07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 22, 2007

ஈழத்தின் இளைய தலை முறை

"ஈழத்தின் குட்டிச்சுவர் கூட்டம்" என்றுதான் தலைப்புப்போடுவம் என்று நினைச்சனான் பிறகு குட்டு வாங்கி மண்டைல போக்கிரி வடிவேலின்ர கட்டு மாதிரி வந்திடுமென்டு மனச மாத்திட்டன்.

அகிலனண்ணாவின்
கனவுகளின் தொலைவு


இந்த வலைப்பதிவு எனக்குச் சமீபகாலமாகத்தான் அறிமுகமானது.ஏற்கனவே முன்பொருதடவை கனவுகளின் தொலைவுக்குச் சென்றிருக்கிறேன் ஆனால் அன்று நான் வாசித்த ஆக்கம் பெருசா என்னைக்கவரேல்ல ஆனால் போன வாரம் ஒருபேப்பரில் அகிலனண்ணா எழுதின"வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு " என்ற ஆக்கத்தை வாசித்தபோது சின்ன வயசில கிணத்துத் தட்டில இருக்கிற எல்லாத் தும்பியையும் நான் படுத்தின பாடு ஞாபகம் வந்திட்டா உடனயே கனவுகளி்ன் தொலைவுக்குப்போய் எல்லாப்பதிவுகளையும் வாசிச்சு முடிச்சிட்டன்.மரணத்தின் வாசனை பற்றிய நான்கு பதிவுகளுண்டு.அம்மம்மாவின் மரணத்தைப்பற்றிய பதிவை வாசிச்சுப்பாருங்கோ.ஊரில நீங்களும் என்னைப்போல யாராவது சொந்தக்காரக் கிழவிகளோட சேட்டை விட்டிருந்தீங்கிள் என்டால் இதை வாசிச்சுக் கட்டாயம் அழுவீங்கள்.மற்றது நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டியது "கார்த்திகை தீபமும் கணேசலிங்கம் வாத்தியும்.. .ஊரில கார்த்திகை விளக்கீடு நேரம் சின்னப்பிள்ளைகளா இருந்த நேரம் நடந்தவை எல்லாம் அப்படியே உங்கள் முன் நிழலாட வைக்கும் பதிவு.


தான்யாவின் காகித மலர்கள்
'கற்பை' அழித்தல் .இதுதான் நான் முதன் முதலில் வாசித்த தான்யாவின் ஆக்கம்.சா இப்பிடியெல்லாம் எப்பிடி யோசிக்கினம்,எழுதினம் என்று யோசிச்சுக்கொண்டே தான்யாவின் கவிதைகளையும் விமர்சனங்களையும் வாசிச்சு முடிச்சிட்டன்.கவிதைகள் விளங்கினதா என்று கேக்காதயுங்கோ :-) இதுவரைக்கும் நிறையப்பேரெழுதின 100 கவிதை வாசிச்சிருப்பனெண்டால் அதில ஒரு 5 கவிதை விளங்கியிருக்குமோ தெரியேல்ல.

பிரதீபாவின் An Utopian *in tamil*
என்னத்தச் சொல்ல...கதையெழுதினாலே கவிதை மாதிரிக்கிடக்கு.கவிதைகளையும் வாசிச்சு என்னை விட நல்லாவே விளங்கிக்கொள்ள வாழத்துக்கள்:-)

அம்புலியக்காவின் நேசமொழியில் பேசவிடு
கனநாளா நேசமொழியில் நானும் பேசவேணும் என்று ஆசை.சில வருடங்களுக்கு முதல் "Orpahn At My Door" என்றொரு புத்தகம் வாசிச்சனான்.உண்மையா அதைப்புத்தகம் என்று சொல்லேலாது.அது உரு நாட்குறிப்பேடு.ஒரு 11 அல்லது 12 வயதுப்பிள்ளையின் நாட்குறிப்பேடு.நாய்க்குட்டி முதல் குடும்ப உறுப்பினர்களின் அத்தனை பேரைப்பற்றியும் ஆசிரியர்கள் நண்பர்கள் என குறிப்புகள் சுவாரிசயமாக எழுதப்பட்டிருக்கும்.அம்புலியக்காவின் பத்திகளை வாசிக்கும்போது Orpahn At My Door ல் வரும் அந்தச்சிறுபெண்ணின் நினைவு வருவது வழக்கம்.ஆனால் அம்புலியக்காவின் பத்திகளி்ல் பல வரலாற்றுச்சுருக்கங்களும் இடம்பெற்றிருக்கும் சிலநேரம் அந்த வரலாற்று நிகழ்வுகளைப்பற்றிய அறிவு இல்லையென்றால் விளங்குறது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும்.

முரண்வெளி>
பெட்டையின் வலைப்பதிவிலிருந்து "
வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…" வாசிக்கப்போய்த்தான் முரண்வெளி எனக்கு அறிமுகமானது.முரண்வெளியில் பலர் எழுதுகிறார்கள்.பெயருக்கேற்றதுபோல முரணான ஆக்கங்கள்தானுண்டு.இதுவரை நினைத்துப்பார்க்காத கேள்விப்படாத பல விடயங்களுண்டு தெரிந்துகொள்ள.நான் வாசித்தது ஒரு சில ஆக்கங்கள் தான்.வாசித்துப் புரிந்துகொள்ள வட்டத்துக்கு வெளில வந்துநின்று சிந்திக்க நிறையவுண்டு.(எனக்குத்தான்).


நிருபாவின் புழுதி

2005க்குப்பிறகு எதுவும் புதிதாக எழுதவில்லை.ஆனால் எல்லாரும் கதைச்சு ஓய்ஞ்சு போன இந்த பூப்புனித நீராட்டு விழா பற்றிய Pfui! Pfui! புனித விழா எல்லாரும் முக்கியமா அம்மாமார் வாசியுங்கோ.அப்பிடியே மச்சான் 19 பவுணில தாலி செய்துபோட்டானெண்டு தான் 21 பவுணில தாலி செய்யணும் என்று ஆசைப்படுற ஆக்களைப்பற்றியும் அதை வாங்கிக் கட்டிக்கொண்டு திரியத் தயாரா இருக்கிறவையைப்பற்றியும் ஆராவது எழுதுங்கோவன்.

நம்மட கொழுவித்தாத்தா :
தாத்தா என்னதான் எல்லாரோடயும் கொழுவுப்பட்டாலும் உருப்படியாவும் சிலது செய்வார்.அப்பிடி அவர் எழுதினது
என்னைத் தேடுது சாவு . ஒருகூடை சன்லைட்டைக் கொட்டுறது விட்டிட்டு இப்பிடி ஏதாவது எழுதச்சொல்லலாம் தான் பிறகு கொழுவின்ர மவுசு குறைஞ்சிடும். {தாத்ஸ் இளைய தலைமுறைக்க வருவாரோ தெரியல ஆனால் அவற்ற எழுத்து வரும் ஸோ கண்டுக்காதயுங்கோ)

கீர்த்தனாவின் ள் http://keerthanakk.blogspot.com/2007/05/blog-post.html
சத்தியமா எனக்கு கீர்த்தனா எழுதுறகள் விளங்காதாம்.வெளில சொன்ன வெக்கக்கேடு.பல்லியோடு சிலந்தியோடயெல்லாம் கதைக்கிறா அதாலதானோ என்னவோ:-)

இப்ப என் நண்பிகள் இருவர் எழுதத்தொடங்கியிருக்கிறார்கள்.

நந்தியாவின் வாடமல்லிகை
காதுக்க கோச்சி விட்டுக்கொண்டிருந்தாலும் "அம்மா கிடைக்குமா போன்ற நல்ல கதைகளையும் எழுதும் புதிய வலைப்பதிவர்.

வாசகியின் தூறல்
போனமாதம் தான் தூறத்தொடங்கியிருக்கு.போக போகத்தான் தெரியும் சூறாவளியா வாடைக்காற்றா என்று :-)


இனி அறிமுகம் தேவையற்றவர்கள்

வசந்தனண்ணா
சயந்தனண்ணா
சோமியண்ணா
பிரபாண்ணா
டிஜே
ஈழநாதனண்ணா
கிஸோக்கண்ணன்
விஜே
தமிழ்பித்தன்
மதியக்கா
ஷ்ரேயா (அம்மணியை வலைப்பக்கம் காணேல்ல ஆனால் facebook பக்கம் ஒவ்வொருநாளும் காணலாம்:-) யாராவது தேடுறீங்ககள் என்றால் சொல்லுங்கோ உடன மெஸேஜ் அனுப்பலாம்)
நித்தியா
நிவேதா
மயூரனண்ணா
U.P.தர்சன்
ஹரன
மயூரேசன
பகி

உங்களை அல்லது உங்கள் நண்பர்களை தெரிந்தவர்களை பட்டியலில் குறிப்பிட மறந்திருந்தால் தயவுசெய்து சொல்லுங்கோ!

34 comments:

  1. http://kirubans.blogspot.com/
    http://tamilini.blogspot.com/
    http://valvaithalam.blogspot.com/
    http://birund.blogspot.com/

    ReplyDelete
  2. இன்னும் இருக்கினம்

    தூயா பபா
    http://www.thooya.blogspot.com/

    காதல் கடிதம் வசீகரன்

    http://vaseeharan.blogspot.com/

    மதி (இவ மூத்ததா, இடைப்பட்டதா என்று நீங்கள் தான் சொல்லவேணும்)


    http://mathy.kandasamy.net/musings/


    கீழ் வரும் அண்ணைமாரும் இளைய சிந்தையோடு இருப்பவை தான்
    யோகன் அண்ணா
    மலைநாடான்
    சிறீ அண்ணா

    )

    ReplyDelete
  3. ஐயையோ தூயவை எப்பிடி மறந்தன்....அடிவிழ முதல் எஸ்கேப் :-)

    ReplyDelete
  4. //மதி (இவ மூத்ததா, இடைப்பட்டதா என்று நீங்கள் தான் சொல்லவேணும்)//
    அது தான் எனக்கும் சந்தேகம் :)

    இன்னும் சிலர்

    http://sathyantk.blogspot.com/
    http://thedatsaram.blogspot.com/
    http://biththan.blogspot.com/
    http://chinnachiyinramon.blogspot.com/
    http://yarlanitha.blogspot.com/
    http://1paarvai.wordpress.com/

    ReplyDelete
  5. தமிழ்ப்பித்தனை மறைத்ததன் பின்னணியில் சர்வதேச சக்திகளின் சதி இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

    ReplyDelete
  6. hello hello prabanna..thamilpithan irukaru list la.

    ReplyDelete
  7. சினேகிதியக்கா

    இப்பிடி செய்திட்டீங்களே.
    சப் எண்டு பொயிட்டுது

    ReplyDelete
  8. என்ன சப் என்டு போட்டுது ...குட்டிச்சுவரில ஏறியிருந்து அரட்டையடிக்கலாம் என்று நினச்சு வந்தனீங்களோ :-)

    ReplyDelete
  9. பதிவு அருமை.
    நான் பதிவைச்சொல்லேல்ல.

    அப்ப நான் எதச்சொன்னன்?
    :-)

    சினேகிதியக்கா ஏலுமெண்டால் கண்டுபிடியுங்க பாப்பம்

    ReplyDelete
  10. உங்களைப்போல ஆக்களுக்கு நான் அறிமுகம் குடுத்தா அது நல்லாயிருக்காது :-)

    ReplyDelete
  11. இந்த லிஸ்ட்டில என் பெயர் ஏன் ரண்டாவதா வந்தது.. ?
    இளைய தலைமுறையில எதற்காக பிரபா சேர்க்கப் பட்டார்..?
    சரி போனால் போகட்டும் என்று அவரை சேர்த்தா பாத்தியளோ அவர் இன்னும் 3 பேரை கூட்டி வாறார்..

    சிநேகிதி ஈழத்தின் பழைய தலை முறை பதிவு எப்போ..

    ReplyDelete
  12. //சயந்தன் said...
    இளைய தலைமுறையில எதற்காக பிரபா சேர்க்கப் பட்டார்..?//

    அதானே சினேகிதி நானெல்லாம் மூத்தபதிவர் கானா பிரபா அண்ணயைப் பார்த்து வலைபதிய வந்தவர்கள்.

    ReplyDelete
  13. நல்ல தொகுப்பு.
    ஆனால் எங்களைப் போல ஆக்களை ஏன் விட்டியள்?
    நாங்களும் வலைப்பதிவர்கள்தாம். பாஸிஸ்டுகள் ஆரோ என்ர கடவுச்சொல்லைக் களவெடுத்து மாத்திப் போட்டதால வலைப்பதிய முடியாமல் பின்னூட்டங்கள் மட்டும் ஊட்டு ஊட்டெண்டு ஊட்டி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறன். ஆனா ஈழநாதனைவிட பிற்காலத்தில் வலைப்பதிஞ்சனான் எண்டதையும் சொல்லவேணும்.

    வன்னியன் மூத்த தலைமுறைக்குள்ள வருவாரோ?

    எனக்குத் தெரிஞ்சு ஈழவன், சூரமணி எண்டும் ரெண்டு பேர் இருக்கினம். அஞ்சலியை விட்டிட்டியள். யாழ்ப்பாணத்திலிருந்து பகியோடு இன்னோர் ஆணும் எழுதிக்கொண்டிருந்தார். அதைவிட பெண்ணொருவர் யாழ்ப்பாணத்திலிருந்து வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்தார். (நூலகர், காந்தலட்சுமி மாதிரி ஒரு பெயர்).
    உவங்கள் 'பயங்கரவாத பெடியங்கள்' எந்த வகைக்குள்ள வருவாங்கள்?

    ஈழத்தின் 'மூத்த தலைமுறை' பற்றின இடுகையும் வந்தபிறகுதான் விடுபட்டதுகள் பற்றிக் கதைக்கலாம்.

    எதுக்கும் இளைய / மூத்த எண்டதுகளின்ர வயது வரையறைகளை ஒருக்காச் சொன்னால் நல்லது.

    ReplyDelete
  14. மயூரன்,
    தேத்தண்ணி குடிச்சு முடிஞ்சு சாப்பாட்டு இலையோட வந்தாச்சு.
    ஆனாலும் ஒருகோப்பை தேத்தண்ணி குடிக்க இத்தனை மாதங்கள் எடுத்திருக்கக்கூடாது.

    பெட்டையள்தான் தங்கட வயசை மறைக்கப் படாத பாடு படுறதெண்டு பாத்தால் இவங்கள் கொஞ்சப்பேர் மற்றாக்களை அக்கா எண்டு கூப்பிட்டு அடிக்கிற கூத்து தாங்க ஏலாமல் கிடக்கு.

    ReplyDelete
  15. சினேகிதி இனி நான் அழ தான் வேணும்..:-(((

    நீங்க என்ட பதிவின்ட பெயருக்கு விளக்கம் கேட்டு விளங்க படுத்தி களைச்சு போய் பனடோல் எல்லாம் போட்டனான்.
    கடைசியில பார்த்தா பதிவின்ட பெயரே சரியா தெரிய இல்ல சினேகிதிக்கு :-((
    எனது பதிவின் பெயர் விகுதி இல்ல..இல்லல..
    என்ட பதிவின்ட பெயர்
    "+ள்"

    கொண்டோடி....

    //பெட்டையள்தான் தங்கட வயசை மறைக்கப் படாத பாடு படுறதெண்டு பாத்தால் இவங்கள் கொஞ்சப்பேர் மற்றாக்களை அக்கா எண்டு கூப்பிட்டு அடிக்கிற கூத்து தாங்க ஏலாமல் கிடக்கு//

    பெட்டை பெடியங்கள் என்டு நீங்க கதைக்க ஏலாது :-)
    யாரையாவது .. நக்கல் அடிக்க வேணும் என்டா பெயர் சொல்லி
    (பயம் இல்லை தானே?:-))
    பயம் என்டா .வேற எதையும் ..அவங்களுக்கு மட்டும் உரியதை அடையாளப்படுத்தி ..))நக்கல் அடியுங்கோ..!

    "பெட்டை" "பெடியன்"
    பால் வேறுபாட்டையும் இயல்புகளையும் முடிச்சு போடாதேங்கோ....
    புரியுதே???!!
    :-)

    ReplyDelete
  16. // த.அகிலன் said...
    //சயந்தன் said...
    இளைய தலைமுறையில எதற்காக பிரபா சேர்க்கப் பட்டார்..?//

    அதானே சினேகிதி நானெல்லாம் மூத்தபதிவர் கானா பிரபா அண்ணயைப் பார்த்து வலைபதிய வந்தவர்கள். //

    அப்பு ராசா

    நானொல்லாம் மூத்த வலைப்பதிவர் சயந்தனுக்கு பிறகு வந்த ஆள் ;-)
    அவர் என்னை விட 2 வருஷம் சீனியர் (வயசிலும் தான்)

    ( விட்டா அஞ்சலியையே ஆன்ரி என்று சொல்லுவாங்கள் போல கிடக்கு)

    ReplyDelete
  17. உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்க்கப் படுகின்றன.

    சயந்தன் அண்ணா 20 வதில இருந்து 40 வரை இளம் தலமுறியினர்தான் அதுக்கு மேல கிழந்தலமுறை. இதென்ன சின்னபுள்ளத்தனமான சண்டை ..நான் முந்தி நீ முந்தியெண்டு....ஆருக்கு வயசானதெண்டு.... சினேகிதியக்கா(?!) ஒரு நல்ல முயற்சி செய்திருகிறா அதை பாராட்டாமல். பாராட்டுக்கள் அக்கா, உண்மையில என்னைப் போன்ற அதிகம் வாசிபில்லாதவர்களுக்கு இது நல்ல அறிமுகம். மற்றது சிறுவர் வலைப்பதிவுகளையும் அறிமுகம் செய்யுங்கோ அப்பதான் நானும் சயந்தனும் செய்த ஒலிப்பதிவுகள் வெளிவரும்.

    இத்தனை அண்ணாக்களின் தங்கச்சியான சினேகிதிக்கு "தமிழ்மண தங்கச்சி" என்ற புதிய பட்டத்தை வழங்குவது குறித்து மொக்கைபதிவர் விடுதலை அமைப்பிடம் சிபாரிசு செய்துள்ளேன்.மத்திய குழுவின் முடிவு அறிவிக்கப்பட்டதும் பட்டம் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும்.

    நாமெல்லாம் தோழர்கள் இதில எதுக்கு அண்ணன் அக்கா என்ற முறைகள் எண்டு சிலர் கேட்கலாம்...அதுக்கு நாங்கள் சொல்வோம் தமிழ்மணம் ஒரு குடும்பம் என்று :))))))))))))

    ReplyDelete
  18. சோமி அண்ணையின்ர கருத்தின் படி இந்த பட்டியலில வராதவை எல்லாருக்கும் நாற்பது வயசுக்கு மேல எண்டா நான்,சின்னக்குட்டி,பெட்டை,சந்திரவதனா, பெயரிலி, நளாயினி,கறுப்பி எல்லாம் வயசானவை, ஆனா மலை நாடான் அண்ணை ,கான பிரபா அண்ணை, யோகன் அண்ணை எல்லாரும் இளைமையானவையோ?

    நானும் இனி எல்லாரையும் அக்கா அண்ணை எண்டு கூப்பிடப் போறன்.

    சினேகிதி அக்கா கோவிக்காதையுங்கோ சும்மா பகிடிக்குத் தான்.இப்படிப் பட்டியல் போட வெளிக்கிட்டாலே வில்லங்கம் தான். நான் இதுவரை வாசிச்சிருக்காத கன பேரின்ர அறிமுகம் கிடைத்தது , நன்றிகள்.

    ஆனா எங்க எங்கட பெயரும் கிடக்குதோ எண்டு கன பேர் வந்து பாப்பினம் ,எங்களை மறந்திட்டினமோ எண்டு நினைச்சு பின்னூட்டமும் கட்டாயம் போடுவினம். நானும் அதுக்காகத் தான் போடுறன்.உருப்படியா ஒண்டும் எழுதாட்டியும் பின்னூட்டம் போட்டாவது அடுத்த'முதியோர் பட்டியலில'ஆவது வருவம் எண்டு ஒரு அற்ப ஆசை தான். ;-)

    ReplyDelete
  19. வலைப்பதிவர்களைப் பற்றிய இன்னொரு பதிவு எழுதுற ஐடியா இல்லை!

    கீர்த்தனா மன்னிச்சிடுங்க...

    ReplyDelete
  20. தமிழ் நதி பேர விட்டுடீங்களே @@@@
    பின்னூட்டத்திலாவது யாரேனும் சொல்வீங்கன்னு பார்த்தென் ம்ஹிம் :(

    ReplyDelete
  21. //தமிழ் நதி பேர விட்டுடீங்களே @@@@
    பின்னூட்டத்திலாவது யாரேனும் சொல்வீங்கன்னு பார்த்தென் ம்ஹிம்//

    >>>> ஈழத்தின் இளைய தலை முறை

    அதானே தலைப்பு அய்யனார்....
    :)

    ReplyDelete
  22. அற்புதன் 20 வயதுக்கு கீழை சிறுவர் வலைப் பதிவுகளும் உண்டு.
    சினேகிதி எத்தனை இன்னல்கள் வந்தாலும் உங்கள் முயற்சியை கைவிட்டுடாதெங்கோ.........மொக்கை பதிவர் விடுதலை அமைப்பின் ஆதரவு எப்பவும் உங்களுக்கு உண்டு.

    மத்திய குழு
    M.P.V.A

    ReplyDelete
  23. அற்புதன்


    //மலை நாடான் அண்ணை ,கான பிரபா அண்ணை, யோகன் அண்ணை//

    சினேகிதி மலை நாடான், யோகன் பரிஸ் ஆகியோருடைய பேயரை சேர்க்கேல்லை எண்டதை சொல்ல வேணும். ஆனா கானா பிரபா வை சேர்த்திருக்கிறா.

    அதை எல்லாரும் கவனியுங்கோ ;)

    கானா பிரபா தன்னோட வயதுகறரை மறக்காம ஞாபகபடுத்தியிருக்கிறார் எண்டதையும் கவனியுங்கோ :)

    ஆனா என்ன உங்கட பெயரை அவர் மறந்து போனார்.

    அது கானா பிரபாவின் திட்டமிட்ட சதியா இருக்குமோ ;)

    :)

    ReplyDelete
  24. //நான்,சின்னக்குட்டி,பெட்டை,சந்திரவதனா, பெயரிலி, நளாயினி,கறுப்பி எல்லாம் வயசானவை, ஆனா மலை நாடான் அண்ணை ,கான பிரபா அண்ணை, யோகன் அண்ணை எல்லாரும் இளைமையானவையோ?

    நானும் இனி எல்லாரையும் அக்கா அண்ணை எண்டு கூப்பிடப் போறன்//

    அற்புதன்..... நான் பெயரிலையே சின்ன(இளமையான) குட்டி என்று வைச்சிருக்கிறன் என்னை விட்டுட்டினம். என்ன இளமையான கவர்ச்சியான போட்டா போட்டுவைச்சிருக்கிறயள் உங்களை விட்டுட்டினம். இவையல்லாம் இளமையான ஆக்கள் என்றதுக்கு என்ன அத்தாட்சி. என்ன பேர்த் சேட்டிப்க்கற் எல்லாரும் சமர்ப்பிச்சவையே...என்ன புலூடா விடுகினம்

    இனிமேல் எல்லாரையும் நீங்கள் சொன்ன மாதிரி அண்ணை அக்கா என்று தான் கூப்பிடப்போறன்..

    ReplyDelete
  25. //சயந்தன் said...
    இளைய தலைமுறையில எதற்காக பிரபா சேர்க்கப் பட்டார்..?//

    //அதானே சினேகிதி நானெல்லாம் மூத்தபதிவர் கானா பிரபா அண்ணயைப் பார்த்து வலைபதிய வந்தவர்கள்.//

    நான் சயந்தன் அண்ணாவை பாத்து வலைப்பதிய வந்தனான். அப்ப அவரும் மூத்த பதிவர்தான்.

    //உவங்கள் 'பயங்கரவாத பெடியங்கள்' எந்த வகைக்குள்ள வருவாங்கள்?//

    ஏன்?? இதுவரைக்கும் நல்லாத்தானே இருக்கிறன் எதுக்கு?? இந்த வேலை.....

    ReplyDelete
  26. //தமிழ் நதி பேர விட்டுடீங்களே @@@@
    பின்னூட்டத்திலாவது யாரேனும் சொல்வீங்கன்னு பார்த்தென் ம்ஹிம் //

    அய்யனார்,

    தமிழ் நதி எழுத்தாளர்,கவிஞர் என்கிற பட்டியலில வர வேண்டியவர், பதிவர் பட்டியலில போட்டு மலினப்படுத்த முடியாது அல்லவா. :-)

    ReplyDelete
  27. யப்பா தலைய சுத்துது.

    //வலைப்பதிவர்களைப் பற்றிய இன்னொரு பதிவு எழுதுற ஐடியா இல்லை!//

    என்னை எல்லாம் வலைப்பதிபவரா மதித்து எழுதிர ஒரே ஜீவன் நீங்கதான். நீங்களும் கைவிட்டா. என்ட கெதி???? :-))

    //மத்திய குழு
    M.P.V.A//

    விளக்கம் பிளிஸ்

    ReplyDelete
  28. M-மொக்கை,P-பதிவர்,V-விடுதலை,A-அமைப்பு

    புரிஞ்சிருச்சா?!

    ReplyDelete
  29. // M-மொக்கை,P-பதிவர்,V-விடுதலை,A-அமைப்பு //

    அடடடா.. நான்தான் கூட யோசிச்சுப்போட்டன்.

    ReplyDelete
  30. ஐயோ பகீ,
    அது நீங்கள் இல்லையுங்கோ.
    உண்மையிலயே 'பயங்கரவாதிகள்' எண்ட தலைப்போட வலைப்பதிவு இருக்கு.

    ReplyDelete
  31. கொண்டோடி நீங்கள் "பெடியன்கள்" ஆ சொல்றீங்கள்?

    ReplyDelete
  32. www.enularalkal.blogspot.com

    ReplyDelete
  33. ஹாய், இண்டைக்கு தான் ஆறுதலா இருந்து வாசித்தேன். சொல்லவா வேணும் நம்ம சேரன் தங்கச்சி பிச்சு வாங்குறா. விஜே அண்ணா, கானா பிரபா அண்ணா எண்டு எல்லாரோட வலைதளங்களும் இடைக்கிட போறனான். எனக்கு டைம் குறைவா இருப்பதால எல்லாம் வாசிக்க முடியுறேல்ல..
    டைம் இருக்கும் போது எல்லாரையும் வலைத்தளங்களில் சந்திக்கிறேன்.
    அப்ப வாறன் என்ன ;)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது