07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 2, 2013

நவரத்தினம் பதிவர்களைக் கண்டு தெறித்து ஓடும் சனி'கிழமை...!

செல்வி காளிமுத்து, என் மனவானில் என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி வருகிறார், என் அன்பு சகோதரி, என் மீதும் என் நண்பர்கள் மீதும் மிகவும் பாசம் கொண்டவர், என் நண்பர்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் அன்போடு நட்பு பாராட்டும் தோழி, நான் அவரை டீச்சர் என்றே அழைப்பேன் காரணம் அவர் ஒரு தமிழ் ஆசிரியை...! கோபம் வந்தால் நேரிடையாக சாட்டிங்கிலோ அல்லது போனிலோ வந்து என்னிடம் பொரிந்து தள்ள முழு அனுமதி பெற்றவர்...! [[ம்ஹும், அருவாளுக்கு கொஞ்சங்கூடவா பயமில்ல...?]]

அழகாக மழலை கல்வி பற்றி சொல்கிறார், பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது, வாங்க டீச்சருக்கு அட்டன்டன்ஸ் போட்டுட்டு ஒரு ஸலாம் சொல்லிட்டு வருவோம்.
---------------------------------------------------------------------------
திண்டுக்கல் தனபாலன், நல்ல நண்பன், அண்ணே மும்பையில் இருந்து வரும்போது திண்டுக்கல் வழியாக ரயிலில் வந்தால் சொல்லுங்க அண்ணே கண்டிப்பாக பார்க்க வருகிறேன்னு சொல்வார், எல்லார் பதிவுகளிலும் போயி கமெண்ட்ஸ்கள் போட்டு பதிவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு அருமருந்து இவர்...!

மந்திர சொல் பற்றி சொல்கிறார் வாங்க என்னா மந்திரம் வச்சிருக்காருன்னு போயி பார்த்துட்டு வந்துருவோம்...!

-------------------------------------------------------------------------------
முத்துசரம் ராமலட்சுமி, பயணங்கள் பற்றிய போட்டோக்கள், இனியும் நிறைய கண்கள் குளிரும்படியான போட்டோக்கள் சொந்தமாக எடுத்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவர், வாங்க அங்கேயும் போயி அவர் பதிவை நாம போட்டோ எடுத்துட்டு வரலாம்...!

--------------------------------------------------------------------------
தனிமரம்" நேசன், என் நல்ல நண்பன், போனில் இதுவரை பேசியதில்லை பேச ஆசையாக இருந்தாலும் அவர் பதிவுகளிலும் எழுத்துகளிலும் இருக்கும் வலிகளைப் பார்த்து எனது இயலாமையால் கூனிப்போவதுண்டு என் மனசு, இருந்தாலும் அவர் பதிவுகளுக்கு அடிக்கடி விசிட் அடித்து, அவரின் சுகதுக்கங்களை எனது பேஸ்புக் வாலில் ஷேர் செய்துவிடுவேன்.

உருகும் பிரெஞ்சு காதலி, மலையகத்தில் முகம் தொலைத்தவன், இப்போது, விழியில் வலி தந்தவனே என்று தொடர் எழுதி வருகிறார், அவர் கடந்து வந்தபாதைகளை பார்க்கும்போது கண்ணில் ரத்தமே வருகிறது....[[மக்கா யூ ஆர் கிரேட்...!]] 

வாங்க நாமளும் போயி அவரோடு கொஞ்சம் பயணிக்கலாம், அவருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும் தோள் கொடுக்கலாம்...!
---------------------------------------------------------------------
கொஞ்சம் வெட்டிப்பேச்சு" சித்ரா சாலமன், பதிவுலகில் சிரிப்புக்கே சிரிப்பு உண்டாக்கும் கிலுகிலுப்பை பெட்டி என்றே எப்போதும் அவரை சொல்வேன், நெல்லை பதிவர்கள் சந்திப்பில் அவர்களை சந்தித்தேன், குழந்தை முகமும் அதேபோல குழந்தை மனசும்....!

என்ன மேடம் இப்பவெல்லாம் ஆளையே காணோமேன்னு கேட்டால் பிள்ளைகள் கம்பியூட்டர் பிளே பண்ண வளர்ந்துவிட்டார்கள் எனக்கு நேரமே இல்லை என்று சொன்னார்கள் இருந்தாலும் நான் நம்பவில்லை, ஸோ செம ஜாலியாக இருக்கும் அவர்கள் எழுத்து...கூடவே போட்டோக்களும் போட்டு அசத்துவார்கள்....

வாங்க போயி அமெரிக்காவை கொஞ்சம் சுற்றி பார்த்துட்டு வரலாம் நம்ம சித்ரா கூடவே....!
-------------------------------------------------------------------------
வானதி, என்ற தலைப்பில் வானதி எழுதும் சிறுகதைகள், நம் முன் நம் வீட்டில் நடப்பவை போன்றே இருக்கும்...அங்கிள் என்று என்னை உரிமையோடு அழைக்கும் அந்த அன்பு என்னை உற்சாகம் கொள்ளவைக்கும், என்னை பிடித்து கலாயிப்பதிலும் செம கெட்டிகாரி...!

வாங்க அவங்க சிறுகதைகளில் என்னா சொல்லி இருக்காங்கன்னு பார்த்துட்டு வருவோம்...!
-------------------------------------------------------------------------
கதம்ப உணர்வுகள்" மஞ்சுபாஷினி, எப்பவாவது வந்து பதிவு எழுதுவார்கள், செமையாக கலக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்....கமெண்ட்ஸ் இட்டார்கள் என்றால் அந்த பதிவுக்கே ஒரு பதிவு இட்டால்போல விமர்சனம் எழுதி ஊக்குவிப்பார்கள்...!

வாங்க அவரையும் போயி நலம் விசாரிச்சுட்டு வருவோம்...!

-----------------------------------------------------------------------
நாய் நக்ஸ் என்ற தலைப்பில் பதிவுகள் எழுதும் நக்கீரன் அண்ணன், பாசத்துல அவர் ஒரு கும்பகர்ணன் ச்சே ச்சீ ராட்சஷன், பச்சைபுள்ள மனசு, அடிக்கடி போன் பண்ணுவார் [[கொலை]] நானும் போன் பண்ணுவேன், ஆபீசர் வீட்டு விஷேசத்துல சந்திச்சோம், ஆனால் ரொம்ப நேரம் அவருடன் இருக்கவோ, அளவளாவவோ இயலவில்லை காரணம் என் குடும்பமும் என்னோடு ஆபீசர் வீட்டு விசேஷத்திற்கு வந்தபடியால் தனிமையில் சந்தித்து தாகசாந்தி செய்ய முடியவில்லை [[ஹி ஹி அண்ணே சரிதானே?]] 

என் குழந்தைகளுக்கு, நக்கீரன் போன் வந்தாலே ஜெர்க்காகி ஓடிவிடும் [[அவ்வ்வ்வ்]] அளவுக்கு பாசம், என் மகள் அடிக்கடி நக்கீரன் பற்றி விசாரிப்பது உண்டு, அவளும் இந்த ராட்சஷனை நேரில் பார்த்து மாமாவின் முத்தங்களையும் பெற்று கொண்டாள்...!

ஆபீசரும் மற்றும் நண்பர்களும் கலாயிப்பதை இன்முகத்துடன் [[கர்ர்ர்ர்]] ஏற்றுக்கொள்ளும் நல்லமனசுக்காரர்....!

வாங்க "கண்மணி அன்போட காதலன் நான் நான் எழுதும் கடிதமே" பாட்டை என்ன கொலைவெறியில மெருகேற்றி இருக்கார்ன்னு பார்த்துட்டு, நாலு மிதி மிதிச்சுட்டு [[அன்பாத்தான் ஹி ஹி]] வருவோம்...!
படத்தில் என் மகளை தூக்கி வைத்திருப்பவர்தான் நக்கீரன் அண்ணன், அருகில் எங்க சிபி மன்னன் ச்சே அண்ணன்...

-------------------------------------------------------------------------
இம்சை அரசன் பாபு, என் தம்பியும் தளபதியும், வலையுலக ஆரம்ப காலங்களில் என்னோடு நின்று என்னை தூக்கி விட்டவன், நான் தப்பே செய்தாலும் எனக்கு தோள் கொடுக்கும், கொடுத்த தம்பி, எனக்கு இவன்.... கட்டபொம்மனுக்கு கிடைத்த வீரமுள்ள தம்பி, வெள்ளையத்தேவன் போல....இரண்டு முறை நேரில் சந்தித்தேன் ரொம்ப ரொம்ப பேசினோம் ஆபீசர் தலைமையில்...! [[இப்போ ஆளு பிஸியா இருக்காப்ல]] 

எங்க ஊருக்காரன், அதனாலவோ என்னவோ பாசம் நல்லாவே ஒட்டிகிச்சு....!

வாங்க அவர் என்னமோ திரும்பி பார்க்கிறேன்னு சொல்லுதாரு என்னான்னு பாத்துட்டு வந்துருவோம்...!


-------------------------------------------------------------------
கிரிக்கெட்....பற்றி என்கிட்டே கேட்டால்...சச்சினுக்கு சொந்தமான ரெஸ்ட்ராண்டில் [[மும்பை]] போயி நல்லா சாப்பிட்டு விட்டு, அங்கே வரும் பிரபலங்களை சாப்பிட்டவாறே பார்த்துவிட்டு, [[பிரபலங்கள்]] வந்தாலும் நான் அசையாமல் இருந்து வேடிக்கை மட்டுமே பார்ப்பேன், கூடுதல்  சத்தங்காட்டாமல் சைலண்டாக வருவது உண்டு...! [[இனி போட்டோ எடுத்து போடணும் ஹி ஹி]] 

காரணம் சச்சினின் உணவகத்தின் டேமேஜர் என் நண்பன் என்பதால் எனக்கு எப்போ வேணாலும் அங்கே போகமுடியும், எந்தெந்த அப்பாடக்கருங்க [[ஹிந்தி பிரபலங்கள், எல்லா டுபாக்கூரும்தான்]] எல்லாம் அங்கே வாராங்க, வந்துருக்காயிங்க, வருவாயிங்க எல்லா லிஸ்டுமே அவன் கையில்...[என் கையில்]]

சரி என்ன சொல்ல வந்தேம்னா...மட்டைபந்து பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது [[அப்பிடியா]] சாப்பாடு மட்டுமே தெரியும்னு நம்ம, கே எஸ் எஸ் ராஜ்'கிட்டே "சாட்"டியதும் கண்டிப்பாக ஷாக் ஆகி இருப்பார்னு நினைக்கிறேன்.

மேலே சொன்னதைத்தான் அவருகிட்டேயும் சொன்னேன், "அண்ணே எனக்கு  கங்குலி'யை மட்டும் பார்த்தாலே போதும் அண்ணே"

"அடப்பாவி எப்ப வேணா மும்பை வாய்யா, கங்குலி வரும்போது அப்பிடியே முன்னாடி கொண்டுபோய் நிப்பாட்டிருதேன்"னு சொல்லி இருக்கேன்..

அப்படியே என்னையும் இலங்கையை சுற்றி காட்டனும்னு சொன்னேன்...

"அண்ணே, உங்க அருவா டுபாகூரை [[அவ்வவ்]] அடக்கி வச்சிட்டு சத்தங்காட்டாம வாங்க நான் எல்லா ஏற்பாடும் பண்ணி கூட்டிட்டு போயி காட்டுறேன்"னு சொல்லி இருக்கார்...![[யாருகிட்டேயும் சொல்லாம வாய்யான்னு சொல்லுதார்]]

என் உயிர் தமிழும், தமிழனும் ரத்தம் சிந்திய பூமியில் வெறுங்காலோடு நடந்து, அவைகளை என் பதிவிலும் சரித்திரத்திலும் நிற்க வைக்கும் வேகம் என் மனதில் புயலாகவே "நிற்கிறது"......வீசும் ஒருநாள்...! [[என் எழுத்துகளில்அது உங்களுக்கு நல்லாவே புரியும்ன்னு நினைக்கிறேன்...போராளி சுகிச்சு இருக்க ஆசைபடமாட்டான், இருக்கும் இடம் புரிந்து நடக்க வேண்டும் புத்தியாக....இல்லையா...]]

வாங்க கிரிக்கெட் பற்றி சொல்கிறார் நண்பன், நாமும் போயி விளையாடிட்டு வருவோம்.

கிரிக்கெட் மட்டுமில்லே பண்முக சாரலே உள்ளே இருக்கு...! சினிமா விமர்சனமா...? அரசியலா...? அழகு...? பண்முகமே இருக்கு வாங்கய்யா வாங்க....


படரும்.....



34 comments:

  1. ஜொலிக்கின்றன அறிமுகங்கள்! அனைவரும் நானும் ரசிப்பவர்களே என்பதில் மிகமிக மகிழ்ச்சி. தொடரட்டும் அசத்தல்! அனைவருக்கும் என் மனம் நிறைய நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. arimukangalukku nantri...!

    silar therinthavakal...!

    ReplyDelete
  3. அருமை... அனைவரும் அறிந்தவர்களே... நன்றி..

    ReplyDelete
  4. அனைவரும் மின்னும் நட்சத்திரங்கள்...
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

    ReplyDelete


  5. நாஞ்சில் மனோ அவர்களுக்கு,
    சுப்பு தாத்தா வணக்கம்.

    சிரிப்பில் துவங்கி சிந்தனையில் முடிவு செய்யப்போகும் உங்கள் பதிவுகள் என் போன்ற கிழங்களுக்கும்
    ஒரு நல்ல மனப்பயிற்சியாக இருக்கிறது.

    என்னதான் பின்னூட்டம் இட்டாலும் அதற்கு பதில் போடாமல் அடம் பிடிக்கும் உங்களைப் பார்க்கும்போது
    என்ன செய்தால் என்ன எழுதினால் இவரை ஒரு பதில் போட வைக்கலாம் என்றும் எண்ணத்தோன்றுகிறது.

    அது கிடக்கட்டும்.

    இன்று நீங்கள் குறிப்பிட்ட எல்லோருமே ஒருவரைத் தவிர நான் அறியாதவர்கள். அவர்கள் வலைக்குச் சென்று
    நான் பிரமித்துப்போனேன். குறிப்பாக செல்வி காளிமுத்து, சித்ரா அவர்களைச் சொல்லவேண்டும்.

    அரைத்த மாவையே அரைப்பதை விட்டுவிட்டு புதுப் புதுப் பயிர்களை இனம் காட்டியிருக்கும் உங்களது
    நற்செயல் என்னை வெகுவாக ஈர்க்கிறது.

    ஒவ்வொருவர் வலையிலும் சென்று படித்து " வந்தேன். நன்று. அருமை " என்று ஒரு இரு சொல் சொல்லிப் போவது
    என்னைப்போன்ற ஆசிரியருக்குச் சரியில்லை என்பதால் , அவர்கள் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன, என்று
    விலா வாரியாக எனது கருத்துக்களை எடுத்துச் சொல்லிவிடுவேன். நல்ல பாடல்கள் இருந்தால் எனக்கே உரிய‌
    கழுதைக் குரலுடன் பாடவும் செய்வேன்.

    இன்று நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பதிவுகளுமே மனதை நீங்கா சிறப்புடைத்து எனச்சொன்னால் மிகையாகாது.

    அவற்றில், எனக்குத் தெரிந்த ஒருவர் மட்டுமே. அவர் வலைக்கு மட்டுமே நான் அடிக்கடி செல்வதில்லை. ஏன் தெரியுமா?

    அவர் கவிதைகள் பாடல்கள், என்னை, மற்ற வேலைகள் எவை இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு, பாடச்செய்துவிடுகின்றன.
    இவர் வலைக்குச் சென்றால் மற்ற வலைகள் பக்கம் எனக்குச் செல்வதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை. என்னவோ இப்பொழுதெல்லாம்
    அவர் அடிக்கடி எழுதவில்லை.

    அவர் யார் ?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  6. /// செமத்தனமா கலக்கி இருக்கீங்க ///

    நீங்கள் குறிப்பிட்ட பதிவில் உள்ள (முதன்முதலாக உங்களை தேட வைத்த) உங்களின் கருத்து தான்... அதை விட ஊக்கம் உண்டோ...? (வீட்டில் உள்ளவர்களும் இதை குறிப்பிட்டதுண்டு...) அறிமுகத்திற்கு மிக்க நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    திண்டுக்கல்லை தாண்டுவதற்கு முன் ஃபோன் செய்யவும்...

    ஏன் தாண்ட வேண்டும்...? திண்டுக்கல் வந்து இறங்கியவுடன் ஃபோன் செய்யவும்...

    புரிந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  7. இன்னுமா இந்த வலை உலகம் என்னை நினைவில வச்சுக்கிட்டு இருக்குது..... சூப்பரு! மிக்க நன்றிங்கோ.... நன்றிங்கோ..... இதுதான் நட்பு!

    ReplyDelete
  8. //இம்சை அரசன் பாபு, என் தம்பியும் தளபதியும், வலையுலக ஆரம்ப காலங்களில் என்னோடு நின்று என்னை தூக்கி விட்டவன், நான் தப்பே செய்தாலும் எனக்கு தோள் கொடுக்கும், கொடுத்த தம்பி, எனக்கு இவன்.... கட்டபொம்மனுக்கு கிடைத்த வீரமுள்ள தம்பி, வெள்ளையத்தேவன் போல...//

    ஆஹா ..தூங்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுபிடுவாறு போல இருக்கே ...
    அண்ணே முகம் தான் முறைப்பா இருக்கும் ....பில்டிங் ஸ்டாரங் பேஸ்மென்ட் வீக் ... :))))))))))

    ReplyDelete
  9. நவரத்ன அறிமுகங்கள், நவரசமாயிருந்த்து மனோ.

    ReplyDelete
  10. அதாருங்க சித்ரா? அவங்களைக் காணோம்னு எங்க ஊர் பக்கம் போஸ்டர் அடிச்சி ஒட்டிருக்காங்க. :)

    ReplyDelete
  11. மிகவும் நன்றி "சுப்பு தாத்தா" அவர்களே...ஒரு பதிவுக்கே ஒரு பதிவை கமேண்ட்சாக தந்து என்னை உர்சாகப்படுத்தியமைக்கு நன்றி....நன்றி....

    யாரந்த பதிவர்னு சொல்லுங்களேன் நாங்களும் தெரிஞ்சிக்குறோம்.

    ReplyDelete
  12. //என் குழந்தைகளுக்கு, நக்கீரன் போன் வந்தாலே ஜெர்க்காகி ஓடிவிடும் [[அவ்வ்வ்வ்]] அளவுக்கு பாசம்,//
    சிங்கத்தை சிலுப்பி விட்டுட்டீங்க!

    ReplyDelete
  13. அனைவருக்கும் வாழ்த்துகள்.உங்கள் இலங்கைப்பயணம் அது குறித்த பதிவுகளை எதிர் நோக்கியிருக்கிறேன் விரைவில் நடக்கட்டும்.

    ராஜ்க்கு தாதா தரிசனம் கிடைக்க சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க.

    ReplyDelete
  14. //எனக்கு இவன்.... கட்டபொம்மனுக்கு கிடைத்த வீரமுள்ள தம்பி, வெள்ளையத்தேவன் போல....//
    உங்களுக்கு மட்டுமல்ல,பதிவுலகில் பலருக்கும்தான்

    ReplyDelete
  15. அனைவருக்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. மிக்க மகிழ்ச்சி மனோ.நான் இதற்குள் நுழைய தகுதி பெற்றவள் என்று நினைத்துக்கூட பார்க்கல.மிக்க மகிழ்ச்சி.நிஜமாக கண்கள் பனித்தன.வாழ்க உங்கள் சேவை,வளர்க உங்கள் பணி மனோ.

    ReplyDelete
  17. கலக்கிட்டீங்க மனோ...எமது வாழ்த்துக்கள்...அனைவருக்கும்...தங்களின் உழைப்புக்கும்...

    ReplyDelete
  18. நாய் நக்ஸ் என்ற தலைப்பில் பதிவுகள் எழுதும் நக்கீரன் அண்ணன்,////////////

    ஒரு காலத்தில் எழுதிய என்று இருக்க வேண்டும்....மனோ...

    பார்ப்போம்...நல்ல நேரம் அமைந்தால் மீண்டும் தொடருகிறேன்.....

    நன்றி...மனோ...!!!!

    ReplyDelete
  19. வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள் மனோ:)! தங்கள் தொகுப்பில் முத்துச்சரமும் இடம் பெற்றிருப்பது கண்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி. இன்றைய பதிவில் குறிப்பிட்டிருக்கும் மற்ற பதிவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். சித்ரா மீண்டும் எழுத வரும் நாளுக்காகப் பதிவுலகம் காத்திருக்கிறது!

    ReplyDelete
  20. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    அறிமுகமில்லாதோர் ஓரிருவர் சென்று பார்க்கின்றேன்.

    அறிமுகப் படுத்திய உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  21. நகைச்சுவை கலந்த நல்ல அறிமுகங்கள். 

    ReplyDelete
  22. நல்ல அறிமுகங்கள் அண்ணா....

    ReplyDelete
  23. நல்ல நல்ல பதிவர்களை அறிமுகம் செய்து நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  24. அசத்தல் அறிமுகங்கள்,வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  25. அறிமுகங்கள் அசத்தல் போங்கள். ஒவ்வொன்றாக போய் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  26. வாழ்த்துகள், தொடர்ந்து அசத்துங்கள்!

    ReplyDelete
  27. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பகிர்வு மிக அருமை.

    ReplyDelete
  28. வணக்கம் மனோ அண்ணாச்சி!நவரத்தினங்கள் மின்னும் வலைச்சரத்தில் தனிமரம் என்னையும் அன்பில் தோப்பாக்கி பலருக்கு இன்னும் இனம்காட்டியதுக்கு நன்றிகள் பலகோடி!எப்போதும் சொல்வதுதான் நான் ஒரு சாமானியன் அண்ணாச்சி உங்கள் போன்ற மூத்த பதிவாளர்களின் ஊக்கிவிப்புத்தான் என்னை அதிகம் தொடர் எழுத உந்து சக்தி!மீண்டும் நன்றி பாராட்டுக்கும் இந்த அவையில் என்னை நட்பில் இனம்காட்டியதுக்கும்!

    ReplyDelete
  29. தனபாலன் சார்,சித்ரா,செல்வா ,நாய்நக்ஸ்,ராச் என எப்போதும் படிக்கும் பலர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்§ மஞ்சுபாசினியை எட்டிப்பார்த்தாலும் பின்னுட்டம் இட பயம் எனக்குண்டு!

    ReplyDelete
  30. தொடரட்டும் பணி மனோ அண்ணாச்சி!

    ReplyDelete
  31. நல்ல அறிமுகங்கள் அண்ணே...!

    ReplyDelete
  32. super introductions. Thanks for introducing me too.

    ReplyDelete
  33. தெரியாதவர்களையும் தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவு மூலம்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது