07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 11, 2013

பயன் தரும் பதிவர்களும் - பதிவுகளும் (ஏழாம் நாள்)

இன்று கணினியின் பயன்பாடு என்பது மிக அதிகமாகி வருகிறது. கணினி பயன்படுத்துவது குறித்து அதன் மென்பொருள்கள் தரவிறக்கம் குறித்து நமக்கு பல்வேறு தகவல்களை நமது பதிவர்கள் அள்ளி தருகின்றனர். அவ்வாறு ஆனா வலைத்தளங்களை இன்று நாம் பார்ப்போம்.

1. ப்ளாக்கர் நண்பன்;

இந்த வலை தளமானது நமக்கு மிகவும் பயன் பெரும் வகையில் பல தகவல்களை அள்ளி தருகிறது. கொஞ்சம் நாட்களாக நான் பதிவு எழுதும் போது பதிவு எழுதுவதில் தடங்கல் வந்தது என்னடா பிரச்சனைன்னு பார்த்த அது இது தான் தலைப்பை முதலில் எழுதுங்கள்...!

2. வந்தே மாதரம்;

இவரது தளத்தில் நமக்கு கிடைக்காத செய்திகளே கிடையாது எந்த மென்பொருள் இலவசமாக எங்கு கிடைகிறது அதன் பயன்பாடு என்ன என்பது குறித்து விளக்கத்துடன் அதன் லிங்கும் சேர்த்து இங்கு தருகிறார். உங்களுக்கு தேவையான மென்பொருள் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இங்கே

3. தமிழ்வாசி பிரகாஷ்;

அண்ணன் பிரகாஷ் இவர பத்தி அதும் இந்த வலைச்சரத்தில் சொல்ல தேவையே இல்லை. இருந்தாலும் எனது ஏகப்பட்ட சந்தேகங்களை இவரது வலைதளத்தின் மூலமாக தான் தீர்த்து கொண்டேன். எனவே அதை இங்கு சொல்லாமல் விட முடியவில்லை ஒரு வலைதளம் ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தொடர் பதிவாக எழுதியுள்ளார் அவை இதோ வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர்

4. என் ராஜபாட்டை;

இந்த தளத்தில்எழுதி வரும் நண்பர் ராஜா ஒரு ஆசிரியரும் கூட. இவரும் நமக்கு பல பயனுள்ள தகவல்களை அவரது தளத்தில் எழுதி வருகிறார் அதை காண கிளிக்குங்கள் இங்கே

5. கேள்வியும் நானே பதிலும் நானே;

இந்த தளத்தில் புரட்சிகரமான பதிவுகளே அதிகம் இடம் பெற்று உள்ளது அவை உங்களுக்காக இங்கே

6. வே. மதிமாறன்;

இந்த வலைத்தளத்தில் நாம் படிக்க வேண்டிய தகவல்கள், கட்டுரைகள்  பல இடம் பெற்று உள்ளன. அவை நம்மை சிந்திக்க வைப்பவையாக உள்ளது அதை படியுங்கள் இங்கே

7. சிந்திக்கவும்;

வலைதளத்தின் பெயரே சிந்திக்கவும் என்று இருப்பதால் இதும் நம் சிந்தனையை துண்டும் ஒரு வலை தளம் தான் அவை இங்கே

8. கூடல்பாலா;

இந்த வலைத்தளத்தில் எழுதி வரும் நண்பர் பல பயனுள்ள தகவலை நம்மிடம் பகிர்ந்து உள்ளார் அவரது ஆலோசனையின் பேரில் நான் அதற்க்கு அப்பளை கூட பண்ணி இருகின்றேன் நீங்களும் முயற்சி செய்து வேலை வாய்ப்பை பெற்றிடுங்கள் வளைகுடா நாடுகளில் வேலை தேட சிறந்த 5 தளங்கள் !

இந்த ஒரு வார காலத்திற்கு இந்த அழகிய வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்காக சீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி செலுத்தி கொள்கிறேன்.

மேலும் இந்த ஒரு வார காலத்திற்கு எனக்கு பின்னோட்டம் இட்டு உற்சாகம் அளித்த துரை செல்வராஜ் தனிமரம் நேசன்  வெங்கட் நாகராஜ்  நிஜாமுதீன்  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் அனைவரையும் மற்றொரு பதிவில் எனது தளமான சக்கரக்கட்டியில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் நண்பன் சக்கரகட்டி.நன்றி வணக்கம் !  

19 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பா! இங்கு நீங்கள் குறிப்பிட்டுள அத்தனை பதிவர்களுமே, பயன்மிக்க பதிவுகளை எழுதும், பயன்மிக்க பதிவர்களே!

  கடந்த ஒருவார ஆசியர் பணியை இன்றோடு நிறைவு செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்! உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட்! சிறப்பாக செயல்பட்டமைக்கு வாழ்த்துக்களும் கூட!

  நாளை வர இருப்பவர் யார் என்று தெரியவில்லை! அவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. இந்த சிறுவனையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பா. . .

  ReplyDelete
 3. கடந்த 7 நாட்களும் செமையா வலைச்சரம் தொடுத்தீங்க சக்கர.. பெயருக்கு ஏற்றாற் போல் பதிவுகள் இனிப்ஸ் ரகம்.. அதே போல உங்க விருப்பங்களையும் மற்றவர்களுக்கு அறிமுகமாக வழங்கி இருந்தீங்க.. அதில் இந்த ஹாரியையும் இணைத்து கொண்டமைக்கு என் இதயம் நிறை நன்றிகள்.. வாழ்த்துக்கள்..

  இனி சக்கரகட்டி தளத்தில் சந்திக்கலாம்..

  ReplyDelete
 4. ரொம்ப நன்றி மணி

  ReplyDelete
 5. ரொம்ப நன்றி ராஜா சார்

  ReplyDelete
 6. ரொம்ப நன்றி ஐடியா ஹாரி

  ReplyDelete
 7. ஒரு வார கால வலைச்சரப்பணி கலக்கல், அசத்தல்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 8. ரொம்ப நன்றி ஸ்கூல் பையன்

  ReplyDelete
 9. ஹாய் சக்கர.....

  ஒவ்வொரு நாளும் அசத்தல் பதிவுகள்/ அறிமுகங்கள்... சிறப்பான வலைச்சர பணி....

  பணிச் சுமை காரணமாக என்னால் சில பதிவுகளை வாசிக்க இயலவில்லை...

  ஆனாலும் பேஜ்வியு=வில் உனக்கு வலைச்சர வாசகர்கள் நல்ல ஆதரவை கொடுத்துள்ளது என பார்த்தேன்...

  வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 10. ரொம்ப நன்றி பிரகாஷ் அண்ணே

  ReplyDelete
 11. வாரம் முழுவதும் அசத்தலான அறிமுகங்கள்.....

  வாழ்த்துகள் சக்கரக் கட்டி....

  தொடர்ந்து சந்திப்போம்.

  ReplyDelete
 12. ரொம்ப நன்றி வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
 13. Good job done Sakkara Katti. Congrats

  ReplyDelete
 14. மிக்க நன்றி மோகன் குமார் அண்ணே

  ReplyDelete
 15. சிறப்பான அறிமுகங்கள் தொடர்ந்து தந்தீர்கள் இனிவரும் நாட்களில் தங்களின் தளத்தில் சந்திப்போம் சக்கரக்கட்டி.

  ReplyDelete
 16. அன்புடையீர்!.. தங்களின் தேர்வுகள் அருமை.. நல்ல பதிவர்களை அழுத்தம் திருத்தமாக அறிமுகம் செய்தமை பாரட்டுக்குரியது!..என்றும் வாழ்க.. வளர்க!..

  ReplyDelete
 17. நல்ல பதிவுகளை அடையாளம் காட்டி இருக்கிறீர்கள். இரண்டாம் நாளில் எனது பதிவையும் குறிப்பிட்டதற்கு நன்றி. தாமதமாக வந்து விட்டேன்.

  ReplyDelete
 18. ஒரு வார பணியையும் அசத்தலாக செய்திட்ட உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 19. தங்கள் பதிவில் எனது பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது