07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 10, 2009

டாக்டர் ஷாலினி...ஷக்தி..

எனக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறுபெண்
எப்போதும் இருந்து கொண்டு
ஒருபோதும்
மூப்படையவோ – சாகவோ
மறுத்தபடி வாழ்கிறாள்

-லிவ் உல்மன்

உமாஷத்தியின் வலையில் கண்ட ஒரு பூதான் அந்த மேற்கோள் கவிதை. “வானவில் ஏறித் தப்பிச் சென்றவன்” போன்ற கவித்துவ தலைப்புகள் கண்களில் படுகிறது.
-------

டாக்டர் ஷாலினி

பேச்சளவில் சமூக அக்கறை கொண்ட மக்களுக்கு மத்தியில் ஆக்‌ஷன் ஓரியண்ட்டட் டாக்டர். சிதறல்கள் தீபாவின் குட்டச் பேட் டச் என்ற பதிவில்,குழந்தைகள் வளர்ப்பு பற்றி எழுதி இருந்தார். அதன் அடுத்த கட்டமாக இது குறித்து ஒரு கருத்தரங்கம் நடத்தினால் என்ன என்று எண்ணி, டாக்டரிம் கேட்க நினைப்பதற்குள் ஓக்கே சொன்ன சமூக அக்கறையாளர். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அறிவிப்பு வரும். அனைவரும் வரவேண்டும். நன்றி டாக்டர் ஷாலினி.

------

“இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப் போடும் அடுத்த நெம்புகோல் தமிழ் மூளைகளிலிருந்து உருவாக வேண்டும் என்ற கனவுகளோடு...”

இப்படிக் கனவுகானும் வலைப்பூ..

மா.சிவக்குமார் , உள்ள(த்)தை எழுதுகிறேன் என்ற தலைபிலேயே வசீகரிக்கும் நல்ல நடையில் அருமையான ‘எழுத்து’க்கள்.

-------------

சொல்வதற்கு நிறைய இருக்கு என்று தன்னைப் பற்றிய குறிப்பில் சொல்லும் வித்யாவின் இந்தப் பதிவு எனக்குப் பிடித்த ஒன்று. குறை சொல்லலாம்,அதற்கு தீர்வும் சொல்வது அடுத்தக் கட்டம். நிறைய எழுதுங்கள் வித்யா.

---------
மிஸஸ் தேவின் இந்தப் பதிவு, அம்பையின் ‘அடவி’ விமர்சனம். பொதுவாகவே விமர்சனங்களுக்கு நிறைய மெனக்கிடுகிறார். நீண்ட விமர்சனங்களில் கதை மாந்தர்களைப் பற்றிய குறிப்புடன் இவர் எழுதி வரும் விமர்சனங்கள் அந்தப் படைப்பை படிக்கத் தூண்டுகிறது.அதுதான் தேவையும் கூட.

----------

வெட்டிப்பயல் மிகப் பிடித்த, 2006ல் இருந்து எழுதிவரும் அருமையான பதிவர்.. கல்லூரி கதையில் வென்ற இவருக்கு வாழ்த்துக்கள்.

---------


---
5 comments:

 1. நன்றிகள் பல நர்சிம். இம்மாதிரியான ஊக்கங்கள் என்னை கொஞ்சம் மெனக்கட வைக்கும். மீண்டும் நன்றிகள். மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. //இம்மாதிரியான ஊக்கங்கள் என்னை கொஞ்சம் மெனக்கட வைக்கும்//

  எதுக்கு ஒட்டல் ஓட்டலா போய் சாப்பிட்டு அதை படம் பிடிச்சு பதிவு போடவா ???????? :)))

  ReplyDelete
 3. இருவரைத் தவிற மற்றவர்கள் வாசிக்கப்பட்டவர்களே

  ReplyDelete
 4. நர்சிம்,

  எல்லோரையும் படித்திருக்கிறேன்.உமா ஷக்தி சினிமா,கவிதை,கதை கரகாட்டக்காரர்.அவர் தமிழ் மணத்தில் தன் பதிவுகளை இணைப்பதில்லை.

  அடுத்து “வெட்டி பயல்” வாழ்த்துக்கள்.
  நன்றாக எழுதகிறார்.ஆனால்”கல்லூரி பயணம்” ரொம்ப நீ............................ண்டப்ப்யணம்.Heavy reporting instead of
  storying.

  எனக்குப் பிடித்தது:

  பினாத்தல் சுரேஷின் க்தையில் ஒரு
  உய்ர் துடிப்பு இருந்தது.சிறு கதையின்
  crafting தெரிந்துள்ளார். அவருக்கு முதல் பரிசு கொடுத்திருக்கலாம்.

  இரண்டாவது பரிசுசத்யராஜ்குமாருக்கு.

  ReplyDelete
 5. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். (எவ்வளவு ஸ்பீடு பாத்தீங்களா?)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது