07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 21, 2015

பல்சுவைப்பதிவர்கள்

அனைவருக்கும் வணக்கம் ,


இன்றைய பதிவை எழுதும்முன் ஒரு பெரிய சந்தேகம் எனக்குள் வந்துவிட்டது .  பதிவர்களை எளிமையாக , இவர் இப்படி எழுதி வருகிறார் , இந்தந்த பதிவுகளை எழுதியுள்ளார் என்றெல்லாம் அறிமுகப்படுத்திவிடலாம் . ஆனால் தலைப்பு மற்றும் முன்னுரை என்ன எழுதுவது என்று புரியாமல் குழம்ப ஆரம்பித்துவிட்டேன் . அட ! அதுக்குள்ள நம்ம சரக்கு தீர்ந்துடுச்சா ? என்று கடைசியில் அந்த சந்தேகம் வந்தது . அதனால் இன்றைக்கு கருத்துரை பற்றிய என் அபிமானத்தைக் கூறுகிறேன் . சரியா ? தவறா என்று எனக்குத்தெரியவில்லை . தவறாய் இருக்கும்பட்சத்தில் அனைவரும் பொறுத்துக் கொள்ளவும் .


சாருவைப் பற்றி உங்களில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ; நான் இங்கே குறிப்பிடப்போவது அவரின் புத்தகங்களைப் பற்றியோ , எழுத்தாற்றலைப் பற்றியோ அல்லது இணையத்தில் அவர் செய்யும் வசூலைப் பற்றியோ அல்ல . அவரின் ஒரே ஒரு கருத்தினை மட்டும் கூறிவிடுகிறேன் . அதாவது இன்றைய நிலையில் ஒரு எழுத்தாளரின் புத்தகத்திற்கு மற்ற எழுத்தாளர்களே கருத்துரை இடும் நிலைக்கு தமிழ் எழுத்துச் சமுதாயம் பின்தள்ளப்பட்டுள்ளது என்கிறார் அவர் . கிட்டத்தட்ட ப்ளாக்கரிலும் அதே நிலை தான் . கருத்துரை என்பது  வாசகர்கள் நம்முடைய பதிவினைப் படித்து , அதில் இருக்கும் நிறை குறைகளைக் கூறுவது என்ற நிலை மாறி , சக பதிவர்களே கருத்துரை இட்டு (பெரும்பாலும் அப்பதிவைப் பாராட்டும் தோணியில்) , அதற்கு மறுமொழியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் . 


அதற்காக பதிவர்கள் , மற்ற பதிவர்களுக்கு கருத்துரை இடுவது தவறு என்று நான் சொல்லவில்லை ; புதிதாக அறிமுகம் ஆகும் பதிவர்களுக்கு மூத்தபதிவர்கள் ஆலோசனை வழங்கி , அவ்வப்போது அவர்களை வழிநடத்தவேண்டும் . அப்போதுதான் பதிவுலகம் செழிப்புடன் வளரும் .  பிற பதிவர்களின் பதிவுகளில் கருத்துரை இடுவது என்பது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிகோளவேண்டுமே தவிர , நான் ப்ரசன்ட் சார் எனும் ரீதியில் கருத்துரை இடுவது எதற்கு என்று புரியவில்லை . நான் உட்பட அனைத்துப் பதிவர்களும் வாசகர்கள் நம்மைக் கவனிக்கவேண்டும் என்ற ரீதியில்தான் பதிவிடுகிறோம் . இம்மாதிரியான கமென்ட்கள் , போகப்போக கமெண்ட் பாக்ஸினைத் திறந்துகூட பார்க்க விடாதபடி மனம் அடைத்துவிடும் என்பது என் கருத்து . தவறிருப்பின் பெரியோர் அனைவரும் பொறுத்தருள்க . 


சமையல்


இன்றைக்குக் காலையில் ஒரு மீன்பிரியரின் பதிவுகளைக் கவனிப்போம் . அசைவ உணவுகளிலேயே சிறப்பானது மீன் என்பது உலகறிந்த உண்மை . சிலர் மீனை சைவம் என்றும் கூறுகிறார்கள் . எப்படியாயினும் மீன் சிறப்பானதொரு உணவுப்பொருள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும் . மீனு மீனேய் எனும் தளத்தில் நாடோடி இலக்கியன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் , மீன்களில் எதெது சிறந்தது ,மீனை எப்படி வாங்கவேண்டும் ? மார்க்கெட்டில் எவ்வளவு விலை வரை இருக்கும் ?  எப்படி சமைக்கலாம் ? கெட்டுப்போனதா ? நல்லதா என கண்டுபிடிப்பது எப்படி ? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடையளிப்பதுடன் , மீன்களைப் பற்றிய விலாவரியான தகவல்களை புகைப்படத்துடன் கொடொத்து அசத்தியுள்ளார் . இவரின் சில பதிவுகள் ,






வணிகம்



என் நண்பர்கள் பலரிடம் என்ன வேலை மச்சான் ? எனக்கேட்டால் எக்ஸ்போர்ட் பிஸனஸ்டா என்று கூறுவார்கள் . அப்படினா என்னடா ? எனக்கேட்டால் இங்கிருக்கும் பொருட்களை வேறு இடங்களுக்கு ஷிப்பிங் பண்றது மச்சி என்று சொல்லுவார்கள் . நானும் ‘சரி , சரக்க வாங்கரோம்  ;கஸ்டம்ஸ்கு அமௌன்ட் கட்டரோம் ; வெளிநாட்டுக்கு விக்கரோம் ‘ என்று அப்போதைக்கு டி.ஆர் போன்று அடுக்குமொழி வசனங்கள் பேசிவிட்டு அடுத்த நாளே மறந்துவிடுவேன் . ஆனால் உண்மையில் , ஏற்றுமதி இறக்குமதி போன்ற விஷயங்களைச் செய்துவரும் சேதுராமன் சாத்தப்பன் என்பவர் , மிக எளிமையாக , இப்போதைய நிலையில் ஏற்றுமதியாகும் பண்டங்கள் , எப்படி செய்வது ? என்னென்ன பின்விளைவுகள் வரும் என்பதையெல்லாம் தன் பதிவுகளில் மட்டுமின்றி அவ்வப்போது கலந்தாய்வு கூட்டம் நடத்தியும் பயிற்வித்து வருகிறார் . இவரின் சில பதிவுகள் ,






நாட்டுப்புறவியல்


வானமாமலை என்றொருவர் மாத்திரம் இல்லையெனில் நம் பாரம்பரிய இசை மற்றும் பாட்டு வடிவங்களான , ஏட்டில் எழுதா இலக்கியம் அப்படியே மறைந்திருக்கும் . அப்பணியை , பல்வகை நாட்டுப்புற பாடல்கள் எனும் வலைத்தளத்தில் ரதினா புகழேந்தி மிகச்சிறப்பாக செய்துவருகிறார் . எங்கள் ஊரில் இன்னும் தாலாட்டுப் பாடல்கள் , திருமணப்பாடல்கள் , தொழில்பாடல்கள் மற்றும் ஒப்பாரிப் பாடல்கள் வழக்கொழியாமல் இந்தத் தலைமுறை வரை வந்துவிட்டது . ஆனால்  என்தலைமுறைக்கடுத்து இந்த நாட்டுப்புறப்பாடல்களின் நிலையை யோசித்தால் தான் தொண்டையைக் கவ்வுகிறது . இனிமேல் வெறும் ஆடியோ சிடியில் போட்டுத் தான் கேட்கவேண்டும்போல . அதைக் கேட்டாலும் நம்முடைய நாகரீகத்தமிழ் அடிமைகள் பட்டிக்காட்டான் என்றும் ஊர்நாட்டான் என்றும் தான் அழைப்பார்கள் .  ஏதோ பிறந்ததுமுதல் மொசார்ட்டின் இசையும் பீத்தோவனின் இசையையும் கேட்டு வளர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளவதைத்தானே நம் தமிழ் சமூகம விரும்புகிறது !! சரி , பதிவரைப் பற்றி கவனிப்போம் . இவர் வெறும் நாட்டுப்புறப்பாடல்கள் மட்டுமின்றி விடுகதைகள் , கிராமப்புறங்களில் வழங்கி வரும் கதைகள் , பழமொழிகள் போன்றவற்றையும் தன் பதிவுகளில் எழுதி வருகிறார் . இவரின் சில பதிவுகள் ,







சினிமா


சிவிகை எனும் தளத்தில் எழுதிவரும் அரவிந்த் அண்ணா , தமிழ் சினிமாக்கள் மட்டுமின்றி அவ்வப்போது உலக சினிமாக்கள் , தன் அனுபவக்குறிப்புகள் , இசைச்சார்ந்த பதிவுகள் என தொடர்ந்து எழுதி வலையுலகைக் கலக்கி வருகிறார் . இவரின் பதிவுகள் சிம்பிள் அன்ட் பெஸ்ட்டாக இருப்பதால் படிப்பவர்கள் அயர்ச்சியின்றி படிகமுடியும் . மேலும் தனக்குத் தோன்றுவதை அப்படியே எழுதிவிடும் தன்மை , இவரிடம் வாசகர்களை இழுத்துவிடுகிறது என்று நினைக்கிறேன் . இவரின் சில பதிவுகள் ,




நன்றி ,


மீண்டும் நாளைச் சந்திப்போம் .
அன்புடன், 

மெக்னேஷ் திருமுருகன் .
மேலும் வாசிக்க...

Monday, July 20, 2015

அரசியல்! சிறுகதை! சினிமா! இசை!!!

அனைவருக்கும் வணக்கம் ,

எனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் இவ்வார வலைசரத்திற்கும் ஆசிரியராக நானே தொடர்கிறேன். கொடுத்த வாய்ப்பை அதி்கரித்த வலைச்சர குழுமத்திற்கும், தமிழ்வாசி பிரகாஷ் அண்ணனுக்கும் என் நன்றியைத் தெரிவித்து விட்ட , இன்றைய பதிவர்களைப் பற்றி காணலாம் .

குருநாதர்

இன்றைய குருநாதர் வரிசையில் நான் கூறப்போவது அமைதியே வடிவமாக கொண்ட ஒரு பதிவர் . அவர் எவ்வளவு அமைதியானவர் என்றால அமைதியே அவரிடம் தோற்றுப்போய் விடும் எனும் அளவிற்கு அமைதியானவர். ஆனால் பதிவுகளின் வழியே பலருடைய அமைதியை குலைத்துவிடுவார். அவர்தாம் ஸ்கூல்பையன் எனும் வலைத்தளத்தில் எழுதிவரும் கார்த்திக் சரவணன் அண்ணா. இவரை ஒருமுறை தான் சந்தித்திருக்கிறேன் எனினும், பலமுறைச் சந்தித்து பேசியதொரு உணர்வு. இவர் எப்பொழுதாவது தான் எழுதுவார் எனினும் அந்த பதிவும் குறிஞ்சமலராய் மணம் வீசும் . இவரின் சில பதிவுகள்,




அரசியல்


மானுட விடுதலை எனும் தலைப்பில் எழுதி வரும் ரமேஷ் அண்ணனின் அரசியல் கட்டுரைகள் பல, மாற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது மட்டுமின்றி பற்பல பத்திரிக்கைகளிலும் பிரசூரிக்கப்பட்டுள்ளன. அரசியல் சார்ந்த பதிவுகளை தைரியமாக, அனைவருக்கும் புரிகின்ற வகையில் எழுதிவரும் இவர், சமூகத்தின் மீதான சாடலை நேர்பட வைத்து பேசுவது அருமை.

 ஒரு கட்டுரையில் ஊழல் சார்ந்த இவரது பார்வை

ஊழல் என்பது அதிர்ச்சியான, அருவருப்பான செய்கையாய் பார்க்கப்படாமல், வெகு இயல்பாக பேசி கலைகிற சங்கதியாய் மாறி வருகிறது. இது தேசத்தை நேசிப்பவர்களை அச்சம் கொள்ள வைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து மட்டங்களிலும்  ஊழலால் ஏதோ ஒரு முறையேனும் பாதிக்கப்படுகிற இந்திய குடிமகன் அதற்கு எதிராக கோபம் கொள்வது குறைந்துக்கொண்டே இருக்கிறது.

இப்படி அரசியல் மட்டுமின்றி , சினிமா , சர்வேதேசியம் , வரலாறு , நூல் அறிமுகம் என பலப்பல விஷயங்களை எழுதிவரும் இவரது வலைத்தளம் அனைவரும் படித்தாக வேண்டிய மிகமுக்கிய தளமாகும் . இவரின் கட்டுரைகளில் சில ,

ஊழலின் பரிமாணம்

விடுதலைப்போரில் பெண்கள்

சினிமா

வெண்புரவி எனும் தளத்தின் வழியே பற்பல அனுபவக்கட்டுரைகள் மற்றும் சினிமா சார்ந்த பதிவுகள் எழுதிவரும் வெண்புரவி அருணா, தனக்கே உரிய பாணியில் தன் பதிவுகளில் தூள் கிளப்பி வருகிறார். இவரின் பதிவுகள் நீளமாயிருப்பினும் அயற்சியைத் தராமல , ஆர்வத்தோடு படிக்கவைப்பதுடன் பற்பல அனுபவங்களையும் அதனுள் நுழைத்து எழுதிவருவது சிறப்பு. இவரின் சில பதிவுகள்



சிறுகதை

படலை எனும் தளத்தில் பற்பலவிதமாக எழுதிவரும் JK அண்ணன் சிறுகதைகளுக்கு குறிப்பாக சயின்ஸ் பிக்சன் சிறுகதைகளுக்கு செம பேமஸ். இவர் இதுவரை 25-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார் . எதை விடுவது? எதை வலைச்சரத்தில் கோர்ப்பது? என்று என்னையே குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார். ஒரு சிறுகதையில் , பள்ளியில் அறிவியல் வகுப்பு நடைபெறுகிறது . மாணவர்கள் அனைவரும் தாங்கள் உருவாக்கிய (அ) கண்டுபிடித்த அறிவியல் மாதிரிகளை ஆசிரியரிடம் சப்மிட் செய்கிறார்கள் .அப்போது ஒரு மாணவன்  பூமி எனும் கிரகத்தை உருவாக்கி, அம்மாதிரியை அவ்வாசிரியரிடம்  காட்டுதற்காக முழுபயத்துடன் காத்திருக்கிறான் . அவன் கையில் பூமி இருக்கிறது . அசிரியர் ‘அடுத்து’ என்று கூறியவுடன் இவனுக்கு நடுக்கம் ஏற்படுகிறது . அந்த நடுக்கத்தின் தாக்கத்தால், அவன் கையிலிருக்கும் பூமியில் உள்ள இந்தோனிஷியாவின் கடற்கரை திட்டுகளில் இடப்பெயர்வு நடைபெற்று சுனாமி உருவாகிறதாம் . என்னே உவமை? லூப் எனும் மாதிரியை வைத்து இவர் உருவாக்கிய இக்கதை , அட்டகாசமான கதை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மேலும் இவர் கணிதம், இயற்பியல் சார்ந்த விஷயங்களையும் வியாழமாற்றம் எனும் தலைப்பின் கீழ் எளிமையாக எழுதிவருகிறார் .
இவரின் சிறுகதைகளில் சில ,




இவரின் பதிவுகளில் ஒன்று ,


இசை

வெல், இந்த டாபிக்கின்கீழ் தமிழ்வலையுலகில் எழுதிவருபவர்கள் வெகு சிலரே! அதுவும் தொடர்ந்து எழுதுபவர்கள் என்றால் அரிதானதொருசிலர் மாத்திரமே . முழுக்க முழுக்க இசையும், இசை சார்ந்த விடயங்களையும் எழுதிவரும் காரிகன் அவர்களைப்பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவருக்கு வலையுலகில் இசைப்பதிவர் என்றொரு செல்லப்பெயருமுண்டு . எனக்கு இசையின்பால் அதிதீவிர ஈடுபாடு இருப்பினும், அதை எழுத்தில் எழுதமுடியவில்லையே  என்ற ஆதங்கம் இருக்கும். அதுவும் இவரின் பதிவுகளுக்குச் சென்று பார்த்தால், உடனே  இசைச் சம்பந்தமான கட்டுரை ஒன்றாவது எழுதிவிட வேண்டும் என்று தோன்றும். அந்தளவுக்கு இசையோடு இயைந்து எழுதுபவர். இசைவிரும்பிகள் எனும் தொடர்பதிவின் வழியே, தமிழ்சினிமா இசையையும், இசையமைப்பாளர்களைப் பற்றியும் இவர் தொடர்ந்து எழுதிவருவது சிறப்பானதொரு பணியாகும் . இவரின் பதிவுகளில் சில




நன்றியுடன் ,
மெக்னேஷ் திருமுருகன்
மேலும் வாசிக்க...

Sunday, July 19, 2015

இன்றோடு ஐந்தாம் நாள்

அனைவருக்கும் வணக்கம் ,

உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம் இருக்கும் ; எதற்கு இவன் தினமும் குருநாதர் எனும் வரிசையில் தினம் ஒரு பிரபல பதிவரை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறான் ? அதற்கான காரணம் ரொம்ப சிம்பிள் . இன்று கூகிலில் தேடினால் என் பெயரும் என் புகைப்படமும் வருகிறது என்றால் அதற்கு காரணம் என்னுடைய குருநாதர்கள் தான் . அவர்களிடம் இருந்து எழுதுவது எப்படி என்பதை மட்டுமில்லாமல் , பல நற்குணங்களையும் கண்டு அதையும் பின்பற்றி வருகிறேன் . எடுத்துக்காட்டாக ராம்குமார் அண்ணனிடம் துளிகூட பிகு , ஈகோ என்பதைக் காணவே முடியாது . அண்ணே ! நீங்க சூப்பரா எழுதிரிங்க என்றால் ஏன்யா நீ வேற ? அப்படிலாம் இல்லையா என்று சிரித்துக்கொண்டே பேசுவார் . வாத்தியாரிடம் சீனியர் எழுத்தர் என்ற தலைக்கணத்தை நீங்கள் கடுகளவும் காணமுடியாது . இதுபோன்றே என் குருநாதர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குணங்களும் எழுத்தின் பரிமாணங்களையும் கண்டு , அதை பயில்வதால் எனக்கு வரும் நன்மை பல. அவர்களிடம் நான் கொண்டுள்ள நன்றியுணர்வை இங்கே பலரின் முன்னிலையில் வெளிப்படுத்துவதே மிகச்சரியான கணம் என்று நினைக்கிறேன் . வெல் , பதிவுக்குச் செல்லலாமா ? அதற்குமுன் ஒரு குட்டி ஜோக் .

அரசியல்வாதி – என்னப்பா ! மேடையில ஒரே ஓடா வந்து விழுகுது ?
தொண்டர் -  ஓட்டை அள்ளி வீசுங்கனு நீங்க சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க தலைவரே !!!


குருநாதர்
உங்களுக்கெல்லாம் சூரியநாராயண சாஸ்திரிகள் என்றொருவரைப் பற்றி சொன்னால் ஒருகணம் யோசிப்பீர்கள் . அவரது தமிழ்ப் பெயரான பரிதிமாற் கலைஞர் என்று சொன்னால் , பெட்ரோலில் பற்றிய நெருப்பாய் உங்கள் மனம் அவரை அடையாளம் கண்டுகொள்ளும் . அதுபோல தான் ராஜா அண்ணனும் . கவிதை மட்டுமின்றி சொ(நொ)ந்த அனுவங்கள்  எழுதுவதில் கில்லாடி . யார் இந்த ராஜா என்று யோசிக்கவேண்டாம் . அரசன் அண்ணாவின் இயற்பெயர் ராஜா தான் . எனக்கே இன்று காலை தான் தெரியும் . அண்ணனைப் பற்றி மிக எளிமையாக சொல்லவேண்டுமெனில் இவரின் கவிதைகளைப் போன்றவர் தான் . வெளியில் இருந்து படிக்க எளிமையான தோற்றத்தினைக் கொண்டிருக்கும் இவரது கவிதைகளில் உள்ளார்ந்த அர்த்தங்கள் பல பொதிந்திருக்கும் . அக்கவிதைகளைப் போன்றதொரு மனிதர் தான் அரசன் அண்ணா .

என்னிடம் ஒருமணிநேரம் தொடர்ந்தாற்போல் பேசினால் நீங்கள் ஒன்றைக் கவனிக்கலாம் ; ஒரு அரைக்கிறுக்கனின் வார்த்தைகளைப் போன்றுதான் என் உரையாடல்கள் இருக்கும் . ஒருநாள் ஆமாம் அது கரெக்ட் என்று கூறிவிட்டு, அடுத்த நாளே அதெல்லாம் மாபெரும் தவறு எனும் ரேஞ்சில் பேசுவேன் . என்ன செய்ய? மேனுபேக்ச்சுரல் டிபெக்ட் . ஆனால் அரசரடிம் பேசினால் அப்படியிருக்காது . நான் என்னதான் ப்ளேடு போட்டு கழுத்தை அறுத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாம் பேசுவதை ஆர்வத்துடன் கேட்பார் . நான் பேசுவது சில சமயங்களில் எனக்கே அலுப்பை உண்டாக்கி , அண்ணே ! செம மொக்க போடறேன்ல னு கேட்டால் கூட , அவரின் வாயிலிருந்து அட ! எங்கிட்ட போடாம வேற யார்கிட்ட தம்பி போடப்போறனு கேட்கும் ஆள் .

எல்லாரும் , குறிப்பாக இன்னும் திருமண பந்தத்தில் சிக்காமல் , காதலியை கரெக்ட் செய்ய முடியாமல் , காதலியிடம் சண்டையில் இருப்பவர்கள் , அல்லது புதுக்காதலை ஏற்படுத்திக் கொள்ள விழைபவர்களெல்லாம் அண்ணனுடைய குடிலுக்கு வருகை தாருங்கள் . இவரிடம் காபிரைட் பிரச்சனையெல்லாம் இல்லை . இவரது கவிதைகளை நீங்களே எழுதியதாகக் கூறி காபி-பேஸ்ட் செய்தால் போதும் . மணமானவர்களுக்கும் இது பொருந்தும் . கண்டிப்பாக ஊடல் , கூடலில் முடியும் .  நானே பல இக்கட்டான தருணங்களில் இவரது கவிதைகளை நான் எழுதியதாக பில்டப் செய்து தான் சமாளித்து வருகிறேன் . இவரது தளத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் மிகமுக்கியமான நல்ல விஷயம் , இவரின் தளம் கூகுலில் தேடும்போது அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை . ஏதோ  search description மற்றும் டெம்ப்ளேட் குறித்த பிரச்சனைகள் இருக்கின்றது என நினைக்கிறேன்.  அதை அவர் சரிபடுத்திக்கொள்ளாதவரை எனக்குப் பிரச்சனையில்லை . ஒருவேளை சரிபடுத்திவிட்டால் , வேறு என்ன ? காபி – பேஸ்டிற்கு எனக்கு வேலையில்லாமல் போகும் ; பரவாயில்லை ! அரசன் அண்ணே ! கொஞ்சம் அதை கவனியுங்கள் . அண்ணாரின் சில கவிதைகள் மற்றும் அனுபவக் கட்டுரைகள் ,



சினிமா & கேம்ஸ் & காமிக்ஸ்

முதலை எனும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெயர் தெரியா நண்பர் , இப்போது குறைந்த காலத்தில் மிகப்பிரபலம் ஆகிக்கொண்டிருப்பவர் . ஹாலிவுட் சினிமாக்கள் , காமிக்ஸ்கள் , கம்ப்யூட்டர் கேம்ஸ் , PSP , PS2 என கேம்ஸ்களின் மொத்த வரிணையையும் வகைப்படுத்தி அட்டகாசமாக எழுதி வருகிறார் . அவரின் பதிவுகளில் சில ,





சமையல்

அமைதிச்சாரல் எனும் வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் சாந்தி மாரியப்பன் அவர்களை உங்களுள் பலருக்கு தெரிந்திருக்காம் . புகைப்படப் பிரியையான இவர்  பல்வேறு வணிக மற்றும் சிறு பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறார் . மேலும் ஒரு புகைப்படத் தளத்தையும் நிர்வகித்து வருகிறார் . இவரின் சமையல் சார்ந்த பதிவுகளில் சமைப்பது எப்படி என்பது மட்டுமின்றி , அதன் வரலாறு , அச்சமையலால் ஏற்படும் பயன்கள் போன்ற பல விஷயங்களையும் விளக்குகிறார் . இவரின் பதிவுகளில் சில


கவிதை

நீரோடை எனும் தலைப்பில் எழுதிவரும் மலிக்கா அக்கா அவர்கள் பள்ளிக்கல்வியையே முடிக்காத நிலையில் அற்புதமான எளிமையான கவிதைகளை தனது தளத்தில் எழுதிவருகிறார் . இவரின் பதிவுகளில் சில



குறும்படம் + அனுபவம் + கவிதை

எறியாத சுவடிகள்எனும் தளத்தில் எழுதிவரும் நண்பர் பவண் , சில காலங்களாக தலைமறைவாக இருந்துவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறார் . ஜாலியான எழுத்துகளுக்கு சொந்தக் காரர். கவிதையிலும் தன்னுடை முத்திரையை தொடர்து பதித்து வருபவர் . அவ்வப்போது குறும்படமும் இயக்கி வருகிறார் . இவரின் சில பதிவுகள்





நன்றியுடன் ,

மெக்னேஷ் திருமுருகன்









மேலும் வாசிக்க...

Saturday, July 18, 2015

வந்துவிட்டேன்! வந்துவிட்டேன் !!

அனைவருக்கும் வணக்கம் !


என்னடா இவன ரெண்டு நாளா ஆளக் காணோம் என்று ஒருவேளை யாராவது என்னைத் தேடி இருந்தாளோ , யோசித்திருந்தாளோ அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இன்றைய பணியை இனிமையுடன் ஆரம்பிக்கிறேன் . இரு நாட்களாக  சளித்தொல்லையில் சிக்குண்ட நான் , கோட்டோ சீனிவாசராவிற்கு டப்பிங் குரல் கொடுப்பவரின் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதே விடுமுறைக்கு காரணம் .  காலம் திரும்ப வராது ; ஆனால் இவ்விரு நாட்களுக்குண்டான பதிவுகளையும் எழுதி போஸ்ட் போடாமல் விடுவதாக இல்லை என்று தமிழ்வாசி அண்ணனுக்கு ஒரு சபதம் கொடுத்திருக்கிறேன் . பார்க்கலாம் ! முடிந்தால் இன்னும் இரு பதிவுகள் கூடுதல் இணைப்பாக கொடுக்கும் உத்தேசமும் உள்ளது .


சரி , ஒரு குட்டிக்கதையுடன் ஆரம்பிக்கலாம். ஒரு சீடன் , தன்னுடைய குருவுடன் ஒரு காட்டில் பயணித்துக் கொண்டிருந்தானாம் . அந்நேரம் பலவிதமான தாவரங்கள் அசைந்து ஆடினவாம் . அவை அசைந்தாடுவதைக் கண்ட சீடன் , குருவிடன் கீழ்க்கண்டவாறு வினவினானாம் .

‘குருவே ! இம்மரங்களின் கிளைகள் ஆடுவதால் காற்று வருகிறதா ? அல்லது காற்று வருவதால் கிளைகள் ஆடுகின்றனவா ?’

அதற்கு குரு சிரித்துக் கொண்டே சொன்னாராம் ,

‘ கிளைகளும் ஆடவில்லை ! காற்றும் வரவில்லை . உன் மனம் மற்றும் மூளை தான் ஆடுகின்றது . அவையிரண்டும் என்ன கூறுகின்றதோ , அதுதான் உன் கேள்விக்கான முடிவு ’

அதாவது , நாம் பார்ப்பவைகளை வைத்தே எல்லாவற்றையும் முடிவெடுக்கிறோம் . ஆனால் அவையெல்லாம் உண்மையாகிவிடாது ; அவரவர் பார்வைக்கேற்ப மற்றவர்களும் நமக்குத் தெரிவார்கள் என்பதே இக்கதையின் விளக்கம் .

குருநாதர்

வலையுலகில் என்னைப் பிரவேசிக்க வைத்த சிவகாசிக்காரரையும் , இவ்வுலகின் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிக்கொடுத்த சைனிங் ஸ்டாரைப் பற்றியும் முந்தையக் கட்டுரைகளில் பார்த்தோம் . இப்போது வலையுலகில் மிகமுக்கியமானவரும் , என் குருநாதர்க்கெல்லாம் குருநாதருமான ஒரு பிரபல பதிவரைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப்போகின்றோம்  . உ.வே.சாவிற்கு எப்படி மீனாட்சி சுந்தரனாரோ அப்படி எனக்கு இவர் . நான் உ.வே.சா கிடையாது ; ஆனால் அவர் மீனாட்சி சுந்தரனார் தான் . பதிவுலகில் நுழைந்தபோது சீனு அண்ணனுக்கு முன்பே எனக்கு பாதாள பைரவியும் ஹாரிபாட்டரும் என்ற என்னுடைய கட்டுரையின் கமெண்ட் பாக்ஸ் மூலம் அறிமுகமானவர் அவர் .  அப்பதிவில் பாதாள பைரவியுடன் ஒப்பிட்டு சிலபல ஆங்கிலப் படங்களை ஓட்டியிருந்தேன் .  அப்போது அவரை எனக்கு சரிவரத் தெரியாது . யாரோ நம்முடைய பதிவை ரசித்துப் படித்த முதுகலை ஆசிரியர் என்று நினைத்தேன் . அதன்பின் முகநூலில் சீனு அண்ணனின் பரிந்துரையின் பேரில் அவருக்கு நட்பு கோரிக்கை அனுப்பினேன் . அதன்பின் அவரை சககாலத்திய இளம்பதிவர்களெல்லாம் தூக்கிவைத்துக் கொண்டாடுவதைப் பார்த்து அதிசயித்தேன் . என்னடா இது ? நாம அஸ்ஸால்டா நினைச்ச ஆள எல்லாரும் தூக்கிவச்சி கொண்டாடுராங்க என்றபடியே அவரைத் தள்ளி நின்று பார்க்க ஆரம்பித்தேன் . மிகவும் சாதாரணமானவராக தெரிந்தார் ; பார்த்தாலும் எழுத்தாளர் லுக் இல்லையே ! ஆனால் எல்லோரும் கொண்டாடுகிறார்களே ! அப்படி என்ன எழுதிவிட்டிருக்கப்போகிறார் இந்த முதியவர் ? அவரது பதிவுகளை வாசித்தேன் . இணையத்தில் ஒரே நாளில் , ஒருவரின் பதிவுகளின் பெரும்பகுதியை நான் வாசித்த நாள் அதுதான் . நேரம்போவதே தெரியவில்லை . மதிய உணவை மறந்துவிட்டு வாசித்தேன் . அப்படி என்ன எழுதியிருந்தார் ? ஜாலி ! ஹாஸ்யம் ! நகைச்சுவை ! காமெடி ! ஹுயுமர் ! சொல்லாடல் என எழுதியிருந்தார் . இப்படிப்பட்டவரின் ஹுயுமர் சென்ஸை இன்னும் பத்திரிக்கைகள் பயன்படுத்தாமல் இருக்கிறதே என்று அதிசயித்து முகநூலிற்கு சென்றேன் . ஹாரி அண்ணனின் ஹார்லிக்ஸ் வித் ஹாரி எனும் வலைப்பதிவு நிகழ்ச்சியில் அவர் பேட்டி கொடுத்திருந்தார் . ஹாரி அண்ணனின் கேள்விகளையும் , அதற்கான அவரின் பதிவுகளையும் பார்த்து ரசித்தேன் . புகழ்ச்சியை விரும்பாத திறமைக்காரர் அவர் . வயதில் மூத்தவர் ! ஆனால் குணத்திலும் சுறுசுறுப்பிலும் என்னைவிட இளையவர் . இப்படிப்பட்டவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைக்குமா என தவித்தபோது தான் ஒருமுறை சென்னைப் பயணத்தில் சீனு அண்ணன் மூலம் அவரின் அறிமுகம் கிடைத்தது . இன்றளவும் நான் எழுதவந்து எனக்குக் கிடைத்த அங்கிகாரங்களில் மிகப்பெரிதாக நான் நினைப்பது , இவரின் மாணவர் நான் என்று கூறிக்கொள்வதைத்தான் .

வெல் ! இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள்; நான் யாரை இவ்வளவு நேரம் குறிப்பிடுகிறேன் என்று . ஆவி , சிவகாசிக்காரர் , அரசர் , சீனு , ஸ்கூல்பையர் , ஹாரி முதலிய எங்களுக்கெல்லாம் குருநாதர் , வலையுலகின் வாத்தியார் திரு. பாலகணேஷ் அவர்கள் தான் அது. பதிவுகளின் காலவரிசைப்படி மூன்றாமாவதாக அறிமுகப்படுத்தியிருந்தாலும்  எப்போதும் எங்களுக்கெல்லாம் நல்வழிகாட்டியாகவும் , கலங்கரை விளக்கமாகவும் இருந்துவருபவர்  எங்களின் குருநாதர் வாத்தியார் . அவரைப்பற்றிய அறிமுகம் வலைச்சரத்திற்கு தேவையில்லை எனினும் என் குருநாதர் வரிசையில் இருப்பதாலும் , மேலும் புதிதாக வலையுலகிற்கு வந்தவர்களுக்கும் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்ற இங்கு அவரைக் குறிப்பிடுகிறேன் .

வாத்தியாரின் பதிவுகள் அனைத்துமே எனக்குப் பிடிக்குமென்பதால் அவரின் வலைத்தள முகவரியை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன் . அவரி அனைத்துப் பதிவுகளும் உங்களை திருப்தி படுத்துமென்பதில் சந்தேகமேயில்லை .



வரலாறு

இலக்கியச்சாரல் எனும் தலைப்பில் வலையுலகில் எழுதிவரும் ஞானசம்பந்தன் ஐயா , தமிழ் இலக்கியம் , எழுத்துகள் மட்டுமின்றி உலக இலக்கியங்களும் அதன் சார்ந்த பிண்ணனிகளும் , அதிலிருந்து இன்றைய நவீன யுகத்தில் உபயோகப்படுத்திவரும் விஷயங்களையும் தெளிவாக அருமையாக எடுத்துரைக்கிறார் .இவரின் சில பதிவுகள் ,



பல்சுவை

கரிசக்காடு எனும் வலைத்தளத்தில் எழுதி வரும் உதய்சங்கர் அண்ணா , எட்டு சிறுகதைத்தொகுதிகள் , ஒரு குறுநாவல் , குழந்தைப் பாடல்கள் , கவிதை , குழந்தை இலக்கியம் என்று பல்வேறு தலைப்புகளில் எழுதிவருகிறார் . மேலும் வரலாறு சார்ந்த விஷயங்களையும் அவ்வப்போது ஆதாரத்துடன் எழுதி வரும் இவரின் பதிவுகளில் சில ,




தமிழ் + தமிழர் இலக்கியம்

தமிழ்மொழி குறித்தும் , சங்க கால தமிழ் இலக்கியங்கள் மற்றும் மக்களின் வீரம் , பண்பாடு போன்றவற்றை பற்றியும் முனைவர் ரா. குணசீலன் அவர்கள் மிக அருமையாக எழுதிவருகிறார் . மேலும் சங்க காலத்திலய மக்களின் வாழ்க்கையைப் பற்றிய சி.ஜி புகைப்படங்களும் இடம்பெறுவது இவர் தளத்தின் சிறப்பு . இவரின்தளம் ,



இலக்கியம்

எண்ணிய முடிதல்வேண்டும் எனும் தளத்தில் சிறப்பாக எழுதி வரும் ஷைலஜா அக்கா , சிறுகதை எழுதுவதில் மட்டும் வல்லவர் அல்ல ! பலவிதமான கட்டுரைகள் எழுதுவதிலும் கைதேர்ந்தவர் . சமதர்மம் , சகோதரத்தை வலியுறுத்தும் இவரது பதிவுகளில் ஆழ்வார்களின் வரலாறும் , அவர்கள் தமிழன்னைக்குச் செய்தியம்பிய நாலாயிரந் திவ்விய பரபந்தத்தின் சிறந்த கருத்துகளையும் , ஆங்காங்கே குட்டிக் கதைகளையும் எழுதிவருகிறார் என்பது கூடுதல் சிறப்பு . இவரின் சில பதிவுகள் ,



இதில் நாலாயிரத்தை மீட்ட நாத முனிகள் எனும் கட்டுரை கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு அட்டகாசமான கட்டுரை .

வலைச்சரத்திற்கான இக்கட்டுரையை எழுதி முடிக்கும்போது 15 பக்கத்தைக் கடந்துவிட்டது . ஒவ்வொரு பதிவரைப் பற்றியும் , அவர்களின் பதிவுகளைப் பற்றியும் மிகவிரிவாக எழுதியிருந்தேன் . ஆனால் படிப்பவருக்கு என்றும் அலுப்பைத் தரக் கூடாது என்ற வாத்தியாரின் அறிவுரை திடீரென மனத்தின்கண் வர ஆரம்பித்ததால் , வாத்தியார் குருநாதராக இருக்கும் இப்பதிவின் நீளத்தையாவது குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தணிக்கை செய்யவேண்டியதாகி விட்டது .

நன்றியுடன் ,
மெக்னேஷ் திருமுருகன் .





மேலும் வாசிக்க...

Wednesday, July 15, 2015

முத்தான மூன்றாம் நாள்!!!


அனைவருக்கும் வணக்கம் ,

வலைச்சரத்தில் எழுத ஆறுமாதங்களுக்கு முன் தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன் என்னைத் தொடர்பு கொண்ட போது மனதினுள் பெரும் பயம்;  கூடவே சிறு உவகை. பயத்தின் காரணம்,  நான் என்ன செய்துவிட்டேன் இதுவரை? வலைச்சரம் எப்படிப்பட்டதொரு புகழ்பெற்ற தளம்! அதில் இருந்து வாய்ப்பு வருகிறதே! அதில் எழுதுகிறேன் பேர்வழி என்று ஏதாவது அமெச்சூர்டாக எழுதி, நம் பெயரையும் கெடுத்து நம்மால் வலைச்சரத்தின் பெயரையும் கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்பதே பயத்தின் காரணம். பொதுவாக நம் பணம் என்றால் போனால் போகட்டுமென்று, வள்ளுவரின் வாக்கினைப்போல் குன்றின்மேல் ஏறி மற்போர் காண்பது போன்றதென்பதால், தாராளமாக நினைத்ததைச் செய்யலாம். ஆனால் அடுத்தவர் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றால் , வடிவேலுவைப்போல் நைட் 12 மணிக்கு சுடுகாட்டிற்குச்செல்ல வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதே உளவியல் முறைதான் மேலே குறிப்பிட்ட என்னுடைய பயத்திற்கு காரணம். உவகைக்கு காரணம், நம்மையும் பதிவராக அங்கிகரித்ததாலே தான் அவ்வாய்ப்பு நமக்கு வந்துள்ளது. அதுவும் வலைச்சரத்தில் இருந்து வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால் சாதாரண விஷயமா ? என்ற அற்ப மகிழ்ச்சியே !

அப்போது நான் அவரிடம், ‘அண்ணே!  தகுதி  வந்ததும் நான் வந்து வாய்ப்பு கேட்கிறேன். தகுதியற்றவனுக்குத் தரும் வாய்ப்பு, பல நேரங்களில் கெடுதலை நோக்கியே பயணிக்கும்’ என்பதுதான். பிரகாஷ் அண்ணனும் , ‘ சரி மெக்னேஷ் ! கண்டிப்பா வரனும் எழுத’ என்று கூறிவிட்டார். அதன்பின் அதைப்பற்றி நானும் அவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. எனக்கோ மனதினுள் சிறு குற்ற உணர்ச்சி.  ‘என்னடா! நமக்கு வாய்ப்பளிக்க வந்தவரிடம் மறுத்தனுப்பி விட்டோமே! அவர் மனதினுள் ஏதேனும் நினைத்திருப்பாரோ’ என்று தவித்துக்கொண்டிருந்தேன். சனி இரவன்று தமிழ்வாசி அண்ணன் வாட்ஸப்பில் ஒரு கட்டளை இட்டார் .

‘தம்பி ! இந்த வாரம் நீ வலைச்சரத்துல எழுதற . ’ 

அவர் என்னிடம் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பிக்கும் அவசியமும் அவருக்கு இல்லை. எதற்கு விண்ணப்பிக்க வேண்டும்? ஒரு அண்ணன் தம்பியிடம் விண்ணப்பிக்கவேண்டுமா? தேவையில்லை. என் சகோதரர் ஒரு உரிமையுடன் என்னிடம் கேட்கும்போது, அதை மறுப்பது என்பது எனக்கு நானே அவமரியாதை செய்வதை போன்றது.  யோசிக்காமல் அடுத்த வார்த்தையைக் கூறினேன் .

‘சரி  அண்ணே . எப்போலர்ந்து எழுதனும் ?’

அவரும் அதைப்பற்றிய விவரங்களையெல்லாம் தெரிவித்தார். உண்மையில் என்னுடைய ப்ளாக்கிலேயே எழுத முடியாத சூழ்நிலையில் தான் நான் இப்போது இருக்கிறேன். காரணம்  என்னுடைய மடிக்கணினி கீழே விழுந்து, தன்னுடைய முகத்திரையைக் கிழித்துக் கொண்டது. அதன் காரணமாக நான் ரசித்துப் படிக்கும் பதிவர்களின், பதிவுகளில் கூட என்னால் சரிவர மறுமொழியிடமுடியவில்லை. நான் மறுமொழியிடாத காரணத்தால், என் நட்பு வட்டத்தில் இருக்கும் பல பதிவர்கள் , என்னைப்  புகழ்ச்சியின் பிடியில் சிக்கியவனாக நோக்கியிருக்கலாம். பரவாயில்லை! அதனால் எனக்கு வருத்தமும் இல்லை. நான் வாசிப்பை அதனால் தவறவிடப்போவதில்லை. என் தளத்திற்கு மறுமொழியிடவில்லை என்ற காரணத்திற்காக, நான் நேசித்துப்படிக்கும்  பதிவர்களின் எழுத்தை நான் ரசிக்க மறுப்பது முட்டாள்தனம். அதனால் எனக்குத் தான் இழப்பே, தவிர அவர்களுக்கில்லை. சரி, மெய்ன் மேட்டரை விட்டுவிட்டு எங்கெங்கோ சென்றுகொண்டிருக்கிறேன். முகத்திரை கிழிந்த கணிணியின் காரணமாக முன்போல் பல பதிவர்களையும், பதிவுகளையும் படிக்கமுடியாமல் போய்விட்டது . கடந்த இரு மாதங்களில் , நான் தொடர்ந்து வாசிக்கும் பதிவுகளைத் தாண்டி புதிய பதிவுகளை படிக்க இயலா சூழ்நிலையில் இருக்கிறேன். இப்படிப்பட்ட நிலையில் , எப்படி என்னால் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த முடியும்? ஏற்கனவே இருந்த பதிவர்களின் தொடர்பும், பதிவுலகின்  தொடர்பும்  இரு மாதங்களாக அறுபட்டுப் போய்விட்டன . இந்நிலையில் வலைச்சரத்தில் எழுதினால் , நமக்கான மதிப்பு கிட்டுமா ?  நம் பதிவுகளை வலைச்சரத்தில் இருக்கும் பதிவர்கள் படிப்பார்களா? எதையும் யோசிக்காமல் சரி சொல்லிவிட்டேன். ஆனால்  வலைச்சரத்தில் முதல்நாள் எழுதிய போது கிடைத்த வரவேற்பும், வாழ்த்தும் என் மனதில் இருந்த அச்சங்களையும், தாழ்வு மனப்பான்மையையும் சுக்குநூறாக்கி விட்டது. உன்னால் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்குள்ளே மிக தைரியமாக, உறுதியாக எழுத ஆரம்பித்திருக்கிறேன் என்றுகூட சொல்லலாம் . அநேகமாக வலைச்சரத்தில் பதிவுகள் எழுதி முடிக்கும்போது , புதியொதொரு பதிவராக மெக்னேஷைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன் . இதற்கெல்லாம் காரணம் வலைச்சரத்தில் கருத்துரையிட்டவர்களும் , முகநூல், வாட்ஸப் போன்றவற்றில் ஊக்கம் கொடுத்தவர்களும் தான். அவர்களுக்கு என் உளம்கனிந்த நன்றிகளைத் தெரிவித்து விட்டு, இன்றைய நாளைத் துவங்குகிறேன . துவங்கும் முன் ஒரு குட்டி ஜென் கதை .

ஒரு அமைதியான, அழகான, பனிப்பொழியும் இரவு.  ஒரு சீடன் அழுது கொண்டிருந்தானாம்.  அவனுடைய குரு அப்போது அங்கே வருகை புரிந்தாராம்.  அவருக்கு சீடன் ஏன் அழுகின்றான் என புரியவில்லை .

‘என்னாயிற்றப்பா?’ என்று அவர் கேட்க, அவன் மறுமொழி கூறாமல் அழுது கொண்டிருந்தானாம் .

‘ஏதாவது துர்சொப்பனமா ?’ என்று அவர் வினவ ,

‘இல்லை’ என்றானாம் .

‘பின் எதற்காக அழுகிறாய் ? ’ என்று அவர் கேட்க , அவன்

‘அருமையான , இனிமையானதொரு சொப்பனம்’ என்றானாம் .

‘இனிமையான சொப்பனம் எனில் ஏன் அழுகிறாய் ?’ என்று அவர் கேட்க ,

‘அந்த சொப்பனம் நிஜத்தில் நடக்காதல்லவா? அதை நினைத்து தான் அழுகிறேன்’ என்றானாம் .

குருநாதர்

நேற்று என்னை எழுதத்தூண்டிய சிவகாசிக்காரரைப்பற்றி என் குருநாதர் வரிசையில் இடம்பெறச் செய்திருந்தேன். இன்று என்னுடைய அடுத்த குருநாதரும் பதிவர்களில் மிகமுக்கியமானவரும், எழுத்துலகில் எஸ்.ரா எப்படி பயணக்கட்டுரைகளாக எழுதி வருகிராரோ,  இணையாக பதிவுலகில் பயணக்கட்டுரைகளை எழுதிவருபவரும், அனைவராலும் ஷைனிங்ஸ்டார் என்று அழைக்கப்படும்  மேதகு. திரு.சீனிவாசன் அவர்களைப் பற்றிப் பார்ப்போம். உங்களுக்கு அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு மிகப்பிரபலாமான பதிவர் இவர் என்றால் அதில் துளிசந்தேகமுமில்லை . நான் எழுத ஆரம்பித்தபின் வேலையில்லா பட்டதாரி சினிமாவிமர்சனத்தில் எனக்கு அறிமுகமானவர . இல்லையில்ல; நான் அவருக்கு அறிமுகமானேன் .  என்னிடம் எதைக் கண்டுபிடித்தாரோ தெரியவில்லை  சட்டென்று முகநூலில் ஒரு தனி ஸ்டேடஸ் போட்டு மற்ற மூத்த பதிவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டார். அவர் மட்டும் அன்று அந்த அறிமுகத்தைக் கொடுக்கவில்லையெனில் இன்று எனக்கு பதிவுலகில் இவ்வளவு நண்பர்கள் கிட்டியிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அதுமட்டுமின்றி என்னுடைய பதிவுகளில் வரும் பிழைகளை அவ்வப்போது சுட்டிகாட்டி, நான் உன் ப்ளாக்கிற்கு வந்துகொண்டுதான் இருக்கிறேன் தம்பி! அதனால் தப்புத்தப்பாக எழுதாமல் சரியாக எழுதப்பழகு என்று சொல்லாமல் சொல்லி எனக்குள் ஒருவித பயத்தினை உண்டுசெய்து, என் பதிவுகளின் தரத்தைக் கூடுதலாக்கியவர் என் அண்ணன் ஷைனிங்ஸ்டார் சீனிவாசன். ‘காதல் போயின் காதல்’ குறும்படம்  , மற்றைய பதிவர்களின் குறும்பட ஆசையை தூண்டிவிட்டது என்றால் அது மிகையில்லை. படம் ரிலிசான அன்று எங்கெங்கு நோக்கினும் ஷைனிங் புயல் இணையத்தை தாக்கிவிட்டது போன்ற பல்வேறு ஸ்டேடஸ்களை நீங்கள் பார்த்திருக்கலாம் .  2 ஆண்டுகளுக்கு முன் நாடோடி எக்ஸ்பிரஸ் எழுதிக்கொண்டிருந்த சாதாரண சீனிவாசனாக இருந்தவர், குறும்படத்திற்குப் பின் ஷைனிங்ஸ்டாராகி , இப்போது வேற லெவலில் இருக்கிறார். அவருக்கு கோவம் வராது ; வந்தால் சுற்றி இருப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள். இன்றைய நிலையில் இவர் தும்மினால் கூட பல கிசுகிசுக்கள் பரவும் ; இணையம் ஆர்ப்பரிக்கும். இப்போதெல்லாம் ரசிகைகளின் அரவணைப்பில் சிக்கிப்போய் ஷைனிங் புயல் நம்மையெல்லாம் கண்டுகொள்ளவில்லையெனினும் அவ்வப்போது பதிவுகளில் நம் மனதைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்.  இவரிடம் பிடித்தது  இயல்பினை , இயல்பாகக் காட்டும் இவரது சீரிய எழுத்து. எளிய இலக்கியத்தில் அனைவருக்கும் புரியும்படி எழுதும் ஷைனிங்ஸ்டார் கூடிய விரைவில் ஒரு நாவல் எழுதப்பபோவதாக எமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். ஒருமுறை பதிவுலகின் வாத்தியார் , எங்களுக்கெல்லாம் குருவான திரு. பாலகணேஷ் அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன் .

‘அண்ணே ! உங்களுக்குப் பிடித்த இலக்கியவாதி யார் ’ என்று . அதற்கு அவருடைய பதில்

‘நான் வாசிக்கும் ஒரே இலக்கியவாதி சீனு தான்’ என்பதே .

இதே போல் என் சினிமாவிமர்சனத்தின் குருவான பதிவர் செங்கோவி அண்ணன், முகநூலில் நடைபெற்ற ‘உங்களுக்குப் பிடித்த பதிவர் யார்?’ என்ற போட்டியில் ஷைனிங்ஸ்டாரையே முன்மொழிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே ஷைனிங்ஸ்டாரின் பெருமையை நீங்கள் அறியலாம்.  ஷைனிங்கின் பதிவைப் படிக்க  ஆழ்ந்த பொறுமை தேவை. பொறுமை இருப்பின், ஒரு அதிமுக்கியமான எளிய இலக்கிவாதியின் எழுத்துகள் கண்டிப்பாக உங்களை வசியப்படுத்தும். இவரின் சிறுகதைகளில் பெஸ்ட் என்று நான் நினைப்பது


எனும் சிறுகதை தான். இதுவரை வ.வே.சு விலிருந்து வா.ம வரையிலான  தமிழின் சிறந்த 1000 சிறுகதைகளில் இடம்பெறக்கூடிய தகுதி வாய்ந்ததாகவே நான் கருதுகிறேன் . முழுநேர எழுத்தில் இறங்கினால், ஷைனிங்ஸ்டார் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாகவும் எதிர்கால தமிழிலக்கியத்தின் மிகமுக்கியமானதொரு கோடாகவும் வலம்வருவார் என்பதில் துளிசந்தேகமுமில்லை. அவர் அப்படிப்பட்ட நிலைக்குவர ஆவலுடன் காத்திருக்கிறேன் . இவரின் சில பதிவுகள் ,
அழிக்க முடியா நாயகன்
கற்றது கணிப்பொறியியல் - அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீா்


அறிவியல் 

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் எனும் தளத்தின் வழியாக எழுதிவரும் மஹாலக்ஷ்மி அக்காவினைப் பற்றி இங்கு பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். நாம் சாதாரணமாக வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களின் பின்னால் உள்ள மெக்கானிசம் பற்றியும், நம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் சாதனங்களின் பின்னாலுள்ள தொழில்நுட்பங்கள் பற்றியும் எளிமையாகவும் விரிவாகவும் எழுதி வருகிறார். எனக்கு அறிவியலின் மீது தீராக்காதல் உள்ளது.  ஆனால் பாடப்புத்தகங்களில் கொடுக்கப்படும் மொக்கையான  தூக்கம் வரும் அந்தகால அறிவியலும் , அதைச்சார்ந்து புரியாத மாதிரியான பாடங்களையும் படிக்கும் போது படுபயங்கர கடுப்பு தான் வரும். தமிழ்நாடு பாடபுத்தகங்களில் வரும் பாடங்களை, அந்த ஆசிரியர்குழுவினைக் காட்டிலும் திறமையாக எழுதுவதற்கு பல பதிவர்களால் முடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இவரின் பதிவுகள். சரி, திறமை என்பது இங்கே கல்வியைப் பொறுத்துதானே மதிப்பிடப்படுகிறது. இவரின் சில கட்டுரைகள்,
மைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பாா்வை
 மின் அதிா்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்
அரசியல்
இதில் அறிமுகப்படுத்தபடுவது மாற்று இணையதளம். எழுத்தாளர்களின் சிறந்த கட்டுரைகள் இடம்பெறும் ஒரு முக்கியமான தளம் என்றே கூறலாம். பொதுவாக அரசியல் பற்றிய கட்டுரைகள் ஒருமைசார்ந்ததாகவும், தனிநபர் தாக்குதலாகவும் இருக்கும் . ஆனால் மாற்று தளத்தில் அப்படிப்பட்ட கட்டுரைகள் அரிது . கட்டுரைகள் எல்லாம் உண்மையான நோக்கில் உலக அரசியலை,  வரலாற்றுடன் எடுத்தியம்புகிறது. நம்மில் பலருக்கு அரசியல் ஞானம் என்பது அறவே இல்லை அல்லது ஒதுக்கி வைத்துவிடுகிறோம். உண்மையான அரசியலை உணர்ந்துகொள்வதற்கோ ,அறிந்து கொள்வதற்கோ நமக்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். நம் பள்ளிப் பாட புத்தகத்தில் கூட இந்திய சுதந்திர போராட்டம், நம் அடிப்படைச் சட்டம் போன்றவற்றை விளக்குகிறார்களே தவிர, அரசியலின் உண்மையான வரலாற்றைப் பற்றி சிறிதளவும் குறிப்பிடப்படவில்லை என்பதே உண்ம . அரசியல் என்பது வரலாறு சார்ந்த ஒரு விஷயம். அரசியலின் அடிப்படை,  வரலாற்றுநிகழ்வுகள் தான். அதை தெள்ளத்தெளிவாக கூறுகிறது மாற்று தளம். தளத்தில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகள் .
கருப்பு முகமூடிப் போராட்டம் 
கட்டைப் பஞ்சாயத்தும் பக்குவப்பட்ட ஜனநாயகமும்

சமூகம்

இந்த டாபிக்கில் நான் குறிப்பிடப்போகும் பதிவரை தமிழ்இணைய, எழுத்து உலகில் அனைவரும் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள். அவர்கள் தாம் திருமதி. தேனம்மை லக்ஷ்மணன். பல்வேறு வணிக, சிறு பத்திரிக்கைகளுக்கு எழுதிவரும் இவரின் பதிவுகள் மெச்சூர்டாகவும், பல முக்கிய செய்திகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.  பொதுவாக காதல் பற்றிய என்னுடைய அபிப்பராயம் இரண்டே இரண்டு வகைதான், காதல்; கள்ளக்காதல். ஆனால் காதலுக்கென்று ஒரு அகராதியை உருவாக்கி, அதன் சாரம்சங்களை விவரித்து , அதிலுள்ள பிரச்சனைகளை அலசி ஆராய்ந்த
எனும் பதிவு எனக்கு மிகமிக படித்த ஒரு பதிவாகும் . உளவியல் மேதையான  சிக்மன்ட் ஃப்ரூய்ட் கூட காதலைப் பற்றி இவ்வாரெல்லாம் தெளிவாக அலசிப்பிரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் மேலும் சில பதிவுகள் ,
புரவியாய் ஒரு ஆளுமை
 உறக்கத்தின் வோ்
வேளாண்மை

எனக்கு ஒரு பெரிய ஆசை உள்ளது . எனக்கு மட்டுமல்ல; என் தாயாருக்கும் தான் . கடைசி காலத்தில் நல்ல நீரூரும் மருதநில கேணியைச் சுற்றி, 1 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து, என் அன்றாட உணவுக்கான விவசாயப்பொருட்களை நானே விவசாயம் செய்ய வேண்டும் என்பதே! எதேச்சையாக இன்று எஸ்.ராவின் உணவு யுத்தத்தை படிக்க நேரிடும்போது நாம் எவ்வளவு அபாயகரமான விஷப்பொருட்களை உணவாக இன்றைய தினம் உண்டு வருகிறோம் என்றறிந்ததும், என் ஆசையானது பேராசையாக மாறியது என்றால் மிகையில்லை. இன்றைய நிலையில் நாம் காய்கறிகளென்று நினைத்து உண்பதில்கூட எவ்வளவு நச்சுப்பொருட்களுள்ளன என்பதனையும்,  வாழைப்பழம் சார்ந்து இலத்தின் அமெரிக்க நாடுகள், கரிபியன் பகுதிகளில் நிகழ்ந்த மறைமுக யுத்தங்கள் போன்றவற்றை படிக்கும்போது  ஒருநிமிடம் நம் மனம் துக்கத்தில் விக்கும். இப்போது பெரும் சர்ச்சைக்குள்ளான நூடுல்ஸில் கலக்கப்பட்டு வரும் மோனோசோடியம் குளோமேட் பற்றி அன்றே எஸ். ரா கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது . கண்டிப்பாக நாம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் உணவு யுத்தம். அது சரி, சொல்ல வந்ததை மறந்துவிட்டேனே ! இந்த தலைப்பின் கீழ் நாம் பார்க்க இருப்பவர் ஒரு பழம்பெரும் பதிவர் . என் சிவ புராணம் , கீதம் ! சங்கீதம் , இந்தியக்கனவு 2020, பாடும் நிலா பாலு , என் கூட்டில் இருந்து என்ற இவரது வலைத்தளங்களில் ஏதேனும் ஒன்றையாவது கட்டாயம் வாசித்திருப்பிர்கள். இவர் 2006 – லிருந்து தோட்டம் எனும் வலைத்தளத்தில், வீட்டிலேயே ஒரு சிறு தோட்டம் அமைத்து, அதில் பல்வேறு வகையான காய்கறிகள், பூக்கள், பழங்கள் போன்றவற்றை சுயமாக வளர்த்து , அதன் வளர்ப்புமுறைகளைப் பற்றியும், தேவையான விதைகள் கிடைக்குமிடங்கள் பற்றியும் , வேளாண் கண்காட்சிகள் பற்றியும் தெள்ளத்தெளிவாக நமக்கு எடுத்தியும்புகிறார் . மேலும் நம் வீட்டில் தோட்டம் அமைப்பது குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளித்தும் வருகிறார் . கண்டிப்பாக இவரது பணி பாராட்டத்ததக்கதாகும் . இவருடைய சில பதிவுகள் , 

(மேலே குறிப்பிட்ட ஜென் கதை, A BITTER SWEET OF LIFE எனும் தென்கொரிய திரைப்படத்தில் இருந்து எடுத்தாழப்பட்டது . அப்படத்தில் வரும் மற்றொரு ஜென்  கதையை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன். )

நன்றியுடன் ,

மெக்னேஷ் திருமுருகன் .
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது