07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 2, 2015

[ch]செளக்கி தானி!



சரம் - மூன்று! மலர் - ஐந்து!


வாங்க! நேற்று கிராமத்து சூழல் என்று சொன்னேன் அல்லவா! அது  [ch]செளக்கி தானி” என்று சொல்லப்படும் இடம் தான். சில வருடங்களுக்கு முன்னர் தான் துவங்கியிருக்கிறார்கள்பெரும்பாலான சுற்றுலாவாசிகள் இப்போது இதை பார்க்கத் தான் வருகிறார்கள் என்பது அங்கு வந்த கும்பலை பார்த்த போது தெரிந்தது

மாலை 6 மணியிலிருந்து இரவு 11மணிவரை தான் திறந்திருக்கும். கிராமத்து சூழலை நகரத்திற்குள் காட்டியிருப்பது தான் இதன் சிறப்புநுழைவுக்கட்டணமாய் 2009ல் நாங்கள் ஒரு நபருக்குத் தந்தது ரூ 300. இரவு உணவுக்கும் சேர்த்தே வசூலிக்கிறார்கள்.



இங்கு மாட்டு வண்டி சவாரிஒட்டகச் சவாரியானை சவாரிகுதிரை வண்டிச் சவாரிபொம்மலாட்டம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு மெஹந்தி வைத்துக் கொள்ளலாம், இங்கே சென்று நீங்கள் ராஜஸ்தானிய [G]கூமர் நடனங்களைக் கண்டுகளிக்கலாம்



நாமும் உடன் சேர்ந்து ஆடலாம். நாங்கள் சென்ற போது வெளிநாட்டவர் ஒருவர் அங்கே நடனமாடும் பெண்களுடன் சேர்ந்து ஆட ஆரம்பிக்க, அதை பார்த்து விட்டு அவரது மனைவியும் ஆடத் துவங்கவே மிகவும் ரசித்தோம். அவர்கள் இருவரும் ராஜஸ்தானிய நடனத்தை அப்படியே முயற்சித்தனர். அங்கேயே தங்கும் அறைகளும் உண்டு. அங்குள்ள கடைகளுக்கு சென்று வரலாம்
படங்கள் உதவி - இணையம்

அதன் பின்பு உணவுக்கான கூப்பன்கள் தரப்படுகின்றனராஜஸ்தானிய உணவுகளை வரிசையில் நின்று வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு சாப்பிடலாம். இப்போதெல்லாம் அமர வைத்து பரிமாறுகிறார்கள்.

இந்த செளக்கி தானி இப்போ சென்னையிலும் துவங்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். இப்படி அன்றைய தினம் இனிதாக நிறைவடைந்த மனதுடன் எல்லோரும் அறைக்கு திரும்பி ஓய்வெடுக்கச் சென்றோம்நாளை காலையில் ”HAWA MAHAL”ல் சந்திக்கலாம்.

வலைச்சரத்தில் இன்றைய அறிமுகங்கள் யாரென்று சொல்லப் போகிறேன். அதற்குள் எங்கே கிளம்பியாயிற்று! சற்றே பொறுங்கள்!

வை.கோ சார் அவர்களை பற்றி பதிவுலகில் அறியாதார் இல்லைஇவரின் சிறுகதை விமர்சனப் போட்டிகள் மிகவும் பிரபலமானதுதற்போது உலகைக் கவரும் உன்னதமான துபாய் பற்றியத் தொடரை படித்தீர்களா?

மகியின் பல்சுவைக் கதம்பம் இவரின் தளம்இங்கே பவளமல்லி பற்றிய அழகான பகிர்வு இதோ

அமுதா கிருஷ்ணாவின் அக்கம் பக்கம் தளம் அரட்டை அடிப்பது போன்று எல்லா விதமான விஷயங்களும் பேசப்படும் இங்கே அவரின் ஒரு பதிவு இங்கே!

அடுப்பங்கரை கமலாவின் கண்களைக் கவரும் சமையல் தளம்சுரைக்காயில் கூட்டு செய்து தந்திருக்கிறார் பாருங்கள்.


அனன்யாவின் எண்ண அலைகளில் நகைச்சுவை பகிர்வுகள் ஏராளம்இப்போது வலையுலகினை விட்டு முகப்புத்தகத்தில் மூழ்கிவிட்டார்!


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

42 comments:

  1. செளக்கி தானிபற்றிய விபரம் அருமை.
    இன்று இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      Delete
  2. சென்னை தகவல் உட்பட பயணத்தை தொடர்கிறோம்...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  3. அறியாத விஷயங்களுடன் அற்புதமான படங்களுடன்
    பதிவர்கள் அறிமுகம் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  4. சென்னையிலும் துவங்கப்பட்டிருக்கிறதா? அடுத்த முறை இந்தியா போகும்போது பார்த்துட வேண்டியது தான்.

    அறிமுகம் ஆன அனைத்து நண்பர்களுக்கும் வாத்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ. ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்கள் இருக்கலாம். இந்தியா வரும் போது பார்க்க வேண்டியவற்றில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்....:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சகோ.

      Delete
  5. Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அனன்யா.

      Delete
  6. அறியாத விஷயங்கள்.. அழகான படங்கள்..
    இன்றைய பதிவர்கள் அறிமுகத் தொகுப்பு அருமை..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.

      Delete
  7. தெரியாத விடயங்கள், இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      Delete
  8. ஏம்ப்பா... இந்த சௌக்கிதானி விவரம் நமக்குத் தெரியாமப் போச்சே:(

    மிஸ் செஞ்சுட்டோமோ:(

    புதுசா ஆரம்பிச்சதா என்ன?

    இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க 2009ல் போனப்போ தான் புதுசா ஆரம்பித்திருப்பதாக சொல்லி அங்கே போக நண்பரின் மகள்கள் ஒரே அடம்...:) நீங்க எப்போ போனீங்க டீச்சர்? அடுத்த தடவை போயிட்டு வாங்க...:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

      Delete
  9. சொக்க வைக்கும் சௌக்கிதானி! தெரிந்திருந்தாலும் தகவல் தந்த விதம் அருமை!

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      Delete
  10. செளக்கி தானி பற்றிய செய்திகளும் படங்களும் புதுமை, இனிமை, அருமையோ அருமை. பகிர்வுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

      Delete
  11. //வை.கோ சார் அவர்களை பற்றி பதிவுலகில் அறியாதார் இல்லை. இவரின் சிறுகதை விமர்சனப் போட்டிகள் மிகவும் பிரபலமானது. தற்போது உலகைக் கவரும் உன்னதமான துபாய் பற்றியத் தொடரை படித்தீர்களா?//

    ஆஹா, இந்த 2015ம் ஆண்டில் என்னையும் என் வலைத்தளத்தினைப்பற்றியும், முதன் முதலாக தாங்கள் அறிமுகம் செய்துள்ளது, மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    தங்கள் அன்புக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே...

      Delete
  12. இன்று வலைச்சரத்தில் என்னுடன் அறிமுகம் ஆகி புகழ்ந்து பேசப்பட்டுள்ள நான்கு பதிவர்களுக்கும் என் அன்பான நல்வாழ்த்துகள் + பாராட்டுக்கள். அறிமுகம் செய்து சிறப்பித்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வை.கோ சார்.

      Delete
  13. சௌகிதானி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    இன்றைய சரத்தில் கோர்க்கப்பட்டுள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  14. சௌக்கி தானி பற்றி அறிந்துகொண்டேன்! சுவாரஸ்யமான பதிவர்களை வலைச்சரத்தில் தொகுத்து சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

      Delete
  15. பாட்டு கூத்து உணவு என அசத்தல் பகிர்வும். அறிமுகங்களும் வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சசிகலா.

      Delete
  16. இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! Hawa Mahal ஐ காண காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

      Delete
  17. முழுக்க முழுக்க புதியதொரு சூழலில் இருப்பதைப் போல இருக்கிறது தாங்கள் அழைத்துச்செல்லும் இடங்கள். அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      Delete
  18. அருமையான தகவல்கள்... அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி குமார் சார்.

      Delete
  19. எனது "அடுப்பங்கரை" வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    சொக்கி தானி - தற்போதைய நுழைவுக் கட்டணம் 600 ரூபாய். புத்தாண்டு தினத்தன்று 699 ரூபாய் வசூலித்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தற்போதைய தகவலுக்கு மிக்க நன்றிங்க.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கமலா மேடம்.

      Delete
  20. இன்று உங்களது வலைச்சர பதிவு உங்களவர் கொடுக்கும் ப்ரூட் சாலட் போல எல்லா சுவைகளும் கலந்து இருந்தது!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! மிக்க நன்றி ரஞ்சனிம்மா....:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      Delete
  21. ஆதி, தாமதமா வந்திருக்கேன். பகிர்வுக்கு நன்றிப்பா..வட இந்தியாவை செலவில்லாமல் சுற்றி காட்டுவதற்கும் நன்றி! :)

    ReplyDelete
    Replies
    1. லயா குட்டியோடு நீங்கள் தான் பிஸியாச்சே. பரவாயில்லை...:)

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மகி.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது