07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 15, 2007

வணக்க்க்க்க்கம் .....

வாழ்க்கை ஒரு வட்டம், சதுரம் என்று இளைய தளபதி ஒரு திரைப்படத்தில் பஞ்ச் பேசியிருப்பார், வாழ்க்கை மட்டுமல்ல வலைப்பதிவு சமூகம் கூட அப்படித்தான். 20 பேர் தமிழில் பதிவு செய்து கொண்டிருந்தபோது நேரத்தையும், பொருளையும்,செலவழித்து திரட்டிகள் ஏற்படுத்தும் அவசியம் இருந்திருக்கவில்லை. படிக்க விட்டுப்போன நல்ல பதிவுகளை அடையாளம் காண வலைப்பூ ஆசிரியர் முறையே போதுமானதாக இருந்தது. அதுவே 200 பேர் பதிவு எழுதத்தொடங்கியதும் தானியங்கி திரட்டிகள் அவசியமானதாகிப்போனது. இப்போது 2000 பேர் பதிவெழுதுகிறார்கள். தானியங்கி திரட்டிகளே பதிவுகளை திரட்ட திணறத்தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் 20 நல்ல இடுகைகளை படிக்க 80 ஒப்பேத்தல் இடுகைகளை படித்து நாலு அனாசின் மாத்திரை சாப்பிட்டாக வேன்டிய நிலை உருவாகிவிடுகிறது. அந்த 20 நல்ல இடுகைகளை மட்டும் அடையாளம் காட்டும் பிழையில்லா நுட்பங்கள் வரும் வரை வலைப்பூ ஆசிரியர் மாதிரியான மனிதத்திரட்டிகள் அவசியமாகிறது. அதுவே ஒவ்வொரு வாரமும் ஒரு ஆசிரியர் எனும் போது அவரவரின் விருப்பத்திற்கிணங்க பல்வேறு தளங்களிலிருக்கும் நல்ல பல பதிவுகளை அடையாளம் காண முடிகிறது. இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வலைச்சரம் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வாய்ப்பிற்காக நன்றிகள்.

வலைப்பூ ஆசிரியராக இருக்கும் இந்த வாரத்தில் எனக்கு பிடித்த நல்ல பதிவுகளையும் பதிவர்களையும் அடையாளம் காண்பிக்க முயல்கிறேன். தமிழ் வலைப்பதிவுலகம் மட்டுமின்றி எனக்கு பிடித்த சில ஆங்கில வலைப்பதிவுகளையும் அடையாளம் காட்டலாம் என்றிருக்கிறேன். அறிமுகப்பதிவிலேயே திங்கள் கிழமையை கடத்தியாச்சு. இதனை ஈடுகட்டும் வகையில் வரும் நாட்களில் நல்ல பல பதிவுகளை கோர்த்து நல்ல ரசிக்கும்படியான பயனுள்ள வலைச்சரம் அமைக்க முயல்கிறேன்

3 comments:

 1. விக்கி!

  வாருங்கள். உங்கள் தேடல்களில் உங்களைத் தாருங்கள்.

  நன்றி

  ReplyDelete
 2. //ஒவ்வொரு நாளும் 20 நல்ல இடுகைகளை படிக்க 80 ஒப்பேத்தல் இடுகைகளை படித்து நாலு அனாசின் மாத்திரை சாப்பிட்டாக வேன்டிய நிலை உருவாகிவிடுகிறது. அந்த 20 நல்ல இடுகைகளை மட்டும் அடையாளம் காட்டும் பிழையில்லா நுட்பங்கள் வரும் வரை வலைப்பூ ஆசிரியர் மாதிரியான மனிதத்திரட்டிகள் அவசியமாகிறது. //

  சரியான கருத்துக்கள்..

  :))

  நச்சென்று ஆரம்பிக்கும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  சென்ஷி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது