07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 17, 2013

கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்இந்த  நகைச்சுவை பத்தி என்ன நினைக்கறீங்க பாஸ். நாங்க நினைக்கிறது இருக்கட்டும் நீ முதல்ல சொல்லு  னு தானே சொல்றீங்க.சரி  வாங்க.இந்த  நகைச்சுவை படிக்கிறப்ப நல்லாருக்கு. டிவி ல பார்க்கிறப்ப நல்லாருக்கு. 
அட சுத்தி இருக்கிறவங்க பேசினால் கூட கேட்க நல்லா தான் இருக்கு 
( என்ன சூர்யா சிங்கம் டயலாக் மாதிரி இருக்கு) ஆனால் நாமளே ஒரு நகைச்சுவை படைப்பை உருவாக்கணும் னால் எப்படிங்க முடியும்.

 நான் கொஞ்சம் சீரியஸ் டைப்.நான் ஜாலியா சிரிச்சு பேசணும் னு நினைக்கிறப்ப , என்னை டென்சன் ஆக்கணும் னே சொந்த காசுல பிளைட் பிடிச்சு வரவனும் இருக்கான். நான் சீரியசா இருக்கிறப்ப அதை பத்தி அலட்டிக்காம, என்னை சுத்தி வந்து ஜாலியா மொக்கை போடறது மட்டுமில்லாம நான் சீரியசா பேசறதுக்கு எல்லாம் கவுன்ட்டர் குடுக்கிறதுக்கு பஸ்ஸை பிடிச்சு விதௌட் ல வரவனும் இருக்கான்.

என்ன தான் உன் பிரச்சனை னு கேட்கறீங்களா சொல்லிடறேன் 
என் நண்பன் ஒருத்தன்  சினிமால நடிக்கணும் சந்தானம் மேக்ஸ் (அதாங்க கணக்கா) ஆகணும் னு ஆசை. டிவி சானல்ல புதுசா நடிக்க வரவங்களுக்கு கேட் திறந்து விடறாங்களாம். பெரிய டைரெக்டர்  சீப் கெஸ்ட்டா வறாரு.   நான் நடிக்கிறதுக்கு நீ காமெடி ஸ்கிரிப்ட் எழுதி கொடு னு கேட்டு ஒரே டார்ச்சர் பண்றான். அவன் டார்ச்சருக்கு சாம்பிள் வேணுமா. நடு நைட் ஒரு மணிக்கு போன் பண்ணி எழுத ஆரம்பிச்சிட்டியா னு கேட்கிறான் பாஸ்

இவன் தொல்லை தாங்காம,  என் கிட்டே சீரியஸ் சப்ஜெக்ட் இருக்கு வேண்ணா எடுத்துட்டு போ னு சொன்னேன். யாருக்கு வேணும் உன் சீரியல் என்று சீரியசா சொல்றான். சீரியஸ் னு நான் சொன்னதை சீரியல் னு புரிஞ்சுகிட்டான் போலிருக்கு பய புள்ள.  

"டேய் காமெடி சப்ஜெக்ட் எழுத நான் ரொம்ப மூளையை வேலை வாங்கணும் னு சொன்னேன் நல்ல பேரு வேணும்னால் கஷ்டப்பட்டு தான் ஆகணும்.
 உப்பு தின்னவன் தண்ணி குடிச்சி தானே ஆகணும் னு" தத்துவம் பேசறான்.  "நான் சும்மா இல்லாம நம்ம சந்தானம் மாதிரி கவுன்ட்டர் கொடுத்துட்டேன். அப்ப சர்க்கரை சாப்பிட்டவன் சர்பத் குடிக்கலாமா னு"  இதெல்லாம் நல்லா பேசு. எழுத  வரலைன்னு பொய் மட்டும் சொல்லு" அப்படிங்கிறான் 

‘‘என்னங்க... ஏசிப் போடுங்க, ஏசிப் போடுங்கன்னு ஒரு வாரமா கரடியாக் கத்திட்டிருக்கேன். கொஞ்சமாச்சும் கவனிக்கிறீங்களா?’’ என்றாள். ‘‘அறிவு கெட்டவளே... மனுஷியாக் கத்த வேண்டியது தானேடி முட்டாளே... லூசு...’’ என்று ஆரம்பித்து நான் திட்டத் திட்ட, அவள் முகம் சிறுத்தது.  ‘‘இப்ப 
எதுக்காக இப்படிக் கன்னாபின்னான்னு திட்டறீங்களாம்?’’ என்றாள் 
மெதுவாக. ‘‘நீதானே ஏசிப்போடுன்னு சொன்ன... அதான் நல்லா ஏசிப் போட்டேன்’’ என்றேன். சப்தமெழத் தலையில் அடித்துக் கொண்டாள். 

இப்படி வார்த்தைல வாலி பால் ஆடற மின்னல் வரிகள் கணேஷ் சாரா நான்

பார்த்தசாரதி கோவில் தரிசன க்யூவில் பக்தர்கள் மல்டிப்ளக்ஸில் படம்பார்க்க வந்தவர்களைப்போல மரியாதையாக நின்றிருக்க, புளியோதரை ஸ்டால் மட்டும் ஆதார் அட்டை சிறப்புமுகாம்போல அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. புரட்டாசி சனிக்கிழமையன்று, பெருமாள் கோவிலில் ஆஜர்போட்டு, புளியோதரையை வயிற்றில்போட்டால், வழியில் எங்கும் நிற்காத வாகனத்திலேறி வைகுண்டம் போய்விடலாம் என்று எப்போதோ படித்த ஞாபகம். 

இல்லே வரிகளில் நிஜத்தை நகைச்சுவை ல முக்கி எடுத்து  எழுதற செட்டை கரன் சாரா நான் 


நீ எழுதலை என்றால் ஊரு முழுக்க நீ எழுத்தாளன் இல்லை னு போஸ்டர் அடிச்சு ஓட்டுவேன்னு அவன் மிரட்டியதால் (என்னமோ நான் எழுத ஆரம்பிச்சப்ப ப்ளெக்ஸ் வச்சி வாழ்த்து தெரிவிச்ச மாதிரி )  சரி என் எழுத்தாலே அவன் அவஸ்தை படனும்னு விதி இருக்கு யாராலே மாற்ற முடியும் எழுத உட்கார்ந்தேன் யோசிச்சதிலே டீ கடைக்காரர் லாபம் பார்த்தது தான் மிச்சம் (டீயா குடிச்சேன் எழுத மூடு வரணும்ல ) சரின்னு ஒரு ஐடியா பண்ணேன் இணையத்துல காமெடி யா எழுதறவங்களை போய் (அவங்க தளத்துல தாங்க) பார்ப்போம் னு முடிவு பண்ணி நெட்ல உட்கார்ந்தேன் 

  ஜோக்காளி  னு ஒரு தளம். நண்பர் பகவான் ஜி (படைக்கிறார்)  எழுதறார்   ஒரே துணுக்கு மயம் தான் .

அடுத்து நண்பர் கோகுலத்தில் சூரியன் வெங்கட் தளத்துக்கு போனேன்  அவர் ஒரு வார்த்தையில் டரியல் ஆகி போனதை  படிச்சேன் 
இதெல்லாம் டூ மச்   

கல்லாதது உலகளவு னு ஒரு தளம் போனேன் நண்பர்
கலியபெருமாள் http://kaliaperumalpuducherry.blogspot.in/2013/05/blog-post_24.html
கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிரிப்பும் னு ஒரு பதிவு எழுதியிருக்கார் கேள்வியிலே போதை கலந்து

அடுத்து நான் போனது மனதில் உறுதி வேண்டும் தளம்  நண்பர் மணிமாறன்
எழுதிய இந்தியண்டா  http://manathiluruthivendumm.blogspot.com/2013/08/blog-post_15.html படிச்சப்ப எழுந்து அவருக்கு ஒரு வணக்கம் வைக்கணும் னு 
தோணுச்சு

அடுத்து கும்மாச்சி யோட தளம். இங்கே சிரிக்க சிந்திக்க 
பதிவை படிச்சேன் 

அடுத்து துளசி கோபால் அவர்களின் துளசி
தளம்  http://thulasidhalam.blogspot.in/2013/10/blog-post_11.html  
இங்க கொலு பொம்மைக்கு படி வாங்கின கதையை ஜாலியா 
சொல்லிருக்கார் 

இப்படி படிச்சி கொஞ்சம் தெம்பாகி எழுதறதுக்கு பேனா எடுத்துட்டேன். என்னங்க கிளம்பறீங்க. பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டீங்க போலிருக்கு சரி பரவாயில்ல நான் எழுதின ஜோக் ஒன்னு சொல்றேன் கேட்டுட்டு கிளம்புங்க 

"ஏண்டா உன் காதலியை ட்ராப் பண்ணிட்டு வரேன் னு சைக்கிளை எடுத்துட்டு
போனியே ட்ராப் பண்ணிட்டியா"

"அதை ஏண்டா கேட்கிறே சொந்தமா ஒரு பைக் கூட இல்லே உனக்கெல்லாம் எதற்கு

காதலின்னு என் காதலையே ட்ராப் பண்ணிடாடா"

சிரிப்பு வந்துச்சா என்னது வரலியா.அப்ப இந்த பதிவோட தலைப்பை படிங்க


நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்  


நாளை லேடீஸ் ஸ்பெஷல் 

ஆர்.வி.சரவணன் 

32 comments:

 1. வணக்கம்
  இன்று நகைச்சுவை தளங்கள் அருமையாக உள்ளது வலைச்சர அறிமுகங்கள்
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  தொடருகிறேன் பதிவுகளை
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 2. அனைத்தும் சிறந்த தளங்கள்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 3. ஆஹா....... கூட்டத்தில் நானும் கோவிந்தாப் போடறேனே ;-))))))))

  மனமார்ந்த நன்றிகள். தகவல் சொன்ன தி,த.வுக்கும் நன்றீஸ்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 4. எனது தளத்தை குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 5. என் வலைப்பூவை குறிப்பிட்டதற்கு குறிப்பிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தெரியப்படுத்திய நண்பர் ரூபன், DD க்கும் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 6. அறிமுகங்கள் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்றாலும் அந்தப்பதிவை இன்னொரு தடவை படிக்கும் வாய்ப்பு உங்கள் மூலம் கிட்டியது... முதல் படம் அப்படியே சைனீஸ் பையன் மாதிரியே இருக்கு... ஏன்னா அவனுகளுக்குத்தான் இப்படி நட்டுகிட்டு நிக்கும்.. :-)

  ReplyDelete
 7. நான் கூட ஒரு கதை எழுதி இருக்கேன். ஆனா அது ஜோக் இல்ல, மொக்க... படிச்சுடாதீங்க, இப்போ இருக்குற தெளிவு கூட அப்புறம் இருக்காது

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 8. என்னையும் ஒரு பதிவராய் மதித்து குறிப்பிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நண்பா நீங்களும் நன்றாக எழுத கூடிய பதிவர் தான் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

   தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 9. இன்றைக்கும் நிறைய தெரிந்தவர்கள்; படித்த பதிவுகள்.
  நகைச்சுவையில் மின்னலையும், சேட்டையையும் வெற்றி கொள்ள இனி ஒருவர் பிறந்து வரவேண்டும்.
  துளசி டீச்சரின் எல்லாப் பதிவுகளுமே நயமாக இருக்கும்.
  பகவான்ஜியின் குட்டி குட்டி துணுக்குகளும் நான் ரசிப்பவைதான்.
  அறிமுகம் ஆனவர்களுக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஒரு சுவையான நகைச்சுவைப் பதிவு. அதுவும் நிறைய நகைச்சுவைத் தளங்களைக் கொண்டுவந்து கொட்டியதற்கு கண்டிப்பாக உங்களுக்கு ஒரு சல்யூட். நீங்கள் சீரியஸ் என்றால் நம்புவதற்கில்லை, நண்பரே. இது நம்ம ஜனகராஜ் சார் போல அதுலருந்து ஒரு 100 கிராம் பொடு, இதுலருந்து ஒரு 100 கிராம்ப் போடு அப்படிப் போட்டு, உங்களுடுயதையும் ஒரு இடைச் செருகல் செய்து நல்ல்ல்லா கலக்குனு கலக்குனு கலக்கிட்டீங்க சார்...கலக்கல்....கொஞ்சமல்ல நிறையவே சிரிச்சுட்டோம் பாஸ்.

   Delete
  2. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

   Delete
 11. நகைச்சுவை தளங்களை அறிமுகப்படுத்திய விதம் நயம்!.. நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 12. சிரிக்கத் தகுந்த சிறப்பான தளங்கள்...


  பாராட்டுகள் அண்ணா... இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 13. # ஜோக்காளி னு ஒரு தளம். நண்பர் பகவான் ஜி (படைக்கிறார்) எழுதறார் #
  வலைப்பூவிலே என் குடியிருப்பு ....படைப்பதனால் என் பெயர் பகவான்ஜி ..அறிமுகம் செய்தவன் ஆறுமுகன் [சரவணன் என்றாலும் ஆறுமுகன் தானே ]என நினைத்து வணங்குகிறேன் !மிக்க நன்றி !

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

   Delete
 14. கொஞ்சம் என்ன
  நல்லாவே சிரித்தோம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. அருமையான நகைச்சுவை பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்! வேலைப்பளுவால் தொடர்ந்து வர இயலவில்லை! நேரம் கிடைக்கும் போது மற்ற பதிவுகளை பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 16. மனம்விட்டு சிரிக்க...
  நல்ல நகைச்சுவைகளை வழங்கிடும்
  அன்பு பதிவர்களின் சில
  பதிவுகளை வழங்கி...
  எங்களை சிரிக்க வைத்தீர்கள், சரவணன்.
  உங்களுக்கு அனேக நன்றிகள்...

  ReplyDelete
 17. சிரிப்பு எவ்வளவு பெரிய விஷயம்..
  படைப்பில் எந்த உயிர்க்கும் கிடைக்காத பெரும்வரம்...
  அழகான சிந்தனைகளுடன்
  அருமையான அறிமுகங்களும்
  வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 18. பாலா சாரும் சேட்டைக்காரன் சாரும் தெரிந்தவர்கள் மற்றவர்களை இனி தான் பார்க்க வேண்டும் ...மிக்க நன்றி...

  ReplyDelete
 19. என் தளத்தை வலைசரம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி சரவணன்.. :) :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது