்ளார்.! டெரர் கும்மியின் 2011 ஆம் ஆண்டின் போட்டியில் புது பதிவருக்கான இரண்டாம் பரிசினை வென்றவர். 

யுவராணி தமிழரசனை வருக ! வருக ! ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! வளமான கருத்துகளைத் தருக !  என நல்வாழ்த்துகளூடன் வரவேற்கிறேன். 

நல்வாழ்த்துகள் மாலதி

நல்வாழ்த்துகள் யுவராணி தமிழரசன்

நட்புடன் சீனா 




மேலும் வாசிக்க...

நேர்மையை முடமாக்கும் சமூக அமைப்பு

கடுமையான மின் 
தட்டுப் பாடு
வேலை  வாய்ப்பின்மை 
விலையேற்றங்கள் 
பெருக்கெடுக்கும் குடிகாரர்கள் 
.
மட்டரக சீனப்பொருட்களின் 
ஆக்கிரமிப்புகள் 

பொருளாதார 
சுரண்டல் 
உழைப்புச்சுரண்டல்  

பகைமையை வளர்க்கும் 
சாதி சண்டைகள் .

கையூட்டுகள் ...
அடிமைமுறைக் கல்வி ...
நேர்மையை முடமாக்கும் 
நாற்றமெடுக்கும் 
அமைப்புமுறை .

தமிழர்களின் 
உரிமைகளை 
நசுக்கும் வல்லரசியங்கள் 
பிறர் உழைப்பில் 
புரளும் பன்றிகள் .

இப்படி ...
இந்த அவலங்களை 
எல்லாம்  பார்த்து 
அருவருப்பு 
அடையவே  செய்கிறது .


    அன்பு  உறவுகளே  பணிவான வணக்கம் . இன்றைய இந்த இடுகையை  சிறப்பிக்கப்  போவது  எதுவென பார்ப்போமா?
என்னுடைய  இத்தனைநாள்  இடுகைகள்  தொல்காப்பியரின் எட்டுவகையான  மனித  உணர்வுகளை  உள்ளடக்கும் நகையே , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் ,பெருமிதம் , வெகுளி உவகை   என்ற  அப்பால்  எட்டும்  மெய்ப்பாடு என்ப  என்பார் தொல்காப்பிய மெய்ப்பாட்டில் அந்த  உணவுகளை  உள்ளடக்கிய  இடுகைகள்தான்  நமது  பதிவுகள் சரி  பதிவுகளை தொடர்வோமா ?

    இன்றைய தினமணி  கதிரில் 18/11/2012 ஞாயிறு  இதழில் இ  மெயிலைக்  கண்டுபிடித்த  தமிழர்  என்ற தலைப்பில் ஒரு சிறந்த கட்டுரை 2,3,4 ம்  பக்கங்களில்  தந்து இருக்கிறார்கள்  மிகசிறந்த   கடுமையான  போராட்டம்  அது மட்டும்  அல்லாது  அவர்கூறும்  நான் இ  மெயிலை  கண்டுபிடிக்க வில்லை  என்று  கூறும் காரணம்   என பட்டியல் இடும்   பொது  உண்மையில் நாம்   அவரின் பணிக்கு  உதவ வில்லையோ  என  தொன்று கிறது  அவருக்கு உதவ முயர்ச்சிப்போமே .


      தமிழ்ச் சமூகத்தின் சிறந்த  தளங்களில்  ஒன்றாக இருக்கும் ஒன்றைப்  பார்க்கப் போகிறோம்  பார்ப்போமா ?http://www.natpu.in/ இங்க  போய் பாருங்க  பல செய்திகள் கொட்டிக்  கிடக்கிறது .


அடுத்து  தமிழின் மிகசிறந்த  சேவையுடன் கூடிய  சிறந்த  பணியை  செய்து வரக் கூடியவர்  பொள்ளாச்சி  நடேசன்  உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர் இந்த உலகினுக்கு எதாகிலும் செய்ய வேண்டும் என  அர்ப்பணிப்புடன்  உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் புத்தகங்களை  நமக்கு அறிமுகப் படுத்தவும் இனிய தளங்களில்  பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் தந்து இருக்கிறார்  போய் பாருங்கள்  பயன் பெறுங்கள்  ஊக்குவியுங்கள் 


உலக அளவில் பாதுகாக்கப்பட்ட பட்டியல் காணச் சொடுக்கவும்

மேலேயுள்ள பட்டியலைப் பார்த்து அதில் விடுபட்ட இதழ்கள் 
அல்லது நூல்கள் உங்களிடம் இருந்தால் தொடர்பு கொள்ளவும். 

அன்புடன் 
தமிழ்க்கனல் - தமிழம்.வலை ( http://www.thamizham.net )



 பூனைக்கு மணி கட்டுவது யார்  என ஒரு இடுகை  இதுவும்  விழிப்புணர்வூட்டும் வலைப்பூவாக  தெரிகிறது  பாருங்க http://nijampage.blogspot.in/2012/11/blog-post.html

மூன்றே நிமிடங்களில்  ஒரு ஆணை நல்லவனா கெட்டவனா  என்பதை அறிந்து கொள்ள இயலுமா  என கேட்கிறது ஒரு இடுகை போய் பாருங்களேன்http://iravinpunnagai.blogspot.in/2012/06/blog-post_29.html

குங்குமத்தால்  உண்டாகும் பலன்கள்  என ஒரு இடுகை  குங்குமம்  எப்படி செய்வது என்பதைக்  கூட கற்றுத் தருகிறது  http://vidhoosh.blogspot.in/2012/08/blog-post_30.html

 கூடங்குளம்  நாம் எல்லோரும் கேள்விப் பட்ட பெயர் ஆனால் அங்கு என்ன  நடக்கிறது  யாருக்கும் தெரியாது  திரிந்து கொள்ளலாமா ?http://asiya-omar.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA.%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

பேனா  முனைப் போராளி  என ஒரு இடுகை  சொல்லுதுன்னு போய்  பாருங்களேன்  http://2008rupan.wordpress.com/2012/03/29/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/

  இனவுடன் இந்த இடுகையில் ஒரு கட்டுரை  தலைப்பை பார்த்து சிரிக்காதீங்க http://tamilanveethi.blogspot.in/2009/08/blog-post_1628.html  வெளி நாட்டு தொழில்கள்  நம்ம நாட்டுக்கு வருவது  நல்லதா கெட்டதா  என்ன  வில்லையா  நல்லது  தானே  வேலை கிடைக்கிறது  அப்படின்னு  சொல்லும்  அறிவாளிகளுக்கு இது http://tamilanveethi.blogspot.in/2011/08/prostitution-in-sriperumbudur.html தமிழில்  தலைப்பெழுத்தை  வேண்டும்  ஏன் http://tamilanveethi.blogspot.in/2011/08/blog-post_17.html

இரண்டு இரண்டகர்கள்  அப்படின்னு ஒரு பதிவு  உண்மையை கற்பனையா  சொல்லப் பட்டதா கற்பனைவடிவில் உண்மையை  சொல்லப் பட்டதான்னு  எனக்கு தெரியவில்லை  உங்களுக்கு தெரிந்தால்  அருள் கூர்ந்து  சொல்லுங்க http://irumpuli.blogspot.in/2011/11/blog-post.htm

     நான்கே  வரிகளில்  காதலை  உணர்வு  அடிப்படையில் அழகுற  தருகிறார் அதுமட்டும் அல்ல  உலக வெப்பத்தை  பெருகுவதை அழகுற சிட்டும் விதம் சிறப்பு  இங்க போய் பாருங்க http://anbudannaan.blogspot.in/search/label/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

 இங்கும்  காதல் கவிதைகள்  கொட்டிக் கிடக்கிறது   இங்கு போய் பாருங்களேன் http://www.shanthru.com/2010/05/blog-post_16.html 

    எனக்கு  நேரமின்மை  அதனால்  இன்னும் நிறைய  பதிவுகளை  அறிமுகப் படுத்த வேண்டும்  என எண்ணினேன்  நேரம் இல்லை  எவரையும்  தவிற்க  வேண்டும் எனற  எண்ணம்  எள்  அளவும்  இல்லை  எனது பார்வைக்கு வராமல் போய் இருக்கலாம்  அல்லது  பார்வையில் படாமல் போய் இருக்கலாம்  அல்லது நினைவில் இல்லாமல் போய் இருக்கலாம்  அருள் கூர்ந்து பிழை இருப்பின் பொறுத்து அருள்க ...  மீண்டும் ஒரு பணிவான  வணக்கம்  இத்தனைநாள்  உங்களோடு  பேசியது சிறந்த புதிய  பட்டறிவைத் தந்தது பலரின் பாராட்டுகளும் சிலரின் அன்பான கண்டிப்புகளும் என்னை செழுமைப் படுத்தியது நீண்டகாலம் எல்லோரும் ஒரே வீட்டில் வாசித்தபின்  பிரியும் பிரிவுபோல்  இருக்கிறது  வந்த  அனைவருக்கும் கருத்துகளை  தெரிவித்தவர்களுக்கும்  பணிவான நன்றியும்  பாராட்டுகளும் இதுவும்  என் வரலாற்றில்  தொடரும் பயணத்தில் இடம் பெரும்  உங்களின்   அனைவ வரையும்  வணங்கி விடைபெறுகிறேன் .நன்றி  வணக்கம் .வாய்ப்பு வழங்கிய ஐயா  சீனா  அவர்களை வணங்கி மகிழுகிறேன் 

விடைபெறுகிறேன் நன்றி 
வணக்கம் .
தமிழன்புடன் 
மாலதி.    
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது