பல்சுவை பதிவர்கள் பகுதி -1
இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள் அனைவரும் அனைத்து தளங்களிலும் புகுந்து விளையாடும் ஆள்ரௌண்டேர்கள் . இவர்கள் எல்லாவிஷயங்களை பற்றியும் எழுதுவார்கள் . இவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுபடுத்த முடியாது . அப்படி பட்ட சில பதிவர்களை பார்ப்போம் .
Thillaiakathu Chronicles :
Thulasidharan V Thillaiakathu என்ற நண்பர் எழுதும் வலைத்தளம் இது . இவர் ஆங்கில ஆசிரியர் எனவே ஒரு ஆங்கில தளமும் வைத்துள்ளார் . இவர் பாலக்காட்டில் உள்ள ஒருபள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார் .
இதை படித்து பாருங்கள் :
தென்னகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபிக்கு ஒரு பேபி
இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்......
ரூபனின் எழுத்துபடைப்பு :
திண்டுக்கல் தனபாலன் அய்யாவுக்கு அடுத்து அனைவரது பதிவிலும் பின்னுட்டம் இடும் அன்பு நண்பர் ரூபனின் வலைத்தளம் இது .
இதை படித்து பாருங்கள் :
சிறகடிக்கும் நினைவலைகள்-7
எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி
என்னுயிரே :
இந்த தளத்தை எழுதிவருபவர் நண்பர் சீராளன் அவர்கள் . இவர் 'இயற்கையின் இலவசங்களுக்குள் எதிர்ப்பின்றி எடுத்துக்கொண்ட ஒரு சில தேவைகளோடு என் பயணம், எனைப்பற்றி கிறுக்க வேறேதுமில்லையே இருந்தும் என்னுயிரின் ஸ்பரிசங்கள் இங்கே எல்லோரையும் இதமாய் தழுவும் என நினைக்கிறேன் அதுவே போதுமானதாய் இருக்கட்டுமே.எனது பிறப்பிடம்,வாழ்விடம் கேட்க்காதீர்கள் ஏனெனில் எல்லோரையும் போல நானும் ஓர் நாடற்ற ஈழத்தமிழன்,காற்றில் மூச்சாய் ,கனவில் வாழ்விடமாய் நாட்களைக் கடத்தும் எனக்குள்ளும் நினைவுகளை விதைத்து கவிதைகளை அறுவடை செய்ய காரணமாய் போன என் காதல் தேவதைக்கான கவிதைகள் மட்டுமே இங்கே பூத்திருக்கின்றன.பிடித்திருந்தால் அவற்றை ரசித்துக் கொள்ளுங்கள் எனக்காகவும்,என் கடந்துபோன காலங்களுக்காகவும்." என தன்னை பற்றி விவரிக்கிறார் .
இதை படித்து பாருங்கள் :
கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி
கனவுகள் எழுதிய கவிதை ..!
விமர்சன உலகம் :
சேலத்தை சேர்ந்த megneash k thirumurugan என்ற நண்பர் எழுதிவரும் வலைபூ இது . வன்முறை என்பது எதிலும் கூடாது நண்பர்களே!!(ஏன்னா நா எழுதப்போறேன்)என கிண்டலாக தன்னை பற்றிய அறிமுகத்தில் சொல்கிறார் .
இதை படித்து பாருங்கள் :
அக்னி குஞ்சு
சென்னையில் வாழும் கிராபிக் டிசைனர் பதிவர் RDK அவர்களது தளம் இது .சூடான அரசியல் பதிவுகள் இவர் சிறப்பு . மற்றும் இன்றி அனைத்தை பற்றியும் எழுதுகிறார் .




