07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 11, 2009

எனது பதிவுகளில் எனக்கு...

இன்று எனக்குப் பிடித்த சில எனது பதிவுகள்.


இந்தப் பதிவு குமுதம் நடுப்பக்கத்தில் ஒரு எழுத்து கூட மாறாமல் முதல்முறையாக அச்சில் வந்த பதிவு. அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கார்ட்டூன் படங்களுடன் அருமையாக வந்ததைப் பார்த்து மகிழ நினைத்த நொடியில் ஒரு சிறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேறு செய்திருந்தார்கள்.. அதாவது எழுதியவர்- ‘நர்சிம்’ என்ற எழுத்துக்களுக்குப் பதில் ‘மணிவண்ணன்’ என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன்.ஹும்ம்.

---

அப்பாவின் வழிகாட்டுதலைப் பற்றிய இந்தப் பதிவு எனக்கு பிடித்த என்பதை விட எனக்கு நல்ல அறிமுகத்தை தந்த பதிவு என்றும் சொல்லலாம்.

--

வார்த்தைகளைப் பற்றி நான் எழுதிய இந்தப் பதிவும் எனக்குப் பிடித்த ஒன்று.. அதில் உள்ள அம்பேத்கரின் மேற்கோளைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு பிரஷ்னஸ் வரும் எனக்கு.உத்வேகம்.உங்களுக்கு?

---------
அக்காவைப் பற்றி நான் எழுதியது.. சில கண்ணீர்மல்கும் மடல்களைப் பெற்றுத்தந்த பதிவு.

---

ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டைப் பற்றி,எங்கள் கிராமத்தில்,வீட்டில் நான் அனுபவித்த,பார்த்த,கேட்ட அத்தனை செய்திகளையும் எழுத்தில் கொண்டுவர வைத்த இந்தப் பதிவும் பிடித்த ஒன்று.

--

இந்தப் பதிவு யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ.. பதிவும்,பின்னூட்டங்களும் எங்காவது யாருக்காவது பயன்படும் என்பதால்.. ஏனெனில் ஏதாவது செய்யணும் பாஸ் இந்த சமூகத்திற்கு.

-----

நன்றி!.

..


11 comments:

 1. தல,

  உங்க பதிவுகள் - களஞ்சியம்

  எனது பதிவுகளில் எனக்கு பிடித்தது - முத்துக்கள்

  ReplyDelete
 2. எனக்குகூட இப்படி ஒரு அனுபவம், குமுதத்தோட... 'ஏமாற்றாதே ஏமாறாதே' - ன்னு ஒரு கதை அனுப்பிச்சேன். வந்தது... வேறு பெயரில்! வேறு காப்பி எடுத்துவைக்காததால என்னால சண்டைக்கு போகமுடியலை. நான் எழுதிய கதைப்பேர திரும்பவும் படிச்சிப்பாருங்க... ம்! என்னத்தச் சொல்றது!

  ReplyDelete
 3. வார்த்தைகள் நல்ல பதிவு. தவறவி்ட்ட பதிவை மீண்டும் வலைசரத்தின் மூலம் படிக்க முடிந்தது. நன்றி சீனா அய்யா! நன்றி நர்சிம்!

  ReplyDelete
 4. அக்காதான் வீட்டிற்கு மூத்தவர். எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த வயதிற்குள் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது. எனக்கு இந்தப்பதிவை படித்ததும் பொறாமைதான் ஏற்படுகிறது.

  ReplyDelete
 5. உங்கள் அக்கா பதிவு - மிகப்பிடித்தமான ஒன்று.. :-)

  ReplyDelete
 6. ஜல்லிக்கட்ட பதிவும் சரி, ஏதாவது செய்யணும் பாஸ் என்ற பதிவும் பாராட்டத்தக்கது. நிச்சயம் ஏதாவது செய்யணும் பாஸ்!

  ReplyDelete
 7. ஆச்சர்யம் பாருங்களேன்!

  இந்த வாரம் அறிமுகபடுத்திய அனைத்து பதிவர்களும் எனக்கு நன்கு பரிச்சியம் ஆனவர்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது