07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 4, 2013

அகலிகன் - ஐந்தாம் பந்து


இப்பெல்லாம்  யாராவது யாரிகிட்டயாவது மனம்விட்டு பேசறோமா? கிடையாது. ஏன்னா  மனம்விட்டு பேசும்போது எங்க தன் பலவீனங்க்களை எதிரில் இருப்பவர் ஏளனப்படுத்திவிடுவாரோ அல்லது தவறாக பயன்படுத்திவிடுவாரோ என்ற பயம். இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நம் பலவீனங்கள் மட்டுமல்ல நம்மைப்பற்றிய பொதுவான தகவல்களுமேகூட தவறாக கையாளப்படுகின்றன. இந்த விஷயத்தில் பேஸ்புக் கலாச்சாரம் நமக்கு பல உதாரணங்களை தந்திருக்கிறது.

அடிப்படையில் இன்றைய சூழல் நம்மை ஒரு மனிதராக பார்க்காமல் விலைப்பட்டியல் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு பொருளாகவே பார்க்கிறது. எங்கு வேலைபார்க்கிறார், எந்த வண்டியில் வருகிறார், எந்த ஏரியாவில் வசிக்கிறார் என எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்து இவர் இவ்வளவு தேறுவார், இவர் தேறமாட்டார் என தராதரம் அடிப்படையில் அனுகுவதால் எவருமே எதையுமே பட்டவர்த்தனமாக பேசவோ, வெளிப்படையாக நடந்துகொள்ளவோ தயங்குகிறார்கள்.

உள் ஒன்றுவைத்து புறம் ஒன்று பேசவேண்டிய நிர்பந்தம் மன அழுத்தம் அதிகரிக்க காரணமாய் அமைகிறது. முன்பெல்லாம் கையில் காசு இல்லாவிட்டலும் "மச்சி ஒரு டீவாங்கி கொடு" என இயல்பாய் கேட்க முடிந்தது. இன்று கடன் வாங்கியாவது செலவு செய்தால்தான் மரியாதை என கடன் வாங்க பழகிவிட்டோம். நம்மை பிச்சசைக்கரர்களாக்கி அலையவிடுவதை லட்சியமாக கொண்ட நுகர்வு கலாச்சாரமும் இத்தகைய வரட்டு ஜம்பங்களுக்கு வட்டி இல்லா கடன்வழங்கி நம்மை கட்டிப்போட்டுவிடுகின்றன. விளைவுகளை சமாளிக்க முடியாத நிலையில் மோத்தமாய் தப்பிக்க ஒரு வழி தற்கொலை.


                                                               சித்திரம் வடிவமைப்பு அடியேன் அகலிகன் தான்


ஒவ்வொரு சன்னலுக்குபின்னும்
ஒளிந்திருக்ககூடும்
ஒரு தற்கொலை!

உன் வீட்டு சன்னல் மட்டும்
விதிவிலக்கில்லை.

அனுமதியின்றி
அலைந்துகொண்டிருக்கும் அது
நுழையக்கூடும் என்றேனும்
உன் அறைக்குள்ளும்.

பூட்டிய அறையின்
புழுக்கம் போக
கதவுகளை திறந்துவை.
காற்று வந்து போகட்டும்,

அழுக துவங்கும்
காயங்கள் ஆறிடக்கூடும்.

மனம் இருந்தால் மார்க்கமுண்டு - மனம் திறந்தால் மகிழ்ச்சி உண்டு.

========================================================================


சம்பவங்களின் கோர்வைதான் வாழ்க்கை. 300 மீட்டர் தெருவில் நடந்துகொண்டிருக்கும் நமக்கு நாம் நடப்பதுமட்டுமே சம்பவம். ஆனால் அதே தெருவில் தான் ஒரு மாடு குழந்தையை முட்டி இருக்கும், கடன் தொல்லை தாளாமல் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பார், யாரோ ஒரு கணவர் தன் மனைவி எதிர்பார்க்காத வேளையில் முத்தமிட்டுக்கொண்டிருப்பார். ஏதோ ஒரு வீட்டின் வாசலில் பெயர்தெரியாத ஒரு மலர் பூத்து குலுங்கிக்கொண்டிருக்கலாம்.இவை எதுவும் நாம் அந்த தெருவில் நடப்பதனால் நடந்த சம்பவமல்ல அதேசமயம் நமக்கு தொடர்புடைய சம்பவங்களும் அல்ல. ஆனால் அவையும் சம்பவங்கள்தான். 

என்ன குழப்பமா இருக்கா. சிம்பிள் லாஜிக்தான் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவையும் சுவாரசியமானவையும்தான். முத்தம் பெற்றமனைவிக்கு அந்த நாள் வாழ்நாளில் மறக்கமுடியாததாய் இருக்ககூடும், தற்கொலை செய்தியை அறிந்து கடன்கொடுத்தவர் அந்த கடனை தள்ளுபடி செய்யலாம், மாடு முட்டியதை பார்த்த ஒருவர் அதை தன் திரைப்படத்திற்கு காட்சியாக்க உத்தேசித்திருக்கலாம்.

அப்படித்தான் R.P.ராஜநாயஹம் தொழில்முறை சார்ந்தும், இலக்கிய வகை சந்திப்ப்புகள் சார்ந்தும் என பல சம்பவங்களை அவ்ர் அனுபவத்திலிருந்து மிக மிக சுவாரசியமாக சொல்லிச்செல்கிறார். அதில் யாருக்கு எது சுவாரசியப்படுகிறதோ அவர்கள் அதை தேவுசெய்துகொள்ளலாம்.R.நெடுமாறன் - சாலமன் பாப்பையா

பாரதிதாசன்

இந்திரா பார்த்தசாரதியின் தன்மானம்

பிரபலங்களின் பழங்கதைகள் கேட்க பிரியப்படுபவர்கள் சுவாரசியமாய் படிக்கலாம்.


========================================================================


அக்கினிக் குஞ்சு...


கற்கண்டு, முத்தாரம் என சில வார இதழ்கள் வந்துகொண்டிருந்தன அவற்றில் பலதரப்பட்ட பயனுள்ள விஷயங்கள் இருக்கும். இப்போது அவை உள்ளனவா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் இணைய தளங்களில் உலவும் ஒருசில தளங்கள் அவ்வாறு இருப்பதாய் தோன்றியதுண்டு. அவற்றில் மிக சமீபகாலமாக என்னை கவர்ந்தது

அக்கினிக் குஞ்சு... பலதரப்பட்ட பதிவுகள் காணக்கிடைக்கின்றன. பெரும்பாலும் வாசிக்க சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.

சினிமா, அரசியல், அறிவியல், பொது அறிவு என எதையும் விட்டுவைப்பதில்லை.புரூஸ்லியை கொன்றது யார்? என்ற ஆர். அபிலாஷ் எழுதிய புத்தகத்தின் விமர்சனம்போல் உள்ள பதிவின் இறுதியில் நன்றி சினிமொபிட்டா என்று இருக்கிறது. சினிமொபிட்டாவிற்காக இவர் எழுதியதா அல்லது அங்கிருந்து எடுத்துக்கொண்டதற்கான நன்றியா தெரியவில்லை.ஆனால் வாசிக்க நன்றாய் இருந்தது.உலகைக் கலக்கிய கதாபாத்திரங்கள் சிந்துபாத் குழந்தைகளுக்கான நல்ல பதிவு.

விளம்பரத்துறை சார்ந்தவர் என்பதாலோ என்னவோ இவரின் தளம் வண்ணனத்திலும் வடிவத்திலும் மிக நேர்த்தியாய் உள்ளது.

========================================================================


நவீன விருட்சம் :

கார்டூன் கதைகளிலிருந்து விலகி பூந்தளிர், முத்தாரம் கடந்து, சிறுகதைகள் சில வாசிக்கத்தொடங்கிய காலத்தில் காதலும் பூத்திருந்தது நெஞ்சில் அதன் காரணமாய் கவிதையும் கவர்ந்தது என்னை. தினமலர் வாரமலர், தினத்தந்தி, என இணைப்பு புத்தகங்களின் கடைசி பக்க நாலுவரிக் கவிதையை சிலாகித்துக்கொண்டிருந்தபோது கணையாழி புத்தகத்தை வாசிக்க கொடுத்தான் நண்பன். அன்றுமுதல் இன்றுவரை தொடர்ச்சியாய் இல்லாவிட்டாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிற்றிதழ்களை வாசிக்கதவறுவதில்லை.

வெகுஜன பத்திரிக்கைகளில் நினைத்துக்கூடபார்க்கமுடியாத பல கட்டுரைகளும் கவிதைகளும்தான் சிற்றிதழ்களின் சிறப்பு. இன்று இணையத்தில் பலதரப்பட்டவர்கள் பலதளங்களில் எழுதிவந்தாலும் காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்களில் வரும் கட்டுரைகளின், கவிதைகளின் ஆழம் சற்று கூடுதல்தான். இதன் காரணம் சிற்றிதழ்களின் நோக்கம் வெறும் வியாபாரம் மட்டுமே கிடையாது. அது நல்ல படைப்புக்களை, படைப்பாளியை வாசகனுக்கு காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. 

நவீன விருட்சம் இதழில் ஒரு கவிதை

மீன்கொத்தி ஆறு 

கரை ததும்பி

நகர்கிற ஆறு

நின்றவாறு பார்க்கிறீர்கள்

உங்கள் கால் விரல்களை 

அதன் ஈர நுனிகள் 

வருடி விடுகின்றன 

நீர்க்குமிழிகள் 

உங்களை 
மிதக்க அழைக்கின்றன 

உங்கள் மூச்சுக்காற்றின் 
ஓசை போல 
ஆறு உங்களோடு 

தனிமையில் இருக்கிறது 

அதன் 

வசீகிர நீர்ச்சுழி 

உங்களை வரவேற்கிறது 

திறந்திருக்கிற நீர்ப்பரப்பிற்குள் 

சட்டென்று 
ஒரு துளிசிதறாமல் 
மீனைப்போல 

தாவிப் பாய்கிறீர்கள் 

காத்திருந்த ஆறு 

மீன் கொத்தியாகி 

உங்களை கவ்விக்கொல்கிறது! இது ஒரு ஆழகன ஆழமான கவிதை இந்த கவிதையை நுகர்வு கலாச்சாரத்தோடு தொடர்புபடுத்தி வாசிப்போமானால் அதன் ஆழம் விளங்கும்.

கரை ததும்பி
நகர்கிற ஆறு
நின்றவாறு பார்க்கிறீர்கள்

சந்தையில் பலதரப்பட்ட நுகர்வு பொருள்கள் இறைந்து கிடக்கின்றன. தேவையில்லத, பழக்கமில்ல்லாத, ஆடம்பரமான பொருட்கள் நமக்கு எதற்கு என்று தொடக்கத்தில் நாம் அதை வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தோம்.

உங்கள் கால் விரல்களை
அதன் ஈர நுனிகள்
வருடி விடுகின்றன

அதன் பளபளப்பும், கவர்ச்சியும் நம்மை மயக்குகின்றன.

நீர்க்குமிழிகள்
உங்களை
மிதக்க அழைக்கின்றன

அதன் தொடர் விளம்பரங்கள் அவற்றை வாங்கவேண்டி நம்மை தூண்டுகின்றன். 

உங்கள் மூச்சுக்காற்றின்
ஓசை போல
ஆறு உங்களோடு
தனிமையில் இருக்கிறது
அதன்
வசீகிர நீர்ச்சுழி
உங்களை வரவேற்கிறது

நம் மூச்சு காற்றின் ஓசை எப்படி நமக்கே கேட்காதோ அப்படியாக அவற்றின்மீதான ஆசை உங்கள் ஆழ்மனதில் உங்களுக்கேதெரியாமல் புகுந்திருக்கிறது. அதன் பகட்டு உங்களை தூண்டிக்கொண்டே இருக்கிறது.

திறந்திருக்கிற நீர்ப்பரப்பிற்குள்
சட்டென்று
ஒரு துளிசிதறாமல்
மீனைப்போல
தாவிப் பாய்கிறீர்கள்

தொடர் விளம்பரங்களாலும், மறறவர்களின் பயன்பாடுகளை பார்ப்பதினாலும் அதுதான் கௌரவமோ என்ற எண்ணம் வலுவடைந்து நம்மையும் அதன்பால் நகரச்செய்கிறது. உதாரணத்திற்கு முன்பெல்லாம் ஓட்டலுக்கு சென்றால் அவர்கள் வைக்கும் தண்ணீரைத்தான் குடித்துக்கொண்டிருந்தோம் ஆனால் இபோது இரண்டு இட்லி ஒரு வடை ஒரு வாட்டர் பாட்டில் என நம்மை அறியாமலேயே ஆடர் செய்கிறோம் இப்படியாக அந்த கலாச்சாரத்திற்குள் ஒருநாள் நம்மை அறியாமலேயே கலந்துவிடுகிறோம்.

காத்திருந்த ஆறு
மீன் கொத்தியாகி
உங்களை கவ்விக்கொல்கிறது!

இதற்காகவே காத்திருந்த நிறுவனங்கள் உங்களை விழுங்கிவிட்டு அடுத்தவருக்கு காத்திருக்கிறது.

இப்படியாக இக் கவிதையை அவர் அவர் எண்ணத்திற்கு தகுந்தாற்போல் எந்த கோணத்திலும் சிந்திக்கலாம்.

சன்னதி வாசலில் என்ற என் கவிதைக்கு திருமதி மஞ்சுபாஷிணி அவர்களின் விமர்சனம்போல் இதை முயற்சித்திருக்கிறேன்.

========================================================================


பத்திரிக்கை துறை சார்ந்தவர்களுக்கு அவர்கள் எதை பார்த்தாலும் உணர்ந்தாலும் அதை எழுத்தாக்கிவிடக்கூடிய திறமை உண்டு. அது பத்திரிக்கியயாளர் திரு சமஸ் அவர்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கிறது.

முகநூலில் ஒரு பெண் ஆண்கள் எப்படியெல்லாம் இருந்தால் தங்களுக்கு பிடிக்கும் என ஒரு பதிவு இட்டிருக்க அதை தன் பார்வையில்எல்லா இடங்களிலும் நாம் கவனிக்கப்பட வேண்டும், கொஞ்சப்பட வேண்டும், மெச்சப்பட வேண்டும் என்கிற கவனக் கோரிக்கை மனோபாவம் குழந்தைமையின் வெளிப்பாடு. எந்த வயதிலும் நம்மிடம் எஞ்சியிருக்கும் குழந்தைமையிடம் அந்த எதிர்பார்ப்பு இருக்கும். இதில், ஆண் - பெண் பாலின வேறுபாடு கிடையாது. பெண்களுக்கு எப்படி இந்த எதிர்பார்ப்பு உண்டோ, அப்படியே ஆண்களுக்கும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பரஸ்பரம் கொஞ்சிக்கொள்வதில், பிரச்னை இல்லை. ஆனால், பெண் என்றாள் கொஞ்சப்பட வேண்டியவள் - மெச்சப்பட வேண்டியவள், அவளுடன் சுமுகமாக இருக்க வேண்டும் என்றால், ஆண் இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து, கொஞ்சிக் கெஞ்சித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்கிற சூத்திரங்கள் போலித்தனமானவை; ஆபத்தானவை. எதிரில் இருக்கும் ஆணும் சகஜீவிதான் என்கிற யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் இத்தகைய எதிர்பார்ப்புகளே இன்றைக்குப் பல குடும்பங்களின் சிதைவுகளுக்கு அடிப்படை விதையை விதைக்கின்றன. விவரிக்கிறார்.


நாம் ஒரு வீரனாக இருந்தால் பக்கத்து வீட்டுகாரரோடும் பஸ் கண்டக்டரோரோடும் சண்டையிட்டுக்கொண்டிருக்கக்கூடாது. எங்கேயாவது ஒரு ரவுடி யாரையாவது அடித்துக்கொண்டிருக்கும்போது இடை புகுந்து தடுக்கவேண்டும், ஒரு காவல்காரர் ஒரு தள்ளுவண்டிகாரரிடம் மாமூல் கேட்டு கெடுபிடி செய்துகொண்டிருக்கும்போது என்ன சார் என்ன பிரச்சனை என்று நியாயம் கேட்கவேண்டும். அதுதான் வீரம்.10 comments:

 1. அனைத்தும் சிறந்த தளங்கள்... அதிலும் அக்கினிக் குஞ்சு தளம், தினம் தினம் பல பகிர்வுகள் உண்டு...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே

   Delete
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வலைசரத்திற்கு எனது முதற்கண் வணக்கம்.

  என் அக்னிகுஞ்சு தளத்தை தங்களின் வலைசரத்திற்குள் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி.

  தங்களின் மேலான முன்னுரை மற்றும் கருத்துக்கு மிக்க நன்றி.

  தொடர்ந்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 4. DART இதே பெயரில் தான் கடைசி வரைக்குமா? உங்களை கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்ளலாமே?

  ReplyDelete
 5. விரிவான விளக்கங்கள் தந்து தள அறிமுகம் தருவது சிறப்பாய் இருக்கின்றது.

  ReplyDelete
 6. நல்ல விளக்கங்கங்களுடன் சிறப்பான வலைத்தளங்களின் அறிமுகம்!.. நன்றி!..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது