மாலை வணக்கம்
நண்பர்களே.. இதோ எனது பணி தொடங்குகிறது.
இம்முறை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளை (Theme) மையமாக வைத்து நான் ரசித்த பதிவர்களையும்
இடுகைகளையும் அறிமுகம் செய்யலாம் என்று யோசித்துள்ளேன்.
டைட்டில்லயே
தெரிஞ்சிருக்கும். இன்றைய ஸ்பெஷல் என்னவென்று.
ஆம் பயணம்.
ஒரு பழைய
எம்.எஸ்.வி பாட்டு “பயணம், பயணம்” னு ரயிலின் பின்னணியில் ஒலிக்கும். அந்தப் பாடலை
மனதுக்குள் கேட்டபடி படிக்கத் தொடங்குங்கள்.
கோடை விடுமுறை
அனேகமாக இன்னும் பத்து நாட்களுக்குள் முடிந்து விடும். அதற்குள் எங்காவது செல்ல
வேண்டுமானால் பல பதிவர்களின் அனுபவங்கள் உங்களுக்கு உதவக் கூடும்.
பூலோக
சொர்க்கம் என்று காஷ்மீர் அழைக்கப்படுவது நியாயம்தான் என்று புகைப்படங்களோடு தனது
அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் நண்பர் என்.கணேசன். மணிரத்னம் படத்தில்
காண்பித்தது போல இப்போது துப்பாக்கிச் சூடோ இல்லை குண்டு வெடிப்புக்களோ இல்லை
என்று தைரியம் தருகிறது அவரது அனுபவம்.
இந்தியாவின்
சிற்பங்களுக்கு ஈடு இணை கிடையாது. ஆனால் சரியான மார்க்கெட்டிங் இல்லாததால் இந்திய
மக்கள் பலருக்குமே பல கலைப் பொக்கிஷங்களைப் பற்றித் தெரியாது. ஆந்திராவின்
லிபாக்ஷியில் உள்ள சிற்பங்களைப் பற்றி திரு பிரகாஷ் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளார்.
திரு மு.ரமேஷ்
அவர்களின் பல்லவர் கால அய்யனாரின் சிற்பத்தைப் பார்க்கச் சென்றதையும்வரலாற்றுப் புதையல் என்ற இந்த இணையதளத்தில் படித்துப்
பாருங்கள்.
கடந்த வாரம்
ஒரு நாள் இரவு வேளையில் புறப்பட்டு நெய்வேலி சென்றிருந்தேன். அப்போது திருவண்ணாமலையில்
கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தேன். ஏன் என்பதற்கான காரணத்தை
திரு எஸ்.அருண்குமார் அவர்களின் பதிவில் படித்தால் உங்களுக்கே நன்றாக புரியும்.
திரு கிரி அவர்களோடு நாமும் மசினகுடி சென்று யானைகளையும்
மான்களையும் பார்த்து வருவோம்.
கோவா
செல்பவர்கள் அங்கே கப்பலில் நடக்கும் இசை நிகழ்வை தவறக் கூடாது என்று அழுத்தமாக
சொல்கிறார் வீடு திரும்பல் மோகன் குமார். மாண்டோவி நதியினில் நடைபெறும் இந்த பயணம்
சுகமானதுதான். 1988 ம் வருடம் நெய்வேலி கிளையில் பணியாற்றிய
பத்து பேர் கோவா சென்றோம். அது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு
பேக்கேஜ் டூர். River Bridge
என்று பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று எங்களோடு
வந்த கைட் கலியபெருமாள் சொல்லிக் கொண்டே இருந்தார். கோவாவின் பாரம்பரிய நடனம்,
போர்ச்சுகீசிய நடனம் என்று அமர்க்களமாக இருந்தது. ஆனால் நான்கு வருடங்கள் முன்பாக
சென்ற போது River
Cruise என்ற பெயரில் அந்த பாரம்பரிய நடனம்
மேற்கத்திய இசைக்கான நடனமாக மாறி அதன் ஜீவனை இழந்திருந்தது.
பனிக்கட்டிகளை
கையிலேந்தி மகிழ்ச்சியோடு புகைப்படத்தில் காட்சி தருகிறார் செம்புலியன் தனது சிம்லா குஃப்ரி பயணத்தில். குதிரைகள் மீதமர்ந்து அங்கே சென்ற அனுபவம் எனக்கும்
உண்டு. கிடு கிடு மலைப்பாதையில் இரு குதிரைகளில் நானும் என் மனைவியும் செல்ல
அவற்றை ஒரு குதிரையோட்டி பிடித்து வர முன்னே இரு குதிரைகளில் எனது மனைவியின்
தங்கையும் அவரது கணவரும் செல்ல, அந்த குதிரையோட்டி கயிற்றை விட்டு விட்டு ஹாயாக
நடந்து வந்தார். சப்தம் போடவும் அச்சம். குதிரை மிரண்டு விட்டால் என்ன செய்வது?
ஆழமான பள்ளம் அல்லவா? இதயம் பக்பக் என உயிரை கையில் பிடித்தபடி மேலே சென்றோம்.
ஆனால் அப்போது பனிப் பொழிவு இல்லாததால் குளிரில் நடுங்கினோமே தவிர தூரத்தில்
இருந்த இமயமலைச் சிகரத்தில்தான் வெண் பனியை பார்க்க முடிந்ததே தவிர அது நம் கைவசம்
வரவில்லை.
திடங்கொண்டு
போராடு வலைப்பக்கத்தில் கொடைக்கானல் நோக்கி புறப்பட்டவர் இன்னும்
கும்பக்கரை அருவியிலேயே நிற்கிறார். எனது ஒரு வாரப் பணி முடியும் முன்பு கொடைக்கானலை
வந்தடைந்து விடுவார் என்று நம்புகிறேன். இழந்து வரும் வயல் வெளிகளைப் பற்றி அவர்
கூறியுள்ளது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நம்மை விட மிக முக்கியமாய் அரசுகள்
சிந்திக்க வேண்டும்.
சமீபத்தில்
நான் சென்ற ஒரு சுற்றுலா பற்றி இங்கே பாருங்கள். முடிந்தால் செல்லுங்கள். இந்த ஏரி
மற்றும் ஒரு பூங்கா அவ்வளவுதான். அதற்கு மேல் வேறு எதுவும் எதிர்பார்க்காதீர்கள்.
இந்த
இன்பச்சுற்றுலாக்களோடு நிறைவு செய்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கை
இன்பம் மட்டும் கிடையாதே. எல்லாம் கலந்துதானே?
இயக்குனர்
சுகா பதிவு செய்த இந்த பயணம் உங்கள் மனதையும் கொஞ்சம் பாதிக்கும், என்னைப் போல.
நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...
சில தினங்கள் முன்பாக ஐயா அன்பின் சீனா அவர்களின் மின்னஞ்சல்
ஒரு இன்ப அதிர்ச்சியை சுமந்து கொண்டு வந்தது. வலைச்சர வாசகர்களின் அன்பையும் சுமந்து கொண்டு வந்தது என்றும்
சொல்லலாம்.
பதினைந்து மாதங்களுக்குப் பின்பு மீண்டும் வலைச்சர ஆசிரியர்
பொறுப்பு கிட்டியிருப்பது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவே
பார்க்கிறேன்.
கடந்த முறை ஆசிரியப் பொறுப்பு பல அனுபவங்களையும்
பல புதிய நட்புக்களையும் கொண்டு வந்து சேர்த்தது. எனது
வலைப்பக்கத்தின் ஆயிரமாவது பதிவை எழுதுகையில்
வலைப்பக்கத்தால் கிடைத்த மிகப் பெரிய பெருமைகளில்
ஒன்றாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றது என்பதை
குறிப்பிட்டிருந்தேன்.
இந்த பதினைந்து மாத இடைவெளியில் நிகழ்ந்துள்ள
சில இனிய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
எங்களது வேலூர் கோட்டச் சங்கத்தின் 25 வருட இயக்கங்கள்
தொடர்பாக நான் எழுதிய நூலை எங்களது சங்கத்தின்
அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் வெளியிட்டு
சிறப்பு சேர்த்தார்.
மூன்று சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. மிகுந்த சர்ச்சைக்குள்ளாகிய
ஒரு கட்டுரை குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியானது. அதைப்பற்றி
பிறகு பார்ப்போம்.
எனக்கு நானே நிர்ணயித்துக் கொண்ட இலக்கான ஐம்பது முறை
ரத்த தானம் என்பதை அடைந்ததே இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த
மனதிற்கு மகிழ்ச்சியளித்த செயல் என கருதுகிறேன்.
இத்துடன் சுய அறிமுகத்தை நிறுத்திக் கொள்கிறேன்.
மாலை ஆசிரியர் பொறுப்பை துவக்குகிறேன். நான் ரசித்த பல
இடுகைகளோடு சந்திக்கிறேன்.
வணக்கம்.
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆர்வமுடன் ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த ஆண்டிச்சாமி அவர்கள் தமது பணியை திறம்படவும், ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் செய்து முடித்து நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
அவர் கீழ்கண்ட தலைப்புகளில் ஐந்து பதிவுகள் வரை எழுதியுள்ளார்.
ஆண்டிச்சாமி ( கிலாடி ரங்கா ) என்னைப்பற்றி, பதிவுலகில் என் மானசீக குரு , வளர்ந்து வரும் இளம் சினிமா பதிவர்கள், சிறுகதை எழுத்தாளப் பதிவாளர்கள், வலைச்சரத்தில் கடைசி நாள்.
அவருக்கு கிடைத்த மறுமொழிகள் : 055
பக்கப்பார்வைகள் : 1091
திரு ஆண்டிச்சாமி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க
ஒரு ஊழியனின் குரல்
என்ற வலைப்பூவை எழுதி வரும் பதிவரை அழைக்கின்றோம்.
இவரது பெயர் : சுவாமி நாதன் இராமன் இவர் 28 ஆண்டுகளாக எல்.ஐ.சி ஊழியராக பணியாற்ருகிறார். . தொழிற்சங்க இயக்கத்திலும் அதே அனுபவம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்டப் பொதுச்செயலாளர் பொறுப்பில் 15 ஆண்டுகளாக செயல்படுகிறார். . இவர் அரசியல் கருத்துக்களைச் சொல்வதற்காகத்தான் வலைப்பக்கம் எழுதத் தொடங்கினாலும் கவிதைகள் எழுதுவதும் இணைந்து கொண்டது.
மார்க்சியமே வெல்லும் என்ற உறுதியோடு பயணிக்கிறார்.
” ஒரு ஊழியனின் குரல் “ வலைப்பூ பதிவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்....
நல்வாழ்த்துகள் ஆண்டிச்சாமி
நல்வாழ்த்துகள் சுவாமிநாதன் இராமன்.
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...
கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான பணிச்சுமையினால் பதிவிட முடியாமல் போனதற்கு நண்பர்கள் மன்னிக்க வேண்டும். இன்றைக்கு வலைச்சரத்தில் கடைசி நாள் என்பதால், நான் தொடரும் பிரபல பதிவர்களையும், இன்னபிற பதிவர்களையும் பற்றிப் பார்த்துவிட்டு முடித்துக்கொள்கிறேன்.
கடைசியாக,
பதிவுலகில் இவர் எழுத ஆரம்பித்த காலத்தில் எனக்குப் பதிவுலகம் அறிமுகமாகவில்லையே என்று உண்மையிலேயே வருத்தப்பட வைத்த, இப்போது அவரது வலைப்பூவின் பழைய பதிவுகளைத் தேடித்தேடிப் படிக்கிற அந்தப் பிரபல பல்சுவைப் பதிவர்,
புதிதாக வலைப்பூ ஆரம்பித்திருக்கும் நண்பர்களுக்கு டெக்னிகலாக உதவக்கூடிய இரண்டு அருமையான லிங்குகள் இங்கே,
1.திண்டுக்கல் தனபாலன் அண்ணன் எழுதிவரும் வலைப்பூ ஆரம்பிப்பதற்கான
வலைத்தள நுட்பம் தொடர்.
2.தமிழ்வாசி பிரகாஷ் அண்ணனின் வலைப்பூ ஆரம்பிக்கும் புதியவர்களுக்கான
வழிகாட்டித்தொடர்.
வலைப்பூவில் எழுதும்போது பெரும்பாலான புதிய பதிவர்கள் செய்யும் தவறு எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழையோடு எழுதுவது தான். எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழையைச் சரிசெய்வதற்கென்றே அற்புதமான லிங்க் ஒன்று உள்ளது.
பயன்படுத்த மிக எளிதான ஒரு கருவி இது. பதிவை எழுதியவுடன் மேலே உள்ள லிங்கில் சென்று பதிவை அப்படியே காப்பி செய்து அங்கே தரப்பட்டுள்ள பெட்டியில் பேஸ்ட் செய்தால், நொடியில் தவறுகளைக் கண்டுபிடித்துச் சரிசெய்துவிடும். பயன்படுத்திப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறதென்று கீழே கமெண்டில் சொல்லுங்கள்.
ஒருவார காலம் இந்தச் சிறுவனின் பதிவுகளைப் பொறுத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி.
மேலும் வாசிக்க...
இன்றைக்கும் நேற்றுபோல, நான் விரும்பிப் படிக்கும் சில புதிய பதிவர்களையும், பிரபல பதிவர்கள் சிலரையும் பற்றிப் பார்க்கலாம்.
இவரை முகநூலில்
இங்கே சந்திக்கலாம். சிறுகதைகள், மொழிமாற்றக்கதைகள், கவிதைகள், தொடர்கதைகள், நெடுங்கதைகள் என இவரது தளத்தில் பல வகையான படைப்புகள் சிதறிக்கிடக்கின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முக்கிய உறுப்பினராகவும் இருக்கிறார். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் மின்னிக்கொண்டிருக்கிறார். பழகிய ஒரே நாளில் நெருங்கிய நண்பனாகிவிடும் அளவுக்கு மிக இனிமையானவர். கூடிய சீக்கிரத்தில் ஒரு பதிப்பகம் ஆரம்பித்து நல்ல படைப்புகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்ற தீராத கலைத்தாகத்தில் இருப்பவர். இவரது டூத்பேஸ்ட் என்ற அறிவியல் புனைவுக் கதையைப் படித்து உண்மையிலேயே இவரது தீவிர வாசகராகிவிட்டேன். அதுதவிர தொடர்கதைகளும் ஒரு அத்தியாயம் படித்தால் அடுத்தடுத்து தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையில் இருக்கும். கடந்த ஒரு வருடமாகத்தான் வலைப்பூவில் எழுதிவருகிறார். தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தால் பெரிய ஆளாக வருவார்.
தொடர்கதைகள்:
மொழிமாற்றச்சிறுகதைகள்:
காதை கூறும் ஹிருதயம் - எட்கர் ஆலன் போவின் உலகப்புகழ்பெற்ற The Tell Tale Heart என்ற சிறுகதையின் தமிழாக்கம்
கடைசி இலை - ஓ.ஹென்றியின் சிறுகதையின் தமிழாக்கம்
மற்ற சிறுகதைகளை வலைப்பூவிலிருந்து தூக்கிவிட்டார் போலிருக்கிறது. காணக்கிடைக்கவில்லை.
இவரை முகநூலில்
இங்கே சந்திக்கலாம். மிக மிக எளிமையான சொற்களை வைத்துக் கதை சொல்லுகிறார். அறிவியல், புனைவு என வித்தியாசமான கற்பனைக்கதைகளை அள்ளித் தெளித்து நம்மை மகிழ்விக்கிறார். குழந்தைகளுக்கும் பிடித்தமான கதைகளை எழுதுகிறார். சிறுகதைகள் மட்டுமின்றி பல அறிவியல் கருத்துக்களையும் முகநூலில் பகிர்ந்து வருகிறார். அவரது அனுபவங்களையும் சிலாகித்து எழுது வருகிறார். பழகிய சில நாட்களிலேயே "மச்சி அப்றம் என்ன ஆச்சின்னா" என்று அன்னியோன்யமாகிவிடுகிற, மற்றவர்களை மதிக்கிற அக்கறையுள்ள நண்பர்.
அவரது சிறுகதைகளில் சில இதோ,
நான் நேற்றே அறிமுகப்படுத்திய அதே
சரண்குமார் தான் இவர். இந்த வலைப்பூவில் சிறுகதைகள் எழுதுகிறார். தற்போது தான் ஆரம்பித்துள்ளதால் ஒரு சிறுகதை மற்றும் ஒரு தொடர்கதையின் இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே பதிவேற்றியுள்ளார். இனிமேல் அருமையான சிறுகதைகளை எழுதுவார் என்று நம்புகிறேன்.
இவரை நிறைய பேருக்கு முன்பே தெரிந்திருக்கலாம். முகநூலில்
இங்கே பட்டையைக் கிளப்பி வருகிறார். கிண்டல் மற்றும் நக்கலுக்கு மறுபெயர் ஒன்று உண்டென்றால் அது கண்டிப்பாக இவரது பெயராகத்தான் இருக்கும். அரசியல், இலக்கியம், நாட்டு நடப்பு என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து முகநூலில் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். நான் தவறாமல் குறித்து வைத்து படிக்கும் வெகுசில முகநூல் நண்பர்களில் ஒருவர். ஆனால் ஒரு விடயம். அடிக்கடி இம்மாதிரி பதிவு போட்டு மனைவியிடம் சரியான வெகுமதி பெறுகிறார் போல. அவ்வப்போது அடிவாங்கிய பதிவுகளும் வரும். :)
இவரது வலைப்பூவிலிருந்து என்னைக்கவர்ந்த சில பதிவுகள்,
இவரையும் கண்டிப்பாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒரு பிரபலமான சினிமா விமர்சனப் பதிவராக மட்டுமில்லாமல் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இவரை முகநூலில்
இங்கே சந்திக்கலாம். மிக மிக அறிவார்ந்த கருத்துக்களுடனும், தெளிவான பார்வையுடனும் இவர் எழுதுகிற விமர்சனங்களைப் படித்துவிட்டு, நானெல்லாம் இனிமேல் விமர்சனம் என்ற பெயரில் தத்துப்பித்துக்களை எழுதமாட்டேன் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். அப்படியான திறமையும் ஈர்க்க வைக்கும் மொழிநடையும் கொண்டவர். இவர் தான் என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதால் இத்துடன் முடித்துக்கொண்டு என்னைக்கவர்ந்த இவரது சில பதிவுகளைக் காண்போம்.
நாளை வேறு சில வலைப்பூக்களுடன் மீண்டும் சந்திப்போம்.
நன்றி.
ஆண்டிச்சாமி.
மேலும் வாசிக்க...