07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 27, 2012

இன்னும் கொஞ்சம்கவிஞன், சிறுகதைக்காரன் தூரன் குணாவின் வலைத்தளம். கவிதை, கதை தவிர்த்து அனுபவங்கள், வாசிப்பு என எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் கொஞ்சமே கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறார். தூரன் குணாவை நினைக்கும் போதெல்லாம் ஓட்டிற்குள் அடங்கியிருக்கும் ஆமையின் சித்திரம் மனதில் தோன்றும். அது பொருத்தமான சித்திரம் என்று நினைத்துக் கொள்வேன்.


ஈழத்து காட்டாறு. சமூகம், இலக்கியம், அரசியல், கவிதை, கதை என அடித்து நொறுக்குகிறார். இந்தியாவிற்கும், கனடாவிற்கும், ஈழத்திற்குமாக றெக்கை கட்டிப் பறாக்கும் தமிழ்நதி, சமீபமாக வலைப்பதிவில் மிகக் குறைவாகவே எழுதுகிறார்.


கவிஞர் ச.முத்துவேலின் இணையதளம். பெரும்பாலும் கவிதைகளால் நிறைந்திருக்கிறது. இவரும் மிகக் குறைவாகவே எழுதுகிறார். அந்தப்பக்கம் போனால் நிறைய எழுதச் சொல்லிவிட்டு வாருங்கள்.


தீவிரமான வாசிப்பும், கூர்மையான பார்வையுமுடைய பாலசுப்ரமணியனின் வலைப்பூ.  இவர் அதிகம் எழுதுவதில்லை என்று குறைபடுபவர்களில் நானும் ஒருவன்.

4 comments:

 1. இன்று குறைவாக எழுதுபவர்களை நிறைய எழுத சொல்லும் ஆதங்கம் தெரிகிறது.

  இன்று அறிமுக படுத்தியவர்கள் எல்லாம் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. சிறந்த தளங்கள்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  (த.ம. 1)

  ReplyDelete
 3. நன்றி மணிகண்டன்...

  வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதுவதைப் பற்றி சில நாட்களாகவே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

  முகநூலிலிருந்து விடுபட்டு, இலக்கிய - அரசியல் சர்ச்சைகளிலிருந்து விலகி எனக்கே எனக்கான தளத்தில் எழுதும் ஆவல் மிகுந்து வருகிறது.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது