07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 17, 2009

வலைச்சரம் 5- ஆம் நாள் - அறிவியல்

ஐந்தறிவு படைத்தவை என்றால் விலங்குகள். ஆறறிவு என்றால் மனிதர். இதை தவிர மற்றவற்றை பற்றி என்றாவது நிதானித்து யோசித்துப் பார்த்ததுண்டா, என்னை நானே கேட்டுக்கொண்டேன். எப்போது? எதாவது என்சைக்கோபிடியாவைப் பார்க்கும் போதா ( எனக்குத் தெரிந்ததெல்லாம், என் சைக்கிளைப் பிடியா தான்) என்றால் இல்லை,

கீழ்கண்ட தொல்காப்பிய நூற்பாவைப் பார்த்தவுடன் தான் தோன்றியது.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
எது ஓறறிவாம்? புல்லும் மரனும் ஓரறிவினவே
இரண்டு- நந்தும் முரளும் ஈரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்து - நத்தை முதலியவை
முரள்- கிளிஞ்சல் முதலியவை
சிதலும் எறும்பும் மூவறிவினவே (அட்டை, எறும்பு போன்றவை-
நண்டும் தும்பியும் நான்கறிவினவே (தொடுதல்,சுவை, முகர்தல், பார்த்தல்)
இப்படி உயிர்களை பாகுபடுத்தியிருக்கிறார்.

இளம் விலங்குகளை எப்படி அழைக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

புறநானூறு முதலிய சங்க இலக்கிய நூல்களில் பல அறிவியல் செய்திகள் உள்ளன. யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இறக்கும் நாளை ஒரு விண்மீன் விழுந்த தீ நிமித்தத்தால் முன் உணர்ந்ததாக பாடியதாம்.

ஆடுஇயல் அழற்குடத்து

ஆரிருள் அரையிரவின்

முடப்பனையத்து வேர்முதலாக்

கடைக்குளத்த்ஹுக் கயங்கயப்

பங்குனி உயர் அழுவத்து

தலைநாண்மீன் நிலைதிரிய

நிலைநாண்மீன் அதனெதிரேர்தரத்

தொல்நாண்மீன் துறைபடியப்

பாசிச்செல்லாத்(து) ஊசித்துன்னா(து)

அளக்கர்திணை விளக்காக

கனையெரிபரப்பக் காலெதிர்பு பொங்கி

ஒருமீன் வீழ்ந்தென்றால் விசும்பினானே

இதில் முடப்பனை என்பது விருச்சிகம். தேள்வடிவத்த்ஹின் தலைப்பகுதி பனைவேரில் டெல்டா ஸ்கார்பி ( ) எனப்படும் அனுஷம் உள்ளது. அதன் ஆடியில் கயமாகிய குளவடிவில் அமைவது விருச்சிக ராசியின் தேள் கொடுக்குப் பகுதி. இதில்தான் ஆல்ஃபா ஸ்கார்பி எனப்படும் கேட்டை (ஆங்கிலத்தில் அண்டாரஸ் எனப்படுவது) மற்றும் லாம்டா ஸ்கார்பி மூலம் ஆகிய விண்மீன்கள் அமைந்துள்ளன.

Ursa major எனும் விண்மீன் தொகுதியில் உள்ள ஏழு விண்மீன்களை சப்த ரிஷி மண்டலம் என்றனராம். பண்டைய தமிழர்கள் இவ்வேழு விண்மீன்களையும் ஏழு பத்தினிக் கடவுளாக வணங்கினராம்.

வடவயின் விளங்கால் உறைஏழு மகளிருள்

கடவுளொரு மீன்சாலினி---- பரிபாடல், இன்னும் பதிற்றுப்பத்து, பரிபாடல் என்று பல எடுத்துக்காட்டுகளுடன் எழுதியிருக்கிறார் நெல்லை சு. முத்து. இவர் ஒரு விஞ்ஞானி.

வானவூர்தி பற்றிய செய்திகள், நாம் தொலைத்துவிட்ட 'தமநூல்' (இது பொறி நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு பற்றியது ) சிந்தாமணியில் வரும் மயிற்பொறியின் செயல் திறன் (தற்கால் விமான கட்டமைப்பு முறையுடன்

ஒப்பிட்டுக் காட்டுகிறார்- நாம் பார்க்கவில்லை அதனால் மயிற்பொறியெல்லாம் கற்பனை என்று சொல்லவும் எனக்குத் தயக்கமாக இருக்கிறது)

பல்கிழி யும் பயினும், துகில் நூலோடூ

நல்லரக்கும் மெழுகும் நலஞ்சான்றன

வல்லன வும், அமைத் தான்ங்கு எழுநாளிடை

செல்வதொர் மாமயில் செய்தனன் அன்றெ

பலவகைசீலைத் துணிகளும், பற்றுதற்குர்ய பயின் (பைண்டர்) இனப் பசைகளும் (பேஸ்ட்), சரிகை முதலான வெள்ளி இழைகளும்(சில்வர் வயர்) , நல்ல அரக்கு வகை ரோசனங்களும் (ரெசின்) மெழுகு போன்ற கொழுப்பு பொருள்களும் அதில் பயன்படுத்தப்பட்டனவாம்.

பெருங்கதையிலோ மூவகை பசைப் பொருள்களைக் கூட்டித் தயாரித்த திரியோக மருந்தினால் கட்டப்பட்ட பொருள்கள் இன்னெதென்று அறிய வழியில்லாமல் போயிற்றே.

இன்று நாம் பார்க்கவிருக்கும் முதல் பதிவர்:

மும்பையிலிருந்து எழுதிவரும் மகிழ்நன்

அறிவியல்தமிழ் என்ற பெயரில் வலைப்பூ அமைத்து பல அறிவியல் செய்திகளையும் பொருத்தமான வரைபடங்களுடன் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
உயிர் என்ற தலைப்பில் உள்ள மொழிபெயர்ப்பு என்னைக் கவர்ந்தவற்றில் ஒன்று
பல அறிவியல் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ப்பதங்களை எழுதியுள்ளார், காட்டுக்கு astronauts ஐ விண்செலவர்கள் என்கிறார், குடல்புண் பற்றிய விவரங்கள் இங்கே


அறிவியல் புனைக்கதைகளை வாசிக்க விருப்பமா? கதை எழுதுகிறேன் என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார்.
சிவநேசனிடம் நாட்டாண்மை முடிவை மாத்து என்கிறார் ஒரு பெண். சோதனைகளில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதங்களில் முடிக்கவெடுக்கவேண்டும் அப்போதுதான் எங்களுக்கு வெவ்வேறு தீர்மானங்கள் கிடைக்கும் என்ற பிற்சேர்க்கை வேறு. யாரிவர் பூமிபுத்திரரா?


இங்கு பார்க்கவும்.

இவரது பிற வலைப்பூக்களில் ஒன்று சிந்தனைகள் தார்மீக அடிப்படை கொண்ட புதிர் கேள்வியை இவர் பதிவில் படிக்கலாம்
வித்தியாசமாக யோசிப்பவர் நம் மூளை ஒரே நேரத்தில் RAM ஆகவும் ROM ஆகவும் செயல்படும் என்கிறார். தொடர்ந்து என்ற தலைப்பில்
இந்தச் சுட்டியின் கீழ் இவர் எழுதியிருப்பதைப் படியுங்கள்.


பூமகள் படைப்புக்களம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் பூமகள், இந்தச் சுட்டியில் பூமி மணித்துளி பற்றி எழுதியுள்ளார்.

சிறுகதைகள், கவிதைகள் (இதில்தான் எத்தனை வகை), திரைவிமர்சனம், சங்கத்தமிழ் விவரங்கள் என்று எழுதி வரும் பூமகள், ஒலி - ஒளி துறையையும் விட்டுவைக்கவில்லை. தமிழ்ப்பாடல்கள், பிறமொழிப்பாடல்களையும் (அல்கா, பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற) ஒலி-ஒளிவழியில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அல்கா யாக்னிக்கின் பாடல் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு
கூகிலாண்டவர் மூலம் இப்பாடகரின் விவரங்களைத் தெரிந்துகொண்டு அயர்ந்தேன். பிறமொழிகளில் கேட்டு ரசித்தவற்றை தமிழுக்குகொண்டு வந்த பூமகளே, நன்றி.


தொடுவானம் என் உள்ளத்தில் என்ற பெயரில் வலைப்பூ அமைத்துக்கொண்டு
நான் முறையாகத் தமிழில் எழுதக் கற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லும் தீபா கணினி தொழிற்நுட்பத்தின் நுட்பங்களை பாகங்களாகப் பிரித்து கொண்டு தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
ஆங்கிலத்தில் ஏராளமாக எழுதிவரும் இவர் இதுதவிர அனுபவங்களையும் கவிதைகளையும் தமிழில் பதிவு செய்துள்ளார். தன் ஆதங்கத்தை (தமிழ்ப்பதிவில்) எழுதியுள்ளார். இந்தச் சுட்டியில் பார்க்கலாம்

8 comments:

 1. வித்தியாசமான முறையில் நல்ல சிந்தனையில் தேடிப்பிடித்து அரிய பதிவுகல் சுட்டப்படுகின்றன.. ஏற்ற பொறுப்பினை சரிவரச்செய்யும் மாதங்கிக்கு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. அறிமுகங்களுக்கு நன்றி. அருமையாக உள்ளது அனைத்து வலைச்சர அறிமுகங்களும்

  ReplyDelete
 3. நான் அறிவியலாளன் இல்லை. ஆனால், அறிவியல் செய்திகளை, நான் கேட்கும், படிக்கும் செய்திகளை வலையில் தொகுத்து வழங்க வேண்டிய கடமை இருப்பதாக உணர்ந்தேன். அதையே செய்கிறேன்.

  கீழ்க்கண்டவை என் மற்ற வலைப்பூக்கள்

  http://periyaryouth.blogspot.com
  http://makizhnan.wordpress.com
  http://kayalmakizhnan.blogspot.com
  http://vizhithezhuiyakkam.blogspot.com

  ReplyDelete
 4. எனது பயணம் said

  வலைச்சரத்தில் உங்களுடைய வலைப் பதிவர்களின் அறிமுகக் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். தேர்ந்த முறையில் நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள் மாதங்கி. பல நல்ல பதிவர்களையும், பதிவுகளையும் அறிமுகப்படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இடையே உங்களுடைய எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நீங்கள் தொகுத்துள்ளவர்கள் நல்ல பதிவுகளைத் தந்து உள்ளார்கள்!!

  ReplyDelete
 6. வலைச்சரம், தமிழ்மணம் போன்ற தளம் அவசியம் தேவை!! அப்போதுதான் இது நிறைய வாசகர்களை சென்றடையும்!!

  ReplyDelete
 7. நல்ல தகவல் பலகை. தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. உங்கள் அனைவருக்கும்
  என் நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது