07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 11, 2007

பொருளாதாரம், பங்குவணிகம்

பத்திரிக்கைகள் படிக்கிறப்போ எத்தன பேர் பொருளாதாரம், பங்கு மார்கெட், போன்ற விஷயங்கள் தேடிப் போய் படிக்கிறோம். இல்ல புஸ்தகம் வாங்கறப்போ அது மாதிரி புஸ்தகங்கள் வாங்கறோமா?...ஆர்வக் கோளாறு காரணமா சில சமயம் படிக்கலாம்னா பெருசா இருக்கும். இல்லன்னா புரியாத சொற்றொடர்கள், dry ஆ இருக்குற மாதிரி உணர்வோம்.

நம்ம தமிழ்மணம் நன்பர்களே அழகா, இத பொழிபெயர்ச்சி செய்து, எளிதா, புரியற மாதிரி, தொடர்ச்சியா, தளராம எழுதீட்டு வராங்க. மா.சிவகுமார், பங்காளி, குப்புசாமி, இப்ப புதுசா தென்றல் ஆகியோர் நல்ல தொடர்கள எழுதீட்டு வராங்க.

மா.சிவகுமாரின் பொருளாதாரம் பற்றிய கட்டுரைகள் பயனுள்ளவை. பொருளாதாரம் படிச்சவங்கிறதுனால ஆர்வமா சில சமயம் படிப்பேன்....

அவர் எழுதினது எல்லாம் ஒரே பக்கத்துல குடுத்து இருக்கார் பாருங்க.. பொருளாதாரம், வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்..இத விட அழகா அல்வா மாதிரி எங்கேயும் கிடைக்காதுங்க.. நேரம் கிடைக்கும் போது படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க..அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்...

அடுத்து பங்காளியின்...பங்குவணிகம்.

பங்குவணிகம் பற்றி ஆன்னா ஆவன்னா வில இருந்து ஆரம்பிச்சு இருக்கார். சின்ன சின்ன பதிவுகளா இருக்குறதுனால படிக்கிறதுக்கும் சலிப்பு வர்ரது இல்லை...அவர் வாக்கு குடுத்து கரெக்டா எழுதீட்டு வர்ர தொடர் இது தான். அதுக்காகவாது ஆதரவு குடுக்கனும்.( கோவிச்சுக்காதீங்க சார்)

பங்காளியின் வர்த்தகம் பதிவுல தீக்குச்சி மரம் பற்றி குறிப்பிட்டுருக்கார். இத படிச்சுட்டு அவர் குடுத்திருந்த தொலைபேசி எண்ணுக்கு சம்பந்தப்பட்டவர் கிட்ட பேசினேன். அட அமாங்க, நெசமாத்தான்.... பெரிய பண்ணாடிச்சி ஆகப்போறேனுங்கோவ்.. இரண்டு மாதம் கழித்து தொடர்பு கொள்ள சொல்லி இருக்கார் (வெயில் காலம் முடிஞ்ச பின்னாடி). உங்களுக்கும் எங்காவது நிலங்கள் தரிசா கிடந்தா இத முயற்சி செய்து பாருங்க. நான் கண்டிப்பா இதுல இறங்கப் போறேன்....நன்றி பங்காளி....ஒரு நாளைக்கு பெரிய பண்ணாடிச்சி ஆகும்போது உங்களை நினச்சுக்குவேன்..:-) .. ஆனா இதுல ஏதாவது மிஸ் ஆச்சு...அப்புறம் பாருங்க..

இன்னும் தமிழ்நிதியின் பதிவுகள்.. பங்குமார்க்கெட் பற்றி...

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவதற்கு முன் ....மியூச்சுவல் ஃபண்ட் சம்பந்தமான சில முக்கியமான வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்னு ஆரம்பிச்சு இருக்கார்.

ரொம்ப நாளா பங்குவணிகம் பற்றி எழுதீட்டு வர்ர குப்புசாமியின் பதிவுகள். குறிப்பா கச்சா எண்ணை பற்றி அவர் எழுதின பதிவு...என்ன மாதிரி மக்குக்கே புரிஞ்சுரிச்சுன்னா பாருங்க... நாணயம் விகடன்லேயும் இந்த கட்டுரை வந்துச்சு.

இந்த மாதிரி தலைப்புகள் எல்லாம் தேடிப் போய் பார்த்து படிப்போமாங்கிறது சந்தேகம் தான். இவங்க அன்றாட அலுவல்களுக்கு மத்தியில, நேரம் ஒதுக்கி, சலைக்காம பின்னூட்டத்த பற்றி கவலைப்படாம, தொடர்ந்து எழுதீட்டு வர்ரது பெரிய விஷயம் தானே?.

நான் இந்த பதிவ எழுதப் போறேன்னு சொன்னப்போ லட்சுமி, சிவகுமார் பங்குபெற்ற இணையத்தில் இன்பத்தமிழ் வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு பத்தி சொன்னாங்க. இதுல மா.சிவகுமார் அவர்கள் வ்லைப்பதிவு உலகத்த பற்றி பகிர்ந்துக்குறார் கேளுங்க. பங்குவணிகம், மியூச்சுவல் ஃபண்ட் பதிவுகள் பற்றி இவர் குறிப்பிட்டு இருக்கார். இப்ப யார் படிக்கிறாங்கன்னு கவலைப்படாம எதிர்காலத்தில வர்ரவுங்க நம்ம எழுதறத படிச்சு பயண் பெறுவாங்க..அதுக்காகவாவது நமக்கு தெரிஞ்சத நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா எழுதனும்னு சொல்ரார்.

இந்த இடத்துல நான் இன்னொன்னு பகிர்ந்துக்க விரும்பறேன். எங்க கல்லூரியில் படிக்கும் நான்கு MBA மாணவர்கள், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், பங்காளியின் பதிவுகளையும், மா.சிவகுமாரின் பதிவுகளையும் படிச்சுட்டு வர்ராங்க. இதுல கல்லுரியில் இருந்து சிவகுமாரின் பதிவுகளில் பின்னூட்டம் போட முடியறதில்லை. ஆனா பங்குவணிகம் பதிவுல போடறதுண்டு.

6 comments:

 1. நமக்கு சம்பந்தம் இல்லாத தலைப்பு... ஆனாலும் நம்ம மங்கை எழுதியதாற்றேன்னு தான் வந்தேன். ஆன்னா ஆவன்னா மட்டும் போய் வாசித்து வந்தேன். உங்களுக்கு நன்றி சொல்லனும் மங்கை. மத்த பதிவுகளும் நேரம் கிடைத்ததும் படிக்கணும். :)

  ReplyDelete
 2. காய்கறிக்காரங்க சொல்ற மொத்தத்தொகை என்னவோ அதக்குடுத்துட்டு வர ஆளு நான் ...பொருளாதாரம் கணக்கு இதோடெல்லாம் எனக்கு பிணக்கு இது நம்ம நண்பர்களுக்கே தெரியும்.சரி சம்பாதிச்சா அதெல்லாம் புரிஞ்சுருக்குமோ என்னவோன்னு நினைச்சா வேலைக்குப் போற காட்டாறே இப்படி சொல்றாங்களே...ம் இதெல்லாம் படிச்சு எதாச்சும் ஏறுதான்னு பார்க்கறேன்.

  ReplyDelete
 3. மங்கை,

  எனது பதிவுகளைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. காலையில் டானிக் சாப்பிட்டது போல இருக்கிறது உங்க இடுகையைப் படித்தது :-)

  முத்துலெட்சுமி,

  //பொருளாதாரம் கணக்கு இதோடெல்லாம் எனக்கு பிணக்கு இது நம்ம நண்பர்களுக்கே தெரியும்.சரி சம்பாதிச்சா அதெல்லாம் புரிஞ்சுருக்குமோ என்னவோன்னு நினைச்சா...//

  எங்களுடைய வாடிக்கையாளர் (பெரிய ஒரு நிறுவனத்தின் அதிபர்), எப்படி விலை வைப்பது, எப்படி பேரம் பேசுவது என்று திங்கள் கிழமை ஒரு
  அரை மணி நேரம் அறிவுரை கூறினார். அவர் அனுபவத்தில் கற்றுக் கொண்டதுதான். படிப்போ, வேலை பார்ப்பதோ ஒரு தகுதி கிடையாதுதான்.

  காய்கறி வாங்கும் போது "ஏன்" என்று கேட்கப் பழகிக் கொண்டால் பொருளாதாரத்துடனான பிணக்கு ஓடியே போய் விடும்.

  அன்புடன்,

  மா சிவகுமார்

  ReplyDelete
 4. இன்னிக்கும் சென்ஷி ஆஜர்

  ReplyDelete
 5. 'ஆட்டத்தில சேத்துகிட்டதுக்கு' நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது