07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 27, 2007

திறக்கப்பட்ட சன்னல்கள் – பின்புலம்ஒரு ஞாயிற்றுகிழமையின் மதிய வெக்கையில் பொன்ஸ் வலைச்சரம் தொடுக்க அழைத்தபோது கொஞ்சம் தயக்கமாக இருந்ததென்னவோ உண்மை.வெட்டியாய் வலையில் மேய்ந்துகொண்டிருப்பவன் என்பதை எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறார்கள்.சென்ற வருடத்தின் இறுதிவாக்கில் சில்ரென் ஆஃப் ஹெவன் படத்தை கூகுலில் தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது சித்தார்த்தின் அங்கிங்கெனாதபடி வலைப்பக்கம்.கணினியில் தமிழெழுத்துக்களையே பார்த்திராத நான் ஒரு பெரிய உலகத்தின் சன்னல்களை சித்தார்த்தின் மூலமாய் கண்டுகொண்டேன்.அடுத்த மூன்று மாதங்கள் அவன் அறிமுகப்படுத்திய மதி,பாம்பாட்டி சித்தர் வலைப்பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்தேன்.மெல்ல தமிழ்மணம் தடம் பற்றி வந்து சேர்ந்தபோது இவ்வுலகின் பிரம்மாண்டம் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.பொன்ஸ் ஐ வெகு தயக்கங்களுக்குப்பிறகு தொடர்பு கொண்டு வலைப்பதிவிக்க தொடங்கி விட்டேன் தமிழ்மணத்தில் சேராமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது தம்பியின் அறிமுகம் கிடைத்தது.என் வலையில் ஏதோ கோளாறாம் என் பக்கத்தை தமிழ்மணத்தில் இணைக்க தம்பி,வெட்டி,ராம் போன்ற நண்பர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். என் எழுத்துக்களை பார்த்த பிறகு ஏண்டா இவனை சேர்த்தோம் என நொந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

வரவிருக்கும் ஒரு வாரத்தில் எனக்கு பிடித்த,நான் படித்த,படித்துக் கொண்டிருக்கிற வலைப்பதிவுகளையும் சில இடுகைகளையும் இங்கிட விரும்புகிறேன்.இது முழுக்க முழுக்க என் பார்வையின் என் கண்ணோட்டத்தின் அனுகுமுறைதான்.இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருக்குமெனில் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.இப்போதுதான் வந்திருக்கிறேன் இன்னும் எல்லாரையும் படிக்கவில்லை.தலைப்போடு தொடர்புடைய சுட்டிகள் ஏதேனும் இருக்குமெனில் தயங்காது பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இந்த ஒரு வாரத்தில் நான் எழுதப்போகும் பதிவுகளை பின் வருமாறு வகைப்படுத்தியுள்ளேன்.

1.வலையுலகில் இலக்கியம்,திரைப்படம் சம்பந்தமான இடுகைகள் அதாவது வலையுலக அறிவுஜீவிகளின் பதிவுகள்.
2.வலைக் கவிகள், கவிதைகள்
3.கருத்துச் செறிவு,சமூக பார்வை,ஜனரஞ்சக பார்வையுள்ள எழுத்துக்கள்
4.கும்மி மற்றும் கொண்டாட்டம் நிரம்பிய நகைச்சுவை இடுகைகள்
5.புதிய பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள்

திட்டமிடும் துறையிலிருப்பதால் இது போன்ற ஆரம்ப மிகைப்படுத்தல்களை தவிர்க்க இயலவில்லை.வார முடிவில் பார்த்து விடுவோம் திட்டத்திற்க்கும் நடைமுறைக்குமுள்ள வேறுபாடுகளை.ஓ கே மக்கா ஸ்டர்ட் மியூஜிக்

19 comments:

 1. //ஒரு ஞாயிற்றுகிழமையின் மதிய வெக்கையில் பொன்ஸ் வலைச்சரம் தொடுக்க அழைத்தபோது கொஞ்சம் தயக்கமாக இருந்ததென்னவோ உண்மை// அப்பா, உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கர பின் நவீனத்துவ கவிஞர் இப்படித்தான், எங்கேயானாலும் எட்டி பாத்துடராருங்கோவ்...

  ReplyDelete
 2. இதுக்குத்தான் சொல்றது புரியாத பாஷையில கவுஜ எழுதக் கூடாது.பாருங்க பொன்ஸ் ஏதோ பெர்ர்ரிய ஆளுன்னு இங்கன புடிச்சி போட்டுட்டாங்க.....ச்சும்மா...
  வாழ்த்துக்கள் .கலக்குங்கள்.

  ReplyDelete
 3. . கண்மணி said...
  கலக்குங்கள்.
  //

  ஹி ஹி கலந்தாச்சி அய்ஸ் ரெடியா..?

  ReplyDelete
 4. லக்ஷ்மி

  :) நன்றி

  டீச்சர் உங்க ஸ்டூடண்ட் தான் ..பயப்படாதீங்க!!

  மின்னல ரெடிப்பா ஸ்டார்ட் மியூஜிக்!!!

  ReplyDelete
 5. //என் வலையில் ஏதோ கோளாறாம் என் பக்கத்தை தமிழ்மணத்தில் இணைக்க தம்பி,வெட்டி,ராம் போன்ற நண்பர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். என் எழுத்துக்களை பார்த்த பிறகு ஏண்டா இவனை சேர்த்தோம் என நொந்திருப்பார்கள் என்பது திண்ணம்.//

  சே சே.. இன்னவரைக்கும் அது தோணவே தோணமா இருக்கிறமாதிரி தானே நீங்க எழுதிட்டு இருக்கீங்க... :)

  வலைச்சர ஆசிரியர்'க்கு வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 6. வலைச்சர ஆசிரியர்'க்கு வாழ்த்துக்கள் :)
  //

  இது தெரியாம நான் வேற எதோ சொல்லிட்டேன் கானகத்தில தொலைச்சிடு
  :)


  வாழ்த்துக்கள்

  (இது பெரிய இடம் பாத்து நடந்துக்கப்பு..:) )

  ReplyDelete
 7. என்னயிது கதவு தொறந்துயிருக்கு என்ன மாதிரி கண்ட நாய் உள்ள வந்துடாது...:)  testing

  ReplyDelete
 8. வலைச்சரம் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!!

  //என் பக்கத்தை தமிழ்மணத்தில் இணைக்க தம்பி,வெட்டி,ராம் போன்ற நண்பர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். என் எழுத்துக்களை பார்த்த பிறகு ஏண்டா இவனை சேர்த்தோம் என நொந்திருப்பார்கள் என்பது திண்ணம்.//

  அப்படியெல்லாம் நினைப்போமா? உங்க பக்கமெல்லாம் நான் வரதே இல்லை... நீங்க எல்லாம் பெரிய இலக்கியவாதியில்லையா?

  தம்பி, ராயல் மாதிரி எலக்கியவாதிகள் மற்றும் கவுஜ காதலர்களுக்கும் நீங்கள் வந்தது கொண்டாட்டம் தான் ;)

  ReplyDelete
 9. வாழ்த்துகளுக்கு நன்றி ராம்

  ஆமாம் மின்னல் எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன் :)

  திறக்கப்பட்டிருப்பது சன்னல்கள் மட்டுமில்ல கதவுகளும்தான் அனானி

  ReplyDelete
 10. /நீங்க எல்லாம் பெரிய இலக்கியவாதியில்லையா? /

  வெட்டி!! எலக்கியவாதியா ஆஹா யாரோ கிளப்பி விட்ட புரளிய்யா அது.பாசக்கார குடும்ப பொருளாளரா அடிக்கிற கும்மியெல்லாம் பாத்துமா என்ன நம்புற நீ!!

  ReplyDelete
 11. //அய்யனார் said...

  /நீங்க எல்லாம் பெரிய இலக்கியவாதியில்லையா? /

  வெட்டி!! எலக்கியவாதியா ஆஹா யாரோ கிளப்பி விட்ட புரளிய்யா அது.பாசக்கார குடும்ப பொருளாளரா அடிக்கிற கும்மியெல்லாம் பாத்துமா என்ன நம்புற நீ!! //

  அய்ஸ்,
  நாங்களே ஃபிராடு தான். எங்களுக்கேவா???

  உங்க பதிவுல ஒண்ணாவது உங்க பாசக்கார குடும்பம் கும்மி அடிச்சிருக்கா?

  உங்க கடைசி பதிவுல பாதிக்கு மேல படிக்கறதுக்குள்ளவே கண்ணை கட்டிடுச்சி...

  நீங்க இலக்கியவாதி இல்லைனு தம்பி இல்லை கோபி சொல்லட்டும் நான் நம்பறேன் ;)

  ReplyDelete
 12. உங்க பதிவுல ஒண்ணாவது உங்க பாசக்கார குடும்பம் கும்மி அடிச்சிருக்கா?

  ///


  அய்ஸ் நான் அப்பவே சொன்னேன் கேட்டியாலே நீயி

  ReplyDelete
 13. //
  உங்க கடைசி பதிவுல பாதிக்கு மேல படிக்கறதுக்குள்ளவே கண்ணை கட்டிடுச்சி...
  ///

  இருக்காத பின்ன ..:)

  ReplyDelete
 14. //
  நீங்க இலக்கியவாதி இல்லைனு தம்பி இல்லை கோபி சொல்லட்டும் நான் நம்பறேன் ;)
  ///

  நான் சொன்ன நம்ப மாட்டிங்களா..?
  நான் சொல்லுறேன்
  இலக்கியவாதி இல்லை
  இலக்கியவாதி இல்லை
  இலக்கியவாதி இல்லை


  அதயும் தாண்டி மஹா இலக்கியவாதி

  (அய்ஸ் சிரிப்பான் போடல இப்போ நீ பொருளளார் வேற தினமும் என்னை கவனி கலக்க..)

  ReplyDelete
 15. /கோபி சொல்லட்டும் நான் நம்பறேன் ;) /

  பாலாஜி!! இதானே கோபி வெகேசன் முடிஞ்சி வரட்டும். சொல்லவைக்கிறேன்:)

  ReplyDelete
 16. மின்னலு இந்த வாரம் 'கலக் 'கிடுவோமா ? அப்படியே கும்மி பத்தியும் டிஸ்கஸ் பண்ணிடலாம்

  ReplyDelete
 17. /நீ பொருளளார் வேற தினமும் என்னை கவனி கலக்க..) /

  அப்கோர்ச் மின்னல் அப்கோர்ச் ஆனா தினம் நீ அலைன் ல இருந்து துபாய் வந்திடனும் ஓ கே வா

  ReplyDelete
 18. /இதுக்குத்தான் சொல்றது புரியாத பாஷையில கவுஜ எழுதக் கூடாது.பாருங்க பொன்ஸ் ஏதோ பெர்ர்ரிய ஆளுன்னு இங்கன புடிச்சி போட்டுட்டாங்க.....ச்சும்மா...
  /
  :)


  வாழ்த்துக்கள், அய்யனார்!

  ReplyDelete
 19. நன்றி தென்றல்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது