07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 11, 2010

நல்வாழ்த்துகள் செந்தில் - வருக ! வருக ! பிரதாப்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் செந்தில், தனது கடமையைச் சரிவரச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூற்று இருபத்தைந்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அவர் அறிமுகப் படுத்திய பதிவர்கள் / இடுகைகளின் எண்ணிக்கை தொண்ணூறைத் தாண்டி விட்டது. அததனையும் துறை வாரியாகத் தொகுத்தளித்தமை நன்று. நல்ல முறையில் முழு ஈடுபாட்டுடன் செயல் பட்ட நண்பர் செந்திலுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளை, வலைச்சரம் குழுவினர் சார்பினில் தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து நாளை, சூலை 12ம் நாள் துவங்கும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் நாஞ்சில் பிரதாப்.

இவர்
நாஞ்சில் நாட்டை சேர்ந்தவர்(நாகர்கோவில்). முழுப்பெயர் பிரதாப் குமார். ஊர் மேல் கொண்ட பற்றினால் பெயரின் முன் நாஞ்சில் சேர்த்துக்கொண்டு நாஞ்சில் பிரதாப் என்ற பெயரில் நாஞ்சில் எக்ஸ்பிரஸ் என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார்.

பிழைப்புக்காக இந்தியாவில் பல நகரங்களை சுற்றி விட்டு தற்போது அமீரகம் துபாயில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

ஐந்து வருடமாக வலைப்பூஅறிமுகம். 2007 முதல் வலைப்பூவில் எழுதிவருகிறார். இவரது முதல் வலைப்பூ (நாஞ்சில் மைந்தன்) வெள்ளைக் காக்காயால் மாயமாகிப் போனதால் தற்போதுள்ள வலைப்பூவில் கடந்த ஒரு வருடமாக எழுதி வருகிறார்.

நண்பர் நாஞ்சில் பிரதாப்பினை வருக ! வருக ! நல்ல பல அறிமுகங்களை அள்ளித் தருக ! என வரவேற்று, வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நட்புடன் சீனா

15 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. செந்தில் மாம்ஸ் டாட்டா பை பை..

  மாப்ள பிரதாப்புக்கு சாரி வாத்தியார் பிரதாப்புக்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அன்பு நண்பர் நாஞ்சிலை அன்புடன் வரவேற்கிறேன்..

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் பிரதாப்.

  ReplyDelete
 5. வருக நாஞ்சில் பிரதாப்.....
  ஆர்வமுடன் உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்...
  கலக்குங்க....
  அன்புடன் கபிலன்.

  ReplyDelete
 6. //நண்பர் நாஞ்சில் பிரதாப்பினை வருக ! வருக ! நல்ல பல அறிமுகங்களை அள்ளித் தருக ! என வரவேற்று, வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். //

  நானும்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்..!!..வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 8. சிஷ்யாவுக்கு அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வருக நாஞ்சில் பிரதாப்.

  வாழ்த்துக்கள் செந்தில்.

  ReplyDelete
 10. பிரதாப் அண்ணா நம்ம ஊரா நீங்க... கலக்குங்க...

  ReplyDelete
 11. பிரதாப் வருக!!! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 12. கலக்குங்க தல

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது