07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 26, 2010

சுயமுகம் - வலைச்சரத்தில் என் முதல் நாள்

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்!

என்னுடைய சுயமுகம் இதுதான் என்று என்னால் அவ்வளவு எளிதில் கூறி விட முடியாது. பலமுறை சுயநலம் எனும் மாயையில் சிக்கிக் கொண்டு குற்ற உணர்ச்சியில் தவித்திருக்கிறேன். அந்த மாயையை விட்டு வெளிவரும் முயற்சியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். இதுவே என் சுயத்தேடலாகவும் இருந்து வருகிறது.

வலைச்சரத்தில் ஆசிரியராக எழுத சீனா ஐயா என்னை சென்ற மாதமே அழைத்திருந்திருக்கிறார். கவனக் குறைவின் காரணமாக அந்த மின்னஞ்சலைப் பார்க்காமல் விட்டு விட்டேன். அதன் பின் இந்த மாதம் என்னை வலைச்சர ஆசிரியராகும்படி கேட்டிருந்தார். அதன் பொருட்டு இன்று தொடங்கி வரும் ஞாயிறு முடியும் வாரத்திற்கு நான் ஆசிரியர் பொறுப்பேற்கிறேன்.

நண்பர் ஊடகன் மூலமே இந்த வலைப்பூ உலகிற்குள் அடியெடுத்து வைத்தேன். ஆனால் ஏனோ இப்போதெல்லாம் அவர் எழுதுவதில்லை. அவரை மீண்டும் எழுத வைக்கும் முயற்சியில் இருக்கிறேன். நிச்சயம் விரைவில் எழுதத் தொடங்குவார்.

இது வரை 150 இடுகைகளை எழுதியிருக்கிறேன். ஆரம்பத்தில் கதை, கவிதைகள் என்ற பெயரில் ஏதேதோ எழுதி விட்டு இப்போது கொஞ்சம் சமூக அவலங்கள் குறித்து எழுதத் தொடங்கியிருக்கிறேன். இது எந்த அளவு படிக்கின்ற மக்களுக்கு புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு புரிதலை ஏற்படுத்தும் அளவு எழுத முயன்று கொண்டிருக்கிறேன்.

"அப்துல் கலாம் கூட நல்ல பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் தானே சென்று அறிவுரைகள் எல்லாம் சொல்கிறார். இது போன்று பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்காக எதுவும் செய்ய வில்லையே!!!"

என்ற வாதத்துடன் நான் துவங்கிய முதல் இடுகை "பிச்சை காரனின் பிள்ளைகள்..". இந்த இடுகையை எத்தனை பேர் படித்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.

இந்த வலைப்பூ உலகில் அடியெருத்து வைத்து ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் போபால் பற்றி பல விடயங்களைப் படித்து எனக்குள் ஒரு புரிதல் ஏற்பட்ட காரணத்தால் அதைப் பற்றி அனைவருக்கும் சொல்ல வேண்டும். அனைவரும் தெரிந்து கொண்டு அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லி புரிதலை ஏற்படுத்த வேண்டும் என எண்ணினேன்.

அதன் விளைவு தற்போது புதிதாக "போபால்" என்ற பெயரில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து அதில் பதிவர்கள் மட்டுமல்லாமல், வாசகர்களாய் இருப்பவர்களும் இந்த விடயம் குறித்து விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். இதற்கு நண்பர்களின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது குறித்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது போல் இன்னும் எத்தனை எத்தனை அபாயங்கள் நம்மை சுற்றியிருக்கின்றன என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப் பட்டதுதான் அந்த வலைப்பூ.

நான் எழுதிய சிறுகதைகளில் என் வலைப்பூவின் வாசகனாய் என்னைக் கவர்ந்தவை மூன்று. உழைப்பின் சுவை சொல்லும் "தேநீர்". தன்னைப் போல் தன் வேலையாட்களைப் பார்க்கும் மனம் முத்லாளிகளுக்கு வருவதில்லை என்பதை விளக்கும் "வேலைக்காரி". மனிதனின் வளர்ச்சியில் மாறுபட்டு போகும் மனிதத்தை விளக்கும் "யானையும் பாகனின் அங்குசமும்".

நான் எழுதியப் பதிவுகளில் எனக்கு திருப்திகரமாக இருந்தவை சமீபத்தில் எழுதிய போபால் குறித்த தொடர் தான். "மனிதம் இருந்தால் படியுங்கள்" என்ற தலைப்பில் ஐந்து பதிவுகளும், "இந்திய மக்கள் உயிர்களின் மொத்த விலை 2300 கோடி" என்ற ஒரு பதிவையும் இது வரை எழுதியிருக்கிறேன்.


நாளை முதல் வலைச்சரத்தில் என்னைக் கவர்ந்த பதிவர்கள் குறித்து வகைப்படுத்தி எழுதலாம் என்றிருக்கிறேன்.

நன்றி,
புலவன் புலிகேசி

36 comments:

 1. //புலவன் புலிகேசி said...

  சோதனை மறுமொழி..//

  வெற்றி வெற்றி ! :)

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. வாழ்த்துகள் புலிகேசி

  ReplyDelete
 3. வாங்க புலிகேசி... உங்க பாணியில் கலக்குங்க...

  ReplyDelete
 4. வருக புலவரே, வலைச்சர அவைக்கு உங்களை வரவேற்கிறேன். கலக்குங்க...

  ReplyDelete
 5. அன்பின் புலிகேசி

  சுய அறிமுகம் நன்று - அனைத்துமே படிக்க முயல்கீறேன்

  நல்வாழ்த்துகள் புலிகேசி
  நட்புடன் சீனா

  ReplyDelete
 6. நன்றி கோவி.கண்ணன், டி.வி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீராம், கலாநேசன் மற்றும் சீனா

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் புலிகேசி.

  ReplyDelete
 8. வலைச்சர ஆசிரியருக்கு நல்வரவு.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் புலவரே... க.க.க.க போபோபோ... ஸ்டாட் த மீயுசிக்

  ReplyDelete
 10. நீங்கள் ஒரு சிந்தனையாளர்தான்

  தேனம்மை மூலம் அறிமுகமாகி உள்ளே நுழைந்த போது இப்படித்தான்
  என்னுடைய வலைதளத்தில் உங்கள் விமர்சனத்தை பதிய வைத்தீர்கள்.
  ஆனால் இன்று உங்கள் சிந்தனைகளின் வளர்ச்சி பிரமிக்கக்கூடியது.
  போபால் வலைதளத்தில் விழுந்த தமிழ மண ஓட்டுக்கள் மக்களும்
  மனிதம் இருக்கிறது என்பதை உணர்த்திக் காட்டுகிறது.
  தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் புலிகேசி

  ReplyDelete
 12. உங்கள் வலையுலக தேடல்களையும், உங்கள் அறிமுகங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 13. நல்வாழ்த்துகள் புலவரே

  சொல்லியடிங்க...

  ReplyDelete
 14. இனிய தம்பிக்கு வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 15. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் அண்ணே

  நல்ல அறிமுகம் :)

  தொடருங்கள் பயணத்தை

  ReplyDelete
 16. வலைச்சர ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ஆசிரியர் பொறுப்பிற்கு. தங்களைக் கவர்ந்த இடுகைகளைப் படிக்க ஆர்வத்துடன் இருக்கிறேன்.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் நண்பா தொடருங்கள் உங்கள் சேவை எங்கும் எப்பொழுதும்.

  ReplyDelete
 19. வாழ்த்துகள் புலவரே! :))

  ReplyDelete
 20. வாழ்த்துகள் புலிகேசி! :-)

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் நண்பா...

  தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. வாழ்த்துகள் புலிகேசி கலக்குங்க...

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் நண்பா...

  ReplyDelete
 24. வாழ்த்துகள் புலவரே.

  ReplyDelete
 25. வாழ்த்துகள் புலிகேசி

  ReplyDelete
 26. வாழ்த்துகள் புலிகேசி !!

  ReplyDelete
 27. இந்த வாரமும் வலைச்சரத்தைத் தளர்ந்திவிடாத பதிவாளர்.
  வாழ்த்துகளோடு தொடருங்கள் புலவரே.

  ReplyDelete
 28. தொடரட்டும் உங்கள் வலைசரம் ஆசிரியர் பணி.
  வாழ்த்துக்கள் புலிகேசி.

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. நல்வாழ்த்துகள் புலிகேசி பூங்கொத்துடன்!

  ReplyDelete
 31. வணக்கம் (புலிகேசி) தோழர் முருகவேல்-

  பலரின் எண்ணங்களை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ள உதவுவது வலைதளம். நாமாக பல தளங்களுக்கு சென்றிருக்க மாட்டோம். ஆனால் வலைச்சரத்தின் உதவியால்- ஆசிரியராக பணியாற்றுபவர்களின் அறிமுகத்தால் பல நல்ல தகவல்களை படித்த திருப்தி. ஒருவாரமாகத்தான் இந்த வலைச்சரம் என்ற தளத்தில் நண்பர் ஜோதிஜி அறிமுகத்தில் உலாவந்து- அதற்குள் எங்கள் ஊர் சீனா என்கிற சினா தானா நட்பு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்று. தொடரட்டும் உங்கள் முற்போக்கு சிந்தனை. உங்களின் போபால் தளத்திற்கு விரைவில் ஆங்கில பத்திரிக்கை இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த நல்ல கட்டுரைகளின் தமிழாக்கத்துடன் வருகிறேன். ஏற்கனவே எனது மொழிபெயர்ப்பு கட்டுரைகளை வினவு தளத்தில் படித்திருப்பீர்கள். வாழ்த்துக்களுடன் சித்திரகுப்தன்

  ReplyDelete
 32. all blogs u introduced is good to read. congurates!

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் நண்பரே

  //அப்துல் கலாம் கூட நல்ல பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் தானே சென்று அறிவுரைகள் எல்லாம் சொல்கிறார். இது போன்று பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்காக எதுவும் செய்ய வில்லையே!!//
  பெருவாரியான ஊடகங்கள் அதை வெளிக் கொணராமல் விட்டிருக்கலாம் தவிர நீங்கள் குறிப்பிட்டது போல கலாம் ஐயா ஏழைக் குழந்தைகள் சந்திக்காமல் இல்லை. இளைய தலைமுறைக்கான தன்னம்பிக்கைத் தொடர்[நக்கீரன்] என்ற வீ.பொன்ராஜ் அவர்களின் தொடரைப் படித்தால் ஏழை மாணவர்கள் மீது கலாம் கொண்டுள்ள ஈடுபாடு விளங்கும். அவர் உருவாக்கிய மருத்துவ உபகரணம் கூட ஏழைகள் பயன்பெறத் தான் இதைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்

  ReplyDelete
 34. மிக்க மகிழ்ச்சி நண்பரே... வலைச்சர வாரம் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 35. மிக்க மகிழ்ச்சி நண்பரே... வலைச்சர வாரம் சிறப்புடம் அமைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது