07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 18, 2011

ச்சைக்கிளி பாண்டியம்மா V/s  திவர்கள்....

பச்சக்கிளி பாண்டியம்மா.. எங்கத்தான் போன சீக்கிறம் வா...


“இதோ  வந்துட்டேன்யா... யோவ் உனக்கு எத்தனை முறை சொல்றேன் அந்த பேரை வச்சி கூப்பிடாதேன்னு... நல்லா வச்சிருக்கிறபாரு பேரை, சும்மா நச்சுன்னு ஒரு பேரு வைய்யா...”

சரி.. சரி.. அதுக்குதான் நம்ம பன்னிக்குட்டி ராமசாமிக்கிட்ட ஐடியா கேட்டிருக்கேன் சீக்கிரமே ஒரு நல்ல பேரா வச்சிடுறேன்...


“யாரு பன்னிக்குட்டி கிட்டயா.. கிழிஞ்சது போ... யோவ் உனக்கு வேற ஆளை கிடைக்கலையா மச்சான் அட்ரா சக்க சிபிக்கிட்ட சொன்னா எப்படி பேருவைப்பாரு தெரியுமா..!”


ஏய்.. தயவு செய்து வாயை மூடி என்னை வம்புல மாட்டவச்சிட்டு போகதே.. சரி வந்த வேலையை பாரு.. நான் சொல்றத இப்ப நீ செய்யனும்..


“உனக்கு வேற வேலையில்லயா.. என்ன வேலை.. ”

இன்னிக்கு வலைச்சரத்தில நல்லதா ஒரு நாலு பேர அறிமுகப்படுத்தி வை..


“உனக்கு வேலை கொடுத்தா நீ என்னை வேலை வாங்குறீயா.. நீயெல்லாம் ஒரு பதிவர்.. அதுலவேற பிரபல பதிவராம்... உன்னை பிரபல பதிவர்ன்னு சொன்ன நாஞ்சில் மனோவ காலிப்பண்ணனும்...”


ஏய்.. விட்ட நீ எல்லாரையும் நாரடிப்ப ஒழுங்க வந்த வேலையை பாரு...


“என்ன பாக்க சொல்ற..”


நேத்து ஏதே பதிவல்லம் படிச்சிட்டு வந்தேன்னு சொன்னியே.. அதைப்பத்தி சொல்லு..  நம்ப பயபுள்ளைக பாத்து சொல்லு...

“என்ன சொல்றது எந்தப்பக்கம் போனாலும் பதிவுன்னு பேர் போட்டு காயவுடறானுங்க... சரி சரி சொல்றேன் நீ கிளம்பு...”


நான் இங்கதான் இருப்பேன்.. நீ  சொல்லு... நான் தான் ஆசிரியர்..


“என்னது ஆசிரியரா பாவம்யா ஜனங்க அங்க பள்ளிக்கொடத்துல அருத்தது போதாதுன்னு இங்கவேற.. சீனா ஐயா உன்னை நம்மி எப்படி கொடுத்தார்ன்னு தெரியல...”


ஏய்.. அடங்க மாட்டியா நீ...

“சரி.. மேட்ருக்கு வர்றேன்... சம்திங் சம்திங்க் -ன்னு இருக்கே ஏதாவது குஜாலா இருக்குன்னு போனா அட்சயதிரிதியை ஸ்பெஷல்- ன்னு போட்டு செம காமடி பண்ணியிருக்கான் கிச்சான்னு ஒருத்தன்.. அப்புறம் அங்கிருந்து மகனே எப்பவாதது மாட்டுவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்..அப்புறம் எங்க போன...

“சரி வெயிலா இருக்குன்னு ஒரு இடத்தில் உட்கார்ந்தேன் அங்க Guna-ன்னு ஒருத்தர் பார்த்தது, கேட்டது, விசாரித்தது, தோணியது..  அப்படின்னு போட்டிருந்தார் சரி உள்ளே பேனேன் அங்க பார்த்தா மூன்று முட்டாள்கள் அப்படின்னு ஒரு பதிவு சரி ஏதோ உன்னப்பத்தித்தான் போட்டிறிக்காறாம்ன்னு நம்பி போயிட்டேன்... ஆனா செம கேள்வி கேட்டிருக்கார் மனுஷன்..”

அடி பாண்டியம்மா நானு முட்டாளா.. இரு உனக்கு அப்புறம் இருக்கு..


“சரி உடுய்யா வெயில் காலத்தில இப்படித்தான் இருக்கும். வெயில் காலத்துல என்ன பண்ணனும்ன்னு bigilu ன்னு ஒருத்தர்  நல்லா சொல்லியிருக்கார்.கோடைக்காலம் வந்தாச்சு – வெயிலின் தாக்கத்தை தணிக்க  அதைபடிச்சி வெயிலுக்கு கொஞசம் இதமா இருந்துச்சி இல்லன்னா உண்ணான்ட நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்..

சரி இவ்வளவு சுத்திக்கிட்டு வந்தியே சாப்பிட்டியா..


‌நல்லா கேட்டியா.. நீ வாங்கி கொடுக்காதே... அந்த செலவைகூட யாரு தலையிலாவது கட்டிடு...   சரி.. அப்படியோ போயிகிட்டே இருக்கும் போது ஒரு  டீக்கடை...... கண்ணுல பட்டது சரி சூடா ஏதாவது சாப்பிடலான்னு போன அன்னாத்தே ஜெயலலிதாவிற்கு கலைஞர் ஏற்படுத்தி கொடுத்த அருமையான வாய்ப்பு-ன்னு  ‌பதிவு போட்டு கடையை ரணகலமாக்கிக்கிட்டு இருக்காரு.. நமக்கு ஏன் வம்புன்னு வந்துட்டேன்...


ஏய் அப்படி சொல்லாதே அது நம்ம தல ரஹீம் கஸாலியின்  நண்பரோட பிளாக். அப்புறம்.. 


“யோவ் இருய்யா வர்ரேன்.. ஒரு இடத்தில் உரைகல் அப்பிடின்னு போட்டிருந்தது சரி உறையும், கள்ளும் ஒண்ணா இருக்குமான்னு போன மனுஷன் கல்யாணமாம் கல்யாணம்ன்னு போட்டு செம காமடி பண்ணியிருக்காரு.. சிரிச்சி சிரிச்சி ‌ரெக்கை வலிக்குது...”


பராவாயில்லை நீ கூட சிரி்க்கறமாதிரியான பதிவா... அப்ப கண்டிப்பா நானும் போய் பார்க்குறேன்...


“ சும்மா படிச்சிட்டு வந்துடாதே... ஓட்டுப்போட்டுட்டு வா....”
 

எல்லாம் எங்களுக்கு தெரியும்.. நீ மேலச் சொல்லு...

“ம்.. அப்படியே சிரிச்சிக்கிட்டு போகும்போது கேள்வியும் நானே பதிலும் நானே ன்னு ஏதோ புலம்பிக்கிட்டு இருந்தாரு... அவேரே கேள்விகேப்பாராம் அவரே பதிலும் சொல்லுவாராம்.. அப்ப அவரு வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்? பாரு...
அடியே பாண்டியம்மா அப்படியெல்லாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது... அப்புறம்  எல்லோரும் சேர்ந்து நம்ம கடையை மூடிடப்போறாங்க...“அம்புட்டு பயமா உனக்கு.. அங்க ஒருத்தன் தமிழ் திருடன் ன்னு அவனே சொல்லிக்கிறான்..  நீ எப்பவாவது ஜெயிச்சியிக்கியா... அப்படி ஜெயிக்க என்ன என்ன இருக்கனம்ன்னு ஒரு லிஸ்ட்டே வச்சிருக்காரு..~ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?~ இதை தெரிஞ்சிக்கோ அப்பத்தான் நீ ஜெயிப்ப....எல்லா எனக்கு தெரியும் உன் வேலையை பாரு...”அப்புறம் மனம் கொண்டவன் பதிவுக்கு போனேன்  மண்பானைத் தண்ணீர்
வச்சிருந்தான் அதை குடிச்சிட்டு அப்படியே கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்கிட்டேன்...”

நீ கிழிச்ச கிழிக்கு ஓய்வு வேற...


“அடுத்து எதாவது தெரிஞ்சிக்காலதம்ன்னு தமிழ்ச் சொல்லாக்கம் போய் பார்த்தேன் நல்ல ஆங்கில சொல்லுக்கு விளக்கம் புறவரித்து புதுசு புதுசா  கத்துக்கிட்டு ஆளுவிடுங்கடா சாமின்னு கிளம்பிட்டேன்...“அங்கிருந்து இங்க வந்த நீ என் உயிர வாங்கிக்கிட்டு இருக்கே....”சரி சரி.. நீ கிளம்பு ஜனங்களுக்கு நான் மெசேஜ் சொல்லனும்..

“சரி இந்த ‌செல்போன்...”


ஏன்..?


”இதல நெறைய மெசேஜ் இருக்கு..”


எடுடா அருவாள.. வரவர நீ கூட செல்வா கதைகள்.!
மாதிரி மொக்க போட ஆரம்பிச்சிட்ட..


நண்பர்களே... இன்று பச்சக்கிளி பாண்டியம்மா சில பதிவர்களின் பதிவைப்பற்றி ரொம்ப நக்கலா அறிமுகம் செஞ்சி வச்சது.. அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லீங்க.. ஏதாவது திட்டனும்னா அந்த கிளியை திட்டிக்கங்க...”(இது புதிய முயற்சிக்காகத்தான் யாரும் தவறாக எண்ணவேண்டாம்)
நன்றி..
நாளை வேறொறு புதிய வித்தியாசமான அறிமுகத்துடன் சந்திக்கிறேன்...

42 comments:

 1. அசத்தலான புது முறையிலான அறிமுகம்..அருமை நண்பா....

  ReplyDelete
 2. ஒவ்வொரு நாளும் செம அசத்தலான அமர்க்களமான அறிமுகங்கள்.

  ReplyDelete
 3. அசத்தல் அறிமுகங்கள் ...
  வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

  ReplyDelete
 4. வித்தியாசமான அறிமுக நடை கலக்கல்

  ReplyDelete
 5. ////
  NKS.ஹாஜா மைதீன் said...

  அசத்தலான புது முறையிலான அறிமுகம்..அருமை நண்பா....
  /////

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 6. நல்ல முயற்சி சௌந்தர். தொடரட்டும்.

  ReplyDelete
 7. ///
  "என் ராஜபாட்டை"- ராஜா said...

  Well post . . Friend////

  Thanks Raja...

  ReplyDelete
 8. ////
  தமிழ்வாசி - Prakash said...

  சூப்பர் நடை...நண்பா...////

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 9. ///
  !* வேடந்தாங்கல் - கருன் *! said...

  அசத்தல் அறிமுகங்கள் ...
  வாழ்த்துக்கள் அனைவருக்கும்..////


  Vanka Nanbare......

  ReplyDelete
 10. ////
  சசிகுமார் said...

  வித்தியாசமான அறிமுக நடை கலக்கல்/////

  தங்கள் வருகைக்கு நன்றி சசி...

  ReplyDelete
 11. /////
  ! சிவகுமார் ! said...

  நல்ல முயற்சி சௌந்தர். தொடரட்டும்./////


  Thanks Siva...

  ReplyDelete
 12. அறிமுகப்படுத்திய விதம் அழகாயிருக்கு சௌந்தர் !

  ReplyDelete
 13. பச்சைக்கிளி பாண்டியம்மாவைப் பறக்க வைத்த தங்களுக்குப் பாராட்டுக்கள். அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. பச்சைக் கிளிப் பாண்டியம்மாவை அழைத்து வந்து, வட்டார மொழி வழக்கோடு இணைத்து, நம்ம சகாக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க.

  நன்றிகள் சகோ.

  ReplyDelete
 15. அண்ணே சூபர்ன்னே!

  ReplyDelete
 16. கிளி மொழில பேசியிருக்கீங்க. வாழ்த்துக்கள். அருமையான அறிமுகங்கள்.

  ReplyDelete
 17. அறிமுகங்கள் அருமை
  நேரங்கள் கிடைக்காமல்
  அருமை விட்டு போய்கிறது :(
  உங்கள் விளக்கம்
  ஆசிரியர் பாணி கலக்கல்

  ReplyDelete
 18. அறிமுகங்கள் ...
  வாழ்த்துக்கள் அனைவருக்கும்..//repeatu...

  வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 19. அறிமுகம் ரொம்ப நல்ல இருக்கு

  ReplyDelete
 20. என்னய்யா பாட்டி கதை மாதிரி அருமையா அறிமுகம், புதுமையா பன்னி இருக்கிரே சூப்பர்...!!!!

  ReplyDelete
 21. வாத்தியார்'னா சும்மாவா..??
  அறிமுகத்துக்கு நன்றி மக்கா...

  ReplyDelete
 22. என்னை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி... வித்தியாசமான முயற்சி...

  ReplyDelete
 23. புதுமையான அறிமுகம்!

  ReplyDelete
 24. தல...கலக்கிட்டிங்க போங்க...
  அறிமுகத்தோடு இல்லாம எல்லாத்துக்கும் LINK கொடுதிருந்திகளே... அதுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 25. அட இது கூட நல்லா இருக்கே!!

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. எப்புடியெல்லாம் சிந்திக்கிரிங்க நண்பா
  சூப்பர் .

  ReplyDelete
 28. எப்புடியெல்லாம் சிந்திக்கிரிங்க நண்பா
  சூப்பர் .

  ReplyDelete
 29. வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க சௌந்தர்... நல்லாருக்கு! என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 30. arumaaiyaana vimarsanama.. blog kooda vimarsanam panalanu ippdi oru nadila ... good keep it up..

  ReplyDelete
 31. நன்றி நன்றி நன்றி... அறிமுகத்திருக்கு நன்றி... :)

  ReplyDelete
 32. என் நண்பனின் டீக்கடையை அறிமுகப்படுத்தும் சாக்கில் என்னைப்பற்றியும் அறிமுகம் செய்த உங்களுக்கு ஒரு ஸ்பெசல் பூங்கொத்து

  ReplyDelete
 33. //“என்ன சொல்றது எந்தப்பக்கம் போனாலும் பதிவுன்னு பேர் போட்டு காயவுடறானுங்க//
  இது சூப்பர்

  //
  “ம்.. அப்படியே சிரிச்சிக்கிட்டு போகும்போது கேள்வியும் நானே பதிலும் நானே ன்னு ஏதோ புலம்பிக்கிட்டு இருந்தாரு... அவேரே கேள்விகேப்பாராம் அவரே பதிலும் சொல்லுவாராம்.. அப்ப அவரு வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்? பாரு...//
  இது சூப்பரோ சூப்பர்

  ஏம்பா சௌந்தர் இதுக்காக ரூம் போட்டு யோசிச்சிங்களா....அருமை


  தங்களுடைய அழைப்பிற்கும் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி சௌந்தர்

  ReplyDelete
 34. //அடுத்து எதாவது தெரிஞ்சிக்காலதம்ன்னு தமிழ்ச் சொல்லாக்கம் போய் பார்த்தேன் நல்ல ஆங்கில சொல்லுக்கு விளக்கம் புறவரித்து புதுசு புதுசா கத்துக்கிட்டு ஆளுவிடுங்கடா சாமின்னு கிளம்பிட்டேன்.//

  அறிமுகத்துக்கு நன்றி :)

  தமிழ்ச் சொல்லாக்கம் பதிவு ஒரு கைகாட்டிமரம் போல.

  திரு. இராம.கி அய்யா அவர்கள் பரிந்துரைக்கும் சொற்களுக்கான விளக்கங்களை அவரின் இடுகைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  அவரின் இடுகைகள் தமிழ் மொழி மட்டுமல்லாது சமூகம், வரலாறு, பண்பாடு, அறிவியல் என பல தளங்களில் பேசும் (சற்றே கடினமாகத் தோன்றும் நடையைக் கடந்தால்) சுவாரசியமான எழுத்து.

  ReplyDelete
 35. @# கவிதை வீதி # சௌந்தர்:

  என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே!!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது