07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 11, 2010

அறிமுகம் - வலைச்சரத்தில் முதல் நாள் (திங்கள்)

வணக்கம் சீனா ஐயா,

சீனா சார் என்னை வலைச்சரத்தில் ஆசிரியராக அழைப்பு விடுத்ததில் மகிழ்ச்சி. எனக்கு மின்னஞ்சலில் விடுத்த அழைப்பு என் கண்ணில் படவில்லை. சில தினங்களுக்கு முன் மாம்சு தேவா மூலமாகத்தான் அறியவந்தது. இல்லையென்றால் வடைபோச்சே என்று புலம்பிக்கொண்டிருப்பேன்.
இருவருக்கும்நன்றிகள்.


வாசிக்கும் ஆர்வத்தில் இணையத்தில் தமிழை தேட ஆரம்பித்தேன். 2006ம் ஆண்டு முதன்முதலில் வலைப்பதிவு அறிமுகம். முதன்முதல் நான் படித்த வலைப்பூ பதிவர் மா.சிவகுமார் அவர்களுடையது. வலைப்பூ புதிதாக ஆரம்பிக்க இணையத்தளம் போல டொமைன் பதிவு செய்ய வேண்டும் எனநினைத்து அதைப்ப்பற்றி யோசிக்கவே இல்லை.


மா.சிவகுமார் அவர்களை தொடர்புகொண்டு அதைப்பற்றி கேட்டபோதுதான் தெரிந்தது வலைப்பூ இலவசமாக கிடைக்கிறதென்று. இலவசத்துக்கு நானும் மயங்கினேன். நானும் தமிழ்நாட்டை சேர்ந்தவன்தானே. அதன் விளைவுதான் 2007 ல் எனது எனது வலைப்பூவின் உதயம். எழுதி தமிழை வளர்க்கனும்னு ஆசை எதுவும் இல்லை, நான் எழுதாம இருந்தாலே தமிழை வளர்த்தா மாதிரிதான். இருந்தாலும் ஒரு ஆசை.


எழுத ஆரமபித்த புதிதில் புதியவர்களை ஊக்குவிப்பதில் புரட்சியே நடத்தும் பதிவர் கோவி.கண்ணன் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்தபோது எனது வலைப்பதிவை இங்கு அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து வலைச்சரம் அறிமுகமானது.


முதல் வலைப்பூவை நாஞ்சில் மைந்தன் என்ற பெயரில் ஆரமபித்து எழுதினேன். 3 வருடங்களாக எழுதினேன் எழுதினேன் மொக்கைப்பசி தீரும் வரை எழுதினேன். யார் கண்ணுபட்டுச்சோ எனது வலைப்பூ திடீரென மாயமானது.


என்னையும் படிச்ச சிலபேர் ஏன் எழுதறதில்லைன்னு மின்னஞ்சல்களில் கேட்க (சத்தியமா...நம்பித்தான் ஆகனும்) மீண்டும் வலைப்பதிவு ஆரம்பித்தேன். நகைச்சுவை பதிவுகள், சினிமா, அறிவியல், சம்பந்தமான பதிவுகளை விரும்பி படிப்பேன். அதுபோல் எழுதவும் ஆசை(ஆனா முடில). எனது சில பதிவுகள் விகடன் குட் பிளாக்ல் வந்துள்ளது. (தற்புகழ்ச்சி பிடிக்காது அதனால் எந்தப்பதிவுக்கும் இணைப்பு கொடுக்கவில்லை :).

இப்போது ஒரு அங்கீகாரம் கொடுத்த சீனா ஐயாவுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துகொண்டு ஒருவாரம் மட்டும் எனது எக்ஸ்பிரஸை வலைச்சரத்தில் ஓடவிட்டு பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த இருக்கிறேன். எக்ஸ்பிரஸ்-ல் பயணம் எப்படி இருந்தது என்பதை மறக்காமல் தெரிவிக்கவும்.


33 comments:

 1. நாஞ்சில் சிங்கம்.....அமீரகத்தங்கம்....கலாட்டா மன்னன்....மொக்கைத் தளபதி...துபாய்த் திரு நாட்டின் பருத்தி வீரன்...பட்டாகத்தி பைரவன்....என்ன பெத்த ராசா... அன்பு மாப்பிள்ளை...

  மாப்ஸ் போதுமாய்யா.....பில்டப் .....!

  இந்த வார வலைச்சரம் உன்கையில மாப்ஸ்...அடிச்சி தூள் கிளப்பு......வர்றத பாத்துக்கலாம்......

  வலைச்சர ஆசிரியருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வாங்க வாங்க பிரதாப்.. அறிமுகமே அசத்திட்டீங்க. வாழ்த்துகள் சிஷ்யா.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் தாப்...தாப்...(ஆசிரியர்)பிரதாப்.

  ReplyDelete
 4. வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்கும் நண்பர் நாஞ்சிலாருக்கு வாழ்த்துக்கள்.

  நண்ப கே.ஆர்.பி. கலக்கலைத் தொடர்ந்து நாஞ்சில் கலக்க வருகிறார். வலைச்சரத்தின் எக்ஸ்பிரஸ் வேகம் தொடரட்டும்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நாஞ்சில் நாடு சிங்கம், அமீரக அதிரடி தளபதி , தமிழ்ப் பதிவுலக சூப்பர் ஸ்டார் நாஞ்சில் பிரதாப் கண்டிப்பாக தமிழ் வலைபதிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார் என்ற நம்பிக்கையோடு தங்களை , தோவாளை ஒன்றியம் சார்பில் வரவேற்கிறோம்

  ReplyDelete
 6. நாஞ்சில் எக்ஸ்பிரஸ் வலைச்சரத்துலையா. கலக்குங்க பிரதாப். வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. அப்போ நீங்க அப்போவே பி.ப.ன்னு சொல்லுங்க...

  நாங்கூட தெரியாத்தனமா புதிய பதிவர்ன்னு சொல்லிப்போட்டேனே...

  மன்னிச்சுப்போடுங்க வாத்தியாரே..

  இந்த ஒருவாரமும் எப்பவும் போலயே கலகலப்பா கலக்கல் பதிவுகள் வரட்டும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. வாங்க நாஞ்சில். கலக்குங்க.

  ReplyDelete
 9. vaalthukkal nanabrae.. varuga varuga

  ReplyDelete
 10. அன்பின் பிரதாப்

  அருமையான துவக்கம் - அடித்து ஆடுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. வாழ்த்துகள் பிரதாப்

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்...நாஞ்சில்..

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் பிரதாப்..

  ReplyDelete
 14. வாழ்த்துக்க‌ள் த‌ல‌.... அறிமுக‌ங்க‌ள் தொட‌ர‌ட்டும்..

  ReplyDelete
 15. எழுத ஆரமபித்த புதிதில் புதியவர்களை ஊக்குவிப்பதில் புரட்சியே நடத்தும் பதிவர் கோவி.கண்ணன்
  /////////

  பதிவர்களின் பாசகார அண்ணன்

  ReplyDelete
 16. வலைச்சர ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. அய்யய்யோ... வோர்ல்ட் கப் முடிஞசு ஆக்டோபஸ் வலைசரத்துகுள்ள வந்திடுச்சேய்ய்ய்......

  ஓடுங்க...ஓடுங்க...அது நம்மள நோக்கிதான் வருது.....


  வலைசரத்தை மொக்கை சரமாக்க வந்த குலவிளக்கே வருக...

  jokes apart,

  நீரு வலைசரத்துல வந்தது சந்தோஷம்டே...

  நீ அடிச்சு ஆடுலே......

  ReplyDelete
 18. வருக. நல் பதிவுகளை அறிமுகம் செய்க.

  ReplyDelete
 19. வாங்க வாங்க வாழ்த்துகள்

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள்...நாஞ்சில்....!!

  ReplyDelete
 21. வணக்கம் நாஞ்சில் அண்ணே. எங்க‌ எல்லோருக்கும் நல்ல விருந்து கொடுங்க‌...

  ReplyDelete
 22. வாங்க பிரதாப்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் தம்பி... அறிமுகப்படுத்தி அசத்துங்கள்...

  பிரபாகர்...

  ReplyDelete
 24. ஒவ்வொரு நாளும் சிக்ஸர் அடிக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 25. பிரதாப் உங்கள் வருகை நல்வருகை ஆகட்டும்.

  ReplyDelete
 26. எக்ஸ்பிரஸுக்கு பச்சைக்கொடி காமிச்சாச்சேய்... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. வாழ்த்துகள் நண்பா.

  நாஞ்சில் சிங்கம் களமிறங்கிருச்சிங்கோவ்...

  அசத்துங்க பிரதாப்.

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் பிரதாப் .... நீங்க இங்க கலுக்குங்க , நான் ஒழிகினசெரி போயிட்டு வர்றேன் !!!????

  ReplyDelete
 29. வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது