07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 15, 2012

உங்கள் பார்வைக்கு சில வலைப்பூக்கள்

வணக்கம் தோழர்களே!

இது ஆறாவது நாள்.  மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி!

முதன்முதலில் சீனா அய்யா அவர்களிடமிருந்து வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கக் கேட்டு மின்னஞ்சல் வந்தபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த இன்ப அதிர்ச்சியோடே நானும் எனது இசைவைத் தெரிவித்தேன். நிறைய அவகாசம் இருந்ததால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தொடக்கத்தில் இருந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்த நிகழ்வுகள் எனது எண்ணம் நிறைவேறாமல் போவதற்குக் காரணமாகிவிட்டன. ஆம் நண்பர்களே! எதிர்பாராத வகையில் எனக்குக் கிடைத்த பதவி உயர்வும் பணியிட மாற்றமும் வலைச்சரத்தில் எனது பங்களிப்பை எதிர்பார்ப்புகளுக்கேற்றவாறு செய்ய இயலாமல் போனதற்குக் காரணமாகிவிட்டன. 

மிகக் குறுகிய காலத்தில் எதிர்பாராத இரு மகிழ்ச்சியான நிகழ்வுகள்!  ஆச்சர்யங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை இல்லையா? அதுவும் எதிர்பாராமல் நடக்கும் நல்ல விஷயங்கள் மகிழ்ச்சியைப் பன்மடங்காக்க வல்லவை. இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே மனநிலையில் இருப்பது குறித்து நிறைய கருத்துகள் இருந்தாலும் நாமும் அதனைப் பின்பற்றவே முயற்சிகள் செய்தாலும், உணர்வுகளால் கட்டுண்ட எளிய மனித மனம் அதன் விருப்பு வெறுப்புகளைக் காட்டவே செய்கிறது. நானும் அதற்கு விதிவிலக்கானவன் அல்லன். ஆர்ப்பாட்டமாக இல்லாவிட்டாலும் அடக்கமாகவேனும் மனம் கொண்டாட்டத்தில் துள்ளவே செய்கிறது.

இரண்டு வாய்ப்புகள் ஒரே நேரத்தில் கிட்டியபோது ஒரு வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்ட நான் மற்றொரு வாய்ப்பை முற்றிலுமாகத் தவறவிடவில்லை என்றாலும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாததில் சிறுவருத்தம் உண்டு. ஆனாலும் பெரிய மகிழ்ச்சி சிறிய வருத்தத்தை நேர் செய்துவிட்டது.

சரி தோழர்களே! எனது எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொண்ட நான் இப்போது சில தளங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
தளங்களைப் பார்வையிட்டு அவர்களையும் உற்சாகப்படுத்துங்கள்! மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அன்புடன்,
அப்துல் காதர்.


19 comments:

 1. பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே! வாழ்கையில் மேலும் பல படிகள் உயர்ந்து இன்னும் அதிகமாய் முன்னேற எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

  இன்றைய அறிமுகங்களில் சிலர் எனக்கு தெரிந்தவர்கள் சிலர் அறியாதவர்கள்! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. அறி முகங்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 3. பதவி உயர்வுக்கு வாழ்த்துகள் நண்பரே....

  தொடரட்டும் பதவி உயர்வுகள்....

  ReplyDelete
 4. அறியாத பல தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் நண்பரே! பதவி உயர்வுக்கும் புதிய பல தள அறிமுகத்திற்கும்!

  இன்று என் தளத்தில்
  பிள்ளையார் திருத்தினார்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
  வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html  ReplyDelete
 6. pathavi uyarvukku vaazhthukkal!


  ennaiyum inaiththathukku mikka nantri anne!

  ReplyDelete
 7. அனைவரின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 8. இன்னொரு வாய்ப்பு என்னவென்று சொல்லவில்லையே!

  ReplyDelete
 9. எந்த வாய்ப்பை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் எனத் தெரிந்தால் இன்னொரு வாய்ப்பு எதுவென்று சொல்ல ஏதுவாகும்.

  ReplyDelete
 10. * வாசர்களே செக்ஸ் படம் பார்க்கனுமா தமிழ் மணம் வாருங்கள்!
  * தமிழ் மணத்தில் குடிமி சண்டையை ஆதரிக்கும் பதிவு!
  * தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!
  * தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!
  * இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!
  * தமிழ் மணம் (நாத்தம்) ஒரு அறிமுகம்!

  தமிழ் மணம் குறித்த உங்களது விமர்சனங்களும், விளக்கங்களும் இங்கே வரவேற்க்கப்படுகிறது. தமிழ் மணம் என்கிற மதவாதத்தை, பதிவர்களுக்குள் சண்டையை ஏற்ப்படுத்தும், விட்டு ஒழித்து டாப் , இன்லி, தமிழ்வெளி, வலைச்சரம், தேன்கூடு, உழவன் போன்ற திரட்டிகளை ஆதரியுங்கள். தமிழ் மணம் என்கிற மாயை மக்கள் மத்தியில் இருந்து ஒழிப்போம். குடமி சண்டை கேவலத்தை வேரறுப்போம். படைப்பாளிகளை மதிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் மற்றைய இணையதளங்களுக்கு நமது பதிவுகளை வழங்குவோம். தமிழ் மணத்தை முற்றிலும் புறக்கணிப்போம்.

  மேலதிகமான தகவல்களுக்கு - please go to visit

  http://www.tamilnaththam.blogspot.com/

  ReplyDelete
 11. அன்பின் அப்துல் காதர் - பதவி உயர்வுக்குப் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். நட்புடன் சீனா

  ReplyDelete
 12. எனது தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அப்துல் காதர். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

  ReplyDelete
 13. பதவி உயர்வுக்கு வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
 14. பதவி உயர்வுக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 15. @ஔவை

  உங்களுக்கென்று ஒரு வலைப்பூ இருப்பதை தற்போதுதான் சிவஹரியின் வலைப்பூ மூலம் அறிந்தேன். முன்பே அறிந்திருந்தால் இன்னும் சிறப்பாக அறிமுகப்படுத்தியிருப்பேன்.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. முதலில் தங்களின் பதவி உயர்விற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  எனது வலைப்பூவினையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி தோழரே!

  ReplyDelete
 18. ஓ!!! காதர் சகோ இங்கும் நீங்கள். மிக்க மகிழ்ச்சி சகோ. பதவி உயர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் என் வலைப்பூவையும் இங்கு அறிமுகம் செய்தமைக்கு உளமார்ந்த நன்றிகளும்..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது