07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 29, 2011

தம்பி கூர்மதியன் சேலம் தேவாவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பு நண்பர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் சேலம் தேவா - தான் ஏற்ற பொறுப்பினை மகிழ்வுடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு 85 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். வித்தியாசமான முறையில் அறிமுகங்கள் செய்திருக்கிறார். புகழ் பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் , பழம் பெரும் எழுத்தாளர்கள் - இவர்களின் தளங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவரது ஊரான சேலத்தினைச் சார்ந்த பதிவர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். ஒளிப்படக் கலைஞரான இவர் ஒளிப்படக் கலையினைப் பற்றிய பல தளங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

நல்லதொரு பணியினைச் செய்த சேலம் தேவாவினை, நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

அடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் தம்பி கூர்மதியன். இவரைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் மூன்று தமிழ் வலைப்பூக்களையும், ஒரு ஆங்கில வலைப்பூவையும் நடத்தி வருகிறார். ஒன்று தெளிவான விசயங்கள், மக்கள் பிரச்சனைகள், விமர்சனங்கள், செய்திகளுக்காக இவர் எழுதும் 'நான் சந்தித்தவை' என்னும் வலைப்பூ. இவரது படைப்புகளுக்காக 'யௌவனப் புலர்வுகள்'(முன்னர் கிறுக்கனின் கிறுக்கல்கள் என்று இருந்தது) என்னும் வலைப்பூ. பிறகு மொக்கைகளுக்காக 'ஐ ஆம் சீரியஸ்' என்னும் வலைப்பூவாக மொத்தம் மூன்று வலைப்பூக்கள். இந்த மூன்றிலும் சேர்த்து மொத்தம் 94 பதிவுகள் இட்டிருக்கிறார். 1749 கருத்துகள் பெற்றிருக்கிறார். சென்னையில் வசிக்கிறார். அரசியல் எழுத்துகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். வெளிநாடுகளில் வேலை செய்வதை வெறுப்பவர்.

அருமை நண்பர் தம்பி கூர்மதியனை வருக ! வருக ! என வரவெற்று - அறிமுகங்களை அள்ளித் தருக ! என வேண்டி, வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் சேலம் தேவா
நல்வாழ்த்துகள் தம்பி கூர்மதியன்

நட்புடன் சீனா

7 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. சகோ கூர்மதியினை வருக வருக என வரவேற்கிறோம்!
  இவ்வளவு நாளும் எங்களைச் சந்தோசத்தில் ஆழ்த்திய சேலம் தேவா அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 3. இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் கூர்மதி

  ReplyDelete
 5. வாழ்த்துகளுக்கு நன்றியும்,கூர்மதியன் அவர்களுக்கு வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்..!! :)

  ReplyDelete
 6. மிக்க நன்றி சீனா ஐயா..

  வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது