07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 6, 2011

வெச்சுட்டாங்களே ஆப்பு... அவ்வ்வ்வ்வ்வ்....:)))

"யோவ்... யாருயா நீ? எருமைமாட்டு மேல வந்து என்னை தூக்கிட்டு வந்ததுமில்லாம இப்ப இத்தன தண்டி பொஸ்தகத்த வெச்சு பாத்துட்டு இருக்கற இந்த லூசுப்பயகிட்ட இவள் கணக்கு என்னவோனு கேக்கறியே? நான் எப்பய்யா உங்க பேங்க்ல அக்கௌன்ட் ஓபன் பண்ணினேன்? லூசாயா நீ?"

"ஏய் பெண்ணே... பார்த்து பேசு...நான் யார் தெரியுமா? எமதர்மராஜனக்கும்"

"நீ தர்ம ராஜாவா இருந்த என்ன? கஞ்ச ராஜாவா இருந்தா எனக்கென்ன? நான் யார் தெரியுமா?"

"ஏன் தெரியாமல்... எழுத்து என்ற பெயரால் ஊரையும் உலகத்தையும் வாட்டி வதைத்த வஞ்சகி நீ"

"மிஸ்டர் எமன்... மைண்ட் யுவர் வோர்ட்ஸ்... நீங்க யார் அனுப்பின ஆள்னு எனக்கு புரிஞ்சு போச்சு... இங்க பாரு எமன்... அவங்க எத்தன குடுத்தாங்களோ அதை விட அஞ்சு பத்து சேத்தி தரேன்... என்னை எங்கூர்ல எறக்கி உட்டுபோடு ஆமா சொல்லிட்டேன்"

"பெண்ணே... நீ செய்த பாவ செயலுக்கு உன்னை எண்ணெய் கொப்பரையில் தள்ள ஏற்பாடுகள் நடக்கின்றன... யோசித்து பேசு"

"ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா"

"ஏன் சிரிக்கிறாய்? பயத்தில் சித்தம் கலங்கி விட்டதோ?"

"அதில்ல... எனக்கே எண்ணெய் கொப்பரைனா இன்னும் சிலரை எல்லாம் நெனச்சேன்... சிரிச்சேன்"

"யார் அந்த கயவர்கள்?"

"ஒருத்தி இருக்கா பிரதீபானு, என்னமோ விக்டோரியா மகாராணியே வந்து வெத்தல பாக்கு வெச்சு அழைச்ச ரேஞ்சுக்கு ராஜா வீட்டு கல்யாணம் பத்தி சுத்துனா பாரு ரீலு... எங்கூட்டு ரீலு உங்கூட்டு ரீல் இல்ல...  உலக ரீலுடா சாமி...  ஹையோ ஹையோ"

"ம்..அப்புறம்..."

"இவங்க இருக்காங்களே நம்ம ஆனந்தி... தர்ம பல்பு வாங்கினத கூட என்னா பாலிஷ் போட்டு சொல்லுவாங்க தெரியுமா... இதெல்லாம் கூட ஒகே... தமிழ் மெல்ல இனி சாகாது இன்னைக்கே சத்து சாரி செத்து போகும்னு கங்கணம் கட்டிட்டு இருக்கற நம்ம காயத்ரி நிலமைய நெனச்சா... ஹ்ம்ம்... பாவம் தான்"

"பேச்சை மாற்றாதே அப்பாவி... என்ன சொன்னாலும் நீ செய்த குற்றம் குற்றமே"

"அப்ஜெக்சன் யுவர் எமன்... நான் என்ன பொற்கொடி மாதிரி எபிசோடுக்கு ஒரு ஆளை போட்டு தள்ளினேனா, இல்ல வானதி அக்கா மாதிரி வழி மாறி போனத வெச்சு போஸ்ட் தேத்தி அதுல தொடரும் வேற போட்டனா... இல்ல ஆயிரம் பல்பு வாங்கிய அபூர்வ அனன்யா'மணி மாதிரி போஸ்ட் போட்டனா... என்ன குற்றம் கண்டீர் நக்கீரரே... ச்சே... எமன் அவர்களே..."

"இப்படி மூச்சு விடாம பேசற பாரு... இது தான் உன் மேல் உள்ள முதல் குற்றச்சாட்டு"

"குற்றம் சாட்டிய ப்ரூட்டஸ் யார்?"

"அது எமனுலக ரகசியம், சொல்வதற்கில்லை"

"ம்... நீங்க சொல்லலைனா எங்களால கண்டுபிடிக்க முடியாதாக்கும்... அபுதாபில ஆஸியா இருக்காக... அமெரிக்கால அன்னு  இருக்காக... ஆஸ்திரேலியால எங்கூரு சின்னம்மணி இருக்காக...  சுனாமி சாரி அனாமி இருக்காக... திருப்பூர் திலகவதி(ப்ரியா) இருக்காக...  கோவைடூடெல்லி போன ஆதி இருக்காக... சென்னைபட்டணத்தில் கீதா மாமி இருக்காக...ராஜி அக்கா இருக்காக... இவங்கெல்லாம் என்னை  சுற்றி  வலை பின்னும் ஆட்களை கண்டுபிடிச்சு ஒரு வழி பண்ணிடமாட்டாங்களா என்ன?"

"இங்க பாரு பொண்ணே... ரகசியம் என்றாலும் சொல்கிறேன் கேள்... உன்னை பத்தி புகார் குடுத்ததே இவங்க எல்லாமும் தான்"

"வெச்சுட்டாங்களே ஆப்பு... அவ்வவ்வவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்.." னு அப்பாவி கண்ண கசக்கவும் அலாரம் அடிக்கவும் சரியா இருந்தது

"ச்சே... எல்லாம் கனவா... ஆனாலும் பயங்கர கனவு தான்... இனி கொஞ்சம் பேச்சை கொறைக்கனும்... ஹ்ம்ம்... சரிங்க... அலாரம் ஆப் பண்ணிட்டு நான் போய் தூக்கத்த கண்டினு பண்றேன்...குட்நைட்...:))"

பின் குறிப்பு:
ஒரு மாற்றத்துக்கு  மகளிர் மட்டும் முயற்சி செஞ்சேன்... அண்ணன்மார் தம்பிமார் எல்லாம் 33% கேட்டு சண்டைக்கு வந்துராதீக.... :)))

39 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. நல்ல கருத்தாழம்மிக்க அனைவரும் படிக்க வேண்டிய உபயோகமான பதிவு அப்பாவி. நன்றி.

  ReplyDelete
 3. ஹை வட எனக்கே.

  ReplyDelete
 4. Oh No. Let me read the post first. he he

  ReplyDelete
 5. அறிமுகத்திற்கு உண்மையான ஸ்பெஷல் நன்றி அப்பாவி, கண்டிப்பா அடுத்த கதைல ஹீரொயின் புவனா தான். சின்னம்மிணி பழைய ப்லாக் காணா போனப்புறம் கொஞ்ச நாளா தேடிட்டு இருந்தேன், புண்ணியமா போச்சு உங்களுக்கு.

  ReplyDelete
 6. இவ்வளவு செய்த அப்பாவிக்கு நான் ஆப்பு வைப்பது தவறா மக்காள்ஸ்?

  http://reap-and-quip.blogspot.com/2011/02/blog-post.html

  http://reap-and-quip.blogspot.com/2011/03/21.html

  http://reap-and-quip.blogspot.com/2011/04/008.html

  ReplyDelete
 7. Thanks for the tag. =))

  ReplyDelete
 8. //கண்டிப்பா அடுத்த கதைல ஹீரொயின் புவனா தான். //

  ஹா ஹா. அப்படியே ஒரு முள்ளு கரண்டியால அவங்கள ஒரு குத்து குத்தற கதாபாத்திரத்தை எனக்குத் தாங்களேன். ஆனால் ரத்தம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

  //சின்னம்மிணி பழைய ப்லாக் காணா போனப்புறம் கொஞ்ச நாளா தேடிட்டு இருந்தேன், புண்ணியமா போச்சு உங்களுக்கு.//
  நானும் தேடிக்கொண்டே இருந்தேன். நன்றி அடப்பாவிக்கா

  ReplyDelete
 9. தெரிந்த அறிமுகங்களாக இருந்தாலும் நீங்கள் சுவாரஸ்யமாக சொல்வதில் பதிவு படிக்க நல்லாருக்கு தங்கமணி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. //"இங்க பாரு பொண்ணே... ரகசியம் என்றாலும் சொல்கிறேன் கேள்... உன்னை பத்தி புகார் குடுத்ததே இவங்க எல்லாமும் தான்"//

  ha ha haa... appaavi unmai therinjappuram jaan nanaicha enna muzam nanainja ennaa... nalla oru ennai kopparai kuliyal.... chae...sorry sorry... ennai kuliyal pottuttu vaanga he he he... :))

  ReplyDelete
 11. பொற்கொடியை இன்று எக்ஸ்ட்ரா கமெண்ட் போட வைத்து விட்டீர்கள்!

  ReplyDelete
 12. நம்புவீங்களோ இல்லையோ, நீங்களோ எல்.கேவோ இதை சொல்லுவீங்கன்னு தெரியும், நன்றி கின்றி எல்லாம் இப்ப ஒண்ணும் சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன், ஆனா என்னை தெரியாதவங்க யாரும் சரியான தலைக்கனம் பிடிச்சவன்னு உண்மையை கண்டுபிடிச்சுட கூடாதேன்னு.. :)))

  ReplyDelete
 13. நல்ல கற்பனை... நன்றாக இருந்தது...

  ReplyDelete
 14. ஹா ஹா ஹா...

  அத்தனை பேரும்.... உங்க கனவுலயும் வந்து "கதகளி" ஆடிட்டோம் போல இருக்கே... ;)

  ரொம்ப நல்லா இருந்ததுங்க..

  என் பல்பு கதையையும், ஊரறிய... செய்ததற்கு ரெம்ப நன்றிங்க.. :)))

  ReplyDelete
 15. மகளீர் ஸ்பெசல் நல்லாருந்துச்சு..சில பல கணக்குகளை சரிகட்டுன மாதிரியும் இருந்துச்சு...

  கொடியம்மணி ’’ கருத்தாழத்தயும், உபயோகத்தையும்’’ ஆட்டோமேட்டிக்கா செட் பண்ணியிருக்காங்க போல.. பேரிக்கா நாட்டுக்காரங்க செஞ்சாலும் செய்வாங்க...

  ReplyDelete
 16. மகளிர் மட்டும் :) கலக்கல் ஆக இருந்தது உங்கள் அறிமுகம். நன்றி.. :) எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்...

  ReplyDelete
 17. நன்னியோ நன்னி!

  ReplyDelete
 18. ரொம்பக் கஷ்டப் பட்டு வ்ந்து சொல்லி இருக்கேன். பார்த்துப் போட்டுக் கொடுங்க! :P

  ReplyDelete
 19. Ippadi ennai maatti vida ninaikkum ( sorry introduce seytha) ungalukku epdi thanks solrathunne theriala akka....

  irunga thaniya vachukaren

  LOL

  nandri

  ReplyDelete
 20. அனைத்து மகளிருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
 21. சத்தியமா நாங்க புகார் குடுக்கலப்பா!
  கலக்கலா இருந்தது புவனா. மூன்றாவது முறையாக வலைச்சரத்தில் அறிமுகமானதில் மகிழ்ச்சி. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 22. நல்லவேளை எமதர்மராஜன் என்னைக் காட்டிக்கொடுக்கலை!! என் தலைமையிலத்தானே புகார்மனுவே கொடுத்தோம் தெரியுமா?

  //இனி கொஞ்சம் பேச்சை கொறைக்கனும்//
  ஹப்பாடா, கொடுத்த புகாருக்கு கொஞ்சமாவது பலன் இருக்கு!! ;-))))))))))

  ReplyDelete
 23. இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 24. அப்பாவி
  இன்னும் மேலும் மேலும் நிறைய பேர்களிடம் ஆப்பு...!!!? வாங்க ஆசிகள்.
  அப்போதானே இன்னும் நிறைய பதிவுகள் போடுவே.

  ReplyDelete
 25. \ஹா ஹா. அப்படியே ஒரு முள்ளு கரண்டியால அவங்கள ஒரு குத்து குத்தற கதாபாத்திரத்தை எனக்குத் தாங்களேன். ஆனால் ரத்தம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். \

  சுனாமி குட்டிச்சாத்தான் கையில் முள்ளு கரண்டியுடன்.

  ஆஹா உனக்கு சரியான ரோல் தான்.

  ReplyDelete
 26. மாப்புக்கெல்லாம் ஆப்புவா? அவ்வ்வ்வ்வ்....:)...
  இன்றைக்கு கொஞ்சம் பிஸி,அதனால் என்ன?நாங்களும் வந்திட்டோமில்ல..
  அப்பாவிகளை அசத்தலாக அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 27. //என்னமோ விக்டோரியா மகாராணியே வந்து வெத்தல பாக்கு வெச்சு அழைச்ச ரேஞ்சுக்கு ராஜா வீட்டு கல்யாணம் பத்தி சுத்துனா பாரு ரீலு//- அடங்கப்பா..யாருங்க அந்தப் பிரதீபா? என்பேர வெச்சுகிட்டு ;)

  அறிமுகத்திற்கு நன்றி அக்கா!!

  ReplyDelete
 28. தங்கம்மா, என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. நான் உங்களுக்கு அக்காவா?? எப்போதிலிருந்து அவ்வ்வ்... ஏதாச்சும் பிரச்சினைன்னா பேசி தீர்த்துக்கலாம். ஓக்கை.

  ReplyDelete
 29. பின் குறிப்பு:
  ஒரு மாற்றத்துக்கு மகளிர் மட்டும் முயற்சி செஞ்சேன்... அண்ணன்மார் தம்பிமார் எல்லாம் 33% கேட்டு சண்டைக்கு வந்துராதீக.... :)))


  ...... அப்படி போடு அருவாளை! இந்த வாரம் - மிஸ் பண்ணிட்டேன் போல.... களை கட்டி இருப்பது தெரிகிறது. :-)

  ReplyDelete
 30. //பெண்ணே... நீ செய்த பாவ செயலுக்கு உன்னை எண்ணெய் கொப்பரையில் தள்ள ஏற்பாடுகள் நடக்கின்றன... யோசி//

  இதோடு நிறுத்தி இருக்கணும் அந்த பாழாப் போன எமராஜா! வெவரம் தெரியாம //யோசித்து பேசு// ன்னு சொல்லிட்டு அவரும் வம்பிலே மாட்டி, நம்பளையும் வழக்கம் போல மண்டை காய வச்சுட்டாரே! ஹூம் ... தலை எழுத்து.... கையால அழிக்க முடியுமா என்ன? :)))

  ReplyDelete
 31. @பொற்கொடி: //என்னை தெரியாதவங்க யாரும் சரியான தலைக்கனம் பிடிச்சவன்னு உண்மையை கண்டுபிடிச்சுட கூடாதேன்னு.. :)))//

  மத்தவங்க யாரும் சுயமா சிந்திக்கவே கூடாதுன்னு தீர்மானம் பண்ணிட்டீங்க...?! :)))

  ReplyDelete
 32. thanks for my blog introduction bhuvi!

  aappu vacha koottamellaam appaaviyai padikkara koottamaakkum

  akaang!!!!!!

  ReplyDelete
 33. @ Porkodi (பொற்கொடி) - ஆணியே புடுங்க வேண்டாம்....அவ்வ்வ்வ்....:((


  @ அனாமிகா - அடப்பாவிங்களா... போஸ்ட் படிக்காமையே... எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க இப்படி...:)))


  @ Porkodi (பொற்கொடி) - ஹா ஹா ஹா... வெற்றி வெற்றி... கதைல ஹீரோயன் ரோல் எல்லாம் சரி... ஒரு கண்டிசன்... சூட்டிங் கோயம்புத்தூர்ல தான் வெக்கணும்... மியூசிக் ஏ.ஆர்.ஆர் போதும், அப்புறம் இந்த செட்டிங் எல்லாம் கொஞ்சம் சிம்பிள்ஆ எந்திரன் படம் அளவுக்கு இருந்தா போதும்... ஐ லைக் சிம்ப்ளிசிட்டி யு நோ...:)))


  @ எல் கே - உனக்கு தெரியாதவங்கன்னா இனி சந்திர மண்டலத்துல போய் தான் தேடணும் கார்த்தி... ஹி ஹி... ஜஸ்ட் கிட்டிங்...:)))


  @ அனாமிகா - :)))


  @ r.v.saravanan - நன்றிங்க சரவணன்...


  @ அன்னு - நான் பக்கத்துக்கு ஊர்ல தான் இருக்கேன்... ஞாபகம் இருக்கட்டும் அன்னு மேடம்....:)


  @ ஸ்ரீராம். - ஹா ஹா... சரியா சொன்னீங்க... வெற்றி நமதே...:))


  @ Porkodi (பொற்கொடி) - என்ன ஒரு சுய பரிசீலனை ஐ சே...:)))


  @ தமிழ் உதயம் - நன்றிங்க...:)


  @ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ் ஆனந்தி...:)


  @ பத்மநாபன் - ஹா ஹா... கணக்குகள் சரி கட்டின பாயிண்ட்ஐ கரெக்டா புடிச்சு இருக்கீங்க... சூப்பர்...:))


  @ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க...உங்க நன்றி எதுக்குன்னு புரிஞ்சது... சிவன் சொன்னா என்ன சக்தி சொன்னா என்ன...:))


  @ கீதா சாம்பசிவம் - ஹி ஹி... நோ மென்சன்... பார்சல் வந்துட்டே இருக்கு மாமி...:))


  @ புதுகைத் தென்றல் - :))


  @ Gayathri - ஆஹா... நன்றி சொல்ற மாதிரியே மெரட்டிட்டு போகுதே இந்த பொண்ணு...அவ்வவ்...:)))


  @ அமைதிச்சாரல் - நன்றிங்க ..:))


  @ ! சிவகுமார் ! - நன்றிங்க


  @ கோவை2தில்லி - ஹா ஹா... நீங்க செஞ்சுருக்க மாட்டீங்கன்னு தெரியுமுங்க அம்மணி... :)))


  @ ஹுஸைனம்மா - உங்க தலைமைலங்கற விசயத்த சொல்லாம மறைச்ச எமனை தனியா டீல் பண்ணிக்கறேன்... :)))))


  @ திவா - :))))


  @ !* வேடந்தாங்கல் - கருன் *! - நன்றிங்க


  @ Vasagan - ஹா ஹா... சூப்பர் பாசிடிவ் சிந்தனை ப்ரொபசர் சார்... :))


  @ asiya omar - சந்தடி சாக்குல உங்களையும் அப்பாவினு சொல்லி கிட்டாச்சு... நடத்துங்க நடத்துங்க...ஹா ஹா...:))


  @ பிரதீபா - :)))


  @ vanathy - பொறந்ததுல இருந்தே அக்கா தானே... இப்ப புதுசாவா ஆக முடியும்...:))


  @ Chitra - தேங்க்ஸ்'ங்க சித்ரா...:))


  @ மனம் திறந்து... (மதி) - ஹா ஹா... உங்க அளவுக்கு எமனுக்கு ஐ.கியூ இல்ல பாருங்க...அதான் வாய குடுத்து மாட்டிகிட்டார்...:))


  @ raji - ஹா ஹா... :)))

  ReplyDelete
 34. காணாமல் போன என்னை எல்லாருக்கும் மறுபடியும் அறிமுகப்படுத்திய அப்பாவி தங்கத்துக்கு நன்றி.
  நானும் எழுதணும்னு நினைக்கிறேன். விதி சதி செய்கிறது :)

  ReplyDelete
 35. @ சின்ன அம்மிணி - My pleasure... Thanks'nga சின்ன அம்மிணி..:)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது