07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 8, 2009

வாழ்வைப் பகிர்தல் எப்படி ?

அன்பின் நண்பர்களுக்கு, வணக்கம்.

வலைச்சரத்தில் பதிவிட அழைத்தமைக்கு திரு.சீனா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது இந்த ஒரு வார காலத்தில் நான் வாசிக்கின்ற பதிவர்கள் குறித்த ஒரு அறிமுகத்தை மட்டுமே தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன். எனது பதிவுகள் குறித்து அறிய விரும்புபவர்கள் ‘அகநாழிகை‘ வலைத்தளத்தில் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்.

எனது வாசிப்பு அனுபவத்திற்கு உட்பட்டு பதிவுலகத்தில் எழுதுபவர்கள் கதை, கவிதை, கட்டுரை, சினிமா, சமூகம், சிந்தனை, அனுபவம், மருத்துவம், மனநலம் என அனைத்து தலைப்புகளிலுமே எழுதுகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்வனுபவம் சார்ந்து அவர்களுக்கு தோன்றும் கருத்துக்களை விருப்புடனும், சார்ந்தும், எதிராகவும் எழுதி வருகின்றனர். இந்த பதிவர்களின் அறிமுகம் முழுக்க முழுக்க எனது வாசிப்பு அனுபவத்திற்கு உட்பட்டது மட்டுமே. நானறியாத நன்கெழுதும் வலைப்பதிவர்களும் இருக்கக்கூடும். மேலும் இவர்களில் பலரை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும்.

எழுதுவது, படிப்பதன் வாயிலாகவும் வாழ்பனுவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு மன நிறைவைத் தரக்கூடியது வேறென்னவாக இருந்துவிட முடியும்.

முதலில் எனக்குப் பிடித்ததமான கவிதைகளில் இருந்து தொடங்குவோம். கவிஞன் என்பவன் மொழிக்கு அடிமையானவன். மொழியைத் திரும்பத் திரும்ப தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற விழைவும் தீராத தாகமும் அவனை துரத்திக் கொண்டேயிருக்கும். அதன் விளைவாக தன் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் கவிதையாக அவன் உணர்த்துகிறான். மழையின் தழுவலுக்கு ஆளான இலையின் மேல் படர்ந்திருக்கும் ஈரம் போல அதன் நினைவுகள் நம்மோடு பசுமையாக படர்ந்திருக்கும். அப்படி வாசிப்பு ஈர்ப்புடனும், திரும்பத்திரும்ப வாசிக்க வைக்கும் வாசக ஈர்ப்புத் தன்மையுடன் எழுதும் கவிஞர்கள் சிலரை அறிந்து கொள்வோம்.

யாத்ரா
விளிம்பு நிலை வாழ்வின் மனவோட்டங்களே இவரது கவிதைகளில் பிரதானமாயிருக்கிறது. விரக்தி, தனிமை, வேதனை, வாழ்வின் முரண்கள், அகச்சிக்கல், குடும்ப உறவுகளின் போலித்தன்மை, எதிர்பார்ப்பற்ற அன்பிற்கான ஏக்கம் என இவரது கவிதைகளில் மையக்கரு வாசிப்பவரையும் உள்ளாழ்ந்து உணர்ந்து அனுபவிக்கச் செய்கிறது.

தூறல்கவிதை
காணும் காட்சியையெல்லாமே கவிதையாக்கும் திறன் கொண்ட இவரது மிகப்பெரும் பலம் உண்மையாக இருப்பது. கவிதைகளும் அப்படியேதான். இவரது அனுபவங்களையே இவர் கவிதைக்கான களமாகக் கொள்கிறார்.

குழந்தை ஓவியம்
குழந்தை ஓவியம் என்ற பெயரில் பதிவுகளிடும் ஆதவாவின் கவிதையுலம் ஆச்சர்யமானது. அதிக வாசித்ததேயில்லை என்று கூறுகின்ற இவரின் மொழியாழம் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னை என்னை வசீகரித்துக்கொண்டேயிருக்கும்.

அனுஜன்யா
குறைவாகவே கவிதை எழுதினாலும் தீர்க்கமான பார்வையுடனும், தெளிவான மொழி நடையுடனும் எழுதுபவர். ஒவ்வொரு கவிதையும் அருமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும். வாசிப்பு ஆர்வமும், வளரும் கவிஞர்களை மனம் திறந்து வாழ்த்தும் மனமும் வாய்த்தவர்.

மண்குதிரை
கவிதைகளின் வாயிலாக தன் உலகத்தையும், தன் மனவோட்டங்களையும் வாசிப்பவரும் உணரச்செய்கின்ற விதத்தில் எழுதுவபவர். இவரது கவிதைகளில் பலமுறை வாசித்த ஒரு கவிதை ‘இரவு விருந்தாளி‘ மனம் விட்டகலாமல் ஒட்டிக் கொண்டது. மனதில் எழும் எண்ணங்களை அப்படியே வார்த்தைகளில் வெளிக்கொணரும் நேரடிக்கவிதைகளை எழுதும் இவர் படிமக்கவிதைகளில் சிறந்து விளங்குகிறார்.

கருப்பு-வெள்ளை
கருப்பு வெள்ளை என்ற தலைப்பில் பதிவுகள் இடும் சேரலாதனின் கவிதைகள் வண்ணமயமான ஒரு கோலத்தைப் பார்க்கின்ற உணர்வுகளைத் தருகிறது. இதைத்தான் கரு என்று எடுத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் கவிதை மனோபாவத்துடன் அணுகும் இவரது கவிதையும், மொழி நடையும் நன்றாக இருக்கிறது. ரசனையான மனமும் கொண்டவர் என்பது இவரது கவிதைகளில் புலப்படுகிறது.

பிரவின்ஸ்கா
எழுத்தின் ஆளுகைக்கும் தோற்றத்திற்கும் துளியும் தொடர்பில்லை. மிக இளைய தோற்றம் தரும் இவரது கவிதை மொழி அருமையானது. இவரது கவிதைகளின் வரிகள் உணர்த்தும் அனுபவத்தோடு வாசித்து முடிந்த பின்னும் அதன் பாதிப்பு நம்மை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

கவிதை காதலன்
காதலைச் சொல்வதற்கும், அதன் நுட்பமான விஷயங்களை வார்த்தைகளில் விவரிக்கவும் தனித்திறன் வேண்டும். எல்லோராலும் காதலின் நுண்ணுணர்வுகளை அடுத்தவரும் உணரும் வண்ணம் வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட முடியாது. காதல் மனதை அணுக அதே மனோபாவம் வேண்டும். தனது பதிவுகளின் தலைப்பிற்கு ஏற்றவாறு கவிதையாகவும், கவிதையைக் காதலாகவும் சொல்வதில் இவர் நம்மைக் கவர்ந்து விடுகிறார்.

(தொடரும்...)

(சில காரணங்களினால் முதல் இடுகையைத் தாமதமாக வெளியிடும்படி ஆனது.)

34 comments:

 1. முதல் நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. \\
  எழுதுவது, படிப்பதன் வாயிலாகவும் வாழ்பனுவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு மன நிறைவைத் தரக்கூடியது வேறென்னவாக இருந்துவிட முடியும்\\

  சரிதாங்க.

  ReplyDelete
 3. கவிஞன் என்பவன் மொழிக்கு அடிமையானவன். மொழியைத் திரும்பத் திரும்ப தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற விழைவும் தீராத தாகமும் அவனை துரத்திக் கொண்டேயிருக்கும்\\

  சில நேரங்களில் அடிமை படுத்தியும் விடுவான்.

  ReplyDelete
 4. மழையின் தழுவலுக்கு
  ஆளான இலையின் மேல் படர்ந்திருக்கும் ஈரம் போல


  இதுவும் கவிதையே!

  ReplyDelete
 5. அனுஜன்யா-வை அதிகம் அனுகியதில்லை

  ஆதவரோடு நெருங்கிய பழக்கமுண்டு

  மற்றவர்களை சமீபத்தில் தான் வாசிக்க துவங்கியுள்ளேன்.

  ReplyDelete
 6. சென்ற வாரம் நாங்கள் நினைந்த கவி மழையிலிருந்தே இன்னும் ஈரம் காயவில்லை

  மீண்டும் ஒரு கவி மழை தொகுக்க வந்துள்ளது ஒரு கவி.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சார்!
  எல்லா வலைப்பக்கங்களுமே சிறந்த அறிமுகங்கள்...
  நேற்று சிலரை நேரிலும் சந்திக்க முடிந்ததில் பெருமகிழ்ச்சி!

  ReplyDelete
 8. முதல் நாள் வாழ்த்துக்கள்.

  அறிமுகப்படுத்தியவர்களின் லின்க் கொடுத்தால், என்னைப்போன்ற புதியவர்களுக்கு அதை வாசிக்க எளிதாக இருக்கும். தூறல் கவிதை தவிர வேறு எவருடைய லின்க்கும் இல்லை.

  ReplyDelete
 9. வ‌லைச்ச‌ர‌ ஆசிரிய‌ர்க்கு வாழ்த்துக‌ள்.

  //மழையின் தழுவலுக்கு ஆளான இலையின் மேல் படர்ந்திருக்கும் ஈரம் போல அதன் நினைவுகள் நம்மோடு பசுமையாக படர்ந்திருக்கும்.//

  க‌வித க‌வித‌

  பெரிய‌ பெரிய‌ க‌விஞ‌ர்க‌ளை ப‌ற்றி சொல்லி இருக்கீங்க‌. ந‌ல்ல‌ அறிமுக‌ங்க‌ள். வார‌ முழுதும் ந‌ல்ல‌ விருந்திருக்குமென்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 10. முதல் நாள் வாழ்த்துக்கள் வாசு சார்.

  நல்ல கவிஞர் நான் தொடர்ந்து வாசித்து வரும் கவிஞர்கள்.
  மிகச் சிறப்பான தொடக்கம்.

  ReplyDelete
 11. ஆதவனைத் தவிர மற்ற பதிவர்களை நான் படித்ததில்லை. எனக்கு 'கவிதை' வாசிப்பது சிறிது கடினம். முயன்று பார்க்கிறேன் அகநாழிகை.

  ReplyDelete
 12. அகநாழிகை, 'அனுஜன்யா'-வின் பதிவுத் தளத்தையே 'மண்குதிரை'க்கும் தந்துள்ளீர்கள். இருவரும் ஒருவரா என்ன? நான் கேள்வி எழுப்பியதில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

  ReplyDelete
 13. வரும் வாரம் .படிப்பவருக்கு கிட்டிய வரம்

  ReplyDelete
 14. @அகநாழிகை.பொன்.வாசுதேவன்,

  அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி, என்னையும், நான் இதுவரை ரசித்திராத மற்ற கவிஞர்களையும்.

  சிலர் ஏற்கனவே பழக்கமானவர்களே. மற்றவர்களைப் படித்துப் பழக்கப் படுத்திக்கொள்கிறேன்.

  -ப்ரியமுடன்
  சேரல்

  ReplyDelete
 15. வாழ்த்துகள்

  ReplyDelete
 16. வாழ்த்துகள் வாசுதேவன்.. முதல் நாள் கவிதைச்சங்கமமா? அழகு.!

  ReplyDelete
 17. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜமால்.

  ReplyDelete
 18. வெங்கிராஜா,
  வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
  நேரில் சந்தித்ததிலும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 19. வலைச்சர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. நவாசுதீன்,
  வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி.
  பதிவை இடுகையிட தாமதமாக எனது கணிணியில் ஏற்பட்ட குழப்பமே காரணம். லிங்க் மறுபடி கொடுத்துள்ளேன். ஆனாலும் ஒரே லிங்க் இருவருக்கு கொடுத்து விட்டிருக்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன்.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கும், ஊக்கத்திற்கும்,
  எதிர்பார்ப்பிற்கும் மிக்க நன்றி உயிரோடை.

  ReplyDelete
 22. முத்துராமலிங்கம்,
  அன்பிற்கு நன்றி.

  ReplyDelete
 23. கிருஷ்ணபிரபு,
  உங்களின் மின்னஞ்சலும் வாசித்தேன். உங்கள் கவனிப்பு சரிதான். தவறாக லிங்க் அளித்திருக்கிறேன்,
  சுட்டியமைக்கு நன்றி.

  ReplyDelete
 24. தண்டாரோ,
  நன்றி நண்பா.

  ReplyDelete
 25. சேரல்,
  வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி,

  ReplyDelete
 26. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
  திகழ்மிளிர்,.

  ReplyDelete
 27. வாழ்த்துக்கு நன்றி நசரேயன்.

  ReplyDelete
 28. வாழ்த்துகள் வாசு..

  சிறப்பான கவிஞர்களையும்(பதிவர்களை) அறிமுகம் படுத்தியுள்ளீர்கள் பாராட்டுகள்

  ReplyDelete
 29. பின்னூட்டத்திற்கு நன்றி அகநாழிகை... தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. வலைச்சர இந்த வார ஆசிரியர் நண்பர் பொன்.வாசுதேவன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 31. முதல் நாள் வாழ்த்துகள்!!

  ReplyDelete
 32. அறிமுகங்களும் அருமை உங்கள் தெரிவும் அருமை!!

  ReplyDelete
 33. //
  கவிஞன் என்பவன் மொழிக்கு அடிமையானவன். மொழியைத் திரும்பத் திரும்ப தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற விழைவும் தீராத தாகமும் அவனை துரத்திக் கொண்டேயிருக்கும்
  //

  அப்பட்டமான உண்மைங்க!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது