07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 29, 2009

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!!!

தமிழ்ப்பூ

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"


க‌ல் தோன்றா, ம‌ண் தோன்றா கால‌த்துக்கும் முற்ப‌ட்ட‌து என்று க‌விக‌ளால் சிற‌ப்பித்துப் பாட‌ப்ப‌ட்டு, இன்று உல‌க‌ளாவிய‌ புக‌ழோடு உல‌விவ‌ரும் ந‌ம‌து த‌மிழ் மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது தமிழ் மொழி. அன்னைத் தமிழுக்கு என் வணக்கம் கூறி முதல் பதிவைத் தொடங்குகிறேன்.

தமிழ் இனிமையான மொழி. பொதுவாகத் தமிழ் ஆசிரியர்கள் இனிமையாகப் பாடம் எடுப்பர். எனக்கு தமிழ்ப்பாடம் மிக விருப்பம். தமிழ் ஆசிரியை ஆக வேண்டும் என்பது பள்ளி வாழ்க்கை கனவு. பள்ளி வாழ்வு முடிந்த பின் தமிழின் சுவையை புத்தக வாசிப்பின் மூலம் மட்டுமே பெற முடிந்தது. இன்று வலையுலகம் விரிந்து எல்லா துறையிலும் நம் தேடலைச் சுருக்கிவிட்டது. தமிழ் குறித்து பல தகவல்கள் வலைப்பூக்களில் காண்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழின் இனிமையை நமக்கு பகிரும் சில வலைப்பூக்கள் :

"வேர்களைத்தேடி" என்ற வலைப்பூவில் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் தமிழின் இனிமை கூறும் பதிவுகள் பல பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் மோகத்தில தள்ளாடும் வேளையில் , "விளையாட்டு என்பது பொழுது போக்கமட்டும் பயன்படுவதில்லை மாறாக உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வது என்று " பழந்தமிழர் விளையாட்டுக்களை நமக்கு நினைவுறுத்துகிறார். என் பெண்களுக்குப் பிடித்தது "பிசி நொடி விளையாட்டு". மேலும் தொல்காப்பியம், ஆற்றுப்படை, நற்றிணை, குறிஞ்சிப்பாட்டு, குறுந்தொகை, புறாநானூறு என்று தமிழ்த்தேனை இவ்வலைப்பூவில் பருகலாம்.

"வெண்பா எழுதலாம் வாங்க" என்று அழைக்கிறார் "அகரம். அமுதா". பள்ளி காலத்தில் இராகத்துடன் பாடி கற்ற "நேர் நேர் தேமா.." , என்ற "விளாங்காய்ச்சீர்" பற்றி காணலாம். மேலும் அணி இலக்கணத்தைப் பற்றி இவ்வலைப்பூவில் காணலாம். இங்கு இலக்கணம் நன்கு கற்று ஒரு வெண்பா எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

திகழ்மிளிரின் "தமிழ்" தமிழின் சுவையை நமக்கு உணர்த்தும் பல தகவல்கள் உள்ள வலைப்பூ. தாம் படித்து துய்த்த தமிழ்ச் சுவையை அவர் இங்கு பகிர்கிறார். "இனிப்பான கற்கண்டிலுள்ள கசப்பான உண்மை" தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற பல சொல்லாராய்ச்சிகளை இவரது வலைப்பூவில் காணலாம்.

"க=1, உ=2, எ=7, அ=8" . என்ன என்று யோசிக்கிறீர்களா? தமிழ் எண்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவைக் காணுங்கள்.

வாசிப்பூ

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"


வாசிப்பு இல்லா வாழ்க்கை சன்னல் இல்லா வீடு போல் இருண்டு கிடக்கும். உலகில் நடக்கும் நன்மைகளும் தீமைகளும் வாசிப்பின் மூலமே அறிய முடிகிறது. வண்டு பூக்களைத் தேடி தேன் கொள்வது போல் சிலர் நல்ல நூல்களை எப்படியோ தேடிப்படிக்கின்றனர். சிலருக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

எனக்கு வாசிப்பு வீட்டின் அருகில் திறக்கப்பட்ட நூலகத்தாலும் அதில் உறுப்பினராக்கிய அப்பாவாலும் நாவல்கள் வாசித்த அம்மாவாலும் அறிமுகம் ஆனது. அம்மாவைப் போல் லஷ்மி, இந்துமதி, சிவசங்கரி என்று படித்த எனக்கு பொன்னியின் செல்வன் மீது ஆர்வம் வந்தது தோழி ஒருத்தி கல்கியின் தொடர்கதையைப் படித்துக் கூறிய பொழுது தான்.

அதன் பின் ஐந்து பாகங்களும் நான் நூலகத்தில் இருந்து அடுத்து ஐந்து நாட்களில் முடித்துவிட்டேன். என் வாசிப்பும் விரிவடையத் தொடங்கியது. மெல்ல மெல்ல பல வகை எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாகின. தோழியர் மூலம் ஆங்கில நாவல்களும் என் வாசிப்பை விரிவுபடுத்தின. நல்ல புத்தகங்களை அறிந்து கொள்ள புத்தக விமர்சனங்கள் மிகவும் உதவுகின்றன.

கிருஷ்ணப்பிரபுவின் "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்" என்ற வலைப்பூ, புத்தகங்கள் பற்றிய விமர்சனத்துடன் நூல்/ஆசிரியருடன் தொடர்புள்ள பல சுட்டிகளும் இணைத்து நம் வாசித்தலை விரிவு படுத்துகிறது

புத்தக விமர்சனங்களுக்கு இன்னும் சில வலைப்பூக்கள் :
"யாழிசை ஓர் இலக்கிய பயணம்"
"புத்தகம்"
"நூல்நயம்"

மீண்டும் சந்திப்போம்

15 comments:

 1. இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. "க=1, உ=2, எ=7, அ=8" . என்ன என்று யோசிக்கிறீர்களா? தமிழ் எண்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவைக் காணுங்கள்\\

  நல்ல பகிர்தல் ...

  ReplyDelete
 3. தமிழ் மொழியைப் பற்றிய பதிவுகளின் இணைப்பைக் கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அமுதா.

  மேலும் என்னுடைய பதிவினைப் பற்றியும் அறிமுகம் செய்ததற்கு நன்றி. 'லேகா', 'சேரல்', 'ஞானசேகர்' - ஆகியோரை படித்திருக்கிறேன். அவர்களுடனான தொடர்பு எனக்கு அந்த அளவிற்கு இல்லை, ஆனால் நல்ல பல புத்தகங்களையும் அறிமுகப் படுத்துகிறார்கள். 'நூல் நயம்' எனக்கு புதிது. நிச்சயம் வாசிக்கிறேன்.

  "விளங்காய்ச்சீர்" - இந்த இணைப்பை தவறாக கொடுத்திருந்தீர்கள். அதை சரிப்படுத்திவிடுங்களேன். நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 4. நன்றி மங்களூர் சிவா, ஜமால் & கிருஷ்ணப்பிரபு


  சுட்டியைச் சரி செய்து விட்டேன். மிக்க நன்றி கிருஷ்ணப்பிரபு

  ReplyDelete
 5. மிக்க நன்றி

  தொடரட்டும்

  ReplyDelete
 6. தமிழ்ப்பூவும் வாசிப்பூவும் மணக்கின்றன. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. /இங்கு இலக்கணம் நன்கு கற்று ஒரு வெண்பா எழுத வேண்டும் என்பது என் விருப்பம்./

  தங்களின் விருப்பம்
  விரைவில் நிறைவேற வாழ்த்துகள்

  ReplyDelete
 8. நல்ல தமிழறிமுகத்துடன் துவக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள் அமுதாக்கா.!

  ReplyDelete
 9. நல்ல அறிமுகம் அமுதா,

  ஒரு நாளைக்கு இரண்டு போஸ்டெல்லாம் காணாது. 5 அல்லது 6 போஸ்ட் போட்டாகனும்.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திகழ்மிளிர், இராமலஷ்மி மேடம், ஆதி & புதுகைத்தென்றல்

  ReplyDelete
 11. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள் அமுதா.

  தொடர்ந்து கலக்குங்க..

  ReplyDelete
 12. யாழிசை ஓர் இலக்கிய பயணம் என்னோட ஃபேவரைட்.

  எஸ்.ரா.வின் டாப் டென் ப்ளாக்ல இதுவும் ஒன்று.

  ReplyDelete
 13. நல்ல அறிமுகங்கள் நன்றி!
  ''வலைச்சரத்தில்'' ''தமிழ் மணம்''

  ReplyDelete
 14. நன்றி செய்யது & ஜீவன்

  ReplyDelete
 15. தாமதமான வாழ்த்துக்கள் அமுதா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது