07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 28, 2010

சமூகம் என்பது யாதெனில் - வலைச்சரம் மூன்றாம் நாள்

சமூகம் என்பது மக்கள் கூட்டமாக சேர்ந்து வாழும் பகுதி என்பதோடு நின்று போய் விட்டது. கூட்டமாக வாழுமிடத்தில் பிரிவினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் ஒரு பிரிவினருக்கு பிரச்சினை என்றால் மற்றப் பிரிவினர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்குத்தானே பிரச்சினை நமக்கு வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை மட்டுமே மக்களிடம் விஞ்சியிருக்கிறது.

சமூக அமைப்பு என்பது ஒன்று கூடி வாழ்தல் என்று வரும் போது, நம்மில் ஒருவர் பாதிக்கப் படும் போது ஒன்று கூடி குரல் கொடுக்கவும் வேண்டும். இன்றைய அளவில் இன்னொருவனது பிரச்சினையாகப் பார்க்க படுவது நாளை நமக்கும் வரும் என்பது தோன்றல் வேண்டும். இது தனிமனித பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல பொது பிரச்சினைகளுக்கும் பொருந்தும். பொதுவில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் நம்மில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் காரணமானவர்களாகவே இருக்கிறோம். ஆனால் அது புரியாமல் விலகிச் செல்கிறோம்.

சரி இன்றைய மூன்றாவது நாளில் சமூகத்தின் மீது அக்கரை கொண்ட பதிவுகளைப் பற்றி பேசலாம்.


ஒரு சாலை விபத்து நடக்கிறது. அங்கு குழுமியிருந்த மக்கள் பேருந்து ஓட்டுனரைத் தாக்கும் நோக்கில் மட்டுமே செயல்பட்டு கலைந்து செல்க்கிறார்கள். இங்கு இந்த விபத்தின் காரணம் ஓட்டுனர் என்ற அளவில் மக்களின் புரிதல் நின்று விடுகிறது. ஆனால் இந்த தனியார் பேருந்து ஓட்டுனர்களின் வேகத்திற்கு முதலாளிகள்தான் காரணம் என்பதை இங்கு அழகாக சொல்லியிருக்கிறார். முத்லாளிகளின் லாப நோக்கு பொது மக்களை பாதிப்பதுதான் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது.


"அமெரிக்கா அரிசியை ஐம்பது காசுக்கு ரேஷனில் கொடுத்த தானைத் தலைவரை மீண்டும் முதல்வராக்குங்கள் என்ற கோஷம் விரைவில் கேட்கக்கூடும்.
(வயல்மேல் வீடு கட்ட நாங்கள் ரெடி. அமெரிக்க அரிசி தின்ன ஆர் யூ ரெடி?? )"

நமது அரசியல்வியாதிகள் மக்கள் போராடாமல் இருக்க என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையும், நம் நாடு அமெரிக்கனிடம் அடகு வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இறுதி வரியிலும் சொல்லி ஆதங்கப் பட்டிருக்கிறார். அனைவரும் நிச்சயம் படித்துப் பாருங்கள்.


"ஆனால் அந்த ஓரணுவுக்கு காரணம் கடவுள் என்று முற்றுபுள்ளி வைத்தால், அந்த ஓரணுவுக்கான காரணத்தை எப்படி கண்டுபிடிப்பது!,"

கடவுள் மறுப்பு என்பது நம் சொந்த வெறுப்புகளுக்காக இருக்கக் கூடாது. அதற்கான காரணம் என்ன என்பதை மிக ஆழமாகவும் தெளிவாகவும், அறிவியல் சாரத்தில் எழுதியிருக்கிறார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என எனக்குத் தோன்றுகிறது.


"மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் நல வாழ்வு திட்டங்களுக்கு, நஷ்ட ஈட்டு தொகைக்கு எல்லாம் கஜானா காலி என்ற கையை விரிச்ச மகராசி, தன்னை விட உயரமான அளவில் ஒரு லஞ்ச பண மாலையை பெருந்தன்மையா வாங்கி கொண்டு, தன் எடைக்கு மேல எடை அளவு கொண்ட கேக் வெட்டி , ரொம்ப "க(இ)ஷ்டமான" மன நிலையோட பிறந்த நாள் கொண்டாடி இருக்காங்க."

தண்ணீருக்கு நாம் தள்ளாடும் நிலையில் மக்கள் மீது பற்றற்றவர்களாய் இருக்கும் ஒரு அரசியல்வியாதியைக் குறித்த இவரது பதிவு இது.


"சாமான்யர்களான நாம் கேள்விகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்களின் குழந்தைகள் சவுகர்யமாக காரில் சென்றுகொண்டிருக்கட்டும் தவறில்லை. ஆனால் முறையாகப் பராமரிக்கப்படாத வேன்களிலும், பேருந்துகளிலும் பயணிக்கும் நம் குழந்தைகளின் குறைந்தபட்ச பாதுகாப்பிற்காவது உத்திரவாதமளிக்கலாமே?"

ஆளும் வர்க்கத்தால் தனியார் பள்ளிகள் மூலம் கல்வி விற்பனை என வந்த பின் அங்கும் நடைபெறும் காஸ்ட் கட்டிங் முறையால் நாம் எவ்வாறு பாதிக்கப் படுகிறோம். படித்து பாருங்கள்.


"இன்று தொழிற்சாலைகள் நிறுவனங்கள் பல, பல கல்வி சாலைகள் ஆரம்பிப்பதன் நோக்கம் தொழில் நஷ்டத்தை ஈடுகட்ட, அல்லது லாபம் தரும் தொழிலாக கல்வி மாறியதால் வந்த விளைவு ஆகும்."

கல்வி என்பது முதலாளிகளின் மாற்றுத் தொழிலாகி போயிருக்கிறது. சில முரண்பாடுகள் இருந்தாலும் இவரது அலசல் மிக அருமையாக இருக்கிறது.


குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பிச்சையெடுக்கும் குழந்தைகளின் புகைப்படத் தொகுப்பு. ஆனால் இதற்கெல்லாம் காரணம் பெற்றவர்களும், வேலை கொடுப்பவர்களும் என இவர் நினைப்பதைதான் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவர்களின் இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை ஒரு தனி பதிவாகவே விளக்கலாம். விரைவில் விளக்குகிறேன்.


நம் மருத்துவர்களின் மெத்தனப் போக்கும், உயிர்கள் வெறும் விற்பனைப் பொருட்களாகப் பார்க்கப் படுகிறது என்பதையும் தன் சொந்த அனுபவத்துடன் கலந்து எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

இன்று நான் அறிமுகப் படுத்தியவர்களுக்கு சமூகம் சார்ந்த சிந்தனைகள் இருக்கின்றன. இவர்கள் சமூகம் சார்ந்த புரிதல்களை எவ்வித தயக்கமுமின்றி மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

21 comments:

 1. (வழக்கம்போல்) அருமை.

  ReplyDelete
 2. அன்பின் புலிகேசி

  மீ டஹ் ஃபர்ஸ்டா

  நேரமில்லை - இரவில் வருகிறேன்

  நல்வாழ்த்துகள் புலிகேசி

  நட்புடன் சீனா

  ReplyDelete
 3. மீ த ஃப்ர்ஸ்ட் இல்லையா - சில நொடிகளில் துளசி முந்திக் கொண்டாரா

  ReplyDelete
 4. நன்றி துளசி கோபால் மற்றும் சீனா ஐயா...

  ReplyDelete
 5. அறிமுகப்படுத்திய விதம் அருமை நண்பா.

  ReplyDelete
 6. சமூக அக்கரையுள்ள பதிவுகள்

  இனி படிக்கிறேன் :)

  ReplyDelete
 7. என்னை அறிமுகப்படுத்தி உள்ளதற்கு நன்றி....
  மேலும் சமூக அக்கறையுடன் எழுத தூண்டுகிறது.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. அறிமுகப்படுத்திய விதம் அருமை நண்பா...

  சமூக அக்கறையுடன் எழுதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. சுட்டிக் காட்டியுள்ள பதிவுகள் மட்டுமன்றி சுட்டிக் காட்டியவரும் சமுக அக்கறையுள்ளவர் தானே . வாழ்த்துக்கள் தம்பி

  ReplyDelete
 10. நல்ல இடுகைகளை தேடிப்பிடித்து அறிமுகப்படுத்தியிருக்கீங்க நண்பா... நன்றியும் மகிழ்ச்சியும்...

  ReplyDelete
 11. அனைத்தும் பட்டையை கிளப்பிய பதிவுகள்

  ReplyDelete
 12. நன்றி நண்பா..

  மற்ற பதிவுகளையும் வாசிக்கிறேன்.

  ReplyDelete
 13. அத்தனை பதிவாளர்களுமே
  கலக்கல் பதிவாளர்கள்.

  ReplyDelete
 14. அருமையான பகிர்வுகள் முருகவேல்!

  ReplyDelete
 15. அனைத்து தரப்பினரையும் படிக்கிறிங்க தல!

  எனது அறிமுகத்திற்கு நன்றி!

  ReplyDelete
 16. நன்றி நண்பா

  கதிர் செந்தில் தவிர மற்றவர்களின் தவற விட்ட தலைப்பு.

  ReplyDelete
 17. புலவன் புலிகேசி அவர்களுக்கு மிக்க நன்றி... அனைத்து அறிமுகங்களும் அருமை. ஆசிரியராய் என் பார்வையை இன்னும் விசாலப்படுத்த ஊக்கமாக இருக்கிறது.. பணி சிறக்க வாழ்த்துக்கிறேன்.

  ReplyDelete
 18. என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி தலைவரே...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது