07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 27, 2011

அனைத்தும் கிடைக்கும்.!


கோர்ட் பிரச்சினை - கூகிள்
நம்ம குழந்தைகளுக்கு ஏதாச்சும்ன்னா துடிச்சி போயிடறோம்.புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கும் குழந்தை பராமரிப்பை பற்றி தெரியாதவர்களின் பாடும் திண்டாட்டம்தான்...திடீர்ன்னு காய்ச்சல் வரும்.திடீர்ன்னு வயித்துவலியில அழுவும்.இது போன்ற சந்தர்ப்பங்களை தவிர்ப்பதற்கு வருமுன் காப்போம்ன்னு ஒரு திட்டம் இருக்கு.அரசு திட்டம் இல்லீங்க...நம்ம விழிப்புணர்வை சொன்னேன்.குழந்தைகள் மருத்துவர் திரு.ராஜ்மோகன் அவர்களுடைய குழந்தைநலம் என்ற இந்த வலைத்தளத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து அது வளரும் வரை வரும் பல மருத்துவபிரச்சினைகளுக்கு எளியநடையில் விளக்கம் அளிக்கிறார்.வருமுன் காப்பதற்கு வழிமுறைகளை சொல்கிறார்.மருத்துவபணியே ஒரு புண்ணியம் என்றால் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பது அதைவிட உயர்வானதும் மகிழ்ச்சியும் தரக்கூடிய பணி.ஆனந்தவிகடன் வரவேற்பரையிலும் இடம்பெற்ற மருத்துவரின் இந்த சேவையை வாழ்த்துங்கள் நண்பர்களே..!!குழந்தைகளுக்காக அம்மாக்கள் நடத்தும் இந்த வலைப்பூவையும் பாருங்கள்..!!

என்னதான் வலைப்பூ எழுதும் ஆர்வம் இருந்தாலும் கணினியைப் பற்றி அடிப்படை தகவல்கள் தெரிந்திருந்தால் நல்லது.கணினியில் எழுதுவது அறிவியல்,வன்பொருள் கற்றவர்களுக்கு எளிதானது.ஆனால்,கலை ஆர்வமும்,எழுத்தாற்றலும் மட்டுமே நிரம்பியவர்களுக்கு கணினியின் செயல்பாடுகள் பற்றியும்,மென்பொருள்கள் பற்றியும்,புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் எழுதும் பல்வேறு வலைப்பூக்களை திரட்டும் ஒரு தளம்தான் சுதந்திர மென்பொருள்.கணினியைப் பற்றி நன்றாக எழுதக்கூடிய அனைத்து வலைப்பூக்களையும் இங்கே கண்டு பயனடையலாம்.கற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே..!!


இணையத்தில் உள்ள எழுத்தாளர்களை தேடும்போது சுஜாதா,எஸ்.ராமகிருஷ்ணன்,சாருநிவேதிதா,ஜெயமோகன்,மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை தவிர பழம்பெரும் எழுத்தாளர்களின் படைப்புகளை பார்க்க முடிய வில்லையே என்று ஏங்கியபோது கிடைத்த பொக்கிஷம்தான் இந்த அழியாச்சுடர்கள்.மிக நல்ல அரிய படைப்பாளிகளின் படைப்புகளை தொகுத்துள்ளனர் இந்த தளத்தில்.உலக இலக்கியங்களுக்காக தனியாக ஒரு தளமும் உள்ளது.வாசிப்பு ஆர்வம் உள்ளவர்களுக்கு சரியான இடம்.வாசிக்க தரவிறக்கி படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வலைப்பூவில் மின்நூல்கள் கிடைக்கின்றன.


கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவருக்கு மாறுபடும்.எனக்கு சித்தர்கள் மேல் நம்பிக்கை உள்ளது.நம்பிக்கை உள்ளவர்களுக்கு நல்ல தளம் இந்த சித்தர்கள் இராச்சியம்.வலையுலகில் பிரபலமான தோழி என்பவர் எழுதும் தளம்.வடிவமைப்பிலேயே ஒரு தெய்வீக அனுபவத்தை தரும் தளம்.


ஆன்மிகம்,கணினி,உடல்நலம்,நடப்புச்செய்திகள்,மகளிருக்காக பயனுள்ள தகவல்கள் என பத்திரிக்கைகளிலும்,இணையத்திலும் படித்த,பார்த்த பயனுள்ள தகவல்களை தொகுத்தளிக்கிறார் உங்களுக்காக.8 comments:

 1. அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. அனைவருக்கும் பயனுள்ள அறிமுகங்கள்.

  ReplyDelete
 3. நல்ல அறிமுகங்கள் பாஸ் ...

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள்... மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 5. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி..!!

  ReplyDelete
 6. பயனுள்ள அறிமுகங்கள்...சித்தர்கள் ராஜ்ஜியம் தளம் எனக்கு புதிது!

  ReplyDelete
 7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. சுதந்திர மென்பொருள்.காம் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது