07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 24, 2013

கோவையிலிருந்து அகிலா – 6

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை

தொட்டு செல் காற்றே
உரசினால் பற்றிக் கொள்வேன்
நான் பெண்....

எழுத்தும் அதன் அழகும் : வரலாறு
கடந்தகால நிகழ்வுகளைக் குறிக்கும் இலக்கியமே வரலாறு என்றாலும் அதிலும் புனைவுகள் அதிகமே. அதன் எழுத்துக்களில் தான் சமுகத்தில் நிகழும் பொருளியல் மற்றும் மனித இனத்தின் பண்பாடு முதலியவை அறியப்படுகின்றன. வளரவும் செய்கின்றன. நம் கருத்துக்களை வலியுறுத்தவும் வரலாற்று வாதமே பயன்படுகிறது...  .

இன்று நான் விரும்பிப் படித்த பதிவுகளின் அறிமுகங்கள் 

ஜெயராம் தினகரப்பாண்டியன்

மழை, கண்ணாடி, தளிர் என்று படிமங்களை கவிதையில் வடித்திருக்கிறார் நல்லவன் என்னும் இவரது வலைப்பூவில். அனாதை எழுத்துக்கள் எண்ணும் பதிவில் வாசிக்கபடாத புத்தகங்களின் நிலையையும் அதன் எழுத்தாளர்களின் உணர்வையும் அருமையாக வடித்திருக்கிறார்.  
வீழாதே என்னும் கவிதையில்,

பகலும் முடியும் 
இரவும் விடியும் 
தோல்வியும் உரமாகும் 
வெற்றியின் விதைக்கு 

என்று நம்பிக்கை ஊட்டுகிறார். நன்று... 


சிதம்பரநாதன்  

மிக யதார்த்தமான எழுத்துக்களில் பரிச்சை எழுத ஜீன்ஸ் பேன்ட் போட அனுமதியில்லாதது, 
சென்னை அங்காடித் தெருவின் அடிமை விலங்குகள்
என்று அக்கறையுடன் தன் கண்முன் நடப்பவைகளை வாசித்துச் செல்கிறது 
இவரது சிதம்பரநாதனின் வலைப்பூ... தொடருங்கள்...


அருள்செல்வ பேரரசன்

கணணி தொழில்நுட்ப வேலைகளை செய்வது எப்படி என்பதைக் குறித்த பதிவுகள் இவருடையது. 

நல்ல போடோஷாப் டிசைனராக வர என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என தெளிவாகக் கூறியிருக்கிறார். பிளண்டிங், பில்டர் கேலரி போன்ற நுணுக்க வேலைகள் பற்றி எழுதியிருக்கிறார். 

தமிழ் கீபோர்ட்டை நாமே உருவாக்குவது பற்றியும் சொல்லிச் செல்கிறார் தன் அரசன் வரைகலை தளத்தில்...


ஒளவை

கவிதையும் அறிவியலும் கணிதமும் கலந்துகட்டி இருக்கிறது ஒளவையின் உளறல்கள் வலைப்பூவில். எழுதுபவர் கணிதப் பேராசிரியை அல்லவா.

பாறையின் வகைகள் பற்றி ஒரு பதிவில் தீப்பாறை, உருமாறியபாறை, படிவப்பாரை என்று எல்லாம் பிரித்து எழுதி அதை கவிதையிலேயே விளக்கி விட்டு முடிவில் கருத்தும் சொல்லியிருக்கிறார்.

கோடையை பற்றிய கவிதையொன்று...

எப்போதோ ஈரங்கண்ட கரிசக்காட்டுப் படிவு
பாய்போல் சுருண்டு பிளந்த வெடிப்பில்
நொடுக் வெடுக் கென்று கேட்ட சப்தம்
நடக்கையில் சுட்டபடி கோடையிது என்றது


படிக்கும் போதே சுடுகிறது. அருமை... 



ஷாஜஹான்

எது தேசிய கீதம் என்னும் பதிவில் வந்தே மாதரம், ஜனகண மன போன்ற பாடல்கள் தோன்றிய வரலாறு, அவற்றின் சுதந்திர போராட்ட பின்னணி போன்றவற்றைத் தெளிவாய்ச் சொல்லி ஜன கண மன வே தேசியகீதம் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.  

எண்களின் வலைகளில் என்னும் கவிதை என்னை ஆச்சிரியப்படுத்தியது. 

மதிப்பெண் வைத்தே மாணவர் திறமை
பிரதிகள் வைத்தே நாளிதழ் பெருமை
வண்ணங்களை வைத்தே இதழ்களின் பெருமை
பார்ப்பவர் எண்ணிக்கை சானலுக்குப் பெருமை


என்று அடுக்கிக் கொண்டே போகிறார். சுவாரசியமான அதே சமயம் கனமான எழுத்து.இந்த புதியவன் பக்கம் வலைப்பூவில்... 





என்றும் இனியவை இந்த பதிவுகள்
படித்து சந்தோஷமா இருங்க...

நாளைக்கு வரேன்...

மேலும் வாசிக்க...

Friday, August 23, 2013

கோவையிலிருந்து அகிலா – 5

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை

சிறு கூழாங்கல்லை
அன்பானவளின் கீழ் வைக்கும்
அந்த பனிப்பறவையின் காதல்
அடுத்த பிறவியை நம்பச் சொல்கிறது....


எழுத்தும் அதன் அழகும் : இயல்பு
இயல்பாய் இருக்கும் அனைத்தையும் அதன் போக்கிலேயே சொல்லி செல்லும் எழுத்துக்கள் என்றுமே அழகானவை. இயற்கை, மனிதர்கள், அவர்களின் மன உணர்வுகள் எல்லாவற்றையும் சிறிது கற்பனையுடன் வடித்து படைக்கும் படைப்புகள் பாராட்டுக்குரியவை.  .

இன்று என் மனதுக்குப் பிடித்து படித்த சில பதிவுகளைப் பார்ப்போம். 


அன்புடன் மலிக்கா 

அழகான கவிதைகளுக்குச் சொந்தக்காரர் இவர். கல்வி என்பது வியாபாரப் பொருளாய் மாறிவிட்டதை சமூக அக்கறையுடன் சொல்கிறார் அன்புடன் மலிக்கா (மலிக்கா ஃபாரூக் ) அவர்கள். 

கட்டு கட்டா நோட்டக்காட்டி
கல்வி கண்ணக்கட்டி
கலர்கலர் கனவுகாணும்
வயிற்றில் நெருப்பைக்கொட்டி
பட்டப்படிப்பு படிச்சி முடிக்க
வயல்வரப்ப வித்துக்கட்டி
பதபதைக்க வைக்குதே கல்வி
பச்சோந்தி பவிசு காட்டி!

மற்றுமொரு கவிதையில் வெற்றியையும் தோல்வியையும் தோல்வியின் கையில் வெற்றி மாலை என வித்தியாசமாக கவிதை தொடுத்திருக்கிறார் இவரது வலைப்பூவான நீரோடையில்...இன்னும் நிறைய கவிதை சுவாசியுங்கள் தோழி...


கலாகுமரன் 

நுண்ணிய விவரங்களை எழுத்தில் வடிக்கும் வல்லமை படைத்தவர் என்பதை இவரின் பதிவுகளில் காணலாம். குகை ஓவியங்கள் பற்றிய பதிவில் பழைய காலத்தில் பிரான்சில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களைப் புகைப்படங்களுடன் பதித்திருக்கிறார். 

வான்கா, ஒகம்போ , பிக்காசோ  போன்ற ஓவியர்களின் வரலாற்றை வரைந்திருக்கிறார் புகைப்படங்களுடன் எழுத்துக்களில் கலாகுமரன் தனது வலைப்பூவான இனிய ஒவியாவில்...வாழ்த்துக்கள்...
  

சக்திபிரபா

நிறைய நினைவுகளின் தடங்கள் இவரின் பதிவுகளில். இவரின் முதல் முதல் படித்த இந்துமதி சுஜாதா என்னும் பதிவு என் சிறுவயது புத்தக அனுபவத்தையும் சற்று நினைவுப்படுத்தியது. பள்ளி நினைவுகள் அழகான பள்ளி நினைவுப் பாதையாய் மிளிர்கிறது இவரது மின்மினிப்பதிவுகள் என்னும் வலைப்பூவில்...எழுத்தைத் தொடருங்கள் தோழி... 



இந்தியன்

ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசையில் A வரிசை முதல் Z வரிசை வரை தமிழ்ச் சொல்லாக்கம் கொடுத்திருக்கிறார். 
வீடியோ என்பதற்கு விழியம், சாப்ட்வேர் என்பதற்கு சொவ்வறை என்றும் அழகான ஒரு தொகுப்பு
மொத்தமாய் 1910 சொற்கள் தமிழ்ச் சொல்லாக்கம் என்னும் இந்த வலைப்பூவில்...
நன்று...


அபுல் கலாம் 

கலாமின் கவிதைகள் என்னும் இவரின் வலைப்பூவில் வளைகுடா வாழ்க்கை கவிதையாய்...அது வரமா சாபமா என்றே கேட்டிருக்கிறார். உண்மைதான்...

அம்மா என்னும் அன்பை நேசி என்னும் கவிதையில்

அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால்
......
அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்

என்று அழகாய் சொல்லிச் செல்கிறார்...இவரின் கவிதைகள் நேர்த்தியான ஒரு வாழ்வு முறையை சொல்லிச் செல்கின்றன....வாழ்த்துக்கள்...




படிச்சுப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க...
சந்தோஷமா இருங்க...
நாளைக்கு வரேன்...








மேலும் வாசிக்க...

Thursday, August 22, 2013

கோவையிலிருந்து அகிலா – 4

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை

உதிர்ந்து போன குல்மோகர் பூக்களை
தொட்டு சென்ற மழை நீரால்
சிவப்பாய் சாலை...


எழுத்தும் அதன் அழகும் : இயற்கை
இயற்கையை அதன் தன்மையோடு மட்டுமே வடித்தல் இயலாது. அலங்காரமான இலக்கியம் தான் இயற்கை பற்றிய எழுத்துக்களுக்கு ஒத்துப் போகும். அவற்றின் வருணனை பூசிய வார்த்தைகள் நேரில் பார்க்கும் நிஜத்தைவிட அழகாக பரிணமிக்கும்.

இனி இன்று என் மனதுக்குப்பிடித்து பதிந்த சில பதிவுகளைப் பார்ப்போம். 

பதிவர் தி. தமிழ் இளங்கோ தனது வலைப்பூவான 'எனது எண்ணங்கள்' களில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துமனையாய் இருந்தாலும் அங்கு இருக்கும் கவனிப்பு முறை நேர்த்தியாக இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார். 
கோவில் கொடைகளின் அன்னதானம்  செய்யும் முறையின் பயன்களைச் சொல்லும் பதிவும் இவருக்கு சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுகிறது.
 பழைய ரயில்வே கேட் பதிவில் நினைவில் நிற்பவைகளையும் சுவாசித்திருக்கிறார். 


பதிவர் ராம்குமார் அவர்கள் தனக்கு தானே ரசித்து எழுதிய எழுத்துகளை வாலியும் நானும்  பதிவிலும், அருமையாகப் புரணி பேசுவதை நீ முதலில் யோக்கியமா பதிவிலும் சொல்லுகிறார் சிவகாசிக்காரன் என்னும் தன் வலைப்பூவில்... 


பதிவர் ரூபக் ராமின் கையேந்தி பவன், ரோட்டோரக் கடைகளின் சாப்பாடு பற்றிய பதிவு அருமை. திருவான்மியூர் ஆர் டி ஓ சாலையில் ஒரு உணவு வேட்டை நடத்தியதை கலக்கலாக எழுதியிருக்கிறார் இவரது வலைப்பூவான கனவு மெய்ப்படவில். சுவாரசியமான பதிவுகள் ...


பதிவர் ராமன் படங்களைக் பழமொழிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லி விடுகதை வைத்திருக்கிறார். அடுத்த பதிவில் அதற்கு விடையும் கொடுத்திருக்கிறார் இன்றைய அரசியல் பொருளாதாரத்தை எண்ணிப் பார்ப்பதில்லை என்று கவலையும் படுகிறார் இவரது வலைப்பூவான ஒரு ஊழியனின் குரலில்...


சந்தோஷமா இருங்க...
நாளைக்கு வரேன்...



மேலும் வாசிக்க...

Wednesday, August 21, 2013

கோவையிலிருந்து அகிலா – 3

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை...

எடை குறைந்திருக்கிறேனாம்...
எடுத்துச் சென்ற இதயத்தை
விட்டுச் செல்...


எழுத்தும் அதன் அழகும் : யதார்த்தம்
யதார்த்தங்களைத் தொட்டு எழுதப்படும் எழுத்துக்கள் அதிகமாய் மக்களை ஈர்க்கும். அவை நாம் வாழும் சமுகத்தை அதன் மக்களை அவர்களின் வாழ்வியலைப் பற்றி அதிகமாய்ப் பேசும். அந்த எழுத்து வாசகனின் மனதில் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கும். கவிதை நடையில் எழுதப்பட்ட யதார்த்தங்கள் எளிதாய் புரிந்துக் கொள்ளப்படும்.     


எனக்கு அறிமுகத்தில் பிடித்த சில பதிவுகள் உங்களுடன் பகிர்கிறேன்... 

உதயசங்கர் 
எழுத்தாளர், கவிஞர் என்பதால் உதயசங்கர் அவர்களின் பதிவில் கவிதை மணம். 
நடப்பதொன்றே என்னும் கவிதையில் பயணத்தை பந்தயமென்று பிழைத்தவனில்லை நான் என்கிறார். எழுத்தின் வாசனை எங்கும் இவரது கரிசக்காடு வலைப்பூவில்...
புதிது என்கிற கவிதையில்,

இன்று
அந்த மரத்தின் இலைகள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
மௌனமாய் இருக்கிறது மரம்
மௌனம் மரணமல்ல
தியானம்

என்று மௌனம் பேசுகிறது...


மன்னார் அமுதன் 

தந்தையாயிருத்தல் என்னும் ஒரு கவிதை போதும் மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூவில். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தந்தைக்கும் மகனுக்கும் ஆன உறவை மன்னார் அமுதன் அருமையாக விவரித்துள்ளார். 
நல்லுமரமும் ராசாதிண்ணையும் கவிதையில் ஆழம் மனதை தொடுகிறது.  
சரவணகுமரன்

தலைவா படவிமர்சனம், அமெரிக்காவின் 911 எண் பற்றியும் அதனால் அவரின் வீட்டில் நடந்த அனுபவத்தையும் சாதாரணமாந எழுத்துக்களில் பதித்திருக்கிறார் குமரன் குடில் என்னும் தன் வலைப்பூவில்...


சோபியா அன்டன்

குழந்தைகளின் வளர்ப்பு பற்றியும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் தூக்கம் கொள்ளும் வழிகளையும் இந்த பதிவில் அறிவுறுத்தியிருக்கிறார். 
அம்மாவாய் தன் கடமையை செய்வதுதான் மிக முக்கியம் என்று டாக்டருக்குப் படிப்பதுப் போல் பெற்றோருக்கும் படிக்க வேண்டும் என்கிறார் தன் சிறுவர் உலகம் வலைப்பூவில்....அழகான அம்மா...


பாஸ்கர் லக்ஷ்மன்

ஒரு வாசகனாக பல நூல்களைப் படித்து அவற்றை அழகாய் அலசி இருக்கிறார், புதிய எழுத்தாளர்கள் ராஜ கோபாலன், சுனில் கிருஷ்ணன் ஆகியோரின் கதைகளை விமர்சித்திருக்கிறார். இலக்கிய செய்திகளைத் தொகுத்து அளித்திருக்கிறார். கணிதம் படித்ததால் கணிதப் புதிர்கள், ஜெனோவின் முரண்படு மெய்மை, இன்னும் கணிதம் கொட்டிக்கிடக்கிறது இவரது ஜன்னல் வழியே வலைப்பூவில்....

  


சந்தோஷமா இருங்க...
நாளைக்கு வரேன்...






மேலும் வாசிக்க...

Tuesday, August 20, 2013

கோவையிலிருந்து அகிலா – 2

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை...

நீலம் மாறிய காலை வானம்...
மழையின் தூவல்களில் மரங்களின் ஆர்ப்பரிப்பு...

நட்டு வைத்த ரோஜா மட்டும்
என் கைப்படாத நீரில்
நனைந்து கொண்டிருப்பதாய்க்
கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது

எழுத்தும் அதன் அழகும் : கற்பனை
நம் எழுத்துக்கள் அனைத்தும் வாழ்க்கையின் பதிவுதான். என்ன, கூடவே கொஞ்சமாய் கற்பனையை மையில் தொட்டிருப்போம். கற்பனைவாதம் கலந்த அந்த எழுத்துக்கள் உணர்வுகளை அதிகமாக மொழியின் மேல் உடுத்தி அழகுப் பார்க்கும். அவற்றின் வடிவங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்துவதில்லை. இருந்தும் நமக்கு அவையே மிகவும் பிடித்தவைகளாகிப் போகின்றன.

இன்றைய அறிமுகத்தில் எனக்கு பிடித்த 
சில பதிவர்களும் அவர்களின் வலைப்பூக்களும்   

பதிவர் : இரத்தின புகழேந்தி

பதிவு 1 : இரத்தின புகழேந்தி

முதுகலை ஆசிரியர் தேர்வு விடை - 2013,
கருத்தரங்கம், கதை என்று
களமிறங்கி கலக்கியிருக்கிறார்

பதிவு 2 : மண்கவுச்சி
வே சபாநாயகம் பற்றிய குறிப்பு,
சடுகுடு விளையாட்டு, நாட்டுப்புறக் கதைகள்
தெருக்கூத்து என்று தமிழின் பண்பாட்டின் வேர்களைத் தொட்டிருக்கிறார்
பழமையான நிறையக் கருத்துக்களை நம்முள் பதிக்கிறார்....

பதிவு 3 : நாட்டுப்புறம்

மழவருது மழவருது
நெல்லு அள்ளுங்க
முக்காப்படி அரிசி எடுத்து
முறுக்கு சுடுங்க
ஏரு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க
சும்மா இருக்குற மாமனுக்கு
சூடு வையுங்க..

இப்படி அழகான நாட்டுப்புற பாடல்களை
அள்ளித் தெளித்திருக்கிறார்...
இப்படி எழுதிக் கொண்டேயிருக்க
நேரத்தை அவரிடம் கடன் வாங்க எண்ணியிருக்கிறேன்...


பதிவர் : கௌசல்யா ராஜ்

பதிவு 1 : மனதோடு மட்டும்

காதல், கல்யாணம். சமூகம் என்று கலக்கலாய்
வலம் வந்திருக்கும் கௌசல்யா ராஜ்
நெல்லைத் தமிழை சுத்தமாக வாசித்திருக்கிறார்...


பதிவர் : மாதேவி

பதிவு 1 : சின்னு ரேஸ்ரி

வித்தியாசமான சமையல் குறிப்பு பதிவுகள்
கோழி சமையலுக்காக
கோழி முதல் கோழி குஞ்சு வரை
படம் பிடித்துப் போட்டு
சமைத்தும் காட்டிவிடுகிறார் அழகாக...

பதிவு 2 : ரம்யம்

கொலம்போவின் சுற்றுலா தளங்களை
நமக்கு சுற்றிக் காட்டிவிடுகிறார்...
கசுரீனா பீச், நுவரெலியா விக்டோரியா பார்க்
இன்னும் எத்தனையோ இடங்களை
அழகான புகைப்படங்களுடன்
அதிகமாக எழுத்துக்களை சிந்தாமல்
அளவாய் எழுதி நம்மை மகிழ்விக்கிறார்...


பதிவர் : ஜீவன்சுப்பு

பதிவு : வண்ணத்துப்பூச்சி

மாமியாரின் இறப்பு ஆகட்டும் காதல் கடிதம் ஆகட்டும்
அழகாக சொல்லிச் சென்றிருக்கிறார் வார்த்தைகளில்.
கவிதை எழுத வரவில்லை என்று சொல்லியே
எழுத்தையே கவிதையாக்கிவிட்டார்...


பதிவர் : எஸ் ஆர் சேகர்

பதிவு : சந்தனச் சிதறல்

அரசியல் அவ்வளவாய் என் விருப்பத்தில் இல்லை
வலைப்பூவின் தலைப்பு என்னை இழுத்ததேன்னவோ உண்மை
உள்ளே நுழைந்தால் அரசியல் அலசல்
தனக்கு சரியெனப்பட்டதை
வம்பில்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார்...நன்று...  



படிச்சுப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க...
சந்தோஷமா இருங்க...
நாளைக்கு வரேன்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது