07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஆறாம் நாள். Show all posts
Showing posts with label ஆறாம் நாள். Show all posts

Saturday, August 30, 2014

பல்சுவை பதிவர்கள் பகுதி -1




 இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள்  அனைவரும் அனைத்து தளங்களிலும் புகுந்து விளையாடும் ஆள்ரௌண்டேர்கள் . இவர்கள் எல்லாவிஷயங்களை பற்றியும் எழுதுவார்கள் . இவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுபடுத்த முடியாது . அப்படி பட்ட சில பதிவர்களை பார்ப்போம் .

Thillaiakathu Chronicles :

Thulasidharan V Thillaiakathu  என்ற நண்பர் எழுதும் வலைத்தளம் இது . இவர் ஆங்கில ஆசிரியர் எனவே ஒரு ஆங்கில தளமும் வைத்துள்ளார் . இவர் பாலக்காட்டில் உள்ள ஒருபள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார் .

 

இதை படித்து பாருங்கள் :

 

தென்னகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபிக்கு ஒரு பேபி

 

இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்...... 

 

 

ரூபனின் எழுத்துபடைப்பு :

திண்டுக்கல் தனபாலன் அய்யாவுக்கு அடுத்து அனைவரது பதிவிலும் பின்னுட்டம் இடும் அன்பு நண்பர் ரூபனின் வலைத்தளம் இது .

 

இதை படித்து பாருங்கள் :

 

சிறகடிக்கும் நினைவலைகள்-7

எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி 

 

என்னுயிரே :

இந்த தளத்தை எழுதிவருபவர் நண்பர் சீராளன் அவர்கள் . இவர் 'இயற்கையின் இலவசங்களுக்குள் எதிர்ப்பின்றி எடுத்துக்கொண்ட ஒரு சில தேவைகளோடு என் பயணம், எனைப்பற்றி கிறுக்க வேறேதுமில்லையே இருந்தும் என்னுயிரின் ஸ்பரிசங்கள் இங்கே எல்லோரையும் இதமாய் தழுவும் என நினைக்கிறேன் அதுவே போதுமானதாய் இருக்கட்டுமே.எனது பிறப்பிடம்,வாழ்விடம் கேட்க்காதீர்கள் ஏனெனில் எல்லோரையும் போல நானும் ஓர் நாடற்ற ஈழத்தமிழன்,காற்றில் மூச்சாய் ,கனவில் வாழ்விடமாய் நாட்களைக் கடத்தும் எனக்குள்ளும் நினைவுகளை விதைத்து கவிதைகளை அறுவடை செய்ய காரணமாய் போன என் காதல் தேவதைக்கான கவிதைகள் மட்டுமே இங்கே பூத்திருக்கின்றன.பிடித்திருந்தால் அவற்றை ரசித்துக் கொள்ளுங்கள் எனக்காகவும்,என் கடந்துபோன காலங்களுக்காகவும்." என தன்னை பற்றி விவரிக்கிறார் .

 

இதை படித்து பாருங்கள் :

 

கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி

கனவுகள் எழுதிய கவிதை ..! 

 

  விமர்சன உலகம் :

சேலத்தை சேர்ந்த megneash k thirumurugan என்ற நண்பர் எழுதிவரும் வலைபூ இது . வன்முறை என்பது எதிலும் கூடாது நண்பர்களே!!(ஏன்னா நா எழுதப்போறேன்)என கிண்டலாக தன்னை பற்றிய அறிமுகத்தில் சொல்கிறார் .


இதை படித்து பாருங்கள் :


 

அக்னி குஞ்சு  

சென்னையில் வாழும் கிராபிக் டிசைனர் பதிவர் RDK அவர்களது தளம் இது .சூடான அரசியல் பதிவுகள் இவர் சிறப்பு . மற்றும் இன்றி அனைத்தை பற்றியும் எழுதுகிறார் .

இதை படித்து பாருங்கள் :

ஒரு சம்பவம் வரலாறாகிய வெள்ளிவிழா ஆண்டு!

 

கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். 

 

மேலும் வாசிக்க...

Saturday, October 15, 2011

புறாவும் பூவும் – ஒரு குட்டிக் கதை:

 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள் படிக்க நன்றாக இருக்கும்.  அப்படி ஒரு குட்டிக் கதையுடன் இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாம். முதலில் கதை...

 

 

ஒரு பக்தன் அழகான  மண்டபம் ஒன்றைக் கட்டினான்.  அது எண்கோண வடிவில் இருந்தது.  அதன் எட்டுப் பக்கச் சுவர்களிலும் நிலைக் கண்ணாடிகள் பதித்திருந்தான்.  எந்த உருவமும் எந்தத் திசையில் பார்த்தாலும் தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது. 

 

மண்டபத்தின் நடுவே அழகான ஒரு மலரைக் கொண்டு வந்து வைத்தான் பக்தன். அழகான மலர், எட்டுப் பக்கங்களிலும் எட்டு மலர்களாகத் தோற்றம் அளித்தது. அவன் கதவை மூடுமுன் அந்த மண்டபத்துக்குள் சிறு வெண்புறா ஒன்று நுழைந்து விட்டது.  அது கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தது. 

 

கண்ணாடியில் தெரியும் பிம்பத்தையே உண்மை என்று எண்ணி அதை நோக்கிப் பாய்ந்து பறந்தது.  எட்டு திசைகளிலும் அது மாறி மாறிப் பறந்தது.  கண்ணாடியில் மோதிற்று.  ஆனால் அந்தப் பறவையால் வெளியேற முடியவில்லை. 

 

கடைசியில் புறா சோர்ந்து போய்த் தரையில் விழுந்தது.  அதன் அருகே இருந்த அழகான மலரை அது அப்போது தான் பார்த்தது.  அந்த இடத்தில் அதுவே உண்மை என்பதை உணர்ந்து கொண்டது. 

 

வாழ்க்கையில் அந்தப் புறாவைப் போலவே, நாம் மாய நிழல்களைத் தேடி அலைகிறோம்.  நமக்குள்ளேயே இருக்கும் இறைவனை நாம் உணருவதில்லை. வாழ்க்கையில் தோல்விகளை அடைந்து, மனம் சலித்துப் போய் விழும் வேளையில் நிதர்சனமான உண்மை எது என்பதை உணருகிறோம்.”

 

என்ன கதை படிச்சீங்களா?  கதையில் சொன்ன புறா மாதிரி இருக்காம இருக்க முயற்சிப்போம். சரி இன்றைக்கான அறிமுகங்களைப் பார்க்கலாமா?

 

 

 

நாய்க்குட்டின்னா இவருக்கு ரொம்பவே பிடிக்கும் போல.  அதனால அவரோட வலைப் பூவின் பெயரை ”செல்ல நாய்க்குட்டி” என்று வைத்துக்கொண்டு நிறைய பதிவுகள் எழுதுகிறார் ஒரு சகோ.  அவருடைய “எண்ணச் சிதறல்கள்” தொடர் நன்றாக இருக்கிறது. 


எழுச்சியூட்டும் கவிதைகள் படிக்க வேண்டுமா.  நீங்கள் செல்ல வேண்டிய இடம் அம்பாளடியாள் அவர்களின் வலைப்பக்கத்திற்கு.

மலர்களை நாம் எதற்குப் பயன்படுத்துவோம்இறைவனை பூஜிக்க, கார்குழலில் சூடிக்கொள்ள. அல்லது விழாக்களில் அலங்காரங்கள் செய்ய.  ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணமும் உண்டு என்பதை தன்னுடைய இப்பகிர்வில் சொல்லி இருக்கிறார் பதிவர் M.R. 


பெரும்பாலும் சினிமா சார்ந்த பதிவுகள் அதிகமாய் இருக்கும் வலையுலகில் அறிவியல் சார்ந்த பதிவுகள் மிகவும் குறைவே.  அதிலும் தமிழில் நமக்குப் புரியும் படி அறிவியல் சார்ந்த விஷயங்களைஅறிவியல் கருத்துகளை தமிழில் அளிக்கும் முயற்சிஎன எழுதுகிறார் நண்பர் ராஜசங்கர் "தமிழில் அறிவியல்" என்ற வலைப்பூவில்.


முனைவர் இரா. குணசீலன் தமிழ்க் காற்று  என்று ஒரு புதிய வலைத் திரட்டியை ஆரம்பித்து உள்ளார்இதில் இலக்கியக் காற்று வீசும் இணையதளங்கள் பலவற்றை திரட்டித் தருகிறார்.  இது ஒரு நல்ல முயற்சி.  நீங்களும் சென்று பாருங்க

இலங்கையிலிருந்து எழுதும் சகோ தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு, அவருக்கு உதவி தேவைப்படும்போது செய்யமுடியாது போன ஒரு நிகழ்வினைமன்னித்து விடு என் இனிய நண்பாஎன்று உருக்கமாகக் கூறியிருக்கிறார் இங்கே.  

வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுப் பெற்று இணையத்திலும் பத்திரிக்கைகளிலும் எழுதிக் கொண்டு இருப்பவர் காஞ்சனா ராதாகிருஷ்ணன். அவரின் சிறுவர் உலகத்தில்  நீதிக்கதைகள் என்று நிறைய பகிர்ந்து வருகிறார்.  இவை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்று வளர்ந்த குழந்தைகளுக்கும் நிச்சயம் உதவும்.  படித்துப் பயன்பெறுங்க.


இன்றைக்கு ஏழு பதிவர்களைப் பற்றிப் பார்த்திருக்கிறோம்.  நாளை ஞாயிறு அன்று  இந்த வலைச்சர வாரத்தில் என்னுடைய கடைசி பகிர்வு.  நாளை சந்திப்போமா!

நட்புடன்

ஆதி வெங்கட்

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது