07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சேலம் தேவா. Show all posts
Showing posts with label சேலம் தேவா. Show all posts

Sunday, May 29, 2011

கதைகளும்.. கவிதைகளும்...!! தொடர்ச்சி.

நேற்று இடப்பட்ட பதிவு பலபேருக்கு தெரிந்தாலும் சில பேருக்கு பயனுள்ளதாக இருந்ததாக பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன.அதனால்,இன்னும் சில எழுத்துலக பிரம்மாக்களை இன்று பெருமைப்படுத்தலாம்.(அவர்களை அறிமுகப்படுத்த நாம் யார்..?!)

பாமரன் அவர்கள் கம்யூனிச பார்வையில் சமகால நிகழ்வுகளை நக்கலான தொனியில் எழுத்தில் கொண்டு வரும் எழுத்தாளர்.நகைச்சுவையாக இருந்தாலும் சமூகம் குறித்த கோபத்தை இவரது எழுத்தில் காணலாம்.

கல்யாண்ஜி
கவிதைகள்,கதைகள்,பத்திரிக்கையாளர்,சினிமா உதவி இயக்குனர் என இவருக்கு பல முகங்கள்.தற்போது புதிய தலைமுறை இதழில் பணியாற்றி வருகிறார்.இவருடைய பிரபலங்களுடனான நேர்காணல்களை படித்து பாருங்கள்.சுவாரசியமாக இருக்கும்.


என்.சொக்கன்
காந்தி கொலை வழக்கு பற்றியும் எழுதுகிறார்.கம்யூட்டர் கையேடும் எழுதுகிறார்.சிலப்பதிகாரமும் எழுதுகிறார்.பட்டியல் போடமுடியாத அளவிற்கு நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.பிரபலங்களின் வாழ்க்கைச்சரித்திரங்களை இவருடைய புத்தகங்களில் படிக்கும்போது நமக்கும் உத்வேகம் வரும்.ட்விட்டரிலும் கலக்குகிறார்.


பேயோன்
சமகால எழுத்தாளரான இவர் உலக இலக்கியத்தின் உள்ளூர் கிளை என முகவுரையிலேயே சுவாரசியமானவர்.ட்விட்டரில் இவர் எழுதியவை ஒரு புத்தகமாகவே வந்திருக்கிறது.குறிப்பிடத்தகுந்த ஓவியரும் கூட.  :)


முகில்
கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை துணை ஆசிரியராக பணிபுரியும் இவருடைய புத்தகங்கள் நம்மை படிக்க தூண்டுபவை.அகம்,புறம்,அந்தப்புரம் ஒரு உதாரணம்.


அ.முத்துலிங்கம்
விஞ்ஞானமும்,சார்ட்டட் அக்கவுண்டட் படிப்பையும் முடித்து,ஐ.நாவில் பணிபுரிந்து ஒய்வுபெற்றுவிட்டு இப்போது எழுத்தாளராக உள்ள திரு.அ.முத்துலிங்கம் அவர்களுடைய தளம்.தமிழ்நாட்டின் பல எழுத்தாளர்கள் இவரின் எழுத்தை சிலாகிக்கிறார்கள்.ஏன் என்பதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


ப்ரியன்
எண்ணங்களை உணர்வுகளை எழுத்தாக்கி மகிழும் ஓர் தமிழ் குழந்தை என தன்னைப்பற்றி கூறுகிறார் ப்ரியன் கவிதைகள் எழுதும் வெங்கடேஷ்.கவிதைகள் ரசிக்க வைக்கின்றன.


அழகன்
காதல்காரா என்ற வலைப்பூவில் காதலும் காதல் சார்ந்த உளறல்களையும் கவிதையாக வடித்து வைத்தருக்கிறார் இவர்.புகைப்பட ஆர்வலரும் கூட..

ஆசிரியர்களின் மீது இப்போதுதான் எனக்கு மதிப்பு கூடுகிறது.ஒரு வார ஆசிரியர் பணிக்கே நான் நிறைய படிக்கவேண்டியதாயிற்று.முழுநேர ஆசிரியர்களை நினைத்தால் மரியாதையாகவும்,பாவமாகவும் உள்ளது.எப்படியோ வலைச்சர ஆசிரியர் பணியை வேலைப்பளு என்னை அழுத்தியபோதும் நசுங்கிவிடாமல் என்னளவில் சிறப்பாக செய்திருக்கிறேன் (அத நாங்க சொல்லணும்) என்று நினைக்கிறேன்.அடுத்து விரிவுரையாளர்,பேராசிரியர்,கல்லூரி தலைவர் என்று அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உங்கள் ஆசிகள் தேவை.(திருந்தவே மாட்டானா..?!)ஹி..ஹி...

நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்று என்னையும் நம்ம்ம்பி இந்த வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும், பதிவுகளை படித்து பின்னூட்டம் அளித்த இணைய நண்பர்களுக்கும்
நன்றி..!! நன்றி..!! நன்றி..!!







மேலும் வாசிக்க...

Saturday, May 28, 2011

கதைகளும்.. கவிதைகளும்...!!

ஏற்கனவே தெரிந்தவர்கள் விட்டு விடுங்கள்.தெரியாதவர்கள் பயன் பெறுங்கள். இணையத்தில் உள்ள நான் அடிக்கடி பார்க்கும் சில எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் தளங்களை இந்த பதிவில் இணைத்துள்ளேன்.


தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு வலைத்தளம்.கட்டுரைகள்,சிறுகதைகள்,கவிதைகள்,நேர்காணல்கள் என இந்தியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி,இலங்கை,மலேசியா,சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளது.


எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் பதிவுகள் கிருஷ்ணதுளசி என்பவரால் தொகுக்கப்படும் பலகணி.ஆன்மிக தேடல் உள்ளவர்களுக்கு ஏற்ற தளம்.



இப்போதுள்ள எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர்.இவருடைய கதைகளும் கட்டுரைகளையும் படித்திருப்பீர்கள்.வாசிப்பவர்களை கதைக்குள் இழுத்துச் செல்லும் லாவகமான எழுத்து இவருடையது.எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.



சமீபத்தில் சூடிய பூ சூடற்க எனும் படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற நாஞ்சில்நாடன் அவர்களின் படைப்புகளை சுல்தான் என்பவரால் தொகுக்கப்படும் தளம்.ஆனந்தவிகடனில் இவர் எழுதிய கட்டுரைகள் பிரசித்தி பெற்றவை.



நவீன தமிழ்சிறுகதை உலகிம் முடிசூடா மன்னன் என்ற பாராட்டு பெற்ற வண்ணதாசன் அவர்களின் தளம்.புதிதாக எழுத வருபவர்கள் வண்ணதாசனை படிக்க வேண்டும் என்று சுஜாதாவால் பாராட்டப்பெற்றவர்.


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளம்.சர்ச்சைகள் அவ்வப்போது கிளம்பும் இவரது எழுத்துகளால்...எந்த ஒரு விஷயத்திலும் மாறுபட்ட பார்வை கொண்டவர்.நான்கடவுள்,அங்காடித்தெரு திரைப்படங்களின் வசனகர்த்தாவும் கூட...



ஜெ.மோவைப்பற்றி எழுதிவிட்டு சர்ச்சைக்குரிய சாருநிவேதிதாவைப்பற்றி எழுதாமல் விடக்கூடாது.தமிழ்நாட்டைவிட கேரளாவிலும்,      வெளிநாடுகளிலும்தான் அதிகம்பேருக்கு தெரிந்திருக்கிறது என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.இவர் அடிக்கடி மேற்கோள் காட்டும் எழுத்தாளர்களின் பெயர்களை படிக்கும்போது பெயரையே நம்மால் படிக்கமுடிய வில்லையே இவர் எப்படி அவர்களுடைய படைப்புகளை படிக்கிறாரோ..?!என்று வியந்துபோவேன்.சுவாரசியமான எழுத்து.அவ்வப்போது வாசகர்களை திட்டுவதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.  :)



எழுத்தாளர் பா.ராகவனின் அவர்களின் வலைப்பூ. அபாரமான நகைச்சுவை உணர்வுடன் இவர் எழுதும் கட்டுரைகளை வாசித்து பாருங்கள்.காஷ்மீர்,பாகிஸ்தான் ஒரு புதிர், அல்கொயிதா, டாலர்தேசம், நிலமெல்லாம் இரத்தம், ஹிட்லர் என்று பல தலைவர்களின் வரலாற்றையும் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.



பயமறியா பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களின் வலைத்தளம்.எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக விவாதிக்க கூடிய அதன் பொருளை மக்களுக்கு உணர்த்தக் கூடிய பத்திரிக்கையாளர்.யார் ஆட்சியில் இருந்தாலும் நான் நிரந்தர எதிர்கட்சிபோல் மக்களுக்காக விமர்சிப்பேன் என்று கல்கியில் வரும் ஓ பக்கங்களில் எழுதியுள்ளார். பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற பத்திரிக்கையாளர்.



சுஜாதா அவர்களின் மீதுள்ள பற்றால் சுஜாதாதேசிகன் என்ற பெயரால் எழுதிவரும் மென்பொருள் பொறியாளரான தேசிகன் என்பவருடைய தளம்.சுஜாதா அவர்களால் என் கதைகளின் அத்தாரிட்டி இவர் என்ற பாராட்டை பெற்ற இவருடைய எழுத்துகளும் சுஜாதா பாணியில் அமைந்துள்ளது.



திரைப்பட கவிஞர் யுகபாரதியின் தளம்.கவிதைகள் மட்டுமன்றி நல்ல பல கட்டுரைகளையும் எழுதுகிறார்.


காதல்கவிஞன் தபூ சங்கரின் வலைப்பூ.அழகியலோடு இவர் கவிதைகள் மனதை கொள்ளை கொள்ளும்.வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்,விழியீர்ப்பு விசை,அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ என இவர் எழுதியிருக்கும் தொகுப்புகளின் தலைப்புகளே வசியப்படுத்துகின்றன.



விகடனில் அதிகமாக வந்திருக்கிறது இவரது கவிதைகள்.புகைப்பட கலைஞராகவும், டிசைனராகவும் உள்ள இவரது தளத்தின் முகவரி.



சமீபத்தில் திரைக்கு வந்த நஞ்சுபுரம் திரைப்படத்தின் பாடலாசிரியர்.தமிழ்ப்புலமை பெற்றவர்.இவரின் வலைப்பூவில் அண்மைய பதிவை படிக்கும் போது இதை எழுதும் எனக்கு சற்று பயமாகத்தான் இருக்கிறது. :)



மேலும் வாசிக்க...

Friday, May 27, 2011

அனைத்தும் கிடைக்கும்.!


கோர்ட் பிரச்சினை - கூகிள்
நம்ம குழந்தைகளுக்கு ஏதாச்சும்ன்னா துடிச்சி போயிடறோம்.புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கும் குழந்தை பராமரிப்பை பற்றி தெரியாதவர்களின் பாடும் திண்டாட்டம்தான்...திடீர்ன்னு காய்ச்சல் வரும்.திடீர்ன்னு வயித்துவலியில அழுவும்.இது போன்ற சந்தர்ப்பங்களை தவிர்ப்பதற்கு வருமுன் காப்போம்ன்னு ஒரு திட்டம் இருக்கு.அரசு திட்டம் இல்லீங்க...நம்ம விழிப்புணர்வை சொன்னேன்.குழந்தைகள் மருத்துவர் திரு.ராஜ்மோகன் அவர்களுடைய குழந்தைநலம் என்ற இந்த வலைத்தளத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து அது வளரும் வரை வரும் பல மருத்துவபிரச்சினைகளுக்கு எளியநடையில் விளக்கம் அளிக்கிறார்.வருமுன் காப்பதற்கு வழிமுறைகளை சொல்கிறார்.மருத்துவபணியே ஒரு புண்ணியம் என்றால் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பது அதைவிட உயர்வானதும் மகிழ்ச்சியும் தரக்கூடிய பணி.ஆனந்தவிகடன் வரவேற்பரையிலும் இடம்பெற்ற மருத்துவரின் இந்த சேவையை வாழ்த்துங்கள் நண்பர்களே..!!குழந்தைகளுக்காக அம்மாக்கள் நடத்தும் இந்த வலைப்பூவையும் பாருங்கள்..!!

என்னதான் வலைப்பூ எழுதும் ஆர்வம் இருந்தாலும் கணினியைப் பற்றி அடிப்படை தகவல்கள் தெரிந்திருந்தால் நல்லது.கணினியில் எழுதுவது அறிவியல்,வன்பொருள் கற்றவர்களுக்கு எளிதானது.ஆனால்,கலை ஆர்வமும்,எழுத்தாற்றலும் மட்டுமே நிரம்பியவர்களுக்கு கணினியின் செயல்பாடுகள் பற்றியும்,மென்பொருள்கள் பற்றியும்,புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் எழுதும் பல்வேறு வலைப்பூக்களை திரட்டும் ஒரு தளம்தான் சுதந்திர மென்பொருள்.கணினியைப் பற்றி நன்றாக எழுதக்கூடிய அனைத்து வலைப்பூக்களையும் இங்கே கண்டு பயனடையலாம்.கற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே..!!


இணையத்தில் உள்ள எழுத்தாளர்களை தேடும்போது சுஜாதா,எஸ்.ராமகிருஷ்ணன்,சாருநிவேதிதா,ஜெயமோகன்,மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை தவிர பழம்பெரும் எழுத்தாளர்களின் படைப்புகளை பார்க்க முடிய வில்லையே என்று ஏங்கியபோது கிடைத்த பொக்கிஷம்தான் இந்த அழியாச்சுடர்கள்.மிக நல்ல அரிய படைப்பாளிகளின் படைப்புகளை தொகுத்துள்ளனர் இந்த தளத்தில்.உலக இலக்கியங்களுக்காக தனியாக ஒரு தளமும் உள்ளது.வாசிப்பு ஆர்வம் உள்ளவர்களுக்கு சரியான இடம்.வாசிக்க தரவிறக்கி படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வலைப்பூவில் மின்நூல்கள் கிடைக்கின்றன.


கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவருக்கு மாறுபடும்.எனக்கு சித்தர்கள் மேல் நம்பிக்கை உள்ளது.நம்பிக்கை உள்ளவர்களுக்கு நல்ல தளம் இந்த சித்தர்கள் இராச்சியம்.வலையுலகில் பிரபலமான தோழி என்பவர் எழுதும் தளம்.வடிவமைப்பிலேயே ஒரு தெய்வீக அனுபவத்தை தரும் தளம்.


ஆன்மிகம்,கணினி,உடல்நலம்,நடப்புச்செய்திகள்,மகளிருக்காக பயனுள்ள தகவல்கள் என பத்திரிக்கைகளிலும்,இணையத்திலும் படித்த,பார்த்த பயனுள்ள தகவல்களை தொகுத்தளிக்கிறார் உங்களுக்காக.



மேலும் வாசிக்க...

Wednesday, May 25, 2011

போட்டோசாப் கத்துக்கலாம் வாங்க..

வரைகலை மென்பொருள்களில் அருமையானதும்,எளிமையான மென்பொருள்களில் அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் உலகஅளவில் முதன்மையானது. ஒவ்வொரு கனிணியிலும் இருக்கவேண்டிய அருமையான மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளில் டிசைன் செய்வதற்கு அடிப்படை தகவல்கள் தெரிந்து கொண்டால் யாரும் டிசைன் செய்யலாம்.கற்பனைத்திறன் இருந்தால்போதும்.அதை நமக்கு எளிமையாகவும்,அருமையாகவும் சொல்லித்தரும் தளங்களை இன்று பார்க்கலாம்.

இதில் டிசைன் செய்த சில நகைக்கவைக்கும் படங்களை பார்த்துவிடலாம்.



கேக்கறவன் முட்டாளா இருந்தா எருமை ஏரோப்ளேன் ஓட்டுமாம்-ன்ற பழமொழி கேட்டிருப்பிங்க...இங்க யானை பைக் ஓட்டுது பாத்திங்கில்ல...



 இந்தமாதிரி பூனையை புலி ஆக்கலாம்.கற்பனைக்கு வானமே எல்லை.


உங்க மௌஸையும் எதுக்கும் சோதனை பண்ணிடுங்க..கடிச்சி வச்சிரப்போவுது.ஹி.ஹி..

தமிழில் போட்டோசாப் பாடம் என்ற இந்த தளத்தில் எளிமையான முறையில் சொல்லித்தருவது போல வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.வெறுமனே டூல்களின் பயன்களை சொன்னால் கற்றுக்கொள்பவர்களுக்கு புரியாது என்று ஒவ்வொ படிநிலையையும் படங்களுடன் விளக்கும் இவருடைய பாடங்களை பார்த்தால் நீங்கள் இந்த மென்பொருளை கற்றுக்கொள்வது உறுதி.பிளாக் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் யாராவது நம்மை பின்தொடர்வார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு(நான் என்ன சொல்லல) மத்தியில்(அதுக்கு நீ முதல்ல உருப்படியா ஏதாவது எழுதணும்) இவர் ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் 835 பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறார் என்றால் இந்த தளத்தின் சிறப்பை புரிந்து கொள்ளுங்கள். 61 பாடங்கள் போட்டோசாப்பில் முடித்துள்ள திரு.கான் அவர்கள் அடுத்ததாக கோரல்ட்ரா பற்றிய பாடங்களை ஆரம்பிக்க இருக்கிறார் என்பது வரைகலை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

வேலன் என்பவருடைய இந்த தளத்திலும் எளிமையான போட்டோசாப் பாடங்கள் நிறைய இருக்கிறது.சுவாரஸ்யமான சிறிய அளவுள்ள மென்பொருள்களையும்,குழந்தைகளுக்கு பயன்படும் மென்பொருள்களையும் தருவது இந்த தளத்தின் சிறப்பு.

எஸ்.கே அவர்களுடைய மனம்+ தளத்தில் அடோபி நிறுவனத்தின் போட்டோசாப் மட்டுமன்றி பிளாஸ்,பையர் வொர்க்ஸ் சம்பந்தமான பதிவுகளும்,மனோதத்துவம் படித்திருப்பதால் அது சம்பந்தமான பதிவுகளும் சுவாரஸ்யமான வகையில் தொகுத்துள்ளார்.

அனிமேசன் துறையில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் கருப்பு பெட்டி என்ற இந்த தளத்தில் அதைப்பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.உலகப்படங்களையும்,இந்தியபடங்களையும் அனிமேசன் பார்வையில் விமர்சனங்களும் உண்டு இந்த தளத்தில்.

தோழமை என்ற இந்த தளத்திலும் சுவாரஸ்யமான போட்டோசாப் பாடங்களும்,நம் பிளாக்கை அழகுபடுத்தும் சில கோடிங்குகளும்,வித்தியாசமான மென்பொருள்களும் கிடைக்கபெறுகிறது.

பொன்மலர் என்பவருடைய இந்த தளத்தில் தொழி்ல்நுட்பம்,மென்பொருள்கள் பற்றி விளக்கமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.பாஸ்போர்ட் போட்டோவைப் பற்றிய இந்த பதிவு நிச்சயம் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ப்ரியமுடன் வசந்த் அவர்களின் கற்பனை போட்டோசாப்பில் புகுந்து விளையாடியிருப்பார்.ரசிக்கத்தக்க வகையில் போட்டோசாப்பை பயன்படுத்தியிருப்பார்.இவருடைய தளத்தில் போட்டோசாப்பை கற்றுத்தரவில்லை.ரசிக்கவைக்கிறார்.

மீண்டும் நாளை தொழில்நுட்ப பதிவுகளுடன் சந்திப்போம்.




மேலும் வாசிக்க...

Tuesday, May 24, 2011

சொல்லித் தெரிவதில்லை ஒளிப்படக்கலை..!!

ஆம்..பார்த்தால்தான் தெரியும் ஒளிப்படங்களின் அருமை.



"மனிதனுக்கு மனிதனைப் பற்றிய விளக்கமளிக்கக்கூடிய மாபெரும் சக்தி ஒளிப்படக்கலை" - எட்வர்டு ஸ்டிச்மென்.




"கற்பனைத்திறன் ஓர் ஒளிப்படக்கலைஞனுக்கு 'ஆடம்பரத்'தேவையில்லை..!!மாறாக,அவசியம் தேவையாகும்..!! - ஜீன் ஹியூஸ்டன்.




"ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு முழுமையான ஒளிப்படம் சொல்லும்..!!" - நெப்போலியன்.




"ஒளிப்படம் எடுத்தலும்,ஓவியக்கலைபோல் ஓர் அரியகலையாகும். காரணம்,இரண்டும் அழகினை தேடுவதையே நோக்கமாக கொண்டது..!!" - ஜீலியா மார்கரெட்


                                      

மேலேயுள்ள பொன்மொழிகள் எல்லாம் நான் சார்ந்துள்ள புகைப்படத்தொழில் குறித்தவை.படங்கள் எல்லாம் நான் எடுத்தவை,(ஒரு வௌம்பரம்...)இன்று நான் படிக்கும் சில ஒளிப்படங்கள் பற்றிய தளங்களை தருகிறேன்.வலைச்சரத்தில் இருக்கும் ஒளிப்பட ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

எளிய தமிழில் ஒளிப்படங்கள் எடுப்பது,கேமராக்களை தேர்ந்தெடுப்பது,எடுத்த படங்களை அலசி ஆராய்வது,உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்,நிபுணர்களின் ஒளிஓவியங்கள்,ஒளிப்படபோட்டிகள் நடத்துவது என தமிழின் முழுமையான ஒரு ஒளிப்படத்தளம் இது என்றால் மிகையாகாது.

சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து கொண்டு தான் கற்ற கலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு கலைஞர்.தொழில்நுட்பங்கள்,புதிய கருவிகள் பற்றிய விளக்கங்கள்,உலகத்திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் என இவருடைய தளமும் ஒளிப்பட ஆர்வலர்களுக்கு பயனுள்ளது.

ஆனந்த் விஜய் என்பவரின் தளத்தில் வித்தியாசமான ஒளிப்படங்கள் கொட்டிக் கிடக்கிறது.வித்தியாசமான கோணங்களில் அசத்தியிருப்பார்.

சர்வேசன் அவர்களின் படங்களும் பாடங்களும் சுவாரஸ்யமானவை.

ராமலக்ஷ்மி அவர்களின் படங்கள் குறித்த ஆர்வம் வியப்புக்குரியது. வாழ்க்கையை சுவாரஸ்யமாக பார்க்கும் பெண்மணி.

பறவைகள் பலவிதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.இவருடைய கேமராக்கண்களில் மாட்டிய பறவைகளின் அழகை பாருங்கள்..!!

இவருடைய தளத்திலும் பறவைகளின் படங்கள் நன்றாக இருக்கும்.

நேர்த்தியான தொழில்முறை ஒளிப்படங்கள் இந்த தளத்தில் உள்ளது.

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் தளம் இது.

இவர்களுடைய வரிசையில் முன்ணனி ஒளிப்படகலைஞர் விடுபட்டுள்ளார்.அவர் எப்போதும் விளம்பரங்களை விரும்புவதில்லை என்பதாலும்,மல்லிகைப்பூவுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதாலும் இங்கு அவரைப்பற்றி எழுதவில்லை.கண்டிப்பாக நீங்கள் அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் இங்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தெரிந்த ஒளிப்படகலைஞர்களின் இணைப்பை கொடுத்தால் அனைவரும் பயனடைவோம்.நன்றி.

                                          

    



மேலும் வாசிக்க...

Monday, May 23, 2011

வலைச்சரத்துக்கு வணக்கம்..!!


அன்பும்,அறிவும் நிறைந்த பதிவுலக தோழர்களுக்கு சேலம் தேவாவின் இனிய வணக்கங்கள்..!!

ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு பீலிங்ஸ்...இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு வெற்றிகரமாக இயங்கும் வலைச்சரத்தில் எனது பங்களிப்பையும் இருப்பதை நினைத்து பேருவகை கொள்கிறேன். 
என்ன இது வலைச்சரத்துக்கு வந்த சோதனை என்று யாரும் நினைத்து வருந்தவேண்டாம்.ஒரு வாரம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள்.நான் கற்றதையும்(படிச்சது பத்தாங்கிளாஸ்) பெற்றதையும்(பெரிய சுஜாதான்னு நெனப்பு) பற்றி எழுதுகிறேன்.

பொதுவாகவே எனது அறிமுகத்தை இணையத்தில் இருக்கும் ஒரு தளம் விடாமல்(Facebook,Twitter,Buzz,etc.,) செய்து கொண்டிருந்தவன் இப்போது வலைச்சரம் வேறு கிடைத்ததால் மௌஸ், கீபோர்டு புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறேன்.ஹி.ஹி..முதல்இடுகை முழுவதும் எனது தளத்தில் தெளித்த சிந்தனை சிதறல்களை வலைச்சரத்தில் தெளிக்கிறேன்.

இன்றுள்ள பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் உடல்நலம் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.அட்டாக் வந்தபிறகுதான் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள்.இவர்களுக்காகவே நடைபயிற்சி ,சாதத்தை தவிர்ப்பது ,தலை"மை" ,காய்ச்சலால் நான் பட்டது ,இதுபோன்ற உடல்நலம் சம்பந்தப்பட்ட பதிவுகளை படித்து பயனடையுங்கள்.தொலைபேசியால் ஏற்படும் கஷ்டங்களை சொல்லும் பதிவு.

எங்கள் ஊரைக் குறித்து நான் இட்ட இந்த பதிவு சேலத்து வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது.

இப்போது தொல்லைக்காட்சிகளில் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் பாட்டுப்போட்டிகள் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட கோபத்தில் உதித்த பதிவு.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை பற்றிய விழிப்புணர்வு பதிவு.

நம்முடைய கருத்துகளை உலகத்திற்கு பரப்ப இலவசசேவையாக ப்ளாக்கரை தரும் கூகிள் நிறுவனத்தின் பெருமையை சொல்லும் பதிவு..!!(யாராவது கூகிள்ல சொல்லி என்ன கொ.ப.செ ஆக்குங்கப்பா..)

எப்படி விளையாட வேண்டும் என்பதை ஒரு திறமையான விளையாட்டு வீரரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவு.

பழமொழிகளின் சிறப்பை விளக்கும் பதிவுகள்.

வாழ்த்து சொல்லி நான் வாங்கிகட்டிக்கொண்டது.

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்.(இவ்ளோதான் தேறிச்சு)ஆனால்,படிப்பதற்கு நீங்கள் இருக்க வேண்டுமே..?!அதனால் எனது சுயபிரதாபங்களை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.மீண்டும் நாளை சந்திப்போம்.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது