07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 5, 2012

பன்றிகுட்டி தான் எவ்வளவு அழகு!

பன்றிகுட்டியை என்றாவது ரசித்திருக்கிறீர்களா? அழகான நான்கு கால்கள், அதற்கு மாட்சிங்கா பிட் செய்தது போல் அதன் உடல், சினிமா ஹீரோயின்களே தோற்று போகும் அதன் அழகு மூக்கு ! நாம் அதை கிராஸ் செய்து போகும் போது உர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் என்று அது எழுப்பும் ஒலி !! ச்ச ஜான் காஸ்ட்ரோவே  தோற்று போய் விடுவார்! ( ஒரு நிமிஷம் ஜான் காஸ்ட்ரோனா சொன்னேன் யார் அவர் ? )பன்றிகுட்டியின் அந்த அழகான இசை ஒரு ஒலி, அந்த ஒலி நிறைய விந்தைகளை கொண்டது ! இந்த உலகில் மறைக்கப்படும் உண்மைகள் நிறைய ஆனால் ஒலியை பற்றியும் சில இருக்கின்றன !! எவ்வளவு அழகு இந்த ஒலி !

கோயிலில் சற்று நேரம் அமர்வதற்காக சென்றிருக்கிறீர்களா ? எத்துனை மனிதர்கள், எந்நேரமும் எல்லா மொழிகளிலும் கடவுளை டிஸ்ட்ரப் செய்து கொண்டே இருக்கிறார்கள் ! உண்டியலில் பத்து ரூபாய் போட போய் பின்பு ஒரு ரூபாயை எடுத்து போடுகின்றனர்! கடவுளிடமே கருப்பு பணம்! அந்த பினான்ஸ் ஒன் ரூப்பி கடவுளுக்கு போதும் தான் :) கோயிலின் எந்த ஒரு மூலையிலும் சிறிது கரி அடித்திருந்தால் போதும் அதையும் தொட்டு வணங்குகின்றார்கள், கோயில்களெல்லாம் கலைத்தாயின் பிறப்பிடங்கள், நம் முன்னோர்களின் வரலாற்று சுவடுகள் . எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த உலகம் !!

ஒரு உலகம் மட்டுமல்ல ஐ மீன் இரண்டாவது உலகமும் இருக்கத்தான் செய்கிறது ! சூரியனுக்கே சவால் விடும் கண்டுபிடிப்பு தான் மின்விளக்கு ! எப்படி தயாரிக்கிறார்கள் ?

எப்படி கண்டுபிடித்தோம் அந்த மின்விளக்கை,விடை கல்வி,, இந்த உலகின் முதல் கல்வி கூடத்திற்கு  என் உளமார்ந்த நன்றிகள்.

கல்வி நம்மை ஆக்க பாதைக்கு இட்டு சென்றது, ராக்கெட்டில் கட்டியிருந்த எலுமிச்சையின் அருளால் உலகை தாண்டி செவ்வாய் வரை சென்றோம் !, வேற்று கிரக வாசிகளை விசிட் அடிக்க இன்விடேசன் கொடுத்தோம் ! எவ்வளவு அழகு இந்த கல்வி !!

ஆனால் கல்வி நம்மை அழிவு பாதைக்கும் இட்டு சென்றது இல்லுமினாட்டி என்னும் கூட்டம் இன்னும் உலகை அழிக்க விரும்புகிறது ! அழிவு தான் எவ்வளவு அழகு !!

முடிவு முடிவாகிவிட்டால் பதறாதீர்கள் ஆசையாய் அதை அரவணையுங்கள், அமைதியாய் அனுபவியுங்கள் வாழ்க்கைதான் எவ்வளவு அழகு !!

பதிவுகளுக்கு சொந்தக்காரர்கள் :

வரலாற்று சுவடுகள்

அறிவியல் விந்தைகள்

தமிழ் ஜீனியஸ் இன்றைய அவார்ட் :

இந்த பகுதியில் எனக்கு  பதிவுலகில் கிடைத்த சொந்தங்கள், நட்புக்கள்,பிடித்தவர்கள் இன்னும் பல .


திரு செங்கோவி அவர்கள் நிச்சயமாக அவருக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை ஆனால், என்னை அதிகம் கவர்ந்த பதிவர் அவர். 

அவரின் நானா யோசிச்சேன் பதிவுகள், முருக வேட்டை  தொடர் அத்துனையும் கலக்கல். 

13 comments:

 1. இன்றைய அறிமுகங்கள் அனைவர்க்கும் என் இனிய வாழ்த்துக்கள் .அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

  ReplyDelete
 2. சகோ, நீங்கள் அறிமுகம் செய்திருக்கின்ற அத்தனை வலைத்தளங்களும் அறிவியல் பெட்டகங்கள். நன்றி.

  ReplyDelete
 3. சிறப்பான தளங்கள்... நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்... (இரண்டு தளங்கள் (2 & 3) புதியவை)

  ReplyDelete
 4. //பன்றிகுட்டியை என்றாவது ரசித்திருக்கிறீர்களா? அழகான நான்கு கால்கள், அதற்கு மாட்சிங்கா பிட் செய்தது போல் அதன் உடல், சினிமா ஹீரோயின்களே தோற்று போகும் அதன் அழகு மூக்கு !//
  பன்னிக்குட்டி பன்னிக்குட்டி !!
  பத்து பதினைந்து குட்டி - நீ
  போடுவதில் எத்தனை சுட்டி !!
  எட்டி எட்டி போனாலும் நீ
  என் மூக்கு உள்ளே நுழைந்திடுவாய்.
  வாசம் நிறை பன்னிக்குட்டி
  வசிப்பது ஏன் சாக்கடை தொட்டி?

  அழகான உன் உடற்கட்டு,
  அமைப்பான வாய் உதடு,
  அதிசயித்த பகலவன் உன்னைப்
  பிரகாசத்துடன் பார்ப்பது பார் !!.

  பன்னி உந்தன் கவி பாட
  பிரகாசு வந்திருக்கார்.
  பாட்டு பாடி வந்த பணத்தில்
  பாதி நீயும் பெற்றுவிடு.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 5. @சுப்பு ரத்தினம்.
  ஹா ஹா அய்யா கலக்கி விட்டீர்கள், நன்றி,,

  @அம்பாளடியாள்,ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி,திண்டுக்கல் தனபாலன்

  உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் :)

  ReplyDelete
 6. ஒரே அலை வரிசை :))) babe படம் வருவதற்கு முன்னேயே நான் பன்றிக்குட்டிகளின் பரமரசிகை .....பிறந்த கழுதை குட்டியையும் அந்த அழகிய லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க .

  வரலாறு தம்பி எமக்கு அறிமுகமானவர் .அவருக்கும் அவரோடு அறிமுகமான பிறருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. தலைப்பைப் படிச்சுட்டு பன்னிக்குட்டி ராமசாமியைப் பற்றி ஏதேனும் உள்ளதோ என்று நினைத்தேன்.
  ஹஹா..

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள்! சிறந்த அறிமுகங்கள்!

  இன்று என் தளத்தில்
  பழஞ்சோறு! அழகான கிழவி!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

  ReplyDelete
 9. சற்று அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக இன்று முழுவதும் இணையத்திற்கு வர இயலவில்லை, இப்போது தான் பார்வையிட முடிந்தது, அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோ! மன்னித்துக்கொள்ளுங்கள் மிக தாமதமாக வந்து கருத்திட்டமைக்கு! :)

  தமிழ் ஜீனியஸ் தளம் பற்றி அறிவேன், அறிவியல் விந்தைகள் தல அறிமுகத்திற்கு மிக்க நன்றி இப்போது தான் அறிகிறேன், பின்தொடரவும் ஆரம்பித்துவிட்டேன்! :)

  ReplyDelete
 10. ஜான் காஸ்ட்ரோ or ஜேசன் காஸ்ட்ரோ? :)

  ReplyDelete
 11. @ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

  பாராட்டிற்கு நன்றி விஜி அக்கா!

  @ angelin

  அன்பிற்கு மிக்க நன்றி ஏஞ்சலின் அக்கா! :)

  @ இந்திரா

  சகோ இந்திரா ஏதோ பிளான் பண்ணுறாங்க சூர்யா.... கொஞ்சம் சூதானமா இருங்க! :)

  ReplyDelete
 12. Thank you for your recommends.

  sorry for commenting in english.

  :D

  ReplyDelete
 13. "சந்திரன் பிரபு " அறிவியல் சார்ந்த பதிவு மற்றும் விந்தை, விநோதம் போன்ற விடுகதைகள் போன்ற சிறப்பான பதிவுகளை தந்து அசத்தி வருகிறார்.

  "தமிழ் ஜீனியஸ்" தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து பாராட்டியுள்ளீர்கள் மிக்க நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது